Sunday, September 22, 2013

இந்திய பிரதமரை தேர்ந்தேடுக்கும் 4 மாநில முதல்வர்கள். ஒரு பார்வை.

சென்ற  பதிவில்  பாஜக வின் வெற்றி வாய்ப்பைப் பார்த்தோம். இந்த பதிவில் மூன்றாவது அணி   காங்கிரஸ் மற்றும் பாஜக வெற்றி  வாய்ப்பை எந்த அளவு பாதிக்கும் என்றும்  ,பிரதமராக ஆசைப் படும்   மூன்றாவது அணி தலைவர்கள் பற்றியும் பார்ப்போம். இதில் முக்கியமானவர்கள்  முலாயம் சிங்  யாதவும் ஜெயலலிதாவும்   ஆவர்.

உத்திரப் பிரதேசம்  80 நாடாளுமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. சமாஜ்வாடி  கட்சியின் ஆட்சியில் உள்ளது.. சென்ற தேர்தலில்  22 எம் பிக்களை வென்ற கட்சி ,இப்போழுது ஆட்சியில் வேறு.  நிச்சயம்  அதிகம்  பெற முயற்ச்சிக்கும் கட்சிகளில் ஒன்று. அதே போல் ஜெயலலிதாவிற்க்கும் பிரதமராகும் ஆசை அளவுக்கு அதிகமாகவே உள்ளது. சென்ற லோக் சபா தேர்தலில் 9 இடங்கள் பெற்றிருந்தாலும் இந்த முறை  40 உம நமதே என்று குரல் கொடுக்கிறார். ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின் திமுக போல் எந்த ஊழல் குற்றச் சாட்டுகளிலும் விழாதது இவருக்கு பிளஸ் . மேலும் திமுக  இன்னும்
இலங்கை பிரச்சனையை வைத்து காலத்தை ஓட்டுவது அவர்களுக்கு மைனஸ்.  கருத்து கணிப்புகள் இவருக்கு ஆதரவாகவே உள்ளது. இவர் கட்சி  25 க்கும் மேற் பட்ட எம் பி களை   பெற வாய்ப்புள்ளது

அடுத்த தலைவர்  நிதிஷ் குமார்.,. எந்த ஒரு ஊழல் குற்றச் சாட்டும் இல்லை. சிறந்த நிர்வாகம். மத்தியில் இருந்து மாநிலத்திற்கு  அதிக ஒதுக்கீடு  என்று அனைத்து வகையிலும் நல்ல பெயர். பாஜக  கூட்டணி இல்லாததால் தனித்து 40 இலும் நிற்க வாய்ப்பு. சென்ற தேர்தலில் 20 எம்.பிக்கள். அடுத்து பிஎஸ்பி . தலைவர் மாயாவதி. 21  எம்பிக்களை வைத்துள்ளார். ஜாதிய ஓட்டை எதிர் பார்க்கும் இவரும்  சென்ற தேர்தலை விட அதிகம் பெற வாய்ப்பு. உதவி காங்கிரஸ்.!! காங்கிரஸின் தாழ்த்தப் பட்ட இன மகள் ஒட்டு இவருக்கு செல்ல வாய்ப்பு.

அடுத்து மிக முக்கியமான தலைவர்  திரினாமுல் காங்கிரஸ் தலைவர் . மம்தா பானர்ஜி .. சென்ற தேர்தலில் 19 இடங்கள்.. இப்போழுது ஆட்சியில் இருக்கிறார். அதிகம் பெற வாய்ப்பு. இடைத் தேர்தல் பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் இவருக்கு சாதகமாய் இருந்தது அனைவரும் அறிந்ததே.
இடது சாரி கட்சிகள் சென்ற தேர்தலில் பெற்றது  24 இந்த தேர்தலில்  இவர்கள் அணி மே.வங்கத்தில் சற்றே முன்னேற்றம் காண வாய்ப்பு.

திமுக : தலைவர் கலைஞர்  சென்ற தேர்தலில்  19 .இன்னும் அ .ராசாவினால் ஏற்பட்ட களங்கமும், குடும்ப அரசியலும் இவருக்கு எதிர். குறைந்த பட்சம் 10க்கு மேல். இவருக்கு கிடைக்க வாய்ப்பு. அடுத்து சரத் பவர் சென்றதேர்தலில் 9 சீட்டுகள் என்றாலும்  இன்னும் இலவு காத்த கிளியாய் பிரதமர் வாய்ப்பை எதிர நோக்கி காத்திருப்பவர். இவருக்கு  பிரதமர் போட்டியில்  பாஜக வின் கூட்டணி கட்சி சிவா சேனா மண்ணின்மைந்தன் என்ற போர்வையில் ஆதரவு தெரிவிக்க வாய்ப்பு.

இது வரை காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத தலைவர்களில் பிரதமர் ஆக அசையுள்ளவர்களையும் அவர்கள் கட்சி பெற இருக்கும் தோராயமான சீட்டுகளையும் பார்த்தோம். 5 முக்கிய தலைவர்கள் மட்டும் 110 உம இடதுசாரிகள் 26 க்கும் மேற்பட்ட எம் பி சீட்டுகளை பெற வாய்ப்பு  உள்ளது.ஆக மொத்தம் 140 இவர்களிடம்.
இனி யார் வந்தாலும் கூட்டணியில் சேந்து மந்திரி பதவி பெற தயாராய் இருக்கும்  கட்சிகளிடம் 90 எம் பி  க்கள்  மற்றும் உதிரிக் கட்சிகள் பெற்ற 13 எம்பி சீட்டுகளுடன்  சேத்து 240 இல் இருந்து 245 வரை மூன்றாவது அணியிடம் உள்ளது.
2009  தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை:
ஐக்கிய  முற்போக்கு கூட்டணி     .தேசிய  ஜனநாயக கூட்டணி
காங்கிரஸ் ................ 206                                பாஜக .............................116
கூட்டணி கட்சிகள்   56                                 கூட்டணி கட்சிகள்     43
                                       -----                                                                          ------
                                         262                                                                           159
                                       ------                                                                         -----
இரண்டு கூட்டணியிலும் இல்லாத கட்சிகள் பெற்ற சீட்டுகள்   122.
சென்ற தேர்தலில் காங்கிரசுடன் இருந்த திரிணமுல்  காங்கிரஸ்  (19) இந்த முறை இல்லை. அதே போல்  பாஜகவுடன் இருந்த  நிதிஷ் குமார்  (20) இந்த முறை இல்லை. இருவரும்  மூன்றாவது அணியை ஆதரிக்க வாய்ப்பு.
மூன்றாவது  அணியின்  மொத்த எம் பிக்கள் அதிகம் இருந்தாலும்   இந்த கட்சிகளின் தலைவர்களுக்கு இடையே உள்ள  போட்டி அதிகம் இருப்பதால்  இவர்கள் ஆட்சி அமைப்பது சிரமம். ஆனால் இவர்கள்தான் மத்தியில் ஆளப் போவது யார் என்பதை முடிவு செய்யப் போகிறவர்கள்.

அந்த  கோணத்தில் பார்க்கும் போது  பஜக தன் கூட்டணி கட்சியான  ஜனத தளம்  (எஸ்)  ஐ இழந்த தன் மூலம்  குறைந்த  அளவில் சீட்டுகள் பெற்றாலும்  மற்ற கட்சிகள் ஆதரவுடன் மைனாரிட்டி அரசை  அமைக்கு வாய்ப்பு காங்கிரஸிற்க்கே அதிகம் உள்ளது.

உ.ம். கூட்டணியில் இல்லாத கட்சிகள் 122 +திரிணமுல்+ ஜனத தளம்=160 தாண்டும் வாய்ப்பு உள்ளது. பாஜகவை பொறுத்தவரை அதன் கூட்டணி கட்சிகளான சிவசேன,அகாலி தளம்  தவிர்த்து அதிமுக மட்டுமே ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளது.மைனாரிட்டி அரசு அமையும்  வாய்ப்பு அதிகம் இருப்பதால் அடுத்த முறையும் மன்மோகன் சிங்கே  பிரதமாராக வாய்ப்பு அதிகம். ராகுல்  காந்திக்கு இன்னும் நேரம் வரவில்லை என்பதே நமது முடிவு.
                       
                                        

No comments:

Post a Comment