இந்திய பொருளாதாரம் உண்மையிலேயே மிகவும் மோசமான நிலையில் உள்ளதா ??அல்லது வேண்டுமேன்றே மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க தயங்குகிறதா.??நடப்புக் கணக்கில் பற்றாக் குறை என்று சொல்லும் அரசு 90,000 கோடி ரூபாயை உணவு பாது காப்பு திட்டத்திற்க்கு ஒதுக்குகிறது.
சலுகை விலை திட்டத்திற்க்கு ஏன் இந்த அவசரம்? அடுத்த தேர்தலில் வெல்வது ஒன்றுதான் குறி நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி கவலை இல்லை என்று சொல்கிறதா மத்திய அரசு.?
1991 இல் உண்மையிலேயே நடப்புக் கணக்கில் பற்றாக் குறை எழுந்த ப்போது 2.2 பில்லியோன் டாலருக்காக இந்தியாவின் தங்க சேமிப்பு 67 டன்னை சந்திரசேகர் அரசு இன்டெர்னேசனல் மானிடரி ஃபண்டிடம் அடமானம் வைத்தது. இந்தியாவின் மானத்தை விமானத்தில் பறக்க விட்டது நினைவுக்கு வருகிறது.. இன்று ரிசர்வ் வங்கியில் 558 டன் தங்கம் பாதுகாப்பில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
குற்றம் புரிந்தவர்கள் தேர்தலில் நிற்கக் கூடாது என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு சொன்னதும் அதற்க்கு எதிராக மசோதாவை அனைத்து கட்சிகளும் சேந்து பார்லிமென்டில் நிறை வேற்றுகின்றீர்கள். ஆனால் சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி கமிட்டி நியமித்து அது ஒப்புதல் தந்த பின்தான் கரி மற்று இரும்பு சுரங்கங்கள் வேலை ஆரம்பிக்கலாம் என்று உச்ச நீதி மன்ற ஆனையை மறு பரிசீலனை செய்ய அரசு உச்ச நீதிமன்றத்தை அனுகவில்லை.அல்லது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கிறது என்பதால் இந்த தீர்ப்புக்கு எதிராக எந்த ஒரு மசோதாவும் நிறைவேற்றப் படவில்லை. சுற்றுச் சூழல் பற்றிய ஒப்புதல் கிடைக்காமல் 100க்கும் அதிகமான இடங்களில் வேலை நடக்காமல் இருந்தும் அதைப் பற்றி கவலை படாமல் வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதன் மூலம் பல பில்லியன் டாலர்கள் வெளியேறுவது அரசுக்கு தெரியவில்லையா?
ஏற்றுமதி செய்பவர்களுக்கு என்று தனி சலுகைகள் ஏதும் சமீபத்தில் வழங்கப் படவில்லை. ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் இறக்குமதியை குறைக்கவும் சரியான நடவடிக்கை எடுக்கப் படவில்லை. தங்கம் இறக்குமதிக்கும் ,கலர் டிவி இறக்குமதிக்கும் மட்டும் வரிவிதித்து விட்டால் நிலமை சரியாகி விடுமா?திறமையற்ற நிதி அமைச்சரின் கீழ் இந்தியாவின் பொருளாதாரம் தள்ளாடுகிறது.. அமைதியான பிரதம மந்திரி இன்னும் அமைதியையே காக்கின்றார். சரிவிலிருந்து இந்திய பொருளாதாரத்தையும் மக்களையும் காக்க யார் முயற்ச்சி எடுப்பார்??

No comments:
Post a Comment