வித்தியாசமான படம் என்று மகன் சொல்ல சென்று பார்த்தேன் "ராஜா ராணி" படம்.. படத்தின் ஆரம்ப முதல் முடிவு வரை மௌன ராகம் கதை கருவை எடுத்துக் கொண்டு இந்த காலத்து பிள்ளைகளுக்கு ஏற்றவாறு திரைக் கதை، வசனம் எழுதியுள்ளனர்.கதையின் கரு இதுதான். .கதாநாயகன் கதாநாயகி இருவரும் காதலில் தோல்வி அடைந்தவர்கள். பெற்றவர்கள் திருப்திக்காக திருமணம் செய்து விட்டு பின் மனம் ஒட்டாமல் இருந்து கடைசில் இணைவதுதான் கதை. காமெடிக்கு சந்தானம்..இரண்டாவது கதாநாயகியாக வரும் நஸ் ரினா பரவாயில்லை ரகம்.
கார்த்திக் மௌன ராகத்தில் கொடுத்த கலகலப்பை ஜெய்யினால் தர முடியவில்லை.ரேவதியும் கார்த்திக்கும் பார்க்கில் இருக்கும் போது ரேவதியின் அப்பா அந்த பக்கம் காபி சாப்பிட வர கார்த்திக் மிஸ்டர் சந்த்ர மௌலி என்று கூப்பிட்டு கலாய்க்கும் காட்சி அந்த காலத்தில் பிரபலமானது. அதே போல் ரேவதி சிங்க் ஒருவனுக்கு தமிழ் சொல்லித் தருகிறேன் என்று போடா, டே ,போடா, போடா மடையா, என்று சொல்லிக் கொடுப்பதுவும் இன்றும் நினைவில் நிற்கிறது.. இந்த படத்தில் நயன் தாரா ஜெய் காமெடி செய்ய முயற்சித்தும் மனதில் நிற்கவில்லை. ஒரே ஒருஆறுதல் ஆர்யாவின் நடிப்பு மோகனின் நடிப்பை விட நன்கு இருந்தது..
மௌன ராகம் பார்க்காத இளைய தலைமுறையினர் பார்த்து ரசிக்க ஒரு படம்.
No comments:
Post a Comment