Tuesday, December 16, 2014

வண்ண மீன்கள் வளர்க்கும் முறை. - ஒரு பார்வை.

            முந்தைய  பதிவு  ஒன்றில்   முயல்வளர்ப்பு பற்றி  நான்  அறிந்தவரை   கூறினேன். இந்த பதிவில்  அலங்கார மீன்கள்  வளர்ப்பது  பற்றி  எனக்கு தெரிந்தவரை கூறுகிறேன்.
          பொதுவாக  ஒவ்வொரு  விடுமுறை கால  .கட்டத்திலும் அலங்கார மீன்களை அனைவரும் வாங்கி வளர்ப்பதும் ,விடுமுறை காலம் முடியும் முன் அவை இறப்பதும் வாடிக்கையான ஒன்று..இது எனது  கல்லூரி காலத்தில் இருந்து  பழக்கமான ஒன்று . இந்த மீன்களை எப்படி  நல்ல முறையில் வளர்ப்பது என்பதை பற்றிய ஒரு  சிறு தகவல் தான் இந்த பதிவு. காரணம் வண்ண மீன் வளர்க்கும் பண்ணை ஒன்றை ஆரம்பிக்க  முடிவெடுத்து அதற்க்குண்டான தகவல்களை சேகரித்து பரிட்சார்த்தமாக வீட்டில் நான் வளர்த்து வரும் பொது  நான் சந்தித்த பிரச்சனைகளை வைத்து இந்த பதிவை எழுதியுள்ளேன்.

        வண்ண மீன்கள்  இனப் பெருக்கம்  செய்வதில்  குட்டி போடும்  மீன்களும் உண்டு,முட்டை இட்டு  இனப் பெருக்கம் செய்யும்  மீன்களும் உண்டு. பொதுவாக நாம் வாங்கும் மீன்கள் மோலி ,கப்பீஸ் ,எஞ்சல் ,டைகர், தங்க மீன் ,பைட்டர்   போன்றவைதான்.. இவற்றில் மோலி,கப்பீஸ்   மட்டுமே  குட்டி போடும் வகை மற்றவை முட்டை இட்டு இனப் பெருக்கம் செய்பவை.

வண்ண மின் வளர்ப்பவர்கள்  முக்கியமாய் கவனிக்க வேண்டியவை :
--------------------------------------------------------------------------------------------------------
1)மீனை வாங்கி வந்த உடன் வீட்டில் உள்ள  ஒவ்வொருவரும் அதற்க்கு  தீனி  போட முயல்வது தான் முதல் பிரச்சினை. மீனிற்கு ஒரு நாளைக்கு    இரண்டு முறைக்கு மேல் உணவு  போடக் கூடாது. காலை ஒரு முறை மாலை ஒரு முறை   உணவிட்டால் போதுமானது.மீன்கள் உணவில்லாமல் 2 ,3 தினங்கள் கூட உயிர்வாழும்.
2)மீனை வளர்ப்பது  குடுவையாக இருந்தாலும் சரி  தொட்டியாக  இருந்தாலும் சரி ,மீனின்   உருவ வளர்ச்சிக்கு ஏற்றவாறு தொட்டியில்  மீன்களை இட வேண்டும். அளவுக்கு அதிகமாக   தொட்டியில்  மீன்களை வளர்த்தாலும் சுவாசிக்க தேவையான   காற்று இல்லாமல் இறந்து விடும்.
3)மீன்  வளர்க்கும் தொட்டியில்   குறைந்த பட்சம்  20%     நீரை  தினம் எடுத்து விட்டு  புதிய நீரை  ஊற்றி வர வேண்டும். அல்லது ஒரு   நாள் விட்டு ஒரு நாள்  நீரை முழுவதுமாக மாற்றவும் செய்யலாம்.
4)மீன் நன்கு சுவாசிக்க  ஏரேட்டர்  உபயோகிப்பதுவும் சிறந்தது.
5)வளர்க்கும் மீன்களில் எதேனும் ஒன்று இறந்து விட்டால் உடன் அதை அகற்றி விட வேண்டும். இல்லையேல் அதனால் ஏற்படும் கிருமிகள் மற்ற மீன்களை பாதிக்கும்.
6)உணவாக இடுவதில் தினம்  தயார் செய்ய பட்ட  கடைகளில் விற்க்கும்  உணவுகள் மட்டும் இன்றி  , மண்புழு போன்றாவற்றையும்  அடிக்கடி  கொடுக்கலாம். மீனின் வளர்ச்சிக்கு இது உதவும்.
7)வண்ண மீன்ககள்  நன்கு வளர,,  வளரும் சூழ் நிலையும்  உதவும். மீன் விற்கும் கடைகளில்   இதற்குண்டான  செடிகள்  விற்கப் படுகின்றன. செடிகளை  உடன் வளர்ப்பதால் மீனுக்கு தேவையான ஆக்சிஜனும் கிடைக்கும்.
8)மீன் வளர்ப்பதில் மிக முக்கியமாக பார்க்க வேண்டிய ஒன்று  வெப்ப நிலை. பொதுவாக இந்தியாவில் நாம் வளர்க்கும் அனைத்து  வண்ண மீன்களும்  குளிர்ச்சியை தாங்கும் திறன்  அற்றவை. தங்க மீன்கள் மட்டும் ஓரளவு குளிர்ச்சியை தாங்கும் தன்மையுடையது. அறையின்  வெப்ப நிலை  சீராக இருக்கும் படி கவனித்துக் கொள்ள் வேண்டும்.. மீன்  விற்க்கும் கடைகளில்  இருந்து  இதற்குண்டான ஹீட்டரை வாங்கி உபயோகப் படுத்தலாம். இதன் விலைரூ 200 வரை ஆகும். நான்  வளர்க்கும் மீன்களை   தற்சமயம்    எனது
கணினி  வைத்திருக்கும் அறையில் வைத்துள்ளேன். தொட்டியின் அருகில் ஒரு டேபிள்  லேம்ப்  ஒன்றையும் வைத்துள்ளேன்.
9)நீங்கள்  வண்ண மீன் வளர்க்கும் தொட்டி  பெரியதாய் இருந்தால் பில்டர்  ஒன்றையும் உபயோகிக்கலாம். இது தொட்டில்  இருக்கும் கழிவுகளை வெளியே எடுக்க  நல்ல உபகரணம்.. இதன் விலை கடைகளில் 200 வரை இருக்கும்.
இந்த பதிவு ஒரு  பொதுவான  பதிவு தான். அடுத்து வரும் பதிவுகளில்  மீனிற்கு எப்படி  நான் குறைந்த  செலவில் உணவு தயார் செய்கிறேன். .வண்ண மீன்களை  இன பெருக்கம் செய்வது எப்படி போன்றவற்றை விளக்குகிறேன்.

Thursday, September 4, 2014

My Top Picks

குறிப்பிட  பங்குகளை நான் தேர்வு செய்து வியாபாரம் செய்கிறேன். இது என் நண்பர்களின் பார்வைக்காக.
ஷேர்களின் இன்றைய விலை, லீடிங் ப்ரோக்கர்கள் ரெகமெண்ட் செய்த டார்ஜெட் ,கம்பெனியின் காலாண்டு லாபம்.  Money Control பார்ப்பவர்கள் ரெகமென்ட் செய்தவை என்று கொடுத்துள்ளேன்.
கம்பெனியின் சார்ட்டில் இருந்து பங்கின் ரெசிஸ்டன்ஸ் மற்றும் சப்போர்ட் லெவல்   கொடுத்துள்ளேன்.
1)Cipla:  C.Mkt.Price: 552 target : 671.(money control) P/L 332 crores (Q) Asthma generic drug. *
2)Suven life:CMP: 174  (86% recommended  by.( M.C) P/L 34 Crore. 676 patents,`18 inventions*
3)Biocon:CMP: 485. Target :530 (Money cont.)P/L 74 Crore  (95%) Recommend .
4)Jyothi Lab: CMP: 241  75% recommended in  (M.C)P/L  51 Crores
5)Dabur "CMP:  225 P/L 144 crores  60% recommend
6)Idea : CMP : 167, P/L: 642 Crores  Target 178
7)Lic Housing Finance: CMP :320  P/L 324 Crores Target 325
8)Escorts:  CMP 133 P/L: 34  Crores
9)L&T H.f.:CMP  66.70 P/L 285 Crores  recommended by 80% (M.C.)
10)NTPC : CMP : 142.50 Target 165 P/L: 2201 Crores
11)Power grid:CMP:134, Target 187 P/L  1131 Crores  91% recommends (M.C)
12)Federal Bank :CMP :125 Recommended by
77% (M.C) P/L 220 Crores
13)Exide: CMP :162. P/L 185 Crores
14)TvS Motor:CMP :224 Target :270 P/L 70 Crores
15)Apollo Tyres:CMP  194.30   target 210 recommended by 78% M.C viewrs .
16)India cements: CMP: 120.90 Loss 2 crores (After adjusting 96crores intrest)
17)JK Lakshmi cement: CMP: 315 P/L:  40 Crores  Target 320
18)National alu.(NALCO)CMP: 58.40 Recommended by 87%(MC)P/L:271 Crores
19)Hind.zinc:CMP :168; P/L 1617 Crores  Target 175
20)NMDC: CMP: `176, recommended by 96%(MC) Target 186 P/L1915 Crores
21)Graphite ind:CMP:102 recommended by 100% (MC) P/L 27 Crores
22)Financial tech: CMP: 255  P/L 128 Crores
23)Hexaware: CMP 162 Recommendedby 92%(MC) target 165  P/L 65 Crores
24)Axis Bank:CMP 416 Target 440 P/L 1666 Crores
25)Tata communication:CMC:385 P/L 125 Crores
26)power finance:: CMP : 262,P/L :  target 265 P/L 1411 Crores
27)Voltas CMP : 248 Target 273  P/L  110 Crores
28)Thomascook :CMP 144. Target 165  P/L 50 Crores
29)SSLT (Sesa sterlite) CMP: 278 Target 326
30)UPL CMP  369. Target  400  P/L/  266 Crores

Monday, August 25, 2014

சட்ட மன்ற தேர்தலில் பாஜக வின் தோல்விக்கு எது காரணம்.??

தேர்தலில்  வெற்றி தோல்வி என்பது சகஜமான ஒன்று. ஒரு கட்சி வெற்றி பெற்று ஆட்சியை   பிடித்தால் அதன் தாக்கம் ஒரு 6 மாதத்திற்க்கு இருக்கும். இதை அரசியல் விமர்சகர்கள் ஹனிமூன் பீரியட்  என்று கூட சொல்வார்கள்.
ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் எந்த சிக்கலிலும் மாட்டாமல் இந்த  கால கட்டத்தில் இருப்பார்கள். அப்படியே  தவறு செய்தாலும் அநுபவம்  இன்மை என்ற  காரணத்தால் அந்த தவறுகள்  மன்னிக்க படும்.

சமீபத்தில் பாஜக வின்  அசுர வெற்றியும் அப்படிதான் அமைந்தது. காங்கிரஸ் எதிர் கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல்  நிற்கிறது. இந்நிலையில் சமீபத்தில் இது வரை நடந்த 21    சட்டசபை இடை தேர்தல் முடிவுகள்  நிச்சயம்
பாஜக வின் வெற்றிக்கு  ஒரு அதிர்ச்சி தரும்  முடிவு தான். முதலில் வந்தது

சட்டிஸ்கர்  மாநில  முடிவு. 3 சட்டசபை தொகுதியிலும்  காங்கிரஸ் வெற்றி பெற்று  பாஜகவிற்கு எச்சரிக்கை மணி அடித்தது. இன்று  4 மாநில
முடிவுகள் பீகாரில்  4 இல் மட்டுமே ,கர்நாடகாவில் 1,ம.பி.2 பஞ்சாப்பில்  அகாலி 1 ஆக  18 சட்டமன்ற தொகுதிகளில் 8 இல் மட்டுமே  வெற்றி.

பிரமாண்டமான வெற்றிக்கு பின் என் இந்த சறுக்கல் ??
1)காங்கிரஸ் அப்படி ஒன்றும் இந்த இடை பட்ட காலத்தில்  எதிர்
எதிர்கட்சியாய்  இருந்து சாதித்தது விடவில்லை. பின் என் இந்த  தோல்வி.??

2)மோடி என்னும் மாயை நீங்கி விட்டதா?

3)அல்லது மக்கள் காங்கிரசிற்கும் பாஜாகாவிற்க்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை என்று  கண்டு கொண்டு விட்டார்களா??

4)அல்லது பாஜாகாவின் இமாலய வெற்றிக்கு   காங்கிரஸ் மீது இருந்த  அதிருப்தி தானே தவிர  வேறு ஒன்றும் இல்லையா?

5)அல்லது கசப்பு மருந்து தருகிறேன் என்று  காங்கிரசின் கொள்கைகளை அப்படியே பின்  பற்றி டீசல் பெட்  ரோல்  விலை ,ரயில் கட்டண விலை
என்று உயர்த்தியதில் மக்கள் கடுப்படைந்து  விட்டனரா??

6)அல்லது  கருப்பு பண முதலைகளை கண்டு பிடித்து சிறை வைப்போம் ,
ஸ்விஸ் வங்கி பணத்தை உடன் இந்தியாவிற்கு கொண்டு வருவோம் என்று சொல்லி விட்டு   ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் பணமே இல்லை என்று
சொன்னதால் கோபப் பட்டு விட்டனரா??

7)அல்லது இந்திய வீரர்களை கொன்றால்  பதிலுக்கு  பாக். ராணுவத்திற்கு இரு
மடங்காக பதிலடி கொடுப்போம் என்று சவால் விட்டு விட்டு இன்று  வெறும் கண்டன அறிக்கை மட்டும் விட்டு கொண்டு   இருப்பதாலா??

8) அல்லது ஆட்சி  பொறுப்பேற்று 100 நாட்களில் பாக். 70 முறை எல்லை
தாண்டி தாக்குதல் நடத்தியும்   பிரதமர் அமைதி காப்பதை கண்ட வெறுப்பினாலா??

9)ஊழல் செய்த  காங்கிரஸ்காரர்களை சிறையில்  வைப்போம்  என்று  பாராளுமன்றத்தை நடக்கவிடாமல் ஊழல் புகார்களை அடுக்கியவர்கள், ஆட்சிக்கு வந்து 4 மாதங்கள் ஆகியும் ஒரு காங்கிரஸ்காரனையும் சிறையில் வைக்காமல்   ஆட்சி நடத்துவது ஏன்  என்பது புரியாததாலா??

புரியாத புதிர். பாஜக விளக்குமா?

Sunday, August 24, 2014

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தகுதியின் அடிப்படையில் நியமிக்க பட வேண்டும். :கட்ஜு

          உச்ச நீதி மன்றத்திற்க்கு தலைமை  நீதிபதியை  தகுதியின் அடிப்படையிலேயே நியமிக்க வேண்டும். பணி மூப்பை  (Seniority ) வைத்து கூடாது. முன்னாள் உச்ச நீதி மன்ற நீதிபதி  மார்கண்டேய கட்ஜு.
வெளியிலிருந்து பார்க்கும் போது இது ஒரு நல்ல  யோசனை என்றே தோன்றுகிறது.     இதன்     உள் கருத்து   என்னவென்று பார்ப்போம்.

         வரும்  நவம்பர் மாதம்  தற்போதைய  உச்ச  நீதி மன்ற நீதிபதி ஒய்வு பெறுகிறார். ஒய்வு பெற்ற  நீதிபதியின் இடத்தில்    தற்போதைய  உச்ச நீதி மன்ற நீதிபதிகளில் அதிகம்  அநுபவம்  உள்ளவரை  நியமிப்பது வழக்கம்
திரு. கட்ஜுவின் .வார்த்தைகளை கவனிக்கும் போது தற்போது  உள்ள அனுபவம் மிக்க உச்ச  நீதி மன்ற  நீதிபதி  அந்த  பதவிக்கு தகுதியானவர் அல்ல என்பது போல் உள்ளது. இது இது தற்போது உச்ச நீதி மன்றத்தில் உள்ள நீதிபதிகளை அசிங்க படுத்துவது போல் உள்ளது.

         திரு. கட்ஜு  இதையே  மாவட்ட நீதிபதிகளை  மாநில அரசுகள்  தேர்ந்தேர்ந்தேடுக்கும்   போதும் , உயர் நீதி மன்ற நீதிபதிகளை தேர்ந்தேடுக்கும் போதும் தகுதிக்கு முன்னுரிமை  தர வேண்டும் என்று சொல்லியிருந்தால் பாராட்டியிருக்கலாம். உச்ச நீதி மன்றத்தில் பல் லாண்டு காலம் இருந்து  செயல் பட்ட  உச்ச நீதி மன்ற நீதிபதிகளை காட்டி இவர் சொல்லும் போது நமக்கு இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளின் மீதே இப்போழுது சந்தேகம் வருகிறது.

        கடைசியாய் ஒரு சந்தேகம் திரு மார்கண்டேய கட்ஜு தகுதியின் அடிப்படையில்  உச்ச நீதி மன்றத்திற்க்கு நீதிபதியாய்    வந்தாரா? அல்லது   திறமை மற்றும் தகுதியின் அடிப்படையில் உச்ச நீதி மன்ற நீதிபதியாய்  ஆனாரா??


Saturday, August 23, 2014

பாக். தாக்குதலும் பார்ட் டைம் ராணுவ அமைச்சர் கண்டனமும்.

R .S .புரம்  பகுதியில்  பாக் .  ராணுவத்தினர் தொடர் தாக்குதல். 22  இந்திய நிலைகளை குறி வைத்து தாக்கி வருகின்றனர். இது வரை இருவர் கொல்ல  பட்டுள்ளனர். 7 பேர் காயப் பட்டுள்ளனர்.  3 கிராமங்களை சேர்ந்த 2000 பேர்  வீட்டையும் உடமைகளையும் ,கால்நடைகளையும் விட்டு  விட்டு
அகதிகளாய் இது வரை வெளியேறியுள்ளனர்..

இந்திய  ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி இருந்தால் பாக். பக்கம் ஏற்பட்ட சேதத்தை சொல்லலாமே.??ஒரு நாட்டு  மக்களை பக்கத்து நாட்டுக்காரன்
தாக்கி  விரட்டி அடித்து கொண்டிருக்கின்றான் . ராணுவ அமைச்சர் அமைதி காக்கிறார் . பிரஸ் மீட் ஏற்பாடு செய்து அதில் பாக்கின் இந்த தாக்குதலை இந்தியா கடுமையாக கண்டிக்கிறது என்று  கூறுகிறார்.

இந்தியாவிற்க்கு மோடி  இனியாவது ஒரு முழு நேர  ராணுவ  அமைச்சரை
நியமிப்பாரா? அல்லது இனியும்  பார்ட் டைம் ராணுவ அமைச்சராக  அருண் ஜெட்லியே நீடிப்பாரா??

பாக். தாக்குதல் என்பது  ஏதோ    பீகாரிகளையும் மற்ற தென் மாநில மக்களையும்  சிவசேனா  தொண்டர்கள் மகாராஸ் டிராவை   விட்டு விரட்டி அடிக்கும் உள் நாட்டு பிரச்சினை அல்ல.  இது  இந்தியாவின்
தன மானத்தை  உலக நாடுகள்  மத்தியில்  கேவல படுத்தும் செயல். மத்திய
அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா???

Tuesday, August 12, 2014

பங்கு வர்த்தகம் லாபமான தொழிலா?? பகுதி -2

முதல் பதிவில்  பங்கு வர்த்தகத்தில்   சேரும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி சுருக்கமாக கூறி இருந்தேன். இந்த பதிவில்   அவற்றை  பற்றி  விளக்கமாக கூறியுள்ளேன்.
புரேக்கரேஜ் :  :பொதுவாக இன்ட்ர  டே(Intra day)   வியாபரத்திற்கு ஒரு
விதமாகவும் (Delivery)டெலிவரிக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதமாகவும்  புரோக்கர் கம்பெனிகள்  நம்மிடம் சாஜ்  செய்கின்றன.
HDFC,, ICICI போன்ற  வங்கிகள்   இன்டிரா  டே க்கு 50 ரூபாய்  வசூலிப்பார்கள்.
டெலிவரிக்கு0.50 % சார்ஜ் செய்வார்கள்.
ஆனால் தனியார் புரோக்கர்கள்  குறிப்பிட்ட புரோக்கரேஜ் சொல்வார்கள். ஆனால் நாம் பேரம் பேசினால்  குறைத்து வசூலிப்பார்கள்.
உ.ம். தனியார்  கம்பெனிகளிடம் பேரம் பேசி  இன்டிரா டே க்கு .03% வரை வாங்கலாம்.. டெலிவரிக்கு  0.25% வரை பேரம் பேசலாம். தனியார் கம்பெனி மூலம் செய்வதால் நாம்  செய்யும்  வியாபாரத்திற்கு   குறைந்த  லாபம் இருந்தாலும்   வெளியே வர வழி  வழிஉண்டு..நீங்கள் உங்களுக்கு  சேவை செய்ய சிறந்த புரோக்கரையே தேர்ந்தெடுங்கள். இந்தியாவின் முதல் 10  ஷேர் புரோக்கர்களில் ஒருவரை தேர்ந்தெடுங்கள். புதிய கம்பெனிகள் பல குறைந்த புரோக்கர் கமிஷன் வாங்குவார்கள். ஆனால் சேவை சரியாய் இருக்காது சாப்ட்வேர் நன்றாய் இருக்காது.  கீழே  எனக்கு தெரிந்த பிரபலமான 3  புரோக்கர் கம்பெனிகள் பெயர் கொடுத்துள்ளேன்.
Sharkhan,Angel Broking,Motilal Oswal
.
அடுத்து முக்கியமாக கவனிக்க வேண்டியது சார்ட்   நமக்கு பங்குக்கள் வாங்குவதில் எப்படி உதவும் என்பது.

பங்குகளின் விலை உயரும் போது  (Chart) சார்ட் ஏறுமுகமாகவும்,இறங்கும் போது  (Chart)சார்ட் இறங்கு முகமாகவும் காட்டும்.. இதை கண்டு பிடிப்பதில் சிரமம் இல்லை.  மார்கெட்டில் அனைத்து பங்குகளும் ஏறும் மற்றும் இறங்கும் போது   (Niffty) நிப்டி மற்றும்  (BSE)பி எஸ் இ  சார்ட் களும் ஏறவோ அல்லது இறங்குவதகவே காட்டும். ஆகையால் தனிப் பட்ட பங்குகள்  ஏறுமுகமாக இருப்பதை பார்ப்பதை தவிர்த்து விட்டு ,முதலில் பங்கு சந்தை அன்றைய தினம் ஏறுமுகமாக உள்ளதா என்று பாருங்கள். (Chart) சார்ட் ஏறுமுகமாக காண்பித்தால்   நீங்கள் தேர்வு செய்து வைத்திருக்கும்  பங்குகள் ஏறு முகமாக உள்ளதா? அந்த செக்டார்(Sector) அன்று ஏறுமுகமாக உள்ளதா  போன்ற அனைத்தையும் கவனியுங்கள். அதன் பின் அந்த பங்கு தன்னுடைய நகரும்  சராசரிக்கு (Moving Average)மேல் உயர்ந்துள்ளதா என்பதை கவனியுங்கள். பங்குகள் (Moving average)நகரும் சராசரியை தாண்டி நின்றால் நிச்சயம் சந்தை உயரும் போது அந்த பங்கின் விலையும் . உயரும்.

மேலே  கொடுத்துள்ளது பாரத மிகு மின் நிறுவன  பங்கின் இன்றைய  சார்ட்.
காலையில் சரிந்த பங்கின் விலை   பங்கின் சப்போர்ட் விலையான  219.20 வந்ததும் அதற்க்கு கீழ் இறங்கவில்லை என்பதை கவனியுங்கள். அதே போல்  மார்கெட் உயர்ந்த போது  பங்கின் விலையும் உயர்ந்தது. ஆனால்  ரெசிஸ்டன்ஸ் லெவல் 1  வந்த உடன் 224.45 இல் அது இறங்க ஆரம்பித்து விட்டது என்பதையும் கவனியுங்கள்.

பங்கை வாங்கும் போது அன்றை பங்கின் நிலை  பற்றி மட்டும் பார்க்காமல் கடந்த 5 நாள் ஏற்றம் இறக்கம் எப்படி உள்ளது,மற்றும் ஓராண்டில் அந்த பாங்கு எவ்வளவு உயர்ந்துள்ளது.  என்பதையும் பார்க்க வேண்டும். பங்கு தன்னுடைய
அதிக பட்ச விளையியாடைந்து விட்டு இறங்குமுகமாக இருந்தாலும் நீண்ட கால முதலிட்டுக்கு ஏற்ற பங்கு அல்ல என்பதை அறிக.
.
பங்கையும் தேர்வு செய்து விட்டீர்கள். இப்போழுது  அந்த பங்கின் (Resistance  Level)ரெசிஸ்டன்ஸ்  லெவல் எங்கு உள்ளது, சப்போர்ட் லெவல் (Support level) எங்கு உள்ளது என்பதை கவனியுங்கள். நீங்கள் வாங்கும் விலையில் இருந்து  அதிக விலையில் (Resistance level)ரெசிஸ்டன்ஸ் லெவல் இருந்தால் பங்கு நன்கு உயர  வாய்ப்பு உள்ளது. ரெசிஸ்டன்ஸ் லெவல் அருகில் இருந்தால் அந்த விலை வந்ததும் பங்கு மேலே ஏற சிரம படலாம் அல்லது  அந்த விலையில் இருந்து சரியவும் வாய்ப்பு உண்டு. அதே போல் ( Support level) சப்போர்ட் லெவல் உங்களுக்கு தெரிவிப்பது அந்த விலைக்கு கீழ் பங்கு செல்ல சற்று  வாய்ப்பு குறைவு. ஆனால் அதற்க்கு கீழ் சென்று விட்டால் மேலும் சரிய
வாய்ப்புண்டு. இப்பொழுது சார்ட்டை பார்த்த உடன் உங்கள் விலை,அது ஏறக் கூடிய விலை, மற்றும் பாது காப்பான சப்போர்ட் லெவல்   உங்களுக்கு தெரியும்.

பங்கை வாங்கிய உடன் நீங்கள் செய்ய வேண்டிய முதல்  வேலை   பங்கின் சப்போர்ட் லெவல் அல்லது  உங்கள் முதலீட்டுக்கு ஏற்றவாறு உங்களால் தாங்க கூடிய நஷ்டத்தை கணக்கிட்டு  ஸ்டாப் லாஸ்(Stop loss)    போட வேண்டும். இப்படி செய்வதால் பங்கு சந்தை திடீர் என்று சரிந்தாலும் உங்களுடைய  நஷ்டத்தின் அளவு குறிப்பிட்ட அளவை தாண்டாது. உ.ம். 100 ரூபாய் விலையுள்ள ஒரு பங்கை  வாங்குகிறீர்கள்.  பங்கின் விலை குறைந்தால் உங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை கணக்கிட்டு 98 அலது 97 இல்
ஸ்டாப் லாஸ் போட்டு விட்டால் பங்கின் விலை திடீர் என்று சரிந்தாலும்  உங்கள் நஷ்டம் 200 இல் 300 ரூபாய்க்குள்தான். ஸ்டாப் லாஸ் என்ன  விலையில் போடலாம் என்பதை கண்டு பிடிக்க தற்போது கம்பெனிகள் அதற்குண்டான்  கணக்கையும்  போட்டே   இப்போழுது கொடுத்து விடுகின்றன. ஆகையால் பங்கு வாங்கிய உடன் ஸ்டாப் லாஸ் போட மறக்காதீர்கள்.

Friday, August 8, 2014

பங்கு வர்த்தகம் லாபமான தொழிலா??

பங்கு சந்தை என்றவுடன் பொதுவாக நம் மனதில் தோன்றுவது   இது  கிட்ட
தட்ட சூதாட்டம் போன்றது. .பங்கு சந்தையில்  முதலீடு செய்து  முன்னேறியவர்கள் யாரும் இல்லை.. மிகவும் ரிஸ்க்   ஆனா வியாபாரம்.
உண்மையில் அந்த அளவு  மிக மோசமான வியாபாரமா? ஒரு பார்வை.

எந்த ஒரு வியாபாரமாய் இருந்தாலும் முதலில் அதை    நன்கு தெரிந்து கொண்டு இறங்கினால் மட்டுமே  லாபம் கிடைக்கும்.  துரதிர்ஷ்டவசமாக  பங்கு வர்த்தகத்தில் நுழையும் 90% பேர்  பங்கு வர்த்தகம் பற்றி அடிப் படை   விஷயம் கூட தெரியாமல் இறங்குவது தான் தோல்விக்கு காரணம். முன் பின் தெரியாத  ஒரு  ஷேர் ப்ரோக்கிங் கம்பெனியின்  பிரதிநிதி ஆசை வார்த்தை காட்டி சேர்த்து விட்டு சென்று விடுகிறான் . தினசரி வாங்க வேண்டிய பங்குகள் பற்றி (Tips) தகவல் தருவோம். இவ்வளவு முதலீடு போட்டல் பேங்க் வட்டியை விட 10மடங்கு லாபம் கிடைக்கும் என்று புள்ளி விவரம்  கொடுப்பான். இவர்களும் ஆசை பட்டு இறங்கி  விட்டு,  பின் போட்ட பணம் அத்தனையும் போய் விட்டது என்று 3 மாதத்திலேயே  தலையில் கை வைத்து கொண்டு  உட்கார்ந்து விடுவார்கள். நிச்சயம் பேங்க் வட்டியை விட கூட கிடைக்கும் ஆனால் வியாபாரம் ஆரம்பிக்கு முன் அதை பற்றி முழுவதும் தெரியாமல் இறங்கி விட்டு வியாபாரம் சரியில்லை என்று கூறுவது எந்த விதத்தில்  நியாயம்.??
பங்கு  வர்த்தகத்தில் இறங்கும் முன் கவனிக்க வேண்டியவை:

1)மிக  மிக குறைந்த வியாபார முதலீடு 10,000 வது இருந்தால் தான்  ஒரளவு லாபம் சம்பாதிக்க  முடியும்..
2)பங்கு வர்த்தகம் பற்றி நன்கு அறிந்த நண்பர்களிடமோ அல்லது புரோக்கர் அலுவலகத்தில் இருந்து வரும்  விற்பனை  பிரதிநிதியுடனோ விவாதித்து அறிந்து கொள்ளுங்கள்.
3)ஆங்கில சேனல்கள்(Bloomberg, ND TV Profit, ET Now போன்றவற்றை குறைந்த பட்சம் தினம் 1 மணி நேரம்  பாருங்கள்.
4)Money control,Money rediff.com.,Niffty 50 Heat map.தினம் பாருங்கள்.

இனி  நீங்கள் வியாபாரம்  தொடங்கு முன் கவனிக்க வேண்டியவை  ::
1)சிறந்த புரோக்கர் யார் என்று விசாரியுங்கள்.
2)புரோக்கரேஜ் கமிஷன்  பேரம் பேசி வாங்குங்கள்.
3)கம்பெனி கொடுக்கும் சாப்ட்வேர்  எப்படி  உபயோகப் படுத்துவது  என்று  நன்கு   தெரிந்து கொள்ளுங்கள்.
4)பணத்தை வைத்து வியாபாரம் செய்யுமுன் நீங்களே  எந்த பங்கில் எந்த விலையில் போடலாம் என்று முடிவெடுத்து  ஒரு நோட்டில்  குறித்து வைத்து ஒரு வாரம் வியாபாரம் செய்து பாருங்கள்.. வார முடிவில் எவ்வளவு  லாபம் அல்லது  நஷ்டம் என்று பாருங்கள். நஷ்டம் வந்தால் நீங்கள் வியாபாரத்திற்கு இன்னும் தயாராகவில்லை என்று அர்த்தம். மீண்டும் ஒரு வாரம்  புத்தகத்திலேயே  கற்பனை வியாபாரம்  செய்யுங்கள்.லாபம் வரும் என்று நிச்சயம் தெரிந்த பின் வியாபாரத்தை  தொடங்குங்கள்.

இனி வியாபாரம் எப்படி செய்வது  என்று பார்ப்போம்.:
1)பங்குகளை அன்றே வாங்கி அன்றே விற்க்கும்..Intra day , வாங்கி வைத்து விட்டு நல்லவிலை வந்ததும் விற்க்கும் வகைDelivery என்று இரண்டு விதமாக செய்யலாம்.
 2)எந்தவிதமான துறை   பங்குகள் என்பதை  முதலில்
தேர்வு செய்யுங்கள்.

3)அனைத்து  கம்பெனிகளின்  பங்குகளிலும் காலை வைத்து விட்டு முழிப்பதை  விட ஒவ்வொரு துறைக்கும் இரண்டு அல்லது 3 முக்கிய பங்குகள் தேர்வு செய்து மொத்தம் 10 இல் இருந்து 15 பங்குகலில் மட்டும் வியாபாரம் செய்யுங்கள்.

4)தேர்வு செய்யப் பட்ட அந்த கம்பெனிகளின்   3 ஆண்டு லாப நஷ்டக்  கணக்கு
மற்றும் காலாண்டு லாப  நஷ்ட கணக்கை பாருங்கள். டிவிடெண்ட்  கொடுத்தது எவ்வளவு என்று பாருங்கள். கம்பெனியின் வருங்கால திட்டத்தை  பற்றி நன்கு அறிந்து கொள்ளுங்கள்.

5)கம்பெனியின் பங்குகள்  52 வார  அதிக பட்ச விலையை எட்டி உள்ளதா என்று கவனிக்கவும்..

6)தற்போது அனைத்து  புரோக்கர்கள் தரும் சாப்ட்வேர்  களிலும்  (technical Analysis)
  கொடுத்துள்ளதால் அந்த வகையில் உங்களுக்கு சிரமம் குறைவு.
ஆனால் முக்கியமான சில வார்த்தைகளும் அது என்ன என்பதும் நீங்கள் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்.

7)பங்கின் மைய விலை (Pivot Point)நகரும் சராசரி விலை(Moving average), நஷ்டத்தை நிறுத்தும் விலை(Stop Loss)தடுப்பு விலை(Resisistance Level )ஆதரவு விலை   (Support Level)பற்றி அறிந்திருக்க வேண்டும்.

8)மிக முக்கியமானது  வரை படத்தை  வைத்து (Chart)  எப்படி ஆய்வு செய்து முடிவெடுப்பது..

இந்த பதிவில் சுருக்கமாக  பங்கு வர்த்தகத்தின் அடிப்படை  விஷயங்களை கூறியுள்ளேன். . அடுத்தா பதிவில் இவற்றை பற்றி விரிவாக விளக்குகிறேன்.

Sunday, April 13, 2014

பதிவுத் துறையில் நான் அறிந்தவை .ஒரு விளக்கம்.

சமீபத்தில் பேஸ்புக்கில்   சொத்துக்கள் வாங்கும் போது கவனிக்கப் படவேண்டிய  விஷயங்கள் என்று 3 பதிவுகள்  எழுதியிருந்தேன் .
நட்பு வட்டத்தில் இருந்த  நண்பர்கள்  சிலர் பாராட்டி  எழுதி
எழுதியிருந்தார்கள். அதை என் இங்கு எழுதக் கூடாது  என்ற
எண்ணம் தோன்றியதால் இங்கு  இதை எழுதுகிறேன். அத்துடன்
நான் இருக்கும் பகுதிக்கு   சற்று அருகில் இருக்கும்  சில  விவரங்களையும்
கொடுக்க உள்ளேன்.
1) தென் சென்னை  பகுதியில் உள்ள  சார்பதிவாளர்கள் அலுவலகங்கள்
2)பத்திரம் விற்பவர்கள்   விலாசம்  3)பத்திரம் எழுதுபவர்கள்  விலாசம் ,
மற்றும் உங்களுக்கு பத்திரப் பதிவில் ஏற்ப்படும் சந்தேகங்களுக்கு விளக்கம்
 தரவும் எண்ணியுள்ளேன். உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை
எனக்கு தெரிவித்தால் என்னால் முடிந்தவற்றை நானே தீர்த்து வைக்கிறேன்.
அல்லது சம்பந்தப் பட்ட சார் பதிவாளரிடம் கேட்டு விளக்கம்  தருகிறேன்.
முதல் கட்டமாக  எங்கள் பகுதியில் உள்ள 9 சார்பதிவாளர்களின்  விலாசம்
தந்துள்ளேன். நட்புடன்  உங்கள் நண்பன் .
1)SRO: Tambaram,No.26,MES.,Road,East Tambaram,Chennai-6000059,Ph:044-22397171.
2)SRO:Saidapet,No.9,jeenis Road,Saidapet,Chennai-6000015,Ph.044-24323170.
3)SRO.Pallavaram,7,th Main Road, New Colny ,Chromepet,Pallavaram,,Ch.6000044,Ph:044-22413425
4)SRO,Pammal,29,Pammal Main Road,Pammal,Chennai:-6000075 ,Ph:044-22480069
5)SRO,Padappai,New No.113Pushpagiri Main Road, Padappai.Chennai-601301.,Ph.044-27174390
6)SRO ,Velachery,No.36,Orandiamman Koil St.,Velachery,Chennai-6000042 Ph.044-22553736.
7)SRO,Alandur,No.12,1St Main Road,Nanganallur,Nanganallur,-Ch-6000061Ph.044-22240222
8)SRO,Guduvanchery,22/1,G.S.T Road,Nandhivaram,Guduvanchery.Ph.044-27462940
9)SRO,Neelankarai,2/71,1St Floor,Kajerqa garden,ECR,Neelankarai,ch.6000041,Ph.044-24490134.

Wednesday, February 12, 2014

சென்னை சூப்பர் கிங்க் 2014 அணி: ஒரு பார்வை.

இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு  கொடுக்கும்  முக்கியத்துவம் என்று குறைகிறதோ   அதன் பிறகுதான் மற்ற விளையாட்டுக்கள் முன்னேறும். என்று சொல்லி விட்டு உட்கார்ந்து உட்கார்ந்து  20/20 மேட்சகளையும்   ஐபிஎல் மேட்ச்களையும்  விடாது பார்க்கும் பலரில் நானும் ஒருவன்:.:)
நேற்று  ஐபிஎல்  விளையாட்டு வீரர்கள் ஏலம்  நடந்தது.மற்ற டீம்களைப் பற்றி  அலசுவதற்க்கு முன் .சொந்த மாநில டீமான  சென்னை சூப்பர் கிங் இன்  தேர்வுகளைப் பற்றி ஒரு பார்வை.

 சென்னை சூப்பர் கிங்கின்  சார்பாக ஏலம் கேட்க வந்த பிளேமிங்  ஏல நேரத்தில் அமைதியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது  கடுப்படித்தது. டீமில் தொடக்க ஆட்டக் காரர்களாய்  இருந்த விஜெய் மற்றும் ஹஸ்சியை   ஏலத்தில் என் எடுக்க வில்லை.? ஏற்கனவே  பந்து வீச்சில் சுமாராக இருந்து கொண்டு  மோசமான பந்து வீச்சால்  சில மேட்ச்களை தோற்ற அனுபவம் இருந்தும்  இந்தியாவின் முக்கிய பந்து வீச்சாளர்கள் குறிப்பாக  முகமத் சாமி  4.25, கோடிக்கு போகும் போது ஏன் எடுக்கவில்லை. அதே போல்  உமேஷ் யாதவ்,புவனேஷ் குமார்  வருண் அரூன்  இவர்களையும் சீண்ட வில்லை. அப்படி என்ன அசீஸ்  நெஹ்ரா  ஐபிஎல் இல் சாதித்தார் என்று  அவரை எடுத்தார்கள்..ஆர்.பி. சிங்  ,நேஹ்ராவை விட சிறப்பாகவே முந்தைய  ஐபிஎல்  சீசனில் பந்து  வீசியுள்ளார் . அவர் ஏலமே போகவில்லை காரணாம்?? மிச்சில் ஜான்சன் ,மார்னி  மார்கல்  போன்ற நல்ல வேகப் பந்து வீச்சாளர்களிடம் திணறும் இந்திய அணியின் கேப்டன்  அவர்களை ஏன் சென்னை சூப்பர் கிங்கிற்காக  எடுக்க  விருப்பம் காட்டவில்லை.
1983 இந்தியா  அணியில்  ஆல்  ரவுண்டர்கள் நிறைந்து இருந்தது போல்  இப்பொழுது இந்த  டீமை   உருவாக்க நினைக்கிறார்களா? அன்றை உலக கோப்பை டீமில், 1)ரவி சாஸ்த்திரி,2)ரோகர் பின்னி 3)மதன்லால்  4)மகிந்தர் அமர்நாத்,5)கபில் தேவ  6)கீர்த்தி  ஆசாத்  என்று  ஒரே ஆல் ரவுண்டர் மாயம்.

இன்றைய  சென்னை சூப்பர் கிங்கின் டீமில் இது வரை  உள்ள  வீரர்கள் என்று பார்த்தால்.1)ட்வின்  ஸ்மித் 2)ஜடேஜா  3)பிராவோ  4)ரைனா  இது தவிர அஸ்வினும்  தற்போது  பந்து வீச்சை விட ப்ட்டிங்கில்தான் கவனம் செலுத்துகிறார்..
பந்து வீச்சாளர்கள் என்று பார்த்தால் 1)நெஹ்ரா  2)அஸ்வின்
3)மொஹிட் ஷர்மா  மட்டுமே. இன்றைய  ஏலத்தில் எந்த பந்து வீச்சாளருக்கு குறி வைத்துள்ளனர் .பிளமிங்கிர்க்கே  வெளிச்சம்..
இதுவரைஎடுத்துள்ள அணியை வைத்துப் பார்த்தால் சென்னை சூப்பர் கிங்கின் அணி  1)ட்வின் ஸ்மித் 2)டு  பிளஸ்சி  3)ரைனா  4)மெக்கல்லம்  5)டோனி  6)பிராவோ  7)ஜடேஜா  8)அஸ்வின்  9)மொஹிட்  ஷர்ம  10)நெஹ்ரா  11)???

Monday, February 10, 2014

இந்திய சரித்திரத்தின் கருப்பு வருடங்கள்:1984 மற்றும் 2002


               இந்திய  நாட்டின் சரித்திரத்தில் அழிக்க முடியாத கருப்பு வருடங்கள்  1984 மற்றும் 2002..ஒன்று  நாட்டின் பிரதமரை கொன்றதற்காக  அவர் கட்சியினர்  செய்த படு கொலை. மற்றது   தீவிரவாத முஸ்லிம் களின்  கொடுமைக்கு பதில் சொல்ல  மாநில அரசின்  ஆதரவுடன் இந்து தீவிர வாத இயக்கங்கள்
செய்த படு கொலைகள் .இரண்டுமே இந்திய மக்களை  அந்நிய நாடுகளுக்கு முன்னால்  தலை குனிய வைத்த  நிகழ்வுகள். பலர் 1984 இல் நடந்தது என்ன ?2002 இல் நடந்தது என்ன என்று  வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும் வேளையில்  என் பங்குக்கு  நான் அறிந்த வரை செய்திகளை பகிர்ந்து கொள்ள  விரும்பியதன் விளைவே இந்த  பதிவு.

சஜ்ஜன் குமார்  சீக்கியர்கள் மீது  நடத்தப் பட்ட தாக்குதலில் முக்கிய பங்கு வகித்த   இவர் ஒரு  காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற  உறுப்பினர்.சாட்சிகள் மூலம் இவரது குற்றம் நிருபிக்கப்  பட படவில்லை என்றாலும்   கலவரத்திற்கு  இவரும் ஒரு காரணம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று..






மாய கோட்னணி  பாஜக  உறுப்பினர். 95 பேரை முன் நின்று கொன்ற வழக்கில்  இவர் முக்கிய குற்றவாளியாக  தண்டிக்கப் பட்டு  இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவர். இவர் செய்த கொலைக்காக  மோடியால் இவருக்கு  பெண்கள்  மற்றும்  குழந்தைகள்
துறை  வழங்கப்  பட்டதுதான்
வேதனைக்குறியது.



           முதலில்  1984 இல் நடந்த நிகழ்ச்சியும் அதன் விளைவையும் பார்ப்போம் .அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் படு கொலையை தொடர்ந்து ஏற்பட்ட  கலவரம்தான் 1984 கலவரம். .
இந்திரா காந்தியின் கொலைக்கு  காரணம் என்ன? இந்தியாவில் இருந்து முஸ்லிம்கள்  தங்களுக்கென்று தனி நாடு வேண்டும் என்று போராடிப் பெற்றதை ப் போல  சீக்கியர்களும் தங்களுக்கென்று தனி நாடு வேண்டும் என்ற எண்ணத் தொடங்கினர்.  இதன் விளைவே  காலிஸ்தான் இயக்கம் என்ற  தீவிர வாத இயக்கம் தோன்றக் காரணமாயிற்று..இவர்களை சமாளிப்பதே பெரிய தலைவலியை மத்திய அரசுக்கு இருந்த போதுதான்  தீவிரவாதிகள்  சீக்கியர்களின் கோயிலான தங்ககோயிலுக்குள்  ஒளிந்து கொண்டு  தீவிரவாத நடவடிக்கையில்  ஈடு பட்ட பொது இந்திய ராணுவம் சீக்கிய தளபதி யின் கீழ்  தங்க கோயிலுக்குள்   அவர்களை அழித்தது..  தங்களின் புனிதமான  கோயிலுக்குள் ராணுவத்தை    அனுப்பியதை  கண்டு கோபமுற்ற சீக்கியர்களின் பதிலடி தான்   30 குண்டுகளால்  இந்திரா காந்தியை  துளைத்த அந்த கோர சம்பவத்தை  நிகழ்த்த காரணமாயிற்று..  இந்திராவின் கோரக் கொலையை கேள்விப் பட்டு காங்கிரஸ் தொண்டர்கள் சீக்கியர்களை தாக்கியதன் விளைவு  3000 க்கும் அதிகமான சீக்கியர்களின் படு கொலைக்கு காரணமாயிற்று..

இந்திய தேசிய காங்கிரஸ்  இதற்காக மன்னிப்பும் வருத்தமும்  தெரிவித்திருந்தாலும் சீக்கியர்களின் கோபம்  நீறு பூத்த நெருப்பைத்தான் இன்னும் இருக்கின்றது. அமைதிக்குப் பின் புயல் என்பது போல்  இனி எப்போதாவது இந்த வெடிக்கும் அபாயமும் உள்ளது. காரணம் காலிஸ்தான் விடுதலை இயக்கம்  என்ற ஒன்று அமைக்கப் பட்டு கடந்த சில வருடங்களாய்  அயல் நாட்டு வாழ இந்தியர்களிடம்  பணம் பெற்று வரும் செய்தி  உலவுகிறது. அந்த இயக்கத்தை ஐரோப்பிய யூனியன்  நாடுகளின் கூட்டணி தடை செய்துள்ளது.

2002  குஜராத் படுகொலை.:-
           முந்தைய படு கொலைக்கும்  இதற்கும் உள்ள வித்தியாசம் இது  இந்திய மக்களை    மதவாரியாக  பிரித்தாழும் செய்கையில் அர்  எஸ்  எஸ்   உம  விஸ்வ ஹிந்து  பரிசத்தும்  இறங்கியதுதான் முக்கிய காரணம்.. 1980 இல் இதற்க்கு அடிகோலியது  விஷ்வ ஹிந்து பரிசத் ,.. ராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என்ற கோஷத்தை திடீர் என்று எழுப்பியது  பரிசத்... பிரச்சினை இதில் என்னவென்றால்  முஸ்லிம்களின்  மசூதி இருக்கும்  இடம் இந்துக்களின்   கடவுள்   ராமரின்  கோயில் இருந்த  இடம் என்று ம்   முஸ்லிம் அரசர் அதை இடித்து விட்டு   மசூதி  கட்டினார் என்றும்  பிரச்சாரத்தை ஆரம்பித்தனர்.இதற்க்கு  வித்திட்டவர் அன்றைய பாஜக தலைவர் அதவானி .1990 இல் ரத யாத்திரை ஒன்றை இந்தியாவில் நடத்தி இந்துக்களின்  ஆதரவை திரட்டினார்.. பிரச்சினை சிறிது சிறிதாக பெரிதாகி  கடைசியில் பாஜக தலைவர்கள்   தலைமையில் 1992 இல் மசூதி இடிக்கப் பட்டது. இந்தியாவில்   சுதந்திரத்திற்குப் பிறகு ஏற்பட்ட  மிகப் பெரிய மதக் கலவரம் இதுதான். இதில் கிட்ட தட்ட 2000 பேர் இறந்தனர் இதில் கார் சேவக்  என்ற பாஜக வின்  தொண்டர்கள் 1,35,000 பேர் கலந்து கொண்டனர்..அது வரை ஒன்றாய் இருந்த  இந்து முஸ்லிம் மக்களிடையே  பிரிவினைக்கு இது வித்திட்டது.

             இந்த பிரச்சினையின் தொடர்ச்சியாக 2002 இல் அயே த்தியாவிற் க்கு சென்று விட்டு சபர்மதி எக்ஸ்பிரேஸ்   ரயிலில் திரும்பி கொண்டிருந்த  கார் சேவக்  குகள் மீது முஸ்லிம்  தீவிரவாத அமைப்பு   தாக்குதல் நடத்தி  தீ வைத்தது. இதில் 58 பேர் மரணம்  அடைந்தனர். இதற்க்கு பதிலடி கொடுக்க குஜராத் முழுவதும் இருந்த இந்து அமைப்புகள்  முஸ்லிம்  மக்களை   படு கொலை செய்தது தான்   மிகப் பெரிய   கொடுமை. 2000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள்  இதில் கொல்லப்  பட்டனர். கிட்டத்தட்ட 3 மாதங்கள் இந்த படு கொலை தொடர்ந்து நடந்ததுதான் வேதனை. மாநிலத்தை ஆண்ட  மோடி  தலைமையிலான பாஜக அரசு கண்டும் காணாமல் போனதுதான்   பிரச்சினையின் உச்ச கட்டம்..சமீபத்தில் மோடியின் அமைச்சரவையில் இருந்த  பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சருக்கு  (.மாய  கோட்னணி) இரட்டை ஆயுள் தண்டனை  நீதி மன்றம் விதித்தது. இவர் மேற்பார்வையில் 95 பேரை கொலை செய்ததற்கு சாட்சிகள்  வலுவாய் இருந்ததே இவருக்கு தண்டனை கிடைக்க காரணம்..

             இரண்டு கலவரங்களும்  கண்டிக்கப் பட வேண்டிய படு கொலைகளாய்  இருந்தும் 2002 படு கொலை சற்றே  அதிகம் மக்களால்  விமர்சிக்கப்  படுவதற்கு காரணம். முதலமைச்சர்   இதற்க்கு மறைமுக ஆதரவு தந்ததும் , இது வரை இது பற்றி வருத்தம் தெரிவிக்காததுமே   ஆகும்.

Saturday, February 8, 2014

சிறிய முதலீட்டில் முயல் பண்ணை.

முயல் வளர்ப்பு ,. ,  உண்மையில்   குறைந்த   முதலீட்டில் அனைவரும் எளிதில்  செய்யக் கூடிய தொழில் . வீட்டில்  இருந்து கொண்டு  சில்லறை  செலவுக்கு கணவனை எதிர் பார்க்கும் .பெண்கள்  இதை செய்யலாம்.. வேலை
தேடிக் கொண்டிருக்கும்  இளைஞர்களும் தங்கள் தினச் செலவுக்கு அப்பாவின் கையை எதிர் பார்க்காமல்  இருக்க இதை செய்யலாம்..

முதலீடு செய்த 6 மாதங்களில்  இருந்து   உங்களுக்கு  வருமானம் கிடைக்க ஆரம்பித்து விடும். இதற்க்கு தேவையான  முதலீடு முயல் வாங்க சிறிது பணமும் ,முயல்  வைக்க  கூண்டும் இவற்றை  வைக்க சிறிது இடமும் போதும் .இனி  தேவையான  பணம் எவ்வளவு என்று  பார்க்கலாம்.

ஒரு மாத முயல் குட்டி  ஒன்றின் விலை 200 ரூபாய். உங்கள் தொழில்  தொடங்க முதலில் 25 முயல்களுடன் ஆரம்பித்து பாருங்கள்.  25 முயல்களின் விலை  ரூ.5000. இவற்றை வைக்க கூண்டு செய்ய  ஆகும் செலவு ரூ.6000. இது தவிர இவற்றிற்கு வேண்டிய உணவு வைக்க  மற்றும் தண்ணீர் வைக்க சிறு பாத்திரங்கள் வகையில் ரூ.250. ஆக ஒரு சிறு  முயல் பண்ணை வைக்க ஆகும் செலவு அதிக பட்சம்  ரூ 11,250. .வீட்டில்  பின் புறம் இடம் வசதி இருந்தால் கூண்டுக்கு இவ்வளவு செலவு செய்யத் தேவை இல்லை.

இனி இதில்  எப்படி வருமானம் கிடைக்கிறது என்று பார்ப்போம்.
பெண் முயல் 6 மாதங்களுக்கு பிறகு குட்டி போட தொடங்குகிறது. .குறைந்த  பட்சம் 3 இல் இருந்து  8 குட்டி வரை ஒரு பெண் முயல் குட்டி போடும்..குட்டி போட்ட பெண் முயல் தன குட்டிகளுக்கு  தானே பால் கொடுத்து ஒரு மாதம் வரை வளர்க்கும்..குட்டிகளை வளர்க்க வேண்டிய பிரச்சினை உங்களுக்கு கிடையாது. குட்டி முயல்களை நீங்கள் எளிதில் விற்று  விடலாம்.

 4  பெண் முயல்களுக்கு ஒரு ஆண் முயல் என்ற கணக்கில் முயல் வாங்குங்கள். 25 முயல் என்னும் பொது உங்களிடம்  20 பெண் முயல்களும் 5 ஆண்  முயல்களும் இருக்கும் படி வாங்க  வேண்டி வரும்.. 30 நாட்களுக்கு  ஒரு முறை  பெண் முயலை  ஆன் முயலுடன்  சேர்க்கை விடலாம்
  அனால்  அதை விட 45 தினங்களுக்கு ஒரு முறை விடுத்ல் சிறந்தது.
பிறக்கும்  குட்டிகளின் ஒன்றிரண்டு  இறந்து விட  வாய்ப்புண்டு. எப்படி இருப்பினும் சராசரியாக ஒரு பெண் முயல் மூலம் உங்களுக்கு 4 குட்டிகள் நல்ல  வளர்ச்சியுடன் கிடைக்கும். வாய்ப்பு உண்டு. ஆக 20 பெண் முயல்களின் மூலம் கிடைக்கும்  குட்டிகள் 80. ஆகும். ஒரு குட்டியை ரூ 200 க்கு விற்பதன் மூலம் 80 குட்டிகளை  ரூ. 16.000 வரை விற்கலாம்.

இதில் உங்களுக்கு வளர்ப்பதற்கான  செலவு என்று பார்த்தால் வளர்ந்த முயல் ஒரு நாளைக்கு 250  கிராம் வரை  அதிக பட்சம் உண்ணும் .
மனிதர்கள் உண்ணும்  அனைத்து காரமில்லாத  உணவுகளையும்   முயல்கள் உண்ணும். .நல்ல  ஆரோக்கியமுடன்  வளர்க்க வேண்டும்  என்று என்னும்  நாம் காலையில்  காய்கறி கடைகளில் சொல்லி  வைத்தால்  காலி பிளவர்  தழை  இலவசமாய் வாங்கிக் கொள்ளலாம்.  முட்டை கோஸ்  தழையை விரும்பி சாப்பிடும் .ஆனால்  கழிவுகளில் இருந்து வரும் நாற்றம் அதிகம் இருக்கும் என்பதால் கோஸ்  தழையை முடிந்தவரை தவிர்க்கவும்.. மதியம் 3 மணிக்கு மேல் ஒரு 100 கிராம் கோதுமை தவிடை சிறிது தண்ணீரில்  கலந்து   பாத்திரத்தில் வைத்து  விட்டால் உண்டு விடும். ஒரு கிலோ  கோதுமை தவிடு  ரூ.16 க்கு கடைகளில் கிடைக்கிறது. ஒரு  மாத செலவு ஒரு முயலுக்கு  3 கிலோ , 25  முயல்களுக்கும் சேர்த்து  75 கிலோ ஆகும்.

ஆக மொத்தம் 75 கிலோவிற்கு ரூ.1200  மாத உணவு வகையில் செலவு ஆகும்.
6 மாத  ஆரம்ப கால செலவு  மொத்தம்  ரூ.7200. ஆண்டிற்கு  8 முறை ஒரு பெண் முயல் குட்டி   போடும் . ஆக ஒரு முயல் மூலம் 32 குட்டிகள்..20 (32x 20)இன் மூலம் 640. (ஒரு குட்டி விலை 200). குட்டிகள். 640x 200= 1,29,000.
ஆண்டு வருமானம்  640x 200=1,29,000 .ஆண்டு செலவு  1200x 12=14,400
நிகர லாபம் =1,14,600/12=10,750
இதில் நான் தந்துள்ளது  குறைந்த பட்ச லாபத்தையே . அதிக லாபம்   பெற விரும்புபவர்கள்  ஆண்  முயல்களை  விற்று விட்டு பெண்  முயல்களை   இனவிருத்திக்கு  வைத்துக் கொண்டு அதிகம் சம்பாதிக்கலாம்.. பெரிய முயல்களை  கடைகளில்  கிலோ  ரூ.250 வரை மாமிசத்திற்க்காக எடுத்துக் கொள்கிறார்கள். அதிக பட்சம் 6 மாதத்திற்குள்  2 1/2 கிலோ வரை  ஒரு முயல்  எடை வரும்..
25 முயல்கள் விலை  200 வீதம்  .. ... 5000
கூண்டு செய்ய செலவு .......................6000
                                                                      ------
மொத்த  ஆரம்ப  கால செலவு ........11,000 
                                                                      -------=
மாத செலவு 75 கிலோ  தவிடு ரூ.16 வீதம்....1200x 12=14,400
ஆண்டு வருமானம்
--------------------------
ஒரு முயல் ஆண்டிற் க்கு   32 குட்டிகள் 20 இன் மூலம் =640
ஒரு  குட்டியின்  விலை 200 வீதம் 640 க்கு 200x 640           =1,29,000
மொத்த செலவு  14,400;+அடிப் படை  செலவு 11,250.........=    25,650
                                                                                                                  --------
                                                                                                                   1,03,350
                                                                                                                  ----------
ஒரே ஆண்டில் போட்ட முதலீட்டையும் எடுத்து விட்டு  லாபமும்  சம்பாதிக்க 
சிறந்த முதலீடு  இது என்பதை நிச்சயம் ஒத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்

Saturday, February 1, 2014

சாதாரண குடிமனுக்கு ஏமற்றம் தந்த கேஜ்ரிவால்.

             காங்கிரசிற்க்கும்  பாஜாகாவிற்க்கும் மாற்றாக மூன்றாவது அணியால் தர முடியாத   மாற்றத்தை  ஆம் ஆத் மி கட்சி கொடுக்கும் என்ற நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டது அக் கட்சி. ஊழலை ஒழிப்போம், பெண்களுக்கு பாது காப்பு கொடுப்போம், மக்களுக்கு மின் கட்டணத்தை குறைப்போம், தண்ணீரை இலவசமாய் கொடுப்போம்..என்று  வரிசையாய்  வாக்குகள் கொடுத்து விட்டு இன்று என்ன சாதித்தது.??

           ஷீலா திட்சித்  அதிகம்  மின் கட்டணம் வசூலிக்கிறார் என்றவர்கள் ,இன்று மின் கட்டண குறைப்பால் அரசுக்கு 4 மாதத்தில் இழப்பு 200 கோடிதான் என்று சர்வ சாதாரணமாய் கூறுகிறார்கள். . 200 யூனிட் வரை காங்கிரஸ் ஆட்சியில்   1.20  ஏழை மக்களுக்கு தள்ளுபடி  தந்தது .. 2 ரூபாயில் 1.20 தள்ளுபடி என்றால் அப்போதே  50% குறைத்துதானே காங்கிரஸ் ஆட்சி கொடுத்துள்ளது. உங்கள் ஆட்சியில் 200 இல் இருந்து 400 யூனிட் வரை பெற்றவர்களுக்கு மட்டுமே இப்போழுது பலன் அடைந்துள்ளனர்.

         அடுத்து  தண்ணீர் இலவசம். அதிலும் ஒரு லிமிட் கொடுத்து 700 லிட்டர்  என்று வரையரை செய்து விட்டீர்கள். டெல்லியில் 40% வீடுகளுக்கு இன்னும்  சரியான  பைப்  இணைப்போ  மீட்டரோ இல்லை. மீதி உள்ளவர்களில் மேல்தட்டு வர்க்கம்  மற்றும்  கூட்டுக் குடியிருப்பில் இருப்பவர்கள்  நிச்சயம்  700 லிட். மேல் தான் உபயோகிப்பார்கள். அப்படியானால்  உங்கள் இலவச திட்டத்தால் பலன் பெற்றவர்கள்  எத்தனை  சதவீதம் ???

        அடுத்து மிக முக்கியமான  வாக்குறுதி தாமினி  பாலியல் பலாத்காரத்தை உதாரணம் காட்டி எங்கள் ஆட்சியில்   பெண்களுக்கு சிறப்பு பாது காப்பு அமைப்பு  ஏ ற்பாடு செய்து பாதுகாப்பு கொடுப்போம்  என்று.,ஆனால்  எந்த ஒரு பாது காப்பும்  கொடுத்ததாக   இது வரை எடுக்கவில்லை.??
..ஒரு மாதம் கடந்து விட்டது இன்னும்  எத்தனை மாதம் வேண்டும்..

        அன்று எந்த தவறு நடந்தாலும் முதல் மந்திரி பதில் சொல்ல வேண்டும் என்று  போர்க் கொடி தூக்கி விட்டு, இன்று கொலையும், பாலியல் பலாத்காரமும் நடந்தால் அதைப் பற்றி ஒரு வார்த்தை பேசுவதில்லை.
கங்காரு பஞ்சாயத்தை ஆதரிக்கிறார்,,சட்டத்தை மீறும் அமைச்சரை பாது காக்கிறார், உகண்டா பெண் மீது குற்றம் சுமாத்துகிறார்.எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் ,டானிஷ் பெண்  பாலியல் பலாத்காரத்தை பற்றி மூச்சு விடவில்லை. நேற்று  நடந்த அருணாச்சல பிரதேச மாணவன் கொலைக்கு இன்னும்  எந்த ஒரு  நடவடிக்கையோ அறிக்கையோ  கண்டனமோ  இல்லை..

        நாட்டில் உள்ள  அரசியல்வாதிகளை எந்த ஒரு ஆதாரமும் தராமல்  ஊழல்  அரசியல்வாதிகள்  என்று சொல்லிவிட்டு இன்று   சம்பந்தப் பட்டவர்கள்   மான நஷ்ட  வழக்கு போடுவோம் என்ற உடன்  அமைதியாய் இருப்பதும்   ஒரு முதல் மந்திரிக்கு அழகா?? வெறும் விளம்பர அரசியல்  அதிக காலம் ஓடாது. என்பதை என்று உணரப் போகிறார்.??

      7 எம்.பி தொகுதிகள் அடங்கிய  டெல்லி யூனியன் பிரதேசத்திற்க்கு (70 எம் எல் எ) க்களுக்கு 20 கோடி செலவளித்தது டெல்லிக்கு நன்மை செய்யவா? அல்லது இந்திய அரசியலில் காலூன்றி  பிரதமராகும் ஆசையிலா.? 350 எம் பி தொகுதிக்கு நிற்க ஆசைப் படும் கேஜ்ரிவால் இன்னும் எத்தனை கோடி செலவளிக்க தயாராகிறார்..

    இந்த  நிலை தொடர்ந்தால்   அரசியலில்  காமெடி பண்ணும் ஜோக்கர் என்ற பெயர் வாங்க அதிக நாளாகாது. மக்கள் தான் விரைவில் தீர்வு சொல்ல வேண்டும்.

Thursday, January 30, 2014

மேலை நாட்டு நாகரீகம் நம் கலாச்சாரத்திற்க்கு தேவையா??

தாமினியை வைத்து மீண்டும் பெண்  உரிமை இயக்கங்களும், மீடியாவும் தங்களுக்கு விளம்பரத்தை தேடிக் கொண்டிருக்கின்றன. திருமதி ஆஷா சொன்னது என்ன தாமினி  இரவில் ஆண் நண்பருடன் வெளியில் சென்றது தவறு. பெண்களின் ஆடையலங்காரங்களும் ஒரு காரணம். இதில் என்ன தவறு. . இங்கே பெண்ணின் கற்ப்பை சூரையாடி இருக்கிறார்கள்.. யார் செய்தது..? காரணம் என்ன??பதில்  குடி போதையில், செய்தவர்களில் முக்கியமானவன் வேறு மாநிலத்தைச் சார்ந்தவன். இரவு நேரத்தில் தகுந்த துணையின்றி வெளியில் சென்றிருக்கின்றாள்.

ஆக தவறு ,செய்தவன் மீது மட்டுமல்ல, தவறு நடக்க அந்தப் பெண்ணும் ஒரு வகையில் காரணம் என்பதை ஏன் ஒப்புக் கொள்ள இந்த  அறிவு ஜீவிகள் மறுக்கிறார்கள்.. 2012 ஆம் ஆண்டு  புள்ளி  விவரப்படி  635  பாலியல் குற்றங்கள்  டெல்லியில் நடந்துள்ளது . கிட்டத்தட்ட  2 குற்றங்கள் ஒரு நாளைக்கு  நடந்திருக்கின்ரது . சென்ற ஆண்டு 2013 இல் இது இரட்டிப்பாகி ஒரு நாளைக்கு  4 பாலியல் குற்றங்கள் நடந்திருக்கின்றது  என்று புள்ளி விவரம் சொல்கிறது.  .
சரியான பாதுகாப்பு தராதது காவல்துறையின்  குற்றமாக இருக்கும்  அதே வேளையில்  இவ்வளவு மோசமான ஒரு ஊரில்  ஏன்  தாமினி இரவில்  சினிமாவிற்கு  ஆண் நண்பருடன் சென்றாள். ஏன்  பெண் நண்பர்கள் யாரும் வர மாட்டேன் என்று சொல்லி விட்டார்களா? அல்லது மேலை நாட்டு நாகரீகத்தில் வளர்ந்தவளா?

தவறு நடந்து விட்டது அது இனியும் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று அரசும் பெண்ணை பெற்றவர்களும் சிந்திப்பார்களா? அல்லது  இன்னுமொரு தாமினி  நிகழ்வு நடந்தால்தான் இவர்கள்   விழித்துக் கொள்வார்களா??