Tuesday, September 17, 2013

சுய விளம்பரத்திற்க்காக மக்கள் வரிப் பணத்தை கரியாக்கும் அரசியல்வாதிகள். பற்றிய ஒரு ஆய்வு

இன்றைய  செய்தி ஒன்றை படித்ததும்  ஏற்பட்ட   கோபம் வேறு எந்த செய்தியை படித்தும் வந்ததில்லை.  செய்தி இது தான். சென்ற  திமுக ஆட்சியின் போது நடத்த பட்ட உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு ஆனா செலவு  ரூபாய் 301  கோடி என்று தலைமைச் செயலர் அறிவித்திருந்திருக்கின்றார் . அதைக் கண்டு  நம்பாமல் சமூக ஆர்வலர் ஒருவர் விவரம்  விசாரித்த போது கணக்கு தணிக்கை அலுவலகத்தில் இருந்து 151 கோடி என்றும்  தமிழ்  துறை  அலுவலகத்தில் இருந்து  262  கோடி என்றும்  பதில் கிடைத்துள்ளது.  சரியான  தகவல்  வேண்டி  இப்போழுது அவர்
நீதி மன்றத்தை அணுகியுள்ளார்.  செலவுக் கணகில் உள்ள குளறுபடியை ப் பார்த்த நீதிபதியும் லஞ்ச ஒழிப்புத் துறையை விசாரித்து உடன் தகவல் தரும் படி  ஆணையிட்டுள்ளார்.

ஒரு அரசு தன கடமையை செய்துள்ளது. தமிழுக்கு  செம்மொழி அந்தஸ்த்து வாங்கித் தந்துள்ளது. பாராட்டப் பட வேண்டியதுதான். ஆனால் அதற்க்காக மக்கள் வரிப் பணத்தை இப்படி  வீணாக செலவு செய்தது எந்த விதத்தில்  நியாயம். சரி இத்தனை கோடிகள் செலவு செய்து கோயம்புத்தூரில் நடத்தப் பட்ட இந்த விழாவால் என்ன  பயன் கிடைத்தது. குறைந்த பட்சம்  கோயம்புத்தூர்  மாவட்டத்திற்கு இதனால் ஏதேனும்  பலன் கிடைத்ததா? தீபாவளிக்கு பட்டாசு  வெடித்து கரியாக்கியது போல்  மக்களின் பணம் இப்படி  வீணாகியுள்ளதே.

 அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் தங்கள் சொந்த  விளம்பரத்திற்காக  பணத்தை இப்படி தண்ணீராய்  செலவழிப்பதை
தடுக்க முதலில்  சட்டம் இயற்றப் பட வேண்டும். கட்சி வேறு பாடு இன்றி இனி எந்த கட்சி இப்படி வீண் செலவு செய்ததோ அந்த கட்சியின் கணக்கில் இந்த வீண் செலவுகள்  எடுத்துக் கொள்ளப் பட்டு  அந்த கட்சியிடம் இருந்து பணத்தை வசூலிக்க வேண்டும். அப்படி  ஒரு நீதி வழங்கினால் தான் மக்கள் வரிப் பணத்தை செலவு செய்யும் தலைவர்கள் பொறுப்புடன்  செலவு செய்வார்கள்.  நீதி அரசர்கள் அப்படி ஒரு தீர்ப்பு தருவார்களா?


No comments:

Post a Comment