இந்தியாவை ஆளப் போவது யார் ? மோடியின் தலைமையில் உள்ள பாஜக வா .ராகுல் காந்தியை முன்னிறுத்தி சோனியாவின் காங்கிரசா !!!மூன்றாவது அணியின் துணையுடன் காங்கிரஸா அல்லது காங்கிரசின் ஆதரவுடன் மூன்றாவது அணியின் தலைவர்களா? மோடியை பிரதமராக தேர்வு செய்தவுடன் பஜாக வினர் மத்தியில் இப்பொழுதே வெற்றி பெற்ற மாதிரி ஒரு உற்சாகம் .காணப் படுகிறது. இது உண்மையிலேயே சரியான கணிப்புதானா?
பழைய புள்ளி விவரங்களை பார்க்கும் போது நமக்குத் தோன்றும் சில சந்தேகங்கள். 1)வாஜ்பாய் தலைவராய் இருந்த போது பாஜக பெற்ற மொத்த சீட்டுகள் 182. பெற்ற ஒட்டு சதா வீதம். 25.59%. அதன் பின் அத்வானியை முன்னிறுத்தி 2004 இல் அவர்கள் பெற்ற ஒட்டு 22%.. 2009 தேர்தலில் கடைசியாய் பெற்ற ஒட்டுக்கள் 18% மட்டுமே. ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவின் ஒட்டு சதவீதம் குறைந்து கொண்டுதான் வந்திருக்கின்றது..மோடியின் தலைமையின் கீழ் போட்டியிடும் பாஜாக இழந்த 7% ஓட்டுக்களைப் பெற்றாலும் கிடைக்கப் போகும் சீட்டுகள் 116 இல் இருந்து 182 ஆகத்தான் இருக்க வாய்ப்பு உள்ளதே தவிர 272 என்ற பெரும்பான்மை அடைய முடியுமா என்பது சந்தேகமே..சென்ற தேர்தலில் காங்கிரஸ் பெற்ற ஒட்டுக்கள் 15,00,00000. பாஜக பெற்ற ஒட்டுக்கள் 10,000,0000, மூன்றாவது அணி பெற்றது 8,80,00000. கிட்ட தட்ட 5 கோடி ஒட்டுக்கள் வித்தியாசம் உள்ளது. காங்கிரசிற்கும் பஜகாவிற்க்கும்.அந்த ஓட்டை பெற்றாலும் காங்கிரசிற்கு வெளியில் இருந்து ஆதரவு தந்த மம்தா,முலாயம்,மாயாவதி மற்றும் சில காலம் ஆதரவு தந்த இடது சாரிகள் பாஜகவிற்கு ஆதரவு தருமா? இவை அத்தனையும் புள்ளி விவரக் கணக்கு
. இனி நடை முறை அரசியலுக்கு வருவோம். வாஜ்பாயி யைப் போல் அனைத்து தர மக்களாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டவரல்ல மோடி.இந்துத்வா கொள்கையை வைத்து அனைத்து இந்துக்களின் ஓட்டையும் பெற்று விடலாம் என்று நினைப்பது சரியானதல்ல. அடுத்து 13% முஸ்லீம்கள். இவர்களின் ஒட்டு எந்த அளவுக்கு மோடியின் தலைமையில் நின்றால் கிடைக்கும் என்பதை அனைவரும் அறிவர். மோடியால் தன சொந்த மாநிலத்திலேயே 16 எம்பி க்களைத் தான் பாஜகவிற்கு பெற்றுத் தர முடிந்தது. ஆனால் 11 எம்பிக்களை காங்கிரஸ் அவர் சொந்த மாநிலத்திலேயே பெற்று இருகின்றது.
அனைத்து தரப்பு மக்களாலும் அவர் சொந்த மாநிலத்திலேயே ஏற்றுக் கொள்ளப் படாதவர் எப்படி அனைத்திந்தியாவின் மக்களாலும் ஏற்றுக் கொள்ளப் படுவார்?
பாஜாகாவின் வெற்றி வாய்ப்பு மாநிலங்கள் வாரியாக.
மாநிலம் மொத்த சீட்டுகள் . பாஜக
------------- -------------------------- --------
தமிழ்நாடு 39 0
ஆந்திர 42 0
மே.வங்கம் 42 1
கேரளா 20 0
இந்த 4 மாநிலங்களிலும் பாஜக இன்னும் கால் பதிக்கவில்லை. மொத்த சீட்டுகள் 143 இல் 1 தான் கிடைத்துள்ளது
.
அடுத்து உபி. யில் 3 வது இடத்திற்குத்தான் பாஜகவும் காங்கிரசும் மோதுகின்றன. இங்கே போட்டி முலாயம் சிங்கிற்கும் மாயாவதிக்கும் மட்டுமே. பீகாரில் நிதிஷ் குமார் ஆடச், கூட்டணியில் இருந்து விலகி விட்டார் கூட்டணியில் இருந்த போது கிடைத்தது 12 சீட்டுகள். கர்நாடகா யாடு வீரப்பாவின் மேல் களங்கம் விளைவு 2 இடைத் தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு சாதகம்.
உ.பி. 80 10
பீகார் 40 12
கர்நாடகா 28 10
மொத்த சீட்டுகள் 148 பாஜக பெற்றது 32. மட்டுமே.
மாநிலங்கள் 7 மொத்த சீட்டுகள் 291 பாஜக பெற்றது 33. பாராளுமன்ற மொத்த சீட்டுகள் 543. மிதமுள்ள 252 எம்பி சீட்டுகளில் 239 ஐ பெற்றால் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு. சாதிப்பாரா?? இந்தப் பதிவில் பாஜக வெற்றி வாய்ப்பை பார்த்து விட்டோம். அடுத்த பதிவில் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு எப்படி என்று பார்ப்போம்.

No comments:
Post a Comment