தங்கம் வாங்குவதில் மக்கள் கட்டுப் பாடுடன் இருக்க வேண்டும். பெட்ரோல் செலவில் சிக்கனம் வேண்டும் . இது நிதியமைச்சர் தொடங்கி பிரதமர் வரை மக்களுக்கு கூறும் அறிவுரை .இது உண்மையில் பின் பற்ற வேண்டிய திட்டம்தான்.ஒத்துக் கொள்கிறோம். அதை நடை முறை படுத்துவது அரசின் உள்ளது. மக்களிடம் இல்லை என்பதை என் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.
1) இந்தியாவின் குடி மக்களில் 80 கோடி பேர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளார்கள். நிச்சயம் இவர்களால் அன்றாடம் பெட்ரோலோ அல்லது தங்கமோ வாங்க முடியாது. ஏனேன்றால் இவர்களின் ஒரு நாள் வருமானமே ரூ. 33.33 என்று நீங்களே நிர்ணயித்து விட்டீர்கள்.
2) அடுத்து உங்கள் கணக்குப் படி இந்தியாவில் வருமான வரி கட்டுபவர்கள் மொத்தாம் 2 கோடி பேர்தான். அதிலும் 60 % பேர் ,அதாவது கிட்டத்தட்ட 1 கோடியே 30 லட்சம் லட்சம் பேர் சம்பளக்காரர்கள்..ஆக மிச்சம் உள்ள 70 லட்சம் பேர்தான் வியாபாரிகள் .உங்களிடம் வரிகட்டும் இவர்களை மட்டும்தான் நீங்கள் கவனிக்க வேண்டும். இவர்களால் மட்டும்தான் கார் உபயோகிக்க முடியும் தங்கம் வாங்க முடியும். மாத சம்பளக் காரர்களில் ஒரு சிலரால் கார் வைக்கும் அளவுக்கு வருமானம் இருக்கலாம் ஆனால் மற்றவர்களால் இரு சக்கர வாகனம் மட்டுமே வைத்திருக்க முடியும்.
3) தங்கம் வாங்கும் இவர்களை உங்களால் கட்டுப் படுத்த முடியாதா? அல்லது திருட்டுத் தனமாக கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பு செய்யும் வியாபாரிகளை தங்கம் வாங்கும் போது உங்களால் கட்டுப் படுத்த முடியாதா? சென்னை, மும்பை போன்ற மாநகரங்களில் வேண்டுமானால் நிறைய தங்க நகை கடைகள் இருக்கும். வியாபாரமும் அதிகம் இருக்கும். எளிதில் இவர்களை கட்டுப் படுத்தலாமே.?
4) அடுத்து பெட்ரோல் , இதைப் பற்றி ஆராய்ந்தால் தவறு முழுக்க முழுக்க அரசின் பக்கம்தான் என்பது புலனாகும். இந்தியாவை ஏழை நாடு என்று நீங்களே ஒத்துக் கொண்டு இலவச அரிசியும் தானியங்களும் தருகிற திட்டங்களை கொண்டு வருகிறீர்கள். இப்படி ஏழையான ஒரு நாட்டிற்க்கு நிஷ்சானும்,போர்டும், சுசுகியும், டயோட்டாவும் தேவையா? யார் இந்த கம்பெனிகளை இந்தியாவிற்குள் கொண்டு வந்தது.? இவற்றை வாங்க குறைந்த வட்டியில் வங்கிகள் ஏன் கடன் கொடுக்கின்றன.? பெட்ரோல் சிக்கனமாக உபயோகிக்க சொல்லும் அரசு அதை உபயோகிப்பாளர்களை வாங்க தூண்டுவது ஏன் ? வெளி நாட்டு கம்பெனிகளை இந்தியாவில் நுழைய விட்டது ஏன் .சென்னையில் உற்பத்தியாகும் வண்டிகளில் 65 % ஏற்றுமதியாகிறது என்று சொல்வீர்கள். சரி ஒத்துக் கொள்கிறோம். மீதி வண்டிகள் உள் நாட்டில்தானே உலா வருகிறது.
5) மக்கள் உபயோகப் படுத்தும் கார்களை உற்பத்தி செய்வதில் இந்தியா 6 வது இடம் என்று புள்ளி விவரம் சொல்கிறது. சென்ற ஆண்டு மட்டும் 3.7 மில்லியன் கார்கள் இந்தியாவில் உற்பத்தி ஆகியுள்ளன. பெருமையாகத்தான் இருக்கின்றது. ஆனால் இந்தியாவின் விவசாய உற்பத்தியாளர்கள் 60 லட்சம் பேர் கடந்த 10 ஆண்டுகளில் விவசாயம் செய்யும் தொழிலில் இருந்து விலகி விட்டனர் என்ற புள்ளி விவரத்தை பார்க்கும் போது வேதனையாய் இருக்கின்றது.உற்பத்தி கூட வேண்டிய விவசாயத் தொழிலில் வீழ்ச்சி ஆனால் பணக்காரர்கள் உபயோகப் படுத்தும் கார் உற்பத்தியில் முன்னேற்றம்.அரசு தன முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டிய துறைக்கு கொடுக்காமல் தேவையற்ற துறையை வளர்க்கின்றது.
இனியாவது விவசாயத்தையும், தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை முன்னேறுவதில் அரசு நடவடிக்கை எடுக்குமா?

No comments:
Post a Comment