கடவுள்
உலகில் பலவிதமான மதங்கள் பலவிதமான போதனைகள் ,அறிவுறைகள்,கருத்துக்கள் இருந்தாலும் அனைத்து மதங்களும் சொல்லும் ஒரே வார்த்தை "நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள் " அவரால் சிருஷ்டிக்கப் பட்டவர்கள் நாம் என்பதுதான்.
இறைவனால் அனுப்பப் பட்ட இறை தூதர்கள் அல்லது அவதாரங்கள் இந்த உலகில் அவதரித்து நம்மை ரட்சித்தார்கள் என்று அனைத்து மதங்களும் சொல்கிறது.மனிதனின் இறைவழி பாடு முறைகளிலும், உருவ வழிபாடுகளிலும் தான் மதத்திற்க்கு மதம் வித்தியாசப் படுகிறதே அன்றி அனைத்து மதங்களும் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என் பதில் மாறுபட்ட கருத்து கொண்டிருக்கவில்லை .
கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை தான் நாத்திகர்கள் மறுத்து கிண்டல் செய்கிறார்களே அன்றி, இல்லை என்பதை நிருபிக்க முயற்சி செய்யவில்லை.
நாத்திகவாதி நண்பர் ஒருவர் வீட்டிற்க்கு மாலையில் வந்தார், எப்போழுதும் போல் இல்லாத ஒரு கடவுளை பார்க்கப் போகிறிர்ர்களா என்று கேட்டார் .நானும் சிரித்துக் கொண்டே ஆம் என்று சொல்லி விட்டு ,உங்கள் முதுகில் கட்டி வந்ததாகச் சொன்னீர்களே ஆறி விட்டதா? பெரிய கட்டியா சிறியதா என்று கேட்டேன் .முதுகில் உள்ளதால் பார்க்க முடியவில்லை,ஆறிக் கொண்டிருக்கின்றது ,வழிதான் தாங்க முடியவில்லை என்றார்.முதுகில் உள்ள கட்டியை பார்க்க முடியவில்லை ஆனால் வலையை உணர்கிறீர்கள்? அதே போல்தான் நான் பக்தியுடன் கடவுளை வேண்டும் போது அவரை காண முடியாவிட்டாலும் அவர் என் அருகில் இருப்பதை உணர்கிறேன்.என்றேன்.இதுதான் நான் நாத்திகர்களுக்கு சொல்லும் விளக்கம் .
அடுத்து நாத்திகர்கள் எழுப்பும் பிரச்சினை கடவுளுக்கு சில மதங்களில் உயிர் பலி கொடுப்பதையும்,தன்னைத் தானே பக்தர்கள் வருத்திக் கொள்வதையும் தான்.கடவுள் உயிர் பலி கேட்டதாய் எந்த மதத்திலும் சொல்லவில்லை .தவறு பக்தனிடம் தானே அன்றி கடவுளிடம் இல்லை.
இதற்க்கு ஒரு கதை உண்டு. முனிவர் ஒருவர் செல்லும் வழியில் குயவன் ஒருவன் ஆடு ஒன்றை பலி கொடுப்பதற்காக எடுத்துச் செல்வதை கண்டார்.
முனிவர் அவனிடம் ஏனப்பா ஆட்டை இப்படி இழுத்துச் செல்கிறாய் என்று கேட்டார். அவனும் இறைவனுக்கு படையல் செய்தால் தன வியாபாரம் பெருகும் தான்னை கடவுள் நன்கு வைத்துக் கொள்வார் என்றான்.முனிவர் குயவன் கையில் இருந்த பானை ஒன்றை வாங்கி உடைத்தார்.குயவனுக்கு கோபம் வந்து முனிவரிடம் என்னுடைய பானையை நீங்கள் எப்படி உடைக்கலாம். அதை உருவாக்க நான் பட்ட கஷ்டம் உங்களுக்கு தெரியுமா?என்று கேட்டான்.முனிவர் சிரித்துக் கொண்டே உயிரற்ற உன் பானையை உடைத்ததிற் க்கே நீ இவ்வளவு கோபப் படுகிறாயே ? கடவுள் ஆசையாய் படைத்த உயிருள்ள ஒரு ஜீவனை கொல்வதை விரும்புவாரா என்று கேட்டார்.முனிவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்ட குயவன் ஆட்டை சுதந்திரமாக செல்ல விட்டு விட்டான் .
தவறை நம்மிடம் வைத்துக் கொண்டு இறைவனை குறை சொல்வதில் பயனில்லை. இன்றைய நம்முடைய வேண்டுதளு க்கு கடவுள் செவி சாய்க்கவில்லை என்பதற்க்காக கடவுளை குறை சொல்வதை விடுத்து, இதை விட சிறந்த ஒன்றை கடவுள் நமக்கு அளிக்கவிருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்தால் நம் வாழ்க்கை இனியதாக அமையும்.

No comments:
Post a Comment