Monday, February 10, 2014

இந்திய சரித்திரத்தின் கருப்பு வருடங்கள்:1984 மற்றும் 2002


               இந்திய  நாட்டின் சரித்திரத்தில் அழிக்க முடியாத கருப்பு வருடங்கள்  1984 மற்றும் 2002..ஒன்று  நாட்டின் பிரதமரை கொன்றதற்காக  அவர் கட்சியினர்  செய்த படு கொலை. மற்றது   தீவிரவாத முஸ்லிம் களின்  கொடுமைக்கு பதில் சொல்ல  மாநில அரசின்  ஆதரவுடன் இந்து தீவிர வாத இயக்கங்கள்
செய்த படு கொலைகள் .இரண்டுமே இந்திய மக்களை  அந்நிய நாடுகளுக்கு முன்னால்  தலை குனிய வைத்த  நிகழ்வுகள். பலர் 1984 இல் நடந்தது என்ன ?2002 இல் நடந்தது என்ன என்று  வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும் வேளையில்  என் பங்குக்கு  நான் அறிந்த வரை செய்திகளை பகிர்ந்து கொள்ள  விரும்பியதன் விளைவே இந்த  பதிவு.

சஜ்ஜன் குமார்  சீக்கியர்கள் மீது  நடத்தப் பட்ட தாக்குதலில் முக்கிய பங்கு வகித்த   இவர் ஒரு  காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற  உறுப்பினர்.சாட்சிகள் மூலம் இவரது குற்றம் நிருபிக்கப்  பட படவில்லை என்றாலும்   கலவரத்திற்கு  இவரும் ஒரு காரணம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று..






மாய கோட்னணி  பாஜக  உறுப்பினர். 95 பேரை முன் நின்று கொன்ற வழக்கில்  இவர் முக்கிய குற்றவாளியாக  தண்டிக்கப் பட்டு  இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவர். இவர் செய்த கொலைக்காக  மோடியால் இவருக்கு  பெண்கள்  மற்றும்  குழந்தைகள்
துறை  வழங்கப்  பட்டதுதான்
வேதனைக்குறியது.



           முதலில்  1984 இல் நடந்த நிகழ்ச்சியும் அதன் விளைவையும் பார்ப்போம் .அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் படு கொலையை தொடர்ந்து ஏற்பட்ட  கலவரம்தான் 1984 கலவரம். .
இந்திரா காந்தியின் கொலைக்கு  காரணம் என்ன? இந்தியாவில் இருந்து முஸ்லிம்கள்  தங்களுக்கென்று தனி நாடு வேண்டும் என்று போராடிப் பெற்றதை ப் போல  சீக்கியர்களும் தங்களுக்கென்று தனி நாடு வேண்டும் என்ற எண்ணத் தொடங்கினர்.  இதன் விளைவே  காலிஸ்தான் இயக்கம் என்ற  தீவிர வாத இயக்கம் தோன்றக் காரணமாயிற்று..இவர்களை சமாளிப்பதே பெரிய தலைவலியை மத்திய அரசுக்கு இருந்த போதுதான்  தீவிரவாதிகள்  சீக்கியர்களின் கோயிலான தங்ககோயிலுக்குள்  ஒளிந்து கொண்டு  தீவிரவாத நடவடிக்கையில்  ஈடு பட்ட பொது இந்திய ராணுவம் சீக்கிய தளபதி யின் கீழ்  தங்க கோயிலுக்குள்   அவர்களை அழித்தது..  தங்களின் புனிதமான  கோயிலுக்குள் ராணுவத்தை    அனுப்பியதை  கண்டு கோபமுற்ற சீக்கியர்களின் பதிலடி தான்   30 குண்டுகளால்  இந்திரா காந்தியை  துளைத்த அந்த கோர சம்பவத்தை  நிகழ்த்த காரணமாயிற்று..  இந்திராவின் கோரக் கொலையை கேள்விப் பட்டு காங்கிரஸ் தொண்டர்கள் சீக்கியர்களை தாக்கியதன் விளைவு  3000 க்கும் அதிகமான சீக்கியர்களின் படு கொலைக்கு காரணமாயிற்று..

இந்திய தேசிய காங்கிரஸ்  இதற்காக மன்னிப்பும் வருத்தமும்  தெரிவித்திருந்தாலும் சீக்கியர்களின் கோபம்  நீறு பூத்த நெருப்பைத்தான் இன்னும் இருக்கின்றது. அமைதிக்குப் பின் புயல் என்பது போல்  இனி எப்போதாவது இந்த வெடிக்கும் அபாயமும் உள்ளது. காரணம் காலிஸ்தான் விடுதலை இயக்கம்  என்ற ஒன்று அமைக்கப் பட்டு கடந்த சில வருடங்களாய்  அயல் நாட்டு வாழ இந்தியர்களிடம்  பணம் பெற்று வரும் செய்தி  உலவுகிறது. அந்த இயக்கத்தை ஐரோப்பிய யூனியன்  நாடுகளின் கூட்டணி தடை செய்துள்ளது.

2002  குஜராத் படுகொலை.:-
           முந்தைய படு கொலைக்கும்  இதற்கும் உள்ள வித்தியாசம் இது  இந்திய மக்களை    மதவாரியாக  பிரித்தாழும் செய்கையில் அர்  எஸ்  எஸ்   உம  விஸ்வ ஹிந்து  பரிசத்தும்  இறங்கியதுதான் முக்கிய காரணம்.. 1980 இல் இதற்க்கு அடிகோலியது  விஷ்வ ஹிந்து பரிசத் ,.. ராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என்ற கோஷத்தை திடீர் என்று எழுப்பியது  பரிசத்... பிரச்சினை இதில் என்னவென்றால்  முஸ்லிம்களின்  மசூதி இருக்கும்  இடம் இந்துக்களின்   கடவுள்   ராமரின்  கோயில் இருந்த  இடம் என்று ம்   முஸ்லிம் அரசர் அதை இடித்து விட்டு   மசூதி  கட்டினார் என்றும்  பிரச்சாரத்தை ஆரம்பித்தனர்.இதற்க்கு  வித்திட்டவர் அன்றைய பாஜக தலைவர் அதவானி .1990 இல் ரத யாத்திரை ஒன்றை இந்தியாவில் நடத்தி இந்துக்களின்  ஆதரவை திரட்டினார்.. பிரச்சினை சிறிது சிறிதாக பெரிதாகி  கடைசியில் பாஜக தலைவர்கள்   தலைமையில் 1992 இல் மசூதி இடிக்கப் பட்டது. இந்தியாவில்   சுதந்திரத்திற்குப் பிறகு ஏற்பட்ட  மிகப் பெரிய மதக் கலவரம் இதுதான். இதில் கிட்ட தட்ட 2000 பேர் இறந்தனர் இதில் கார் சேவக்  என்ற பாஜக வின்  தொண்டர்கள் 1,35,000 பேர் கலந்து கொண்டனர்..அது வரை ஒன்றாய் இருந்த  இந்து முஸ்லிம் மக்களிடையே  பிரிவினைக்கு இது வித்திட்டது.

             இந்த பிரச்சினையின் தொடர்ச்சியாக 2002 இல் அயே த்தியாவிற் க்கு சென்று விட்டு சபர்மதி எக்ஸ்பிரேஸ்   ரயிலில் திரும்பி கொண்டிருந்த  கார் சேவக்  குகள் மீது முஸ்லிம்  தீவிரவாத அமைப்பு   தாக்குதல் நடத்தி  தீ வைத்தது. இதில் 58 பேர் மரணம்  அடைந்தனர். இதற்க்கு பதிலடி கொடுக்க குஜராத் முழுவதும் இருந்த இந்து அமைப்புகள்  முஸ்லிம்  மக்களை   படு கொலை செய்தது தான்   மிகப் பெரிய   கொடுமை. 2000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள்  இதில் கொல்லப்  பட்டனர். கிட்டத்தட்ட 3 மாதங்கள் இந்த படு கொலை தொடர்ந்து நடந்ததுதான் வேதனை. மாநிலத்தை ஆண்ட  மோடி  தலைமையிலான பாஜக அரசு கண்டும் காணாமல் போனதுதான்   பிரச்சினையின் உச்ச கட்டம்..சமீபத்தில் மோடியின் அமைச்சரவையில் இருந்த  பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சருக்கு  (.மாய  கோட்னணி) இரட்டை ஆயுள் தண்டனை  நீதி மன்றம் விதித்தது. இவர் மேற்பார்வையில் 95 பேரை கொலை செய்ததற்கு சாட்சிகள்  வலுவாய் இருந்ததே இவருக்கு தண்டனை கிடைக்க காரணம்..

             இரண்டு கலவரங்களும்  கண்டிக்கப் பட வேண்டிய படு கொலைகளாய்  இருந்தும் 2002 படு கொலை சற்றே  அதிகம் மக்களால்  விமர்சிக்கப்  படுவதற்கு காரணம். முதலமைச்சர்   இதற்க்கு மறைமுக ஆதரவு தந்ததும் , இது வரை இது பற்றி வருத்தம் தெரிவிக்காததுமே   ஆகும்.

No comments:

Post a Comment