பெரியார் திராவிட கழகத்தை ஆரம்பித்தது மக்களிடையே உள்ள மூட நம்பிக்கைகளை ஒழிக்கவும் சுயமரியாதை எண்ணங்களை கொண்டு வரவுமே.
ஆனால் இன்று கழகங்கள் பிரிந்தபின் கடவுள் பக்தியை பரப்ப கழகங்கள் துணை போகின்றன. ,சுய மரியாதை என்றால் என்ன என்றுதெரியாமல் சிஷ்யர்கள் இருக்கிறார்கள்... இந்துவை திருடன் என்று கலைஞர் கூறுகிறார் ஆனால் அவர் மகள்களும்,மருமகள்களும் கோயிலுக்கு சென்று தலைவருக்காகவும் குடும்பத்திற்காகவும் வேண்டுகின்றனர்.ஏன் இந்த நிலை? மக்களை கடவுளை கும்பிடாதே என்று தடுக்கும் தலைவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு திராவிட கொள்கைகளை பரப்ப மறந்தது என்??ஊருக்கு மட்டும்தான் உபதேசமா?. சொந்த வீட்டுக்கு இல்லையா??அடுத்து சுய மரியாதை !! ரூபாய்க்கு என்ன விலை என்று கேட்கும் நிலையில் உள்ளது இன்றைய அமைச்சர்களின் செயல்கள். உங்கள் தலைவிக்கு,முதல் அமைச்சருக்கு மரியாதை செய்வதை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால் பதவியை கொடுத்தார் என்பதற்காக பொதுமக்கள் முன்னிலையில் காலில் விழ வேண்டுமா?? அதை தடுக்காமல் ஆசி வழங்கும் முதல்வர்! இது அதை விட கொடுமை.
கடவுள் எதிர்ப்பையும்,சுயமரியாதைக் கொள்கைகளையும் இந்தியாவில் முதலில் பரப்பிய நம் தமிழகத்திற்க்கு இது தேவையா???

No comments:
Post a Comment