Monday, October 7, 2013

எல்லை தாண்டிய பயங்கர வாதம். மத்திய அரசின் நடவடிக்கை சரியானதுதானா?

எல்லைப் பகுதிகள் தீவிரவாதிகள் தாக்குதல்..கார்கில் போன்ற நிலை நிலவுகிறது. துணிச்சலான நடவடிக்கை எடுக்கவேண்டும்.பதிலுக்கு பதில். தாக்குதல் நடத்த வேண்டிய நேரத்தில்  சமாதானம்   பேசுகிறது. இந்தியா  செரிஃபுடன் பேச்சு வார்த்தை வேண்டாத ஒன்று.. இது இந்தியாவின் கையாலாகத் தனத்தை காட்டுகிறது. உலக அரங்கில் இந்தியாவின் மரியாதை மத்திய அரசின் இந்த செயலால்  கேலிக் கூத்தாகிறது. இத்தனையும் இன்று  தனியார்  தொலைக் காட்சியில்  பஜக தலைவராலும்,  நிகழ்ச்சி தொகுப்பாளர் பர்கா  வாலும் சொல்லப் பட்டது. நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கும் அதே எண்ணம் தோன்ற ஆரம்பித்து விட்டது.

ஆனால் சற்றே  அமைதியாய்  இருந்து  யோசிக்க ஆரம்பித்தால்  எழும் கேள்விகள். 1) அடிக்கு அடி ரத்தத்துக்கு ரத்தம் என்பது பக்கத்து வீட்டுக் காரனிடம் சண்டை போடுபவர்கள் வேண்டுமானால்  செய்யலாம். இரு  அண்டை நாடுகள் அப்படி சண்டை போட முடியாது. குறிப்பாக இருவரிடமும் அணு ஆயுதங்கள் இருக்கும் போது.
2)எல்லை தாண்டி பாக்  ராணுவம் வராமல் தீவிரவாதிகளை மட்டுமே   அனுப்பி வருகிறது. பாக்  ராணுவம் எல்லை தாண்டி நுழைந்தால் போரிடலாம். இந்திய ராணுவம் பாக் எல்லைக்குள் புகுந்து  தீவிர வாதிகளை விரட்டி அடிப்பது என்பது  முறையற்ற செயல். அது இரு நாடுகளுக்கிடையே போரைத்தான்  உண்டாக்கும்.
3) இதை கருத்தில் கொண்டுதான் செரிஃபின்  தூதரக அதிகாரிகளுக்கிடையே  பேச்சு வார்த்தை  என்ற   கோரிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்க் மறுத்தார். அது மட்டுமின்றி இதில் சம்பந்தப் பட்ட  ராணுவ தளபதிகளிடையே  பேச்சு வார்த்தை இனி நடக்கட்டும் என்றார். இதில் தவறேதும் இருப்பதாய் தெரியவில்லை.

பஜகவும் அவர்களை ஆதரிக்கும் தனியார் தொலை காட்சிகளும்   எதை எடுத்தாலும் அரசியல் லாபம் பார்க்கும்  வேலையை வெளியுறவுக் கொள்கையிலும்  காட்டாமல் அமைதி காப்பது நலம் என்பது என் கருத்து.

Saturday, October 5, 2013

தமிழகத்தில் ஊடுருவும் மத தீவிரவாதம். ஒரு பார்வை.

மத சார்பின்மை கொள்கை உடையவன்  நான்.ஆனால் எனக்கும்  ஒரு சிறு சந்தேகம் உண்டு..குஜராத்தில் கலவரம் நடந்தது  2002 இல் .அதன் பின் முஸ்லீம்கள்  குஜ்ராத்தில் தீவிரவாதத்தில்   ஈடு பட்டதாக எந்த  செய்தியும் இல்லை. ஆனால்  குஜராத்தில் நடந்த பயங்கரத்திற்க்கு பலி வாங்குகிறேன் என்று இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் முஸ்லீம்களில் ஒரு சிலர் தீவிரவாதத்தில்  ஈடு படுகின்றனர். அவர்கள் சொல்லும் காரணம்
 நாங்கள் பாதிக்கப் பட்டோம்  அதற்க்கு பதிலடிகொடுக்கிறோம் என்ற பதில் கிடைக்கிறது.

 பயங்கரவாதத்திற்க்கு பதில் பயங்கரவாதம்தான் என்றால் உங்கள் தீவிரவாதத்தை  குஜராத்திற்க்கு சென்று செய்யலாமே. ஏன் தமிழகத்தில் ஊடுருவுகிறீர்கள்.உங்களின் செய்கையால் அமைதி பூங்காவாவாய் இருக்கும் தமிழகத்திலும் இந்துத்வா நுழைய வாய்ப்பை கொடுக்கின்றீர்கள். விளைவு  இன்னும் சிறிது காலம் இப்படியே போனால் தீவிரவாதத்திற்க்கு தீவிரவாதம்தான் பதிலாக கிடைக்கும்.

எந்த ஒரு முஸ்லீம் நாட்டிலும் கிடைக்காத மரியாதை முஸ்லீம்களுக்கு இந்தியாவில் கிடைக்கிறது. இந்திய தலைவர்கள் முஸ்லீம்களின் மைனாரிட்டி ஒட்டை பெறுவதற்க்காகவே  பல விதங்களில் நாடாக மாடுகின்றனர். குறிப்பாக தமிழ் நாட்டில் இந்து பண்டிகைகளை கிண்டல் செய்யும் கழக பகுத்தறிவு வாதிகள் நோம்பு காலங்களிலும், இஸ்லாமிய பண்டிகைகளுக்கும் தரும் மரியாதையே அலாதி.!! இந்தியாவில் தாழ்த்தப் பட்டவர்களுக்கு அளிக்காத கொடுமையா ?? முஸ்லீம்களுக்கு இழைக்கப் பட்டு விட்டது.

  ஒவ்வொருவரும்  மத தீவிரவாதத்தை கையில் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தால்  இந்திய   மத சார்பின்மை கொள்கையில் இருந்து விலக நேரிடும் அபாயம் உண்டாக வாய்ப்பு உள்ளது. ஊத வேண்டிய சங்கை ஊதி விட்டேன் . ஒரிருவர்  இதை சரியாக புரிந்து கொண்டாலும்  எனக்கு திருப்தியே.

Friday, October 4, 2013

மௌன ராகம்- 2

வித்தியாசமான படம் என்று மகன் சொல்ல சென்று பார்த்தேன் "ராஜா ராணி" படம்.. படத்தின் ஆரம்ப முதல்  முடிவு வரை  மௌன  ராகம்   கதை கருவை எடுத்துக் கொண்டு இந்த காலத்து பிள்ளைகளுக்கு ஏற்றவாறு திரைக் கதை، வசனம்  எழுதியுள்ளனர்.

கதையின் கரு இதுதான். .கதாநாயகன் கதாநாயகி  இருவரும் காதலில் தோல்வி அடைந்தவர்கள்.  பெற்றவர்கள் திருப்திக்காக திருமணம் செய்து விட்டு பின் மனம் ஒட்டாமல் இருந்து  கடைசில் இணைவதுதான் கதை. காமெடிக்கு சந்தானம்..இரண்டாவது கதாநாயகியாக வரும் நஸ் ரினா பரவாயில்லை ரகம்.

கார்த்திக் மௌன ராகத்தில் கொடுத்த கலகலப்பை  ஜெய்யினால் தர முடியவில்லை.ரேவதியும் கார்த்திக்கும்  பார்க்கில் இருக்கும் போது ரேவதியின் அப்பா அந்த பக்கம் காபி சாப்பிட வர கார்த்திக் மிஸ்டர் சந்த்ர மௌலி என்று கூப்பிட்டு கலாய்க்கும்  காட்சி  அந்த காலத்தில்  பிரபலமானது. அதே போல்  ரேவதி சிங்க் ஒருவனுக்கு  தமிழ் சொல்லித் தருகிறேன் என்று போடா, டே ,போடா,  போடா மடையா, என்று சொல்லிக்  கொடுப்பதுவும் இன்றும் நினைவில் நிற்கிறது.. இந்த படத்தில்  நயன் தாரா ஜெய்  காமெடி செய்ய முயற்சித்தும் மனதில் நிற்கவில்லை. ஒரே ஒருஆறுதல்  ஆர்யாவின் நடிப்பு  மோகனின் நடிப்பை விட நன்கு இருந்தது..
மௌன ராகம் பார்க்காத இளைய தலைமுறையினர் பார்த்து  ரசிக்க ஒரு படம்.

Sunday, September 22, 2013

இந்திய பிரதமரை தேர்ந்தேடுக்கும் 4 மாநில முதல்வர்கள். ஒரு பார்வை.

சென்ற  பதிவில்  பாஜக வின் வெற்றி வாய்ப்பைப் பார்த்தோம். இந்த பதிவில் மூன்றாவது அணி   காங்கிரஸ் மற்றும் பாஜக வெற்றி  வாய்ப்பை எந்த அளவு பாதிக்கும் என்றும்  ,பிரதமராக ஆசைப் படும்   மூன்றாவது அணி தலைவர்கள் பற்றியும் பார்ப்போம். இதில் முக்கியமானவர்கள்  முலாயம் சிங்  யாதவும் ஜெயலலிதாவும்   ஆவர்.

உத்திரப் பிரதேசம்  80 நாடாளுமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. சமாஜ்வாடி  கட்சியின் ஆட்சியில் உள்ளது.. சென்ற தேர்தலில்  22 எம் பிக்களை வென்ற கட்சி ,இப்போழுது ஆட்சியில் வேறு.  நிச்சயம்  அதிகம்  பெற முயற்ச்சிக்கும் கட்சிகளில் ஒன்று. அதே போல் ஜெயலலிதாவிற்க்கும் பிரதமராகும் ஆசை அளவுக்கு அதிகமாகவே உள்ளது. சென்ற லோக் சபா தேர்தலில் 9 இடங்கள் பெற்றிருந்தாலும் இந்த முறை  40 உம நமதே என்று குரல் கொடுக்கிறார். ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின் திமுக போல் எந்த ஊழல் குற்றச் சாட்டுகளிலும் விழாதது இவருக்கு பிளஸ் . மேலும் திமுக  இன்னும்
இலங்கை பிரச்சனையை வைத்து காலத்தை ஓட்டுவது அவர்களுக்கு மைனஸ்.  கருத்து கணிப்புகள் இவருக்கு ஆதரவாகவே உள்ளது. இவர் கட்சி  25 க்கும் மேற் பட்ட எம் பி களை   பெற வாய்ப்புள்ளது

அடுத்த தலைவர்  நிதிஷ் குமார்.,. எந்த ஒரு ஊழல் குற்றச் சாட்டும் இல்லை. சிறந்த நிர்வாகம். மத்தியில் இருந்து மாநிலத்திற்கு  அதிக ஒதுக்கீடு  என்று அனைத்து வகையிலும் நல்ல பெயர். பாஜக  கூட்டணி இல்லாததால் தனித்து 40 இலும் நிற்க வாய்ப்பு. சென்ற தேர்தலில் 20 எம்.பிக்கள். அடுத்து பிஎஸ்பி . தலைவர் மாயாவதி. 21  எம்பிக்களை வைத்துள்ளார். ஜாதிய ஓட்டை எதிர் பார்க்கும் இவரும்  சென்ற தேர்தலை விட அதிகம் பெற வாய்ப்பு. உதவி காங்கிரஸ்.!! காங்கிரஸின் தாழ்த்தப் பட்ட இன மகள் ஒட்டு இவருக்கு செல்ல வாய்ப்பு.

அடுத்து மிக முக்கியமான தலைவர்  திரினாமுல் காங்கிரஸ் தலைவர் . மம்தா பானர்ஜி .. சென்ற தேர்தலில் 19 இடங்கள்.. இப்போழுது ஆட்சியில் இருக்கிறார். அதிகம் பெற வாய்ப்பு. இடைத் தேர்தல் பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் இவருக்கு சாதகமாய் இருந்தது அனைவரும் அறிந்ததே.
இடது சாரி கட்சிகள் சென்ற தேர்தலில் பெற்றது  24 இந்த தேர்தலில்  இவர்கள் அணி மே.வங்கத்தில் சற்றே முன்னேற்றம் காண வாய்ப்பு.

திமுக : தலைவர் கலைஞர்  சென்ற தேர்தலில்  19 .இன்னும் அ .ராசாவினால் ஏற்பட்ட களங்கமும், குடும்ப அரசியலும் இவருக்கு எதிர். குறைந்த பட்சம் 10க்கு மேல். இவருக்கு கிடைக்க வாய்ப்பு. அடுத்து சரத் பவர் சென்றதேர்தலில் 9 சீட்டுகள் என்றாலும்  இன்னும் இலவு காத்த கிளியாய் பிரதமர் வாய்ப்பை எதிர நோக்கி காத்திருப்பவர். இவருக்கு  பிரதமர் போட்டியில்  பாஜக வின் கூட்டணி கட்சி சிவா சேனா மண்ணின்மைந்தன் என்ற போர்வையில் ஆதரவு தெரிவிக்க வாய்ப்பு.

இது வரை காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத தலைவர்களில் பிரதமர் ஆக அசையுள்ளவர்களையும் அவர்கள் கட்சி பெற இருக்கும் தோராயமான சீட்டுகளையும் பார்த்தோம். 5 முக்கிய தலைவர்கள் மட்டும் 110 உம இடதுசாரிகள் 26 க்கும் மேற்பட்ட எம் பி சீட்டுகளை பெற வாய்ப்பு  உள்ளது.ஆக மொத்தம் 140 இவர்களிடம்.
இனி யார் வந்தாலும் கூட்டணியில் சேந்து மந்திரி பதவி பெற தயாராய் இருக்கும்  கட்சிகளிடம் 90 எம் பி  க்கள்  மற்றும் உதிரிக் கட்சிகள் பெற்ற 13 எம்பி சீட்டுகளுடன்  சேத்து 240 இல் இருந்து 245 வரை மூன்றாவது அணியிடம் உள்ளது.
2009  தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை:
ஐக்கிய  முற்போக்கு கூட்டணி     .தேசிய  ஜனநாயக கூட்டணி
காங்கிரஸ் ................ 206                                பாஜக .............................116
கூட்டணி கட்சிகள்   56                                 கூட்டணி கட்சிகள்     43
                                       -----                                                                          ------
                                         262                                                                           159
                                       ------                                                                         -----
இரண்டு கூட்டணியிலும் இல்லாத கட்சிகள் பெற்ற சீட்டுகள்   122.
சென்ற தேர்தலில் காங்கிரசுடன் இருந்த திரிணமுல்  காங்கிரஸ்  (19) இந்த முறை இல்லை. அதே போல்  பாஜகவுடன் இருந்த  நிதிஷ் குமார்  (20) இந்த முறை இல்லை. இருவரும்  மூன்றாவது அணியை ஆதரிக்க வாய்ப்பு.
மூன்றாவது  அணியின்  மொத்த எம் பிக்கள் அதிகம் இருந்தாலும்   இந்த கட்சிகளின் தலைவர்களுக்கு இடையே உள்ள  போட்டி அதிகம் இருப்பதால்  இவர்கள் ஆட்சி அமைப்பது சிரமம். ஆனால் இவர்கள்தான் மத்தியில் ஆளப் போவது யார் என்பதை முடிவு செய்யப் போகிறவர்கள்.

அந்த  கோணத்தில் பார்க்கும் போது  பஜக தன் கூட்டணி கட்சியான  ஜனத தளம்  (எஸ்)  ஐ இழந்த தன் மூலம்  குறைந்த  அளவில் சீட்டுகள் பெற்றாலும்  மற்ற கட்சிகள் ஆதரவுடன் மைனாரிட்டி அரசை  அமைக்கு வாய்ப்பு காங்கிரஸிற்க்கே அதிகம் உள்ளது.

உ.ம். கூட்டணியில் இல்லாத கட்சிகள் 122 +திரிணமுல்+ ஜனத தளம்=160 தாண்டும் வாய்ப்பு உள்ளது. பாஜகவை பொறுத்தவரை அதன் கூட்டணி கட்சிகளான சிவசேன,அகாலி தளம்  தவிர்த்து அதிமுக மட்டுமே ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளது.மைனாரிட்டி அரசு அமையும்  வாய்ப்பு அதிகம் இருப்பதால் அடுத்த முறையும் மன்மோகன் சிங்கே  பிரதமாராக வாய்ப்பு அதிகம். ராகுல்  காந்திக்கு இன்னும் நேரம் வரவில்லை என்பதே நமது முடிவு.
                       
                                        

Saturday, September 21, 2013

மோடி பிரதமராகும் வாய்ப்பு . ஒரு ஆய்வு.










இந்தியாவை  ஆளப் போவது யார் ? மோடியின்  தலைமையில் உள்ள  பாஜக வா .ராகுல்  காந்தியை முன்னிறுத்தி சோனியாவின்    காங்கிரசா !!!மூன்றாவது அணியின் துணையுடன் காங்கிரஸா  அல்லது  காங்கிரசின்  ஆதரவுடன் மூன்றாவது அணியின் தலைவர்களா?  மோடியை பிரதமராக தேர்வு செய்தவுடன்  பஜாக வினர் மத்தியில் இப்பொழுதே  வெற்றி பெற்ற மாதிரி ஒரு உற்சாகம் .காணப் படுகிறது. இது உண்மையிலேயே   சரியான கணிப்புதானா?

 பழைய புள்ளி விவரங்களை பார்க்கும் போது  நமக்குத் தோன்றும் சில சந்தேகங்கள். 1)வாஜ்பாய்  தலைவராய் இருந்த போது பாஜக பெற்ற மொத்த சீட்டுகள் 182. பெற்ற  ஒட்டு சதா வீதம். 25.59%. அதன் பின் அத்வானியை முன்னிறுத்தி  2004 இல் அவர்கள் பெற்ற ஒட்டு 22%.. 2009  தேர்தலில்  கடைசியாய் பெற்ற ஒட்டுக்கள் 18% மட்டுமே. ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவின் ஒட்டு சதவீதம்  குறைந்து கொண்டுதான் வந்திருக்கின்றது..மோடியின் தலைமையின் கீழ் போட்டியிடும் பாஜாக இழந்த  7% ஓட்டுக்களைப் பெற்றாலும்  கிடைக்கப் போகும் சீட்டுகள்  116 இல் இருந்து  182 ஆகத்தான் இருக்க   வாய்ப்பு உள்ளதே தவிர  272  என்ற பெரும்பான்மை  அடைய முடியுமா என்பது சந்தேகமே..சென்ற தேர்தலில் காங்கிரஸ் பெற்ற ஒட்டுக்கள்  15,00,00000. பாஜக பெற்ற ஒட்டுக்கள் 10,000,0000, மூன்றாவது அணி பெற்றது 8,80,00000. கிட்ட தட்ட 5 கோடி ஒட்டுக்கள் வித்தியாசம் உள்ளது. காங்கிரசிற்கும் பஜகாவிற்க்கும்.அந்த ஓட்டை பெற்றாலும் காங்கிரசிற்கு வெளியில் இருந்து ஆதரவு தந்த மம்தா,முலாயம்,மாயாவதி  மற்றும்  சில காலம் ஆதரவு தந்த இடது சாரிகள் பாஜகவிற்கு ஆதரவு தருமா? இவை அத்தனையும் புள்ளி விவரக் கணக்கு

 . இனி நடை முறை அரசியலுக்கு வருவோம். வாஜ்பாயி யைப் போல்  அனைத்து தர மக்களாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டவரல்ல மோடி.இந்துத்வா கொள்கையை வைத்து அனைத்து இந்துக்களின் ஓட்டையும் பெற்று விடலாம் என்று நினைப்பது சரியானதல்ல. அடுத்து 13% முஸ்லீம்கள்.  இவர்களின் ஒட்டு   எந்த  அளவுக்கு  மோடியின் தலைமையில் நின்றால் கிடைக்கும் என்பதை அனைவரும் அறிவர். மோடியால் தன சொந்த மாநிலத்திலேயே  16  எம்பி க்களைத் தான் பாஜகவிற்கு பெற்றுத் தர முடிந்தது. ஆனால் 11 எம்பிக்களை காங்கிரஸ் அவர் சொந்த மாநிலத்திலேயே  பெற்று இருகின்றது.
அனைத்து தரப்பு மக்களாலும் அவர் சொந்த மாநிலத்திலேயே  ஏற்றுக் கொள்ளப் படாதவர் எப்படி அனைத்திந்தியாவின் மக்களாலும் ஏற்றுக் கொள்ளப் படுவார்?
பாஜாகாவின் வெற்றி வாய்ப்பு  மாநிலங்கள் வாரியாக.

மாநிலம்             மொத்த  சீட்டுகள் . பாஜக
-------------           --------------------------  --------
தமிழ்நாடு               39                                   0  
ஆந்திர                      42                                  0                                                                    
மே.வங்கம்             42                                  1
கேரளா                     20                                  0  
இந்த 4 மாநிலங்களிலும்  பாஜக இன்னும் கால் பதிக்கவில்லை. மொத்த சீட்டுகள்  143 இல்  1 தான் கிடைத்துள்ளது
.
அடுத்து உபி. யில் 3 வது இடத்திற்குத்தான் பாஜகவும் காங்கிரசும் மோதுகின்றன. இங்கே போட்டி  முலாயம் சிங்கிற்கும் மாயாவதிக்கும் மட்டுமே. பீகாரில் நிதிஷ் குமார்   ஆடச், கூட்டணியில் இருந்து விலகி விட்டார் கூட்டணியில் இருந்த போது கிடைத்தது 12 சீட்டுகள். கர்நாடகா  யாடு வீரப்பாவின் மேல் களங்கம்   விளைவு 2 இடைத் தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு சாதகம்.
உ.பி.                           80                                 10
பீகார்                          40                                  12
கர்நாடகா                 28                                 10

மொத்த சீட்டுகள்  148 பாஜக பெற்றது  32. மட்டுமே.

 மாநிலங்கள்  7  மொத்த சீட்டுகள்  291  பாஜக பெற்றது  33.   பாராளுமன்ற மொத்த சீட்டுகள்  543. மிதமுள்ள  252 எம்பி சீட்டுகளில்  239 ஐ பெற்றால்  பாஜக  ஆட்சி அமைக்க வாய்ப்பு.  சாதிப்பாரா??  இந்தப் பதிவில் பாஜக வெற்றி வாய்ப்பை பார்த்து விட்டோம். அடுத்த பதிவில் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு எப்படி என்று பார்ப்போம்.

Tuesday, September 17, 2013

சுய விளம்பரத்திற்க்காக மக்கள் வரிப் பணத்தை கரியாக்கும் அரசியல்வாதிகள். பற்றிய ஒரு ஆய்வு

இன்றைய  செய்தி ஒன்றை படித்ததும்  ஏற்பட்ட   கோபம் வேறு எந்த செய்தியை படித்தும் வந்ததில்லை.  செய்தி இது தான். சென்ற  திமுக ஆட்சியின் போது நடத்த பட்ட உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு ஆனா செலவு  ரூபாய் 301  கோடி என்று தலைமைச் செயலர் அறிவித்திருந்திருக்கின்றார் . அதைக் கண்டு  நம்பாமல் சமூக ஆர்வலர் ஒருவர் விவரம்  விசாரித்த போது கணக்கு தணிக்கை அலுவலகத்தில் இருந்து 151 கோடி என்றும்  தமிழ்  துறை  அலுவலகத்தில் இருந்து  262  கோடி என்றும்  பதில் கிடைத்துள்ளது.  சரியான  தகவல்  வேண்டி  இப்போழுது அவர்
நீதி மன்றத்தை அணுகியுள்ளார்.  செலவுக் கணகில் உள்ள குளறுபடியை ப் பார்த்த நீதிபதியும் லஞ்ச ஒழிப்புத் துறையை விசாரித்து உடன் தகவல் தரும் படி  ஆணையிட்டுள்ளார்.

ஒரு அரசு தன கடமையை செய்துள்ளது. தமிழுக்கு  செம்மொழி அந்தஸ்த்து வாங்கித் தந்துள்ளது. பாராட்டப் பட வேண்டியதுதான். ஆனால் அதற்க்காக மக்கள் வரிப் பணத்தை இப்படி  வீணாக செலவு செய்தது எந்த விதத்தில்  நியாயம். சரி இத்தனை கோடிகள் செலவு செய்து கோயம்புத்தூரில் நடத்தப் பட்ட இந்த விழாவால் என்ன  பயன் கிடைத்தது. குறைந்த பட்சம்  கோயம்புத்தூர்  மாவட்டத்திற்கு இதனால் ஏதேனும்  பலன் கிடைத்ததா? தீபாவளிக்கு பட்டாசு  வெடித்து கரியாக்கியது போல்  மக்களின் பணம் இப்படி  வீணாகியுள்ளதே.

 அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் தங்கள் சொந்த  விளம்பரத்திற்காக  பணத்தை இப்படி தண்ணீராய்  செலவழிப்பதை
தடுக்க முதலில்  சட்டம் இயற்றப் பட வேண்டும். கட்சி வேறு பாடு இன்றி இனி எந்த கட்சி இப்படி வீண் செலவு செய்ததோ அந்த கட்சியின் கணக்கில் இந்த வீண் செலவுகள்  எடுத்துக் கொள்ளப் பட்டு  அந்த கட்சியிடம் இருந்து பணத்தை வசூலிக்க வேண்டும். அப்படி  ஒரு நீதி வழங்கினால் தான் மக்கள் வரிப் பணத்தை செலவு செய்யும் தலைவர்கள் பொறுப்புடன்  செலவு செய்வார்கள்.  நீதி அரசர்கள் அப்படி ஒரு தீர்ப்பு தருவார்களா?


Saturday, September 14, 2013

நீதிஅனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும். டெல்லி தீர்ப்பு ஒரு ஆய்வு.

வெள்ளியன்று   டெல்லி பாலியல் குற்றவாளிகளுக்கு  மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.  மனித உரிமை கள்  பற்றி பேசும் ஒரு சிலரைத் தவிர  இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களாலும் வரவேற்க்கப் பட்ட தீர்ப்பு இது. திறம்பட  வழக்கை நடத்திய  காவல்துறை மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள்   அனைவருக்கும் நன்றி.
9 மாதங்களில் வழக்கை முடித்து தீர்ப்பையும் நீதிபதி வழங்கியுள்ளார்.
 மிகவும்  கொடூரமான இச் செயலுக்கு மரண தண்டனைதான் சரியான தீர்ப்பு என்று நீதிபதியும் தன தீர்ப்பில் கூறியுள்ளார். வாழ்த்துக்கள் தெரிவிக்கும்  அதே  நேரத்தில்  நமக்கு  சில சந்தேகங்களும் தோன்றியது. அதன் விளைவே இந்த பதிவு .
இதே  நீதி மன்றத்தில்  இது வரை  பாலியல் குற்றங்களுக்காக  2009 இல் இருந்து  நடத்தப் பட்ட வழக்குகள்  203 இல் 201 குற்றம்   சரியாக நிருபிக்கப் படவில்லை என்று விடுதலை  வழங்கப் பட்டுள்ளது  ..!!தண்டனை வழங்கப் பட்ட அந்த 2  வழக்குகளும் சமீபத்தில் இந்த  பிரச்சினையை  மனித உரிமை கழகம் கொண்டு வந்த பின்   வழங்கப் பட்ட தீர்ப்பு. அப்படி என்றால் பாதிக்கப் பட்ட பெண்களுக்கு சரியான நீதி கிடைக்கவில்லை  என்றுதானே அர்த்தம். போராட்டங்களும் பத்திரிகை, டிவி  யும் பரபரப்பாக செய்தி விளியிட்டால் தண்டனைகள் கிடைக்கின்றன என்றுதானே  அர்த்தம். சென்ற ஆண்டு மட்டும்
டெல்லியில்  568 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன.  அவற்றிற்க்கு  இது வரை எந்த வகையான தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது??? மரண தண்டனையா அல்லது ஆயுள் தண்டனையா??
இந்தியாவில் சென்ற ஆண்டு மட்டும் நடந்த பாலியல் குற்றங்கள் மொத்தம்
24,923. இதில் இறந்தவர்கள் எத்தனை போர். டெல்லி பாலியல் குற்றம் நடந்த அதே நேரத்தில்  தமிழகத்தில் போட்டோ ஸ்டுடியோ  ஒன்றில்  தாழ்த்தப் பட்ட இனப் பெண் ஒருத்தி கொடுரமான முறையில் இதே போல் சிலரால்  கொல்லப்  பட்டாள்.  அந்த வழக்க்கு என்ன  ஆயிற்று.??தமிழகத்தில் மட்டும் சென்ற ஆண்டு 677 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன. தண்டனையும் ஆண்டு ஒன்றாகியும் யாருக்கும் வழங்கப் படவில்லை.
நீதித் துறை  நாட்டின்  தலை நகரில் நடக்கும் மக்களால் கூர்ந்து கவனிக்கப் படும் குற்றங்களுக்கு மட்டும்தான் முக்கியத்துவம் தருமா?? நீதி அனைவருக்கும் சமமானதாகத்தான் இருக்க வேண்டுமே அன்றி தலை நகருக்கு ஒரு நீதி மற்ற மாநிலங்களுக்கு ஒரு நீதி என்று இருப்பதை  நம்மால் ஜீரணிக்க முடிய வில்லை.  இங்கே  நான் சொல்ல வருவது   குற்றம் நடந்துள்ளது சரியாக போலீஸ்  குற்றத்தை நிருபிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்க்காக குற்றவாளியை விடுதலை செய்வது எந்த விதத்தில்  நியாயம்..ஏன் மறு விசாரணையை திறம்பட  நடத்தி உண்மை குற்றவாளியை கண்டறிய நீதி மன்றங்கள் நடவடிக்கை எடுப்பதில்லை.  203 இல் 201 விடுதலை செய்யப் பட்டால் பின் எப்படி பாதிக்கப் பட்ட பெண்  போலீஸில் வந்து புகார் கொடுப்பாள். நீதித் துறையின்மீதும் காவல் துறையின் மீதும்  மக்களுக்கு எப்படி நம்பிக்கை ஏற்ப்படும்.  காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டு குற்றவாளியின் வக்கீல் கேட்கும் கொடூரமான கேள்விக்கு பதில் சொல்லி ,பல ஆண்டுகள் நீதி மன்றத்திற்க்கு அலைந்த பின்  குற்றவாளியை நீதி மன்றம் விடுதலை செய்வதால்தான் இன்றும் பாதிக்கப் பட்ட பெண்கள் காவல் துறையை அணுகுவதில்லை.
இந்த நிலை தொடருமானால்  நீதித் துறையின் மீது  மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை குறைய வாய்ப்பு உள்ளது.  ஒரு வழக்கில்   மட்டும் கடுமையான தண்டனையை கொடுத்து விட்டு குற்றங்கள் குறையும் என்று சொல்வதில்  அர்த்தம் இல்லை..நீதி அனைவருக்கும் சமமாக வழங்கப் பட வேண்டும் என்பதே நம் விருப்பம்.



Friday, September 13, 2013

தலைவர் பதவியில் மோடி!!. . ஒரு சாமானியனின் பார்வையில்.??

பிஜேபி  இன்  பிரதமர் வேட்பாளராக மோடி  தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். அத்வானியால்  ஆட்சியில்  இருந்து  அகற்ற முடியாத காங்கிரசை  மோடியை  முன்னிறுத்தி    அகற்றிட  பிஜேபி   முயல்கிறது.  வெற்றிக் கனியை  மோடி பறித்துக் கொடுப்பாரா ? அல்லது   மோடி பலிக்கடாவாக  ஆகப் போகிறாரா?
அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல்  பதிலைத் தரும். அதற்க்கு  முன்  என்னுடைய பார்வையில்  மோடியின்  அரசியல் பற்றிய ஒரு பார்வை.
மோடியைப் பொறுத்தவரை சிறந்த  நிர்வாகி என்ற பெயர் உள்ளது.  குஜராத்தின் முதல்வராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்  பட்டுள்ளார்.  பாஜாக தொண்டர்கள் மத்தியில்  பிரபலமானவர். அர்  எஸ்  எஸ்   தலைமையால்  அங்கீகரிக்கப் பட்டு  பதவியும் அளிக்கப்  பட்டவர். ஒரு நாட்டின் பிரதம மந்திரி பதவிக்கு இவை போதும் என்றால்  மோடி  உண்மையிலேயே  ஒரு சிறந்த
தேர்வுதான். ஆனால்  இது ஒரு மாநிலத்தின்  முதல்வர் பதவிக்கு  போதுமான தகுதிதானே தவிர    நாட்டின் பிரதமராக   வேண்டும் என்றால் மேலும் சில தகுதிகள் வேண்டும்.
1)   நாட்டின் தலைமை பதவிக்கு வர எண்ணுபவர்கள், அனைத்து தர மக்களும் அறிந்தவராக இருக்க வேண்டும். குறிப்பாக இந்தியா போன்ற  பல்வேறு மதங்களைக் கொண்ட நாட்டின் தலைவர் அனைத்து  மத மக்களாலும்  மதிக்கப் பட வேண்டும்.  மோடி யைப் பொறுத்தவரை  இவர் இந்துத்வா என்ற போர்வையில்  இருந்து  இன்னும் வெளிவரவில்லை.
2)  இந்திய மக்களாலும் ஏன்  உலக மக்களாலும் மோடிஎன்ற பெயரை   உச்சரிக்கும் போதெல்லாம்  குஜராத்தின் 2002 கொடுமைதான்     தான் நினைவுக்கு வருகிறது.
3)  ஊழல் அற்ற ஆட்சிய தருவார் என்ற எண்ணம் இருந்தது. அதுவும் அடனி அனல் மின் நிலையத்திற்க்கு நிலம் ஆர்ஜிதம் செய்ததிலும்.  அடனி  நிறுவனத்தில் இருந்து  வாங்கும் மின்சாரத்திற்கு  யூனிட்டுக்கு ரூ. 2..79. என்று
விலை  நிர்ணயித்ததில் இருந்து  இவரும்   உழலில் சளைத்தவர் அல்ல  என்று நிறுபித்து விட்டார். டாட்டாவிடம்  போட்ட ஒப்பந்தத்தில் யூனிட் ரூ.   2.26  நிறனயித்தவர் நண்பரின் கம்பெனிக்கு  அதிகம் விலை நிர்ணயித்தார்,. இரண்டு ஆண்டுகளில் இதனால் குஜராத் அரசுக்கு ஏற்பட்ட  இழப்பு  ரூ.1367 கோடி.
4) தலைவன்  என்பவர் தன செய்கைகளாலும் தனி திறமையாலும் தான் முன்னேற வேண்டுமே அன்றி கட்சிக்கு அப்பாற் பட்ட அர்  எஸ் எஸ்  நியமிக்கக் கூடாது. ஜனநாக முறைப் பட தேர்ந்தெடுக்கப் பட வேண்டிய ஒருவர்  கட்சிக்கு  அப்பார் பட்ட  ஒரு இயக்கத்தின் சிபாரிசினால்  தேர்ந்தெடுக்கப் படுகிறார்,. நாளை இவர் அற.எஸ் எஸ்  போன்ற  இயக்கத்திற்கு நன்றிக் கடன் பட்டவராகத்தான் இருப்பாரே அன்றி  கட்சிக்கோ அல்லது  மக்களுக்கோ  கடமைப்   பட்டவராக இருக்க  வாய்ப்பில்லை. மத சார்பின்மை  உடைய ஒருவர் இருக்க வேண்டிய இருக்க வேண்டிய  இடத்தில் ஒரு இந்துமதவாதியை  அர் .எஸ் .எஸ்.  நியமித்துள்ளது.
5) எல்லோராலும் மிகவும்  அதிகம் பேசப் படுவது  மூன்று முறை முதல்வர்.  ஒரு சிறிய புள்ளி விவரம்.  குஜராத் போன்ற ஒரு  சிறிய  மாநிலத்தில்  பாஜக சட்டசபை  தேர்தலில் பெற்ற மொத்த வோட்டுக்கள் 47% . எதிர் கட்சி  காங்கிரஸ்  பெற்ற வோட்டுக்கள் 38%.. எல்லா மாநிலங்களைப் போல  காங்கிரசிற்கு அங்கும் சரியான் தலைவர் கிடையாது.  இருந்தும் காங்கிரஸ் முக்கிய எதிர் கட்சியை  38% பெற்றுள்ளது. சொந்த மாநிலத்தில் அவருக்கு முழு ஆதரவு என்பது  ஒரு  மாயை,. அப்படிப் பார்த்தால் இன்று ஜெயா கலைஞரை  எதிர் கட்சி தலைவர் பதவியில் கூட  இருக்க முடியாத படி செய்து விட்டார்.  203  பேரை வெற்றி பெற வைத்து.!!!
6) மோடிக்கு உள்ள ஒரே  வாய்ப்பு  வெற்றி அவரால் கிடைப்பதை விட காங்கிரஸ் மூலம் கிடைக்கத்தான்  வாய்ப்பு அதிகம். திறமையற்ற காங்கிரஸ் நிர்வாகம், பண வீக்கம், ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி மொத்தத்தில் பொருளாதாரத்தை சீரழித்ததின்   மூலம் காங்கிரஸ்  பிஜேபிக்கும்   மோடிக்கும்  ஒரு அறிய வாய்ப்பை  அளித்துள்ளது. அனைத்துக்கும் சிகரமாய்  ஊழலில்  உலகளவில்  சாதனை புரிந்ததின் மூலம்  மோடி வெற்றிக் கனியை  கைப் பற்ற வாய்ப்பு  உள்ளது.


Thursday, September 12, 2013

மாணவியின் மரணமும் தொடர்ந்த பெற்றோரின் அராஜகமும்.


கல்கத்தாவில் 11 வயது  பள்ளிச் சிறுமியை  மூத்த மாணவர்கள்  பணம் கேட்டு
கக்கூசில் வைத்து பூட்டி பயமுறுத்தியுள்ளனர். குழந்தை
பயந்து கதறி  இருக்கின்றது.பள்ளியில் வேலை செய்யும்  பணிப் பெண் குழந்தையை விடு வித்து வீட்டுக்கு அனுப்பியிருக்கின்றாள். வீட்டுக்கு சென்ற குழந்தை  பயத்தில் உடல் நிலை சரியில்லாமல் போக மருத்துவரிடம் காண்பித்து குணமாகாமல் நேற்று இறந்திருக்கின்றாள்.


தவறு யார் மீது.?? பள்ளி நிர்வாகத்தின் மீதா அல்லது மூத்த மாணவர்களின் மீதா? அல்லது அவர்களைப் பெற்றவர்கள் மீதா.?
இங்கு பலிகடா ஆக்கப் பட்டது பள்ளி தலைமை ஆசிரியர் மட்டுமே. தன் வேலையை தலைமை ஆசிரியை  ராஜினாமா செய்த பின்னும்  அவரை அரெஸ்ட் செய்ய வேண்டும் என்று போராடி  அதில் பள்ளியில் உள்ள  பொருட்கள் அனைத்தையும் சேதப் படுத்தி  ஆசிரியரையும்  முதல்வரையும் சிறை பிடித்து வைத்த இந்த மாதிரிப் பெற்றோர்களின் குணம் தானே  பிள்ளைகளுக்கு  வரும். சரி  குற்ற வாளியை கண்டு பிடித்தால்  மாட்டப் போவது யார்?? பிரச்சினையின்  அளவைத் தெரியாமல் விளையாடிய மூத்த மாணவர்கள்தானே.?? நாளை இறந்த  அந்த
நிகழ்வுக்கு மூத்த மாணவர்கள்தான்  காரணம் என்றால்  மாணவர் காப்பகத்திற்கு அந்த சிறுவர்களையும் அல்லவா அனுப்பவேண்டும். பாதிக்கப் பட்டவர்கள்   அவர்களின் பெயரால்  அராஜகம்  நடத்தும் இந்த பெண்கள் நல்ல பெற்றொராய் இருக்க முடியாது. சோகத்தில் ஆண்கள்  உடைக்கும் ஒரு பெண் அதைப் பார்த்து ரசிக்கும் ஒரு பெண். இந்தப் படத்தைப் பார்த்தால் இவர்கள் நீதி கேட்பதைப் போல் இல்லை. சமூக விரோதிகள் போல்தான் எனக்கு தெரிகிறார்கள்.
குழந்தையின்  ஆன்மா சாந்தியடைய வேண்டும்  என்று பிரார்த்திக்கும் இந்த நேரத்தில் இப்படிப் பட்ட  போராட்டங்களையும்  அமைதியான  முறையில் நடத்த முயற்ச்சிக்க  வேண்டும் என்ற வேண்டுகோளுடன் இதை முடிக்கிறேன்.

அரசியல் வாதிகள் அறிந்தும் அறியாமலும் சொல்லும் நகைச்சுவை கருத்துக்கள்.!!!

இந்த  வாரம் முதல் சிறந்த நகைச்சுவை கருத்துக்கள் சொல்லும் தலைவர்களுக்கு  நகைச்சுவை மன்னன் என்ற  விருது வழங்க இருக்கின்றோம்.!!!!!
ராஜபக்சே  ஒரு போர் குற்றவாளி. திருமாவளவன்.
நண்பர்  கணேஷ்  குமார் கமெண்ட் : நாங்க என்ன பார் வெயிட்டர்னா சொன்னோம்.?





பெரியார்  அண்ணா இவர்களேள்ளாம்    என் கனவில் அடிக்கடி வந்து பேசுகின்றனர்.  கலைஞர் கருணாநிதி ;
என் மணி மேகலை  (சோனியா) வரவில்லையா??





என் கனவுகளை வீட்டுக் கொடுத்து  உங்கள் கனவுகளை நனவாக்குவேன். ராகுல் காந்தி.

நீங்க ஆணியே பிடுங்க வேண்டாம்.












இந்த வார சிறந்த  நகைச்சுவை  மன்னன் விருதை கலைஞர்  கருணாநிதி பெறுகிறார்.



Monday, September 9, 2013

புரட்டு நாத்திக வாதிகளும் அவர்களை பின்பற்றும் ஆட்டு மந்தைகளும்.

தமிழகத்தில் ஒவ்வொரு இந்துப்  பண்டிகை  வரும் போதும்  நாத்திகவாதிகளுக்கு   திடீர் என்று   விழிப்பு வந்துவிடும். உடன் இந்து பண்டிகைகளையும், கடவுள்களையும், தரக் குறைவாக  பேசவும் எழுதவும் ஆரம்பித்து விடுகிறார்கள்.  பெரியாரின்  கொள்கைகள் திடீர் என்று நினைவுக்கு வந்து விடும்.   ஏன்   இந்த   இந்து மத எதிர்ப்பு..?

கடவுள் மீது நம்பிக்கை இல்லையா  அனைத்து கடவுள்களையும் மத  வித்தியாசம் பார்க்காமல் திட்டி தீர்த்து விடுங்கள்.  ஏதோ  மற்ற மதங்களும் கடவுள்களும் அறிவு பூர்வமாக  இருப்பது போலவும். இந்து மதத்தில் மட்டும்தான் மூட நம்பிக்கை இருப்பது போலவும்  பேசும் இந்த வெளி வேசம் ஏன் ? இதில் வேடிக்கை என்னவென்றால் இந்து மதத்தில் உள்ள குறைகளை இவன் சொல்வானாம் , அதை ஆதரித்து மாற்று மதத்தினர் சிலர்* எழுதவும் பேசவும் செய்வார்களாம்.. நான்  அறிந்த வரை தமிழகத்தில்* எந்த ஒரு இந்துவும் மாற்று  மதத்தின் பண்டிகைகளையும் நம்பிக்கையையும் குறை சொன்னதில்லை .

அவரவர்க்கு அவரவர் மதங்கள் மதிப்பு   மிக்கவை..   பின் மத  நல்லிணக்கம் என்பது எப்படி உருவாகும்.  இப்படிப் பட்ட ஒரு சிலராலே ஹிந்துத்வா கொள்கையை பிஜேபி   இந்தியாவில்  பரப்பப் பார்க்கின்றது. தென் மாநிலங்களில்  குறிப்பாக தமிழ் நாடு,கேரளா, ஆந்திரா,  போன்றவற்றில்  பிஜேபி ஆல் ஊடுருவ முடியாததற்கு காரணம் இங்கே மக்கள் மத சார்பின்மை கொள்கை உடையவர்களாய் உள்ளதுதான். இதை மாற்று மதத்தை சார்ந்த நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

.இன்று மட்டும் நான் இந்து மதத்தைப் பற்றி முகனூலில் தவறாக எழுதிய 5 நண்பர்களை என் நட்பு வட்டத்தில் இருந்து விலக்கியுள்ளேன் . இதில் 3 பேர் மாற்று மதத்தினர்.  மதங்கள் வேறாக இருக்கலாம். ஆனால் நாம் அனைவரும் இந்தியர்கள்  என்ற  எண்ணம் வளர வேண்டும்..மதத்தை  ஒட்டு வங்கிக்காக உபயோகிக்கும்  அரசியல்வியாதிகளின் வலையில் விழாதீர்கள் .என்று நண்பர் களை கேட்டுக் கொள்கிறேன்.

ஜெய்  ஹிந்த் .

Sunday, September 8, 2013

அறியாப் பருவத்தில் ஏற்படும் ஈர்ப்பும் (காதலும்) அதற்க்கு துணை போகும் பெற்றவர்களும்.

காதல் ஜாதி மத வேறு பாடு இன்றி தோன்றுவது. அதே போல் அனைத்து பெற்றோராலும் வெறுக்கப் படும் ஒன்று.காதல்..இந்தியாவை பொறுத்தவரை   இது பெற்றோர்களால்  கவுரவப் பிரச்சினையாகவும் எடுத்துக் கொள்ளப் படுகிறது. மேல்  ஜாதி கீழ்  ஜாதி, என்றும், ஹிந்து,முஸ்லீம்,கிறிஸ்தவன் என்றும் ஏழை , பணக்காரன் என்று   ஏதாவது  ஒரு காரணத்திற்க்காக காதலை பெற்றவர்கள் வெறுக்கின்றனர்..

இன்று   காதலை பற்றி எழுதக் காரணம்??, இன்றைய நீதி மன்றத் தீர்ப்பு ஒன்றில் காவல் நிலையங்களில் இனி காதலர்களுக்கு திருமணம் செய்விக்கக் கூடாது .அப்படி செய்து வைத்தால் குறிப்பிட்ட அதிகாரியும் குற்றவாளியேன இனி கருதப் படுவார்.என்ற தீர்ப்புதான். .வீட்டை விட்டு ஓடிச் சென்று போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைவதும் . உடனே காவல்துறை அதிகாரி புரோகிதர் போல் திருமணம் செய்து வைப்பதும்  சமீப காலமாய்  பிரபலமாகி வந்தது. இந்த வழக்கில் மைனர் பெண் ஒருத்தியை பெண்ணின் அப்பா தடுத்தும் போலீஸ் அதிகாரி  காதலனின் குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தார். விளைவி மைனர் பெண் கற்பமாயிருக்கிறாள் . நீதி மன்றம் இப்போழுது அவளை பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்த இளவயது அறியாப் பருவத்து  ஈர்ப்புக்கு (காதலுக்கு)  காரணம்முக்கியமாக பெற்றோர்கள்தான் என்று சொல்வேன்.. இவர்கள் தங்கள் பிள்ளைகளை குழந்தைகளாகவே நினைக்கின்றனர். ஒன்றும் அறியாத தங்கள் பிள்ளைகள்  தவறு செய்ய  மாட்டார்கள் என்று அவர்கள் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்து  விடுகிறார்கள். விளைவு கிடைத்த சுதந்திரத்தை பிள்ளைகள் தவறாக உபயோகப் படுத்திக் கொள்கின்றனர்..நம்பிக்கை வைப்பதில் தவறில்லை அதே நேரத்தில் பிள்ளைகளை கண்காணிக்கவும் தவறக் கூடாது.   பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு செல் போன்கள். .மணி கணக்கில் இரவில் பேச  அனுமதி.  18 வயதானால்தான் வாகனம் ஓட்ட   அரசு லைசன்ஸ் தருகிறது.ஆனால் பள்ளிப் பருவத்திலேயே பிள்ளைக்கு  வாகனம் வாங்கிக் கொடுத்து விடுகின்றனர்..தற்பொழுது பிரபலமாகி வருவது முகநூல்  காதல்.. பெற்றோரும் ஒரளவு கண்டிப்புடன் இருந்தால்  குறைந்த பட்சம் இந்த  ஈர்ப்பினால் ஏற்படும் (மைனர் காதலை)  பிரச்சினையை தவிர்க்கலாம்..

இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம்!! ஒரு சாமானிய குடிமகன் பார்வையில்..

1977  நான் கல்லூரிப் படிப்பை முடித்த ஆண்டு . வேலை தேடினேன் கிடைத்த வேலை  சிறிய கம்பெனி ஒன்றில் கிளர்க்.உத்தியோகம்.. சம்பளம் மாதம் ரூ. 300. அன்று டாலருக்கு நிகரான  ரூபாயின் மதிப்பு ரூ. 30.30. இன்று  என் மகன் பொறியியல் பட்டதாரியாய் வெளியே வந்துள்ளான்  சம்பளம் ரூ.29,500..
இன்று ரூபாயின் மதிப்பு 65.25 காசுகள். இந்தியா முன்னேறி உள்ளதா? அல்லது பின்னேறியுள்ளதா.??

என்னைப்  பொறுத்தவரை இந்தியா  பொருளாதார ரீதியாக நிச்சயம் முன்னேறித்தான் உள்ளது .    அதே அளவு  உழல் செய்வதிலும் 100 மடங்கு முன்னேறியுள்ளதுதான் பிரச்சினை !!.. ஊழல் அற்ற திறமையான  அரசியல் தலைவர்கள் மட்டும் கிடைத்து விட்டால் உலகில் உள்ள அனைத்து நாடுகளுடனும் நம்மால் போட்டி போட  முடியும்.

 தவறை எப்போழுதும் மத்திய அரசின் மீது மட்டும் சுமத்தும் நாம் மாநிலத் தலைவர்களும் மாநில அரசுகளும் மத்தியில் இருந்து பெறப் படும் பணத்தை சரியாக உபயோகப் படுத்துவதில்லை என்பதை கவனிக்க மறந்து விடுகிறோம். ஒரு மாநிலம் முதலாம் இடத்தில் இருக்கின்றது மற்றொரு மாநிலம்  25 ஆம்  இடத்தில் இருக்கின்றது. பின் தங்கிய மாநிலங்களின்  தலைவர்கள் தங்களின் மாநிலம் முதல்மை  பெற வேண்டும் என்று எண்ணியதாக தெரியவில்லை. உ,.ம். உத்திர பிரதேசம் .பிகார் போன்றவை

. தவறு செய்யும் கட்சியை தேர்தலில் நீக்குவது  எளிது .ஆனால்  புதியதாக தேர்ந்தெடுக்கப் பட்டவர்களும் அதே தவறை செய்யும் போது  ஆட்சி மாற்றத்தினால் நாடு முன்னேற வாய்ப்பு இல்லை என்பது புலனாகிறது.. உ.ம். திமுக வையும்  அதிமுக  வையும் தமிழகத்தில் நாம் மாற்றி மாற்றித்தான் தேர்வு செய்கிறோம். ஆனால்   அவர்கள் தங்களை மாற்றிக் கொள்வதாய்  தெரியவில்லை.

தொழிற்சாலைகள்  நிறுவப் படுகின்றன.அந்நிய முதலீடுகள் வரவேற்கப் படுகின்றன.  தொழிற்துறையில் முன்னேற்றம் காணப் படுகிறது. ஆனால் உணவுப் பொருட்களின் விலை கூடுகிறது. அரசாங்கம் அமைதி காக்கின்றது. விவசாயம் செய்யும்  பரப்பளவு குறைகிறது. விவசாய நிலங்கள் குடியிருப்பு மனைகளாக மாற்றப் படுகின்றது. விவசாயம் செய்பவர்கள்  விவசாயத்தை விட்டு விட்டு நகரங்களுக்கு குடியேறுகின்றனர். 10 ஆண்டுகளில் 60 லட்சம் விவசாயிகள் இந்தியாவில் விவசாயத்தை விட்டு விட்டு வேறு தொழிலுக்கு மாறியுள்ளனர். பின் உணவுப் பொருட்கள் விலை கூடாமல் இருக்குமா?

பொருளாதார முன்னேற்றம் என்பது அனைத்து துறைகளிலும் சமமாக முன்னேறுவதுதானே அன்றி ஐடி துறையிலும்  தொழில் துறையிலும் மட்டும் முன்னேறுவது அல்ல?

Saturday, September 7, 2013

தமிழகத்தின் அரசியல் கட்சிகளும் அதன் வாரிசுகளும். ஒரு பார்வை.

          தமிழக அரசியல் கட்சிகள் பற்றியும் அதன்  தலைவர்கள் பற்றியும் ஒரு  சிறு   கண்ணோட்டம். தமிழகத்தில்  10 % மேல் ஒட்டு வாங்கக் கூடிய  கட்சிகள் என்று பார்த்தால் திமுக , அதிமுக,  பாமக  மற்றும்  தேமுதிக .
இவற்றின் தலைவர்கள் தலைமைப் பதவிக்கு  வந்த விதம்  ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி.

.          திமுக தலைவர் கலைஞர் அண்ணா வின்  மறைவிற்க்கு பிறகு   இரண்டாம் இடத்தில் இருந்த  நெடுஞ்செழியனை  பின்னுக்கு தள்ளி விட்டு  தலைவர்.ஆனார்.. நெடுஞ்செழியனும் தனக்கு  திமுகாவில்  வாய்ப்பு இல்லை என்றும் நம்பர் இரண்டுதான் என்று   தெரிந்து கொண்டார். திமுகவில்   கலைஞருக்கும் எம்ஜிஅர் க்கும்   இடையே ஏற்பட்ட    தனிப்பட்ட  போட்டியில் எம்ஜி அர்   பிரிந்து சென்று அதிமுக ஆரம்பித்தார்..  மக்களிடம் ஜாதி வெறியை  தூண்டி விட்டு ராமதாஸ் பாமக  வை   ஆரம்பித்தார். விஜய காந்தும் கலைஞருடன் ஏற்பட்ட சொந்த விரோதத்தின்  காரணமாய்  தேமுதிக வை ஆரம்பித்தார்.

           ஏன்  இந்த முன்னுரை  என்று கேட்பது தெரிகிறது.!!!!!!

          தமிழகத்தில்  தலைமைக்கு  வந்த எந்த ஒரு தலைவனும் நாட்டிற்க்கு நல்லது செய்ய வேண்டும் என்று வரவில்லை. புதிதாய்  கட்சி ஆரம்பித்தவர்களும் அவர்களுக்கென்று ஒரு கொள்கையுடன் கட்சியை ஆரம்பிக்க வில்லை. சுயநலம் ஒன்றே குறியாய்  உள்ளவர்கள்தான் இன்று தமிழகத்தின் தலைவர்களாக உள்ளார்களே தவிர  இவர்களில் யாரும் சேவை மனப் பான்மையுடன் வந்தவர்கள்  இல்லை..

         சுய நலத்தின் அடுத்த கட்டமாக  கலைஞர்   வாரிசு அரசியலை  கொண்டு வந்து  முதலில் வை. கோ  வை  ஸ்டாலினுக்கு தடையாய்  இருப்பார் என்று வெளியேற்றினார். நெடுஞ்செழியன் இடத்தில் இப்போழுது அனபழகனை என்றும் இரண்டாம்  இடத்தில்  என்று நிறுத்தி விட்டார். எம்.ஜி.அர்.மறைவுக்குப் பின் அவருக்கு நெருக்கமான இரண்டு பெண்கள் போட்டி இட்டு அதில் ஜெய வென்றார். ஆனால் அவரால் வாரிசைக் கொண்டு வர முடியாத துர்பாக்கியம்  மட்டுமல்ல அவரே தனக்குப் பின் இரண்டாம் கட்ட தலைவர்கள் வளர்வதை விரும்பவில்லை. காங்கிரஸ்  என்றுமே தமிழகத்தில் மட்டுமல்ல எந்த மாநிலத்திலும்  மாநிலத் தலைவர்களை வளர விட்டதில்லை. எப்போழுதும் போல் நேருவுவின் வாரிசுகள் ரிமோட்  கண்ட் ரோலை  வைத்துக்  கொண்டு டெல்லியில் இருந்து  இயக்குகிறார்கள். பாமக வும்  அன்புமணி ராமதாசை ,,ராமதாசுக்கு அடுத்தபடியாக கொண்டு வந்து விட்டது. . இன்று  ஆரம்பித்த  தேமுதிக தலைவர் விஜயகாந்த்  தன் மனைவி  லதாவை அடுத்த தலைவியாக தயார் படுத்துகிறார். சற்றே கொள்கைப் பிடிப்புள்ள வை கோ வும் கம்யூனிஸ்ட்டுகளும் ஓட்டுக்காக  கொள்கையை விட்டு விட்டு கழகங்கள் இரண்டில் ஏதாவது  ஒன்றுடன் கூட்டணி வைத்துக் கொள்கின்றனர்

         என்று கொள்கைகள்  உடைய கட்சியும்,மக்களுக்கு  சேவை செய்யும் மனப் பான்மை உடைய , தலைவர்களும்   தமிழகத்தில் உருவாகுகிறார்களோ அன்று தான் தமிழகத்திற்க்கு விடிவுகாலம் பிறக்கும்.  இது  பகல் கனவுதான் என்றாலும். ஒரு வேளை பகல்கனவும் பலிக்கலாம் அல்லவா?

Thursday, September 5, 2013

இந்தியாவிற்க்கு காற்றாலை,,சோலார் பவர், தெர்மல் பவர் இந்த மூன்றில் எது உடனடி தேவை?

          சமீபத்தில்  நிலக்கரி  இறக்குமதிக்கு  அதிகமாக அந்நிய  செலவாணி கொடுக்கப் படுகிறது. இந்தியாவிற்க்கு தேவையான் நிலக்கரியில் 42% இறக்குமதிதான் செய்யப் படுகிறது  என்று புள்ளி விவரம் தரப் பட்டுள்ளது.

.        சமூக ஆர்வலர்கள் ஒரு  படி மேலே போய்  இனி மின்சாரத்தை காற்றலைகள் மூலமாகவும், சூரிய  ஒளியில்  இருந்தும்  மின்சாரத்தைப் பெற அரசு  முயல வேண்டும் என்கின்றனர். காரணம் சுற்றுச் சூழல் காக்கப் பட வேண்டும் மாசு கட்டுப் படுத்த வேண்டும் என்று  சொல்கின்றனர். இவர்கள் சொல்படி காற்றாலைகள்  மற்றும் சோழர் பவர் உபயோகப் படுத்த முடியுமா என்று  பார்ப்போம்.

.       இங்கிலாந்திலும் டென்மார்க்கிலும் எடுக்கப் பட்ட சர்வே சொல்லும்  விவரம் இது. காற்றாலை நிறுவப் பட்ட 10 ஆண்டுகளில் அதன் உற்பத்தி மூன்றில் ஒரு பங்காக குறைந்து  விடுகின்றது.  அடுத்து காற்றாலை நிறுவப் பட்ட 15 ஆண்டுகள் வரைதான் அதன் ஆயுட்காலம். அதற்க்கு மேல் உபயோகப்   படுத்துவது வீண்...இதில் தமிழகத்தை பொறுத்தவரை அக்டோபரில் இருந்து  மே வரைதான் நல்ல காற்றுள்ள காலம்..உற்பத்தியும் முழு வீச்சில் இருக்கும் .மற்ற காலங்களில்  மின்சாரம் அதிகம் எதிர் பார்ப்பது வீண்..

        சோலார் பவர்  என்னும் மின்சாரத்தை  சூரிய ஒளியில் இருந்து பெறும் திட்டத்தைப் பார்த்தால் . இதற்குண்டான அடிப்படை  செலவு   செய்ய யாரிடம்  வசதி  உள்ளது..இங்கே இருக்க  வீடு உள்ளவன் எத்தனை என்று  கணக்கெடுக்கப் போனால்  டாய்லேட்  போகவே இடமின்றி  வாழும் மக்களால்   சோலார் பவர்  எப்படி அமைக்க முடியும். அரசாங்கமே  வறுமைக்  கோட்டிற்க்கு கீழ் உள்ள  மக்களின் ஒரு  நாள் வருமானம் ரூ  33.33 . என்று சொல்லி  புள்ளி விவரம் கொடுத்து விட்டது.  ..இருக்க இடமில்லை உண்ண உணவில்லை 80 கோடி பேருக்கு  சலுகை விலையில் அரிசியும் தானியமும் அரசால் கொடுக்கப் படுகிறது.

        இப்படிப் பட்ட நாட்டில்  சோலார் எனர்ஜியை பற்றி  சமூக ஆர்வலர்கள் பேசுகிறார்கள். வளர்ந்து விட்ட நாடுகளில் மாசு கட்டுப் பாடு பற்றி பேசுவதில் தவறில்லை, இங்கே   வாகனங்களில் இருந்து வரும்   புகையை சர்வ  சாதாரணமாய் சுவாசிக்கும் நம் நாட்டில்  சுற்றுச் சூழல்,, மாசு என்று விதண்டாவாதம் போசுவது வேடிக்கையான ஒன்று.  கூவம் நதிக் கரையில் குடும்பம்  ,திருப்பூரில் சாயப் பட்டறை கழிவுகள் குடி  தண்ணிரில் கலந்து   உடலில்  குறை பாடுகளை  ஏற்ப்படுகின்றன. முதலில்  இவற்றை  சரி செய்த பின் இந்தியாவிற்க்கு நிலக்கரி கொண்டு தயாரிக்கப் படும் மின்சாரமும் தெர்மல் பவர் ஸ்டேசன்களும் வேண்டுமா?? வேண்டாமா என்று யோசிக்கலாம்

        முடக்கப் பட்டுள்ள நிலக்கரிசுரங்கங்களுக்கு விதிக்கப் பட்டுள்ள தடைகளை நீக்குவோம். நிலக்கரி உற்பத்தியை இந்தியாவில் அதிகரிப்போம்.கி இறக்குமதி செலவை குறைத்து இந்தியாவின் பொருளாதாரத்தை மீண்டும் நிமிரச் செய்வோம்.தெர்மல் பவரையும்,அணுமின் சக்தியையும் கொண்டு.


Monday, September 2, 2013

முடிவெடுக்கத் தெரியாத மொய்லி முக்கியமான பெட்ரோலிய துறைக்கு தேவைதானா?

இந்தியாவின்  பொருளாதாரம் ,ரூபாயின் மதிப்பு அனைத்தும்  தற்போது இந்தியா  பெட்ரோல் இறக்குமதிக்கு செலவிடும் டாலரை . பொறுத்து  அமைந்து  விட்.டது. பெட்ரோலிய அமைச்சர்   மொய்லி  சிக்கனமாக செலவிடுங்கள்  பெட்ரோலை  என்று சொல்கிறார். . பெட்ரோல்  விற்பனையை    இரவு நேரத்தில் நிறுத்தி  விடலாமா என்று யோசிக்கிறார். ஈரானில்  இருந்து  இந்திய ரூபாய் கொடுத்து பெட்ரோல்  வாங்கலாமா என்று  சிந்திக்கிறார்.   எப்போது? சிக்கல் தலைக்கு  மேல் வெள்ளம்  போல் ஆனா பிறகு.

ஈரானில்  இருந்து ரூபாயை கொடுத்து பெட்ரோல் இறக்குமதியை செய்வதால் 8.5 பில்லியன் டாலர்  மிச்சமாகும் என்கிறார்.,.ஏன்  இதற்குண்டான முயற்ச்சியை இது வரை எடுக்காமல் இருந்தீர்கள்.? இந்தியாவில் ஒஎன் ஜி சி  (ONGC )யினால் மொத்தம்  111  எண்ணெய்  இருக்கும் இடங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளதாக  புள்ளி விவரம்.கூறுகிறது .  இதில் அரசு அனுமதி பெற்று  இருப்பது 17 மட்டுமே . மீதி  உள்ளவை அரசின் அனுமதியை பெற வரிசையில் உள்ளது.

உள் நாட்டில் எண்ணெய்யை  வைத்துக் கொண்டு இறக்குமதி செய்வதைப் பற்றி மட்டுமே  அமைச்சர் பேசுகிறார்.. ஏன்  அவற்றின் மூலம் எண்ணெய் எடுக்க நடவடிக்கை எடுக்க அரசு தாமதிக்கின்றது.  கேட்டால் சுற்றுப் புறச் சூழல்  அமைச்சகம் ஒப்புதல் மற்றும் நடை முறை சிக்கல்கள் உள்ளதாக  பதில் ..அந்நிய  நாட்டிடம் கையேந்துவதை  விட உள் நாட்டில்  பெட்ரோல்  உற்பத்தியை தொடங்க அரசு  என்று  நடவடிக்கை எடுக்குமோ அன்றுதான் இந்தியாவிற்க்கு விடிவு காலம்.

அடுத்து  நிலக்கரி  இறக்குமதியில் முக்கிய பங்கு வகிக்கிறது.  இதிலும் இந்தியாவில் கிட்டத்தட்ட 100 நிலக்கரி சுரங்கங்கள் இருப்பது கண்டு பிடிக்க பட்டுள்ளதாயும். உச்ச நீதி மன்ற தீர்ப்பு ஒன்றின் காரணமாக  உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள குழு ஒன்றின் ஆய்வுக்கு பின்தான்  உற்பத்தியை தொடங்க முடியும் என்று ஒரு பதில்.

.இந்திய அரசின்  செயல்களைப் பார்க்கும்  பழைய தமிழ் பாடல் ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது. என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் ஏன் கையை ஏந்த  வேண்டும்  அயல் நாட்டில் என்பதுதான். அது.

Sunday, September 1, 2013

தமிழக முதல்வராய் இலங்கை தமிழருக்காக 1971,1989 மற்றும் 2006-2011 கலைஞர் ஆற்றிய பணி.

 1974  :கச்சத் தீவை இந்திய மற்றும் இலங்கை  அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட  ஒப்பந்தத்தின் படி இலங்கையிடம்  ஒப்படைக்கப் பட்டது. இந்திய மீனவர்கள் தங்கள் மீன் பிடிக்கும்  உரிமையை இழந்தனர்.  532 தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தனர் என்ற காரணத்தால் இலங்கை ராணுவத்தால் கொல்லப் பட்டுள்ளனர். பல தடவை மீனவர்கள் சிறை பிடிக்கப் பட்டு சிறையில் வாடி பின்  விடுவிக்கப் பட்டுள்ளனர்.

1987-1990  இந்திய அமைதிப் படை இலங்கை சென்று அமைதியை நிலை .நாட்டைச் சென்றது. ஆனால் அதுவே  பின் புலிகளுக்கும் அமைதிப் படையினருக்கும் இடையே  ஆனா சண்டையை  மாறியது..இந்திய ராணுவம்  80,000 ராணுவ வீரர்கள் வரை இலங்கைக்கு அனுப்பி பல  போராளிகளையும்  பொது மக்களையும்  கொன்றது.

2007-2009. இலங்கை ராணுவத்தின்  கடைசி தாக்குதல். விடுதலைப் புலிகளை   முழுவதுமாய் அழித்தது . அவர்களுடன் சேர்த்து  அப்பாவி பொதுமக்கள் 3,00,000 பேரையும் அழித்தது..  தமிழர்கள் அனைவரும் அறிந்த விஷயம் தான்  என்றாலும்   சரித்திரத்தை   சற்றே பின்னோக்கிப் பார்க்க வேண்டிய  அவசியம் .ஏற்பட்டதால் பார்க்கின்றேன்

1971-1976 தமிழகத்தின் முதல்வராய்  கலைஞர் கருணாநிதி.
1989-1991 தமிழகத்தில்  மீண்டும் கலைஞர் கருணாநிதி ஆட்சி
2006-2011 கடைசியாய் மீண்டும் கலைஞர் கருணாநிதி ஆட்சி.
.
இலங்கையில் தமிழர்கள் தாக்கப் படும் போது எல்லாம்  தமிழகத்தில் கலைஞர் முதல்வராய் இருந்தது மட்டுமல்ல  கடைசி கட்டப் பேர் உச்ச கட்டத்தில் இருந்த போது   மத்தியிலும் திமுக அமைச்சரவையில் இருந்துள்ளது.எல்லாம் முடிந்து  ஒரு வம்சமே சுடுகாடான பின் திமுக  மத்திய அரசில் இருந்து விலகிக் கொண்டுள்ளது.

இன்று  கச்சத் தீவு  தமிழகத்திற்க்கு உரிமையானது .ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகைக்கு   உட்பட்டு இருந்த இடம் என்று   கலைஞர் வாதிடுகிறார். அவர்  தலைமையில் உள்ள டெசோ  நீதி மன்றத்தில் வழக்காடுகிறது இது சம்பந்தமாய்!!  தமிழர்களுக்கு இலங்கையில் சிறப்பு அந்தஸ்த்து அளிக்கப் பட வேண்டும் என்று பல கோரிக்கைகளை வைக்கிறார்.

வயதில் மூத்த ஒரு அரசியல்வாதி அரசியல் லாபத்திற்க்காக இலங்கைப் பிரச்சினையை  கையிலேடுத்துக்   கொண்டு பேசுவது கண்ட ஆற்றாமையில் எழுதப் பட்டதே இந்தப் பதிவு..

Saturday, August 31, 2013

அன்றைய தலைவர்களும் இன்றைய தலைவர்களும் ஒரு பார்வை.

அன்றைய தலைவர்கள் மக்களுக்காக நாம் என்று இருந்தார்கள். ஆனால் இன்றைய  தலைவர்கள்  நமக்காகத்தான் மக்கள் என்று நினைக்கின்றார்கள்.

அன்று மக்களைத் தாக்கினால் தலைவன் பொங்கினான். இன்று தன்னைத் தாக்கிப் பேசினாலே தொண்டன் பொங்கி எழ வேண்டும் என்று   தலைவன் எதிர் பார்க்கிறான்

 அன்று கட்சி வேறு தான் வேறு என்று தலைவர்கள் இருந்தனர். இன்றைய தலைவர்களோ  தான் தான் கட்சி . என்று நினைக்கிறார்கள்

. கட்சிக்கு நாம் தலைவன்,கட்சியால் கிடைத்தது இந்த தலைவன்  பதவி என்ற எண்ணம் போய் ,விட்டது. இன்றைய தலைவர்கள்  தான்தான் கட்சி,, கட்சி தன  சொல்படிதான்  கேட்க வேண்டும் என்று  நினைக்கின்றார்கள்.

அன்றைய தலைவர்கள் கட்சியின் புகழை பரப்பினர். இன்றைய தலைவர்களோ கட்சியின் புகழ் பரப்பப் படுவதை விட  தன புகழை தொண்டன் பரப்ப வேண்டும் என்று நினைக்கிறார்கள் .

அன்று  கட்சிக்கு என்று கொள்கைகள் இருந்தன.இன்று  கொள்கைகளை ஒரு சில சீட்டுகளுக்காக  தலைவர்கள்  அடமானம்  வைக்க தயங்குவதில்லை.




இளம் பாலியல் குற்றவாளிகளை ஊக்கு விக்கும் ஒரு தீர்ப்பு.?

செய்யும் தவறு என்ன என்று தெரியாமல் ஒருவன் குற்றத்தை செய்தால்  கருணை  காட்டுவதில்  தவறில்லை. இளம் வயதில் ஒருவன் பசிக்கு திருடுகிறான் என்றால் வறுமை கண்ணை மறைத்து விட்டது தெரியாமல் செய்து விட்டான் என்று கூட சொல்லலாம் திருடியது திட்டமிட்டு செய்யப் படவில்லையேன்றால்?

பெண்களை இளம் வயதில் ஈவ் டீசிங் செய்து விட்டான் என்றால் பருவக் கோளாறு என்று கூட மன்னித்து விடலாம். ஆனால் இந்த  வழக்கில்  போலீஸ் தரப்பிலிருந்து அந்த பெண்ணிடம் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டவன் என்ற  முறையில்   குற்றம் சுமத்தப் பட்ட பின்னும்  அவன் மைனர்  ,18 வயதை அடைவதற்கு முன் செய்த தவறு என்று சொல்லி மைனருக்கான அதிக பட்ச தண்டனையான 3 ஆண்டுகள் மட்டும்  நீதி வழங்கியிருப்பது மக்களுக்கு நீதித் துறை மீதிருந்த மரியாதையை இழக்கச் செய்துள்ளது..

மைனர் ஒருவன் மது அருந்தி ,தவறான நேக்கத்துடன்  கூட்டாளிகளுடன் சேர்ந்து ஒரு பெண்ணை  கூட்டிச் சென்று, அவள் கூட்டாளியை தாக்கி, பின் அந்த பெண்ணையும்  தாக்கி  கொடூரமான முறையில்  பாலியல்  குற்றம் செய்து அவள் சாவுக்கு காரணமாய் இருந்தூள்ளான். ஒவ்வொரு குற்றத்திற்கும் 3  ஆண்டுகள் வீதம் போட்டல் கூட  15 ஆண்டுகள் தண்டனை .கொடுத்திருக்கலாம்.
சட்டப் புத்தகத்தை அப்படியே வரிக்கு  வரி பின் பற்றி நீதி வழங்க வேண்டும் என்று சட்டம் சொல்லவில்லை. சந்தர்ப்ப சூழ் நிலைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு  நீதி  வழங்கியிருக்கலாம்.எத்தனையோ தீர்ப்புகளை பார்த்துள்ளோம், திட்டமிட்டு செய்யப் பட்ட  கொலையல்ல ஆகவே தூக்கு தண்டனை விதிக்கப் படாமலும், திட்டமிட்டு கொடூரமாய் செய்த கொலைகளுக்கு நீதி அரசர்கள் மரண தண்டனை அளித்துள்ளதையும்  பார்த்துள்ளோம் . இங்கே பாதிக்க்கப் பட்டது ஒரு பெண்.,நீதியை வழங்கியதும் ஒரு பெண்  நீதிபதி.. ஆனால் தவறான நீதி வழங்கப் பட்டு விட்டது.

Friday, August 30, 2013

தங்கமும் பெட்ரோலும் வேண்டியது 80 கோடி வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள ஏழைக்கா? ஒரு ஆய்வு.

  தங்கம்  வாங்குவதில்  மக்கள் கட்டுப் பாடுடன் இருக்க வேண்டும். பெட்ரோல்  செலவில் சிக்கனம் வேண்டும் . இது நிதியமைச்சர் தொடங்கி  பிரதமர் வரை மக்களுக்கு கூறும் அறிவுரை .இது உண்மையில் பின் பற்ற வேண்டிய    திட்டம்தான்.ஒத்துக் கொள்கிறோம். அதை நடை முறை படுத்துவது அரசின்  உள்ளது. மக்களிடம் இல்லை என்பதை  என் இன்னும்  புரிந்து கொள்ளவில்லை.
1) இந்தியாவின் குடி மக்களில்  80 கோடி பேர் வறுமை  கோட்டுக்கு கீழ் உள்ளார்கள். நிச்சயம்  இவர்களால்  அன்றாடம் பெட்ரோலோ அல்லது  தங்கமோ வாங்க முடியாது. ஏனேன்றால் இவர்களின்  ஒரு நாள் வருமானமே ரூ. 33.33 என்று நீங்களே நிர்ணயித்து விட்டீர்கள்.
2)  அடுத்து உங்கள் கணக்குப் படி இந்தியாவில் வருமான வரி கட்டுபவர்கள்  மொத்தாம் 2 கோடி பேர்தான். அதிலும் 60 % பேர் ,அதாவது கிட்டத்தட்ட 1 கோடியே  30 லட்சம் லட்சம் பேர்  சம்பளக்காரர்கள்..ஆக  மிச்சம் உள்ள  70 லட்சம் பேர்தான் வியாபாரிகள் .உங்களிடம் வரிகட்டும்  இவர்களை மட்டும்தான் நீங்கள் கவனிக்க வேண்டும். இவர்களால் மட்டும்தான்  கார் உபயோகிக்க முடியும் தங்கம் வாங்க முடியும். மாத சம்பளக் காரர்களில் ஒரு சிலரால் கார் வைக்கும்  அளவுக்கு வருமானம் இருக்கலாம் ஆனால்  மற்றவர்களால்  இரு சக்கர வாகனம் மட்டுமே வைத்திருக்க முடியும்.
3) தங்கம் வாங்கும் இவர்களை உங்களால் கட்டுப் படுத்த முடியாதா? அல்லது திருட்டுத் தனமாக கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பு செய்யும்  வியாபாரிகளை தங்கம் வாங்கும் போது உங்களால்  கட்டுப் படுத்த முடியாதா? சென்னை, மும்பை  போன்ற  மாநகரங்களில் வேண்டுமானால்  நிறைய தங்க நகை கடைகள் இருக்கும். வியாபாரமும் அதிகம் இருக்கும். எளிதில் இவர்களை கட்டுப் படுத்தலாமே.?
4) அடுத்து பெட்ரோல் ,  இதைப் பற்றி ஆராய்ந்தால்   தவறு முழுக்க முழுக்க அரசின் பக்கம்தான் என்பது புலனாகும். இந்தியாவை ஏழை நாடு என்று நீங்களே ஒத்துக் கொண்டு  இலவச அரிசியும் தானியங்களும் தருகிற திட்டங்களை கொண்டு வருகிறீர்கள். இப்படி ஏழையான ஒரு  நாட்டிற்க்கு  நிஷ்சானும்,போர்டும்,  சுசுகியும், டயோட்டாவும் தேவையா? யார் இந்த கம்பெனிகளை இந்தியாவிற்குள் கொண்டு வந்தது.? இவற்றை வாங்க குறைந்த வட்டியில்  வங்கிகள் ஏன்  கடன் கொடுக்கின்றன.? பெட்ரோல்  சிக்கனமாக உபயோகிக்க  சொல்லும்  அரசு அதை உபயோகிப்பாளர்களை வாங்க தூண்டுவது ஏன் ? வெளி நாட்டு கம்பெனிகளை இந்தியாவில்  நுழைய விட்டது ஏன் .சென்னையில் உற்பத்தியாகும்  வண்டிகளில் 65 % ஏற்றுமதியாகிறது என்று சொல்வீர்கள். சரி ஒத்துக் கொள்கிறோம். மீதி வண்டிகள் உள் நாட்டில்தானே  உலா  வருகிறது.
5) மக்கள் உபயோகப் படுத்தும்  கார்களை  உற்பத்தி செய்வதில் இந்தியா 6 வது இடம் என்று புள்ளி விவரம் சொல்கிறது. சென்ற  ஆண்டு மட்டும் 3.7 மில்லியன் கார்கள் இந்தியாவில் உற்பத்தி ஆகியுள்ளன. பெருமையாகத்தான் இருக்கின்றது. ஆனால் இந்தியாவின் விவசாய உற்பத்தியாளர்கள்  60 லட்சம் பேர்  கடந்த 10 ஆண்டுகளில் விவசாயம் செய்யும் தொழிலில் இருந்து விலகி விட்டனர் என்ற புள்ளி விவரத்தை பார்க்கும் போது வேதனையாய் இருக்கின்றது.உற்பத்தி  கூட வேண்டிய விவசாயத் தொழிலில் வீழ்ச்சி ஆனால் பணக்காரர்கள் உபயோகப் படுத்தும் கார் உற்பத்தியில் முன்னேற்றம்.அரசு தன  முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டிய துறைக்கு கொடுக்காமல் தேவையற்ற துறையை வளர்க்கின்றது.
இனியாவது விவசாயத்தையும்,   தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை முன்னேறுவதில் அரசு  நடவடிக்கை எடுக்குமா?

Wednesday, August 28, 2013

காவல் துறை உங்கள் நண்பன்.!!!!!!!!!!!

காவல் துறையி பல நல்ல திறமையான,நாணயமான  அதிகாரிகள் உள்ளனர்  சில புல்லுருவிகளால்  அந்தத் துறைக்கே கெட்ட  பெயர் ஏற்படுகிறது .இந்த பதிவில் அந்த ஒரு சிலரைப்   பற்றி மட்டுமே எழுதியுள்ளேன்.

காவல்துறையின் கடமைகள் சட்டம் ஒழுங்கை காப்பது,கிரிமினல் குற்றவாளிகளை கண்டு பிடிப்பது,கிரிமினல் குற்றங்கள் நடக்காமல் தடுப்பது ,போக்குவரத்தை சரி செய்வது நீதி மன்றங்கள் இடும் கட்டளைகளை  நிறை வேற்றுவது என்று  சொல்லிக் கொண்டே போகலாம்..ஆனால் நடப்பது  பல இடங்களில் வேறு விதமாய் இருக்கின்றது.
.
போக்கு வரத்தை சரி செய்யும் காவலரை   கண்டவுடன்  நம்மையும் அறியாமல் நம்  கை சட்டையில் பணம் இருக்கின்றதா  காவலருக்கு கொடுக்க என்றுதான்  போகிறது. அனைத்து தஸ்தாவேஜிகள் இருந்தாலும் நம்மால்  தடுக்க முடியாத அநிச்சை செயலாகி   விட்டது..காவலர்கள்  குடியிருப்பிலேயே ஒரு பெண் காவலரிடமே திருட்டு நடந்த சம்பவமும் நடை பெற்றுள்ளது 
.
பாஸ்போர்ட்  பெற  காவல் நிலைய  விசாரணை அறிக்கை  தேவை  என்று ஒரு  சட்டம்... நடப்பது என்னை 300 ரூபாய் கொடுத்தால் வீட்டுக்கு வந்து விசாரிக்காமலே  அறிக்கை கொடுத்து விடுகிறார்கள் காவல் துறையினர்.பின் எதற்க்கு இப்படி ஒருவிதி குற்றம் செய்பவர்கள் பணத்தால் சட்டத்தையும் அதன் பாது காவலர்களையும் . வாங்கி விட  முடியும் என்று நினைக்கின்றார்கள்.
சரி ஏன்  இந்த  முன்னுரை என்று கேட்கலாம். சமீபத்தில் சட்டிஸ்கரில் ஒரு போலிஸ் இன்ஸ்பெக்டரும்  அவர் கீழ் வேலை பார்த்த 3 துணை  இன்ஸ்பெக்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையை படித்ததால் தோன்றிய பதிவு இது. கள்ளச் சாராயம் காச்சியவர்கள் மற்றும் மற்ற குற்றங்கள் செய்தவர்களிடம் இருந்து பெற்ற மாமூலை பிரிப்பதில் அதிகாரிகளுக்கு இடையே சண்டை.காரணம் இன்ஸ்பெக்டருக்கு மாறுதல் கிடைத்து விட்டதால் தர மாட்டோம் பங்கை என்று உதவியாளர்கள் தகராறு.செய்ய ,இன்ஸ்பெக்டர் ஊர் பஞ்சாயத்து தலைவர்களை தனக்கு ஆதரவாய்   பேச அழைத்து வந்துள்ளார்.!!!உதவியாளர்கள் அவர்களை அடிக்க,பதிலுக்கு  கிராமமே திரண்டு வந்து காவல் நிலையத்தை தாக்கியுள்ளது.!!!!

வருமானம் குறைவாக  இருப்பதால் இவர்கள் குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைக்கிறார்களா?   அல்லது  சட்டம்  வழங்கியுள்ள அதிக  படியான  அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்களா?  வருமானத்தை அரசு கூட்டிக் கொடுக்க முடியும்...ஏற்கனவே இவர்களுக்கு    அரசு .குறைந்த  வாடகையில் காவலர் குடியிருப்பு   கட்டிக் கொடுத்துள்ளது.சலுகை விலையில்  உணவுப் பொருட்கள் கொடுத்துள்ளது. இன்னும் என்ன  பார்க்கிறார்கள் இவர்கள்.??காவல்துறை எங்கள் நண்பனாக இருக்கவே ஆசைப் படுகிறோம்.

சரிந்து விழும் இந்திய பொருளாதாரம்.தடுத்து நிறுத்தப் போவது யார்??

இந்திய பொருளாதாரம் உண்மையிலேயே  மிகவும் மோசமான நிலையில் உள்ளதா ??அல்லது வேண்டுமேன்றே   மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க தயங்குகிறதா.??நடப்புக் கணக்கில்  பற்றாக் குறை என்று சொல்லும் அரசு  90,000 கோடி ரூபாயை  உணவு பாது காப்பு திட்டத்திற்க்கு ஒதுக்குகிறது.
சலுகை விலை திட்டத்திற்க்கு ஏன் இந்த அவசரம்? அடுத்த தேர்தலில் வெல்வது ஒன்றுதான் குறி நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி கவலை இல்லை என்று சொல்கிறதா மத்திய அரசு.?

1991 இல் உண்மையிலேயே நடப்புக் கணக்கில் பற்றாக் குறை எழுந்த ப்போது 2.2 பில்லியோன்  டாலருக்காக இந்தியாவின் தங்க சேமிப்பு 67 டன்னை சந்திரசேகர் அரசு இன்டெர்னேசனல் மானிடரி ஃபண்டிடம் அடமானம் வைத்தது. இந்தியாவின் மானத்தை விமானத்தில்  பறக்க விட்டது  நினைவுக்கு வருகிறது.. இன்று ரிசர்வ் வங்கியில்  558 டன் தங்கம் பாதுகாப்பில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

குற்றம் புரிந்தவர்கள் தேர்தலில் நிற்கக் கூடாது என்று உச்ச நீதி மன்றம்  தீர்ப்பு சொன்னதும்  அதற்க்கு எதிராக மசோதாவை அனைத்து கட்சிகளும்  சேந்து பார்லிமென்டில் நிறை வேற்றுகின்றீர்கள். ஆனால் சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி கமிட்டி நியமித்து அது ஒப்புதல் தந்த பின்தான் கரி மற்று இரும்பு  சுரங்கங்கள்  வேலை ஆரம்பிக்கலாம் என்று உச்ச நீதி மன்ற ஆனையை மறு பரிசீலனை செய்ய அரசு உச்ச நீதிமன்றத்தை அனுகவில்லை.அல்லது  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கிறது என்பதால் இந்த தீர்ப்புக்கு எதிராக எந்த ஒரு மசோதாவும் நிறைவேற்றப் படவில்லை. சுற்றுச் சூழல் பற்றிய  ஒப்புதல் கிடைக்காமல் 100க்கும் அதிகமான இடங்களில்  வேலை நடக்காமல் இருந்தும்  அதைப் பற்றி கவலை படாமல்  வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதன் மூலம் பல பில்லியன் டாலர்கள் வெளியேறுவது அரசுக்கு தெரியவில்லையா?

ஏற்றுமதி செய்பவர்களுக்கு என்று தனி சலுகைகள் ஏதும் சமீபத்தில் வழங்கப் படவில்லை. ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் இறக்குமதியை குறைக்கவும்  சரியான நடவடிக்கை எடுக்கப் படவில்லை. தங்கம் இறக்குமதிக்கும் ,கலர் டிவி இறக்குமதிக்கும் மட்டும் வரிவிதித்து விட்டால் நிலமை சரியாகி விடுமா?திறமையற்ற நிதி அமைச்சரின் கீழ் இந்தியாவின் பொருளாதாரம் தள்ளாடுகிறது.. அமைதியான பிரதம மந்திரி இன்னும் அமைதியையே காக்கின்றார்.  சரிவிலிருந்து இந்திய பொருளாதாரத்தையும் மக்களையும் காக்க யார் முயற்ச்சி எடுப்பார்??

Tuesday, August 27, 2013

மகான் கள் என்ற பெயரில் ஏமாற்றும் ஒநய்கள்.

மனிதன்  தவறு செய்யலாம். ஆனால் மகான் என்ற போர்வையில்  தவறு செய்யும் போதுதான் இழிவு உனக்கு மட்டுமல்ல நீ சார்ந்த மதத்தையும்  பாதிக்கின்றது. மைனர் பெண்ணிடம்  சந்நியாசி  பாலியல் குற்றம் புரிந்தார். உன்னால் எங்களுக்கும் கேவலம். ஒருவரல்ல இருவரல்ல பலர். நித்தியானந்தா,, பிரேமானந்தா  வரிசையில் இன்று  நீயும் சேர்ந்து விட்டாய்.உன்னை பின் பற்றி எத்தனை பக்தர்கள்.? உனக்கு ஆதரவு தர ஒரு அரசியல் கட்சி  பிஜேபி என்ற பெயரில்.

ஏற்கனவே  டெல்லி  பெண்  பாலியல் பலாத் காரத்தின் போதே நீ  சகோதரா என்னை  விட்டு விடு என்று சொல்லியிருந்தால் விட்டிருப்பான் என்று ஒரு புது வியாக்ஞானம்  சொல்லியிருந்தாய். அன்றே மக்கள் உன்னை அடையாளம் காண தவறி விட்டனர்.
லஞ்சம்  வாங்கிய  குற்றத்தை  செய்தவனை நீதி தண்டிக்கின்றது அதன் பின்  வேலையும் இழக்கின்றான் . ஆனல் உன்னைப் போல் தவறு செய்தவன் தண்டனையில் இருந்து  வெளியே  வந்தபின் அதே தவறை செய்கிறீர்கள். மக்களும் பைத்தியக்காரர்கள்போல் உங்களை பின் பற்றுகின்றனர். சமீபத்திய உ.ம். நித்தியானந்தா. !!
அரசு   நடவடிக்கை எடுக்குமா? இவர்களை போல்  தீயவர்களால்   நல்ல ஞானிகளின் பெயருமல்லவா கெடுகிறது..

Thursday, August 15, 2013

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள். ந்ட்புடன் உங்கள்  நண்பன் பெ.ரெங்கசாமி 

Tuesday, July 23, 2013

தமிழகத்தில் கடவுள் எதிர்ப்பும்,சுய மரியாதையும் படும் பாடு.?




பெரியார்  திராவிட  கழகத்தை  ஆரம்பித்தது  மக்களிடையே உள்ள  மூட  நம்பிக்கைகளை ஒழிக்கவும்   சுயமரியாதை  எண்ணங்களை கொண்டு வரவுமே.
ஆனால் இன்று  கழகங்கள் பிரிந்தபின்  கடவுள் பக்தியை பரப்ப கழகங்கள் துணை போகின்றன. ,சுய மரியாதை என்றால் என்ன என்றுதெரியாமல்  சிஷ்யர்கள் இருக்கிறார்கள்... இந்துவை திருடன் என்று கலைஞர் கூறுகிறார் ஆனால் அவர் மகள்களும்,மருமகள்களும்  கோயிலுக்கு சென்று தலைவருக்காகவும் குடும்பத்திற்காகவும் வேண்டுகின்றனர்.ஏன் இந்த  நிலை? மக்களை  கடவுளை கும்பிடாதே என்று தடுக்கும்  தலைவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு திராவிட கொள்கைகளை பரப்ப மறந்தது என்??ஊருக்கு மட்டும்தான்   உபதேசமா?. சொந்த வீட்டுக்கு இல்லையா??

        அடுத்து சுய மரியாதை  !! ரூபாய்க்கு என்ன விலை என்று கேட்கும் நிலையில் உள்ளது  இன்றைய அமைச்சர்களின் செயல்கள்.  உங்கள் தலைவிக்கு,முதல் அமைச்சருக்கு மரியாதை செய்வதை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால்  பதவியை கொடுத்தார் என்பதற்காக   பொதுமக்கள் முன்னிலையில் காலில் விழ வேண்டுமா?? அதை தடுக்காமல் ஆசி வழங்கும் முதல்வர்! இது அதை விட கொடுமை.
             கடவுள் எதிர்ப்பையும்,சுயமரியாதைக் கொள்கைகளையும்  இந்தியாவில்  முதலில் பரப்பிய நம் தமிழகத்திற்க்கு இது தேவையா???     

Tuesday, July 2, 2013

GOD

                                                           கடவுள்
உலகில் பலவிதமான மதங்கள்  பலவிதமான போதனைகள் ,அறிவுறைகள்,கருத்துக்கள்  இருந்தாலும் அனைத்து மதங்களும் சொல்லும் ஒரே வார்த்தை "நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள் " அவரால் சிருஷ்டிக்கப் பட்டவர்கள் நாம் என்பதுதான்.
இறைவனால் அனுப்பப் பட்ட இறை தூதர்கள்   அல்லது அவதாரங்கள்  இந்த உலகில் அவதரித்து நம்மை ரட்சித்தார்கள்  என்று அனைத்து  மதங்களும்  சொல்கிறது.மனிதனின் இறைவழி பாடு முறைகளிலும், உருவ வழிபாடுகளிலும் தான் மதத்திற்க்கு மதம் வித்தியாசப் படுகிறதே அன்றி  அனைத்து மதங்களும் "ஒன்றே  குலம்  ஒருவனே தேவன்" என் பதில் மாறுபட்ட கருத்து கொண்டிருக்கவில்லை .
கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை தான் நாத்திகர்கள் மறுத்து கிண்டல் செய்கிறார்களே அன்றி,   இல்லை என்பதை நிருபிக்க முயற்சி செய்யவில்லை.
நாத்திகவாதி நண்பர்  ஒருவர் வீட்டிற்க்கு மாலையில் வந்தார், எப்போழுதும் போல்  இல்லாத ஒரு கடவுளை பார்க்கப் போகிறிர்ர்களா என்று கேட்டார் .நானும் சிரித்துக் கொண்டே ஆம் என்று சொல்லி விட்டு ,உங்கள் முதுகில் கட்டி  வந்ததாகச் சொன்னீர்களே ஆறி விட்டதா?  பெரிய கட்டியா சிறியதா என்று கேட்டேன் .முதுகில் உள்ளதால் பார்க்க முடியவில்லை,ஆறிக் கொண்டிருக்கின்றது ,வழிதான் தாங்க முடியவில்லை என்றார்.முதுகில் உள்ள கட்டியை பார்க்க முடியவில்லை ஆனால் வலையை உணர்கிறீர்கள்? அதே போல்தான் நான் பக்தியுடன் கடவுளை வேண்டும் போது அவரை காண முடியாவிட்டாலும் அவர் என் அருகில் இருப்பதை  உணர்கிறேன்.என்றேன்.இதுதான் நான் நாத்திகர்களுக்கு சொல்லும் விளக்கம் .
       அடுத்து நாத்திகர்கள் எழுப்பும் பிரச்சினை கடவுளுக்கு சில மதங்களில் உயிர் பலி கொடுப்பதையும்,தன்னைத் தானே பக்தர்கள் வருத்திக் கொள்வதையும் தான்.கடவுள் உயிர் பலி கேட்டதாய்  எந்த மதத்திலும் சொல்லவில்லை .தவறு பக்தனிடம் தானே அன்றி கடவுளிடம் இல்லை.
இதற்க்கு ஒரு கதை உண்டு. முனிவர் ஒருவர் செல்லும் வழியில் குயவன் ஒருவன்  ஆடு ஒன்றை பலி  கொடுப்பதற்காக எடுத்துச் செல்வதை கண்டார்.
முனிவர் அவனிடம் ஏனப்பா ஆட்டை இப்படி இழுத்துச் செல்கிறாய் என்று கேட்டார். அவனும் இறைவனுக்கு படையல் செய்தால் தன வியாபாரம் பெருகும் தான்னை கடவுள் நன்கு வைத்துக் கொள்வார் என்றான்.முனிவர் குயவன் கையில் இருந்த பானை ஒன்றை வாங்கி உடைத்தார்.குயவனுக்கு கோபம் வந்து முனிவரிடம் என்னுடைய பானையை நீங்கள் எப்படி உடைக்கலாம். அதை உருவாக்க நான் பட்ட கஷ்டம் உங்களுக்கு தெரியுமா?என்று கேட்டான்.முனிவர் சிரித்துக் கொண்டே  உயிரற்ற  உன் பானையை உடைத்ததிற் க்கே  நீ இவ்வளவு கோபப் படுகிறாயே ? கடவுள் ஆசையாய் படைத்த உயிருள்ள  ஒரு ஜீவனை  கொல்வதை  விரும்புவாரா என்று கேட்டார்.முனிவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்ட குயவன் ஆட்டை  சுதந்திரமாக செல்ல விட்டு விட்டான் .
தவறை நம்மிடம் வைத்துக் கொண்டு இறைவனை குறை சொல்வதில் பயனில்லை. இன்றைய நம்முடைய வேண்டுதளு க்கு கடவுள்  செவி சாய்க்கவில்லை என்பதற்க்காக கடவுளை குறை சொல்வதை விடுத்து, இதை விட சிறந்த ஒன்றை கடவுள் நமக்கு அளிக்கவிருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்தால் நம் வாழ்க்கை இனியதாக அமையும்.

Monday, July 1, 2013

GOD

        Whether you are a follower of Christianity or Hinduism or Islamic. All religions preach the same thing. That we are all children of God. We developed different religions and different Gods for ourselves. Atheists always attack the multi-God religions as a weapon to hurt the feelings of theists. It was never intended by God to have so many religions. And because he loved us without any limits he always supported our faith no matter in which form we idolized him.
         Another way that people always misunderstand was sacrifices.God never asked for any sacrifices from his children. Yet people always consider a sacrifice is the best way to reach God.Let me tell you a story of a potter and a Saint. A potter once took a sheep with him. An old saint asked the potter why he was taking the sheep with him. He told the saint that he was going to sacrifice the sheep to God in order for his business to grow and for his well being. The saint then took a pot from the bag of pots that the potter was carrying and he threw the pot on to the ground. The potter got irritated and was furious and he screamed at the saint " You have no right to break what belongs to me!!!". The saint calmly replied " Son, You are getting angry and furious at me for destroying a pot which you created. Then why do you think that God would like you to destroy and kill something that he created out of love and that too for your petty reasons". The potter understood what the saint was trying to tell him. And he let the sheep go free.
       We always misunderstand what God intended for us and then blame God that he did not help us even with all the things that we sacrificed. The mistake is always with us and not with God. They do not understand what God intends.

-Puthiya Manithan.