Saturday, February 1, 2014

சாதாரண குடிமனுக்கு ஏமற்றம் தந்த கேஜ்ரிவால்.

             காங்கிரசிற்க்கும்  பாஜாகாவிற்க்கும் மாற்றாக மூன்றாவது அணியால் தர முடியாத   மாற்றத்தை  ஆம் ஆத் மி கட்சி கொடுக்கும் என்ற நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டது அக் கட்சி. ஊழலை ஒழிப்போம், பெண்களுக்கு பாது காப்பு கொடுப்போம், மக்களுக்கு மின் கட்டணத்தை குறைப்போம், தண்ணீரை இலவசமாய் கொடுப்போம்..என்று  வரிசையாய்  வாக்குகள் கொடுத்து விட்டு இன்று என்ன சாதித்தது.??

           ஷீலா திட்சித்  அதிகம்  மின் கட்டணம் வசூலிக்கிறார் என்றவர்கள் ,இன்று மின் கட்டண குறைப்பால் அரசுக்கு 4 மாதத்தில் இழப்பு 200 கோடிதான் என்று சர்வ சாதாரணமாய் கூறுகிறார்கள். . 200 யூனிட் வரை காங்கிரஸ் ஆட்சியில்   1.20  ஏழை மக்களுக்கு தள்ளுபடி  தந்தது .. 2 ரூபாயில் 1.20 தள்ளுபடி என்றால் அப்போதே  50% குறைத்துதானே காங்கிரஸ் ஆட்சி கொடுத்துள்ளது. உங்கள் ஆட்சியில் 200 இல் இருந்து 400 யூனிட் வரை பெற்றவர்களுக்கு மட்டுமே இப்போழுது பலன் அடைந்துள்ளனர்.

         அடுத்து  தண்ணீர் இலவசம். அதிலும் ஒரு லிமிட் கொடுத்து 700 லிட்டர்  என்று வரையரை செய்து விட்டீர்கள். டெல்லியில் 40% வீடுகளுக்கு இன்னும்  சரியான  பைப்  இணைப்போ  மீட்டரோ இல்லை. மீதி உள்ளவர்களில் மேல்தட்டு வர்க்கம்  மற்றும்  கூட்டுக் குடியிருப்பில் இருப்பவர்கள்  நிச்சயம்  700 லிட். மேல் தான் உபயோகிப்பார்கள். அப்படியானால்  உங்கள் இலவச திட்டத்தால் பலன் பெற்றவர்கள்  எத்தனை  சதவீதம் ???

        அடுத்து மிக முக்கியமான  வாக்குறுதி தாமினி  பாலியல் பலாத்காரத்தை உதாரணம் காட்டி எங்கள் ஆட்சியில்   பெண்களுக்கு சிறப்பு பாது காப்பு அமைப்பு  ஏ ற்பாடு செய்து பாதுகாப்பு கொடுப்போம்  என்று.,ஆனால்  எந்த ஒரு பாது காப்பும்  கொடுத்ததாக   இது வரை எடுக்கவில்லை.??
..ஒரு மாதம் கடந்து விட்டது இன்னும்  எத்தனை மாதம் வேண்டும்..

        அன்று எந்த தவறு நடந்தாலும் முதல் மந்திரி பதில் சொல்ல வேண்டும் என்று  போர்க் கொடி தூக்கி விட்டு, இன்று கொலையும், பாலியல் பலாத்காரமும் நடந்தால் அதைப் பற்றி ஒரு வார்த்தை பேசுவதில்லை.
கங்காரு பஞ்சாயத்தை ஆதரிக்கிறார்,,சட்டத்தை மீறும் அமைச்சரை பாது காக்கிறார், உகண்டா பெண் மீது குற்றம் சுமாத்துகிறார்.எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் ,டானிஷ் பெண்  பாலியல் பலாத்காரத்தை பற்றி மூச்சு விடவில்லை. நேற்று  நடந்த அருணாச்சல பிரதேச மாணவன் கொலைக்கு இன்னும்  எந்த ஒரு  நடவடிக்கையோ அறிக்கையோ  கண்டனமோ  இல்லை..

        நாட்டில் உள்ள  அரசியல்வாதிகளை எந்த ஒரு ஆதாரமும் தராமல்  ஊழல்  அரசியல்வாதிகள்  என்று சொல்லிவிட்டு இன்று   சம்பந்தப் பட்டவர்கள்   மான நஷ்ட  வழக்கு போடுவோம் என்ற உடன்  அமைதியாய் இருப்பதும்   ஒரு முதல் மந்திரிக்கு அழகா?? வெறும் விளம்பர அரசியல்  அதிக காலம் ஓடாது. என்பதை என்று உணரப் போகிறார்.??

      7 எம்.பி தொகுதிகள் அடங்கிய  டெல்லி யூனியன் பிரதேசத்திற்க்கு (70 எம் எல் எ) க்களுக்கு 20 கோடி செலவளித்தது டெல்லிக்கு நன்மை செய்யவா? அல்லது இந்திய அரசியலில் காலூன்றி  பிரதமராகும் ஆசையிலா.? 350 எம் பி தொகுதிக்கு நிற்க ஆசைப் படும் கேஜ்ரிவால் இன்னும் எத்தனை கோடி செலவளிக்க தயாராகிறார்..

    இந்த  நிலை தொடர்ந்தால்   அரசியலில்  காமெடி பண்ணும் ஜோக்கர் என்ற பெயர் வாங்க அதிக நாளாகாது. மக்கள் தான் விரைவில் தீர்வு சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment