Monday, October 7, 2013

எல்லை தாண்டிய பயங்கர வாதம். மத்திய அரசின் நடவடிக்கை சரியானதுதானா?

எல்லைப் பகுதிகள் தீவிரவாதிகள் தாக்குதல்..கார்கில் போன்ற நிலை நிலவுகிறது. துணிச்சலான நடவடிக்கை எடுக்கவேண்டும்.பதிலுக்கு பதில். தாக்குதல் நடத்த வேண்டிய நேரத்தில்  சமாதானம்   பேசுகிறது. இந்தியா  செரிஃபுடன் பேச்சு வார்த்தை வேண்டாத ஒன்று.. இது இந்தியாவின் கையாலாகத் தனத்தை காட்டுகிறது. உலக அரங்கில் இந்தியாவின் மரியாதை மத்திய அரசின் இந்த செயலால்  கேலிக் கூத்தாகிறது. இத்தனையும் இன்று  தனியார்  தொலைக் காட்சியில்  பஜக தலைவராலும்,  நிகழ்ச்சி தொகுப்பாளர் பர்கா  வாலும் சொல்லப் பட்டது. நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கும் அதே எண்ணம் தோன்ற ஆரம்பித்து விட்டது.

ஆனால் சற்றே  அமைதியாய்  இருந்து  யோசிக்க ஆரம்பித்தால்  எழும் கேள்விகள். 1) அடிக்கு அடி ரத்தத்துக்கு ரத்தம் என்பது பக்கத்து வீட்டுக் காரனிடம் சண்டை போடுபவர்கள் வேண்டுமானால்  செய்யலாம். இரு  அண்டை நாடுகள் அப்படி சண்டை போட முடியாது. குறிப்பாக இருவரிடமும் அணு ஆயுதங்கள் இருக்கும் போது.
2)எல்லை தாண்டி பாக்  ராணுவம் வராமல் தீவிரவாதிகளை மட்டுமே   அனுப்பி வருகிறது. பாக்  ராணுவம் எல்லை தாண்டி நுழைந்தால் போரிடலாம். இந்திய ராணுவம் பாக் எல்லைக்குள் புகுந்து  தீவிர வாதிகளை விரட்டி அடிப்பது என்பது  முறையற்ற செயல். அது இரு நாடுகளுக்கிடையே போரைத்தான்  உண்டாக்கும்.
3) இதை கருத்தில் கொண்டுதான் செரிஃபின்  தூதரக அதிகாரிகளுக்கிடையே  பேச்சு வார்த்தை  என்ற   கோரிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்க் மறுத்தார். அது மட்டுமின்றி இதில் சம்பந்தப் பட்ட  ராணுவ தளபதிகளிடையே  பேச்சு வார்த்தை இனி நடக்கட்டும் என்றார். இதில் தவறேதும் இருப்பதாய் தெரியவில்லை.

பஜகவும் அவர்களை ஆதரிக்கும் தனியார் தொலை காட்சிகளும்   எதை எடுத்தாலும் அரசியல் லாபம் பார்க்கும்  வேலையை வெளியுறவுக் கொள்கையிலும்  காட்டாமல் அமைதி காப்பது நலம் என்பது என் கருத்து.

No comments:

Post a Comment