சமீபத்தில் நிலக்கரி இறக்குமதிக்கு அதிகமாக அந்நிய செலவாணி கொடுக்கப் படுகிறது. இந்தியாவிற்க்கு தேவையான் நிலக்கரியில் 42% இறக்குமதிதான் செய்யப் படுகிறது என்று புள்ளி விவரம் தரப் பட்டுள்ளது.
. சமூக ஆர்வலர்கள் ஒரு படி மேலே போய் இனி மின்சாரத்தை காற்றலைகள் மூலமாகவும், சூரிய ஒளியில் இருந்தும் மின்சாரத்தைப் பெற அரசு முயல வேண்டும் என்கின்றனர். காரணம் சுற்றுச் சூழல் காக்கப் பட வேண்டும் மாசு கட்டுப் படுத்த வேண்டும் என்று சொல்கின்றனர். இவர்கள் சொல்படி காற்றாலைகள் மற்றும் சோழர் பவர் உபயோகப் படுத்த முடியுமா என்று பார்ப்போம்.
. இங்கிலாந்திலும் டென்மார்க்கிலும் எடுக்கப் பட்ட சர்வே சொல்லும் விவரம் இது. காற்றாலை நிறுவப் பட்ட 10 ஆண்டுகளில் அதன் உற்பத்தி மூன்றில் ஒரு பங்காக குறைந்து விடுகின்றது. அடுத்து காற்றாலை நிறுவப் பட்ட 15 ஆண்டுகள் வரைதான் அதன் ஆயுட்காலம். அதற்க்கு மேல் உபயோகப் படுத்துவது வீண்...இதில் தமிழகத்தை பொறுத்தவரை அக்டோபரில் இருந்து மே வரைதான் நல்ல காற்றுள்ள காலம்..உற்பத்தியும் முழு வீச்சில் இருக்கும் .மற்ற காலங்களில் மின்சாரம் அதிகம் எதிர் பார்ப்பது வீண்..
சோலார் பவர் என்னும் மின்சாரத்தை சூரிய ஒளியில் இருந்து பெறும் திட்டத்தைப் பார்த்தால் . இதற்குண்டான அடிப்படை செலவு செய்ய யாரிடம் வசதி உள்ளது..இங்கே இருக்க வீடு உள்ளவன் எத்தனை என்று கணக்கெடுக்கப் போனால் டாய்லேட் போகவே இடமின்றி வாழும் மக்களால் சோலார் பவர் எப்படி அமைக்க முடியும். அரசாங்கமே வறுமைக் கோட்டிற்க்கு கீழ் உள்ள மக்களின் ஒரு நாள் வருமானம் ரூ 33.33 . என்று சொல்லி புள்ளி விவரம் கொடுத்து விட்டது. ..இருக்க இடமில்லை உண்ண உணவில்லை 80 கோடி பேருக்கு சலுகை விலையில் அரிசியும் தானியமும் அரசால் கொடுக்கப் படுகிறது.
இப்படிப் பட்ட நாட்டில் சோலார் எனர்ஜியை பற்றி சமூக ஆர்வலர்கள் பேசுகிறார்கள். வளர்ந்து விட்ட நாடுகளில் மாசு கட்டுப் பாடு பற்றி பேசுவதில் தவறில்லை, இங்கே வாகனங்களில் இருந்து வரும் புகையை சர்வ சாதாரணமாய் சுவாசிக்கும் நம் நாட்டில் சுற்றுச் சூழல்,, மாசு என்று விதண்டாவாதம் போசுவது வேடிக்கையான ஒன்று. கூவம் நதிக் கரையில் குடும்பம் ,திருப்பூரில் சாயப் பட்டறை கழிவுகள் குடி தண்ணிரில் கலந்து உடலில் குறை பாடுகளை ஏற்ப்படுகின்றன. முதலில் இவற்றை சரி செய்த பின் இந்தியாவிற்க்கு நிலக்கரி கொண்டு தயாரிக்கப் படும் மின்சாரமும் தெர்மல் பவர் ஸ்டேசன்களும் வேண்டுமா?? வேண்டாமா என்று யோசிக்கலாம்
முடக்கப் பட்டுள்ள நிலக்கரிசுரங்கங்களுக்கு விதிக்கப் பட்டுள்ள தடைகளை நீக்குவோம். நிலக்கரி உற்பத்தியை இந்தியாவில் அதிகரிப்போம்.கி இறக்குமதி செலவை குறைத்து இந்தியாவின் பொருளாதாரத்தை மீண்டும் நிமிரச் செய்வோம்.தெர்மல் பவரையும்,அணுமின் சக்தியையும் கொண்டு.

No comments:
Post a Comment