Sunday, September 8, 2013

அறியாப் பருவத்தில் ஏற்படும் ஈர்ப்பும் (காதலும்) அதற்க்கு துணை போகும் பெற்றவர்களும்.

காதல் ஜாதி மத வேறு பாடு இன்றி தோன்றுவது. அதே போல் அனைத்து பெற்றோராலும் வெறுக்கப் படும் ஒன்று.காதல்..இந்தியாவை பொறுத்தவரை   இது பெற்றோர்களால்  கவுரவப் பிரச்சினையாகவும் எடுத்துக் கொள்ளப் படுகிறது. மேல்  ஜாதி கீழ்  ஜாதி, என்றும், ஹிந்து,முஸ்லீம்,கிறிஸ்தவன் என்றும் ஏழை , பணக்காரன் என்று   ஏதாவது  ஒரு காரணத்திற்க்காக காதலை பெற்றவர்கள் வெறுக்கின்றனர்..

இன்று   காதலை பற்றி எழுதக் காரணம்??, இன்றைய நீதி மன்றத் தீர்ப்பு ஒன்றில் காவல் நிலையங்களில் இனி காதலர்களுக்கு திருமணம் செய்விக்கக் கூடாது .அப்படி செய்து வைத்தால் குறிப்பிட்ட அதிகாரியும் குற்றவாளியேன இனி கருதப் படுவார்.என்ற தீர்ப்புதான். .வீட்டை விட்டு ஓடிச் சென்று போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைவதும் . உடனே காவல்துறை அதிகாரி புரோகிதர் போல் திருமணம் செய்து வைப்பதும்  சமீப காலமாய்  பிரபலமாகி வந்தது. இந்த வழக்கில் மைனர் பெண் ஒருத்தியை பெண்ணின் அப்பா தடுத்தும் போலீஸ் அதிகாரி  காதலனின் குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தார். விளைவி மைனர் பெண் கற்பமாயிருக்கிறாள் . நீதி மன்றம் இப்போழுது அவளை பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்த இளவயது அறியாப் பருவத்து  ஈர்ப்புக்கு (காதலுக்கு)  காரணம்முக்கியமாக பெற்றோர்கள்தான் என்று சொல்வேன்.. இவர்கள் தங்கள் பிள்ளைகளை குழந்தைகளாகவே நினைக்கின்றனர். ஒன்றும் அறியாத தங்கள் பிள்ளைகள்  தவறு செய்ய  மாட்டார்கள் என்று அவர்கள் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்து  விடுகிறார்கள். விளைவு கிடைத்த சுதந்திரத்தை பிள்ளைகள் தவறாக உபயோகப் படுத்திக் கொள்கின்றனர்..நம்பிக்கை வைப்பதில் தவறில்லை அதே நேரத்தில் பிள்ளைகளை கண்காணிக்கவும் தவறக் கூடாது.   பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு செல் போன்கள். .மணி கணக்கில் இரவில் பேச  அனுமதி.  18 வயதானால்தான் வாகனம் ஓட்ட   அரசு லைசன்ஸ் தருகிறது.ஆனால் பள்ளிப் பருவத்திலேயே பிள்ளைக்கு  வாகனம் வாங்கிக் கொடுத்து விடுகின்றனர்..தற்பொழுது பிரபலமாகி வருவது முகநூல்  காதல்.. பெற்றோரும் ஒரளவு கண்டிப்புடன் இருந்தால்  குறைந்த பட்சம் இந்த  ஈர்ப்பினால் ஏற்படும் (மைனர் காதலை)  பிரச்சினையை தவிர்க்கலாம்..

No comments:

Post a Comment