வெள்ளியன்று டெல்லி பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. மனித உரிமை கள் பற்றி பேசும் ஒரு சிலரைத் தவிர இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களாலும் வரவேற்க்கப் பட்ட தீர்ப்பு இது. திறம்பட வழக்கை நடத்திய காவல்துறை மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் அனைவருக்கும் நன்றி.
9 மாதங்களில் வழக்கை முடித்து தீர்ப்பையும் நீதிபதி வழங்கியுள்ளார்.
மிகவும் கொடூரமான இச் செயலுக்கு மரண தண்டனைதான் சரியான தீர்ப்பு என்று நீதிபதியும் தன தீர்ப்பில் கூறியுள்ளார். வாழ்த்துக்கள் தெரிவிக்கும் அதே நேரத்தில் நமக்கு சில சந்தேகங்களும் தோன்றியது. அதன் விளைவே இந்த பதிவு .
இதே நீதி மன்றத்தில் இது வரை பாலியல் குற்றங்களுக்காக 2009 இல் இருந்து நடத்தப் பட்ட வழக்குகள் 203 இல் 201 குற்றம் சரியாக நிருபிக்கப் படவில்லை என்று விடுதலை வழங்கப் பட்டுள்ளது ..!!தண்டனை வழங்கப் பட்ட அந்த 2 வழக்குகளும் சமீபத்தில் இந்த பிரச்சினையை மனித உரிமை கழகம் கொண்டு வந்த பின் வழங்கப் பட்ட தீர்ப்பு. அப்படி என்றால் பாதிக்கப் பட்ட பெண்களுக்கு சரியான நீதி கிடைக்கவில்லை என்றுதானே அர்த்தம். போராட்டங்களும் பத்திரிகை, டிவி யும் பரபரப்பாக செய்தி விளியிட்டால் தண்டனைகள் கிடைக்கின்றன என்றுதானே அர்த்தம். சென்ற ஆண்டு மட்டும்
டெல்லியில் 568 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன. அவற்றிற்க்கு இது வரை எந்த வகையான தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது??? மரண தண்டனையா அல்லது ஆயுள் தண்டனையா??
இந்தியாவில் சென்ற ஆண்டு மட்டும் நடந்த பாலியல் குற்றங்கள் மொத்தம்
24,923. இதில் இறந்தவர்கள் எத்தனை போர். டெல்லி பாலியல் குற்றம் நடந்த அதே நேரத்தில் தமிழகத்தில் போட்டோ ஸ்டுடியோ ஒன்றில் தாழ்த்தப் பட்ட இனப் பெண் ஒருத்தி கொடுரமான முறையில் இதே போல் சிலரால் கொல்லப் பட்டாள். அந்த வழக்க்கு என்ன ஆயிற்று.??தமிழகத்தில் மட்டும் சென்ற ஆண்டு 677 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன. தண்டனையும் ஆண்டு ஒன்றாகியும் யாருக்கும் வழங்கப் படவில்லை.
நீதித் துறை நாட்டின் தலை நகரில் நடக்கும் மக்களால் கூர்ந்து கவனிக்கப் படும் குற்றங்களுக்கு மட்டும்தான் முக்கியத்துவம் தருமா?? நீதி அனைவருக்கும் சமமானதாகத்தான் இருக்க வேண்டுமே அன்றி தலை நகருக்கு ஒரு நீதி மற்ற மாநிலங்களுக்கு ஒரு நீதி என்று இருப்பதை நம்மால் ஜீரணிக்க முடிய வில்லை. இங்கே நான் சொல்ல வருவது குற்றம் நடந்துள்ளது சரியாக போலீஸ் குற்றத்தை நிருபிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்க்காக குற்றவாளியை விடுதலை செய்வது எந்த விதத்தில் நியாயம்..ஏன் மறு விசாரணையை திறம்பட நடத்தி உண்மை குற்றவாளியை கண்டறிய நீதி மன்றங்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. 203 இல் 201 விடுதலை செய்யப் பட்டால் பின் எப்படி பாதிக்கப் பட்ட பெண் போலீஸில் வந்து புகார் கொடுப்பாள். நீதித் துறையின்மீதும் காவல் துறையின் மீதும் மக்களுக்கு எப்படி நம்பிக்கை ஏற்ப்படும். காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டு குற்றவாளியின் வக்கீல் கேட்கும் கொடூரமான கேள்விக்கு பதில் சொல்லி ,பல ஆண்டுகள் நீதி மன்றத்திற்க்கு அலைந்த பின் குற்றவாளியை நீதி மன்றம் விடுதலை செய்வதால்தான் இன்றும் பாதிக்கப் பட்ட பெண்கள் காவல் துறையை அணுகுவதில்லை.
இந்த நிலை தொடருமானால் நீதித் துறையின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. ஒரு வழக்கில் மட்டும் கடுமையான தண்டனையை கொடுத்து விட்டு குற்றங்கள் குறையும் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை..நீதி அனைவருக்கும் சமமாக வழங்கப் பட வேண்டும் என்பதே நம் விருப்பம்.

No comments:
Post a Comment