கல்கத்தாவில் 11 வயது பள்ளிச் சிறுமியை மூத்த மாணவர்கள் பணம் கேட்டு
கக்கூசில் வைத்து பூட்டி பயமுறுத்தியுள்ளனர். குழந்தை
பயந்து கதறி இருக்கின்றது.பள்ளியில் வேலை செய்யும் பணிப் பெண் குழந்தையை விடு வித்து வீட்டுக்கு அனுப்பியிருக்கின்றாள். வீட்டுக்கு சென்ற குழந்தை பயத்தில் உடல் நிலை சரியில்லாமல் போக மருத்துவரிடம் காண்பித்து குணமாகாமல் நேற்று இறந்திருக்கின்றாள்.
தவறு யார் மீது.?? பள்ளி நிர்வாகத்தின் மீதா அல்லது மூத்த மாணவர்களின் மீதா? அல்லது அவர்களைப் பெற்றவர்கள் மீதா.?இங்கு பலிகடா ஆக்கப் பட்டது பள்ளி தலைமை ஆசிரியர் மட்டுமே. தன் வேலையை தலைமை ஆசிரியை ராஜினாமா செய்த பின்னும் அவரை அரெஸ்ட் செய்ய வேண்டும் என்று போராடி அதில் பள்ளியில் உள்ள பொருட்கள் அனைத்தையும் சேதப் படுத்தி ஆசிரியரையும் முதல்வரையும் சிறை பிடித்து வைத்த இந்த மாதிரிப் பெற்றோர்களின் குணம் தானே பிள்ளைகளுக்கு வரும். சரி குற்ற வாளியை கண்டு பிடித்தால் மாட்டப் போவது யார்?? பிரச்சினையின் அளவைத் தெரியாமல் விளையாடிய மூத்த மாணவர்கள்தானே.?? நாளை இறந்த அந்த
நிகழ்வுக்கு மூத்த மாணவர்கள்தான் காரணம் என்றால் மாணவர் காப்பகத்திற்கு அந்த சிறுவர்களையும் அல்லவா அனுப்பவேண்டும். பாதிக்கப் பட்டவர்கள் அவர்களின் பெயரால் அராஜகம் நடத்தும் இந்த பெண்கள் நல்ல பெற்றொராய் இருக்க முடியாது. சோகத்தில் ஆண்கள் உடைக்கும் ஒரு பெண் அதைப் பார்த்து ரசிக்கும் ஒரு பெண். இந்தப் படத்தைப் பார்த்தால் இவர்கள் நீதி கேட்பதைப் போல் இல்லை. சமூக விரோதிகள் போல்தான் எனக்கு தெரிகிறார்கள்.
குழந்தையின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று பிரார்த்திக்கும் இந்த நேரத்தில் இப்படிப் பட்ட போராட்டங்களையும் அமைதியான முறையில் நடத்த முயற்ச்சிக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் இதை முடிக்கிறேன்.

No comments:
Post a Comment