தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜமான ஒன்று. ஒரு கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தால் அதன் தாக்கம் ஒரு 6 மாதத்திற்க்கு இருக்கும். இதை அரசியல் விமர்சகர்கள் ஹனிமூன் பீரியட் என்று கூட சொல்வார்கள்.
ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் எந்த சிக்கலிலும் மாட்டாமல் இந்த கால கட்டத்தில் இருப்பார்கள். அப்படியே தவறு செய்தாலும் அநுபவம் இன்மை என்ற காரணத்தால் அந்த தவறுகள் மன்னிக்க படும்.
சமீபத்தில் பாஜக வின் அசுர வெற்றியும் அப்படிதான் அமைந்தது. காங்கிரஸ் எதிர் கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் நிற்கிறது. இந்நிலையில் சமீபத்தில் இது வரை நடந்த 21 சட்டசபை இடை தேர்தல் முடிவுகள் நிச்சயம்
பாஜக வின் வெற்றிக்கு ஒரு அதிர்ச்சி தரும் முடிவு தான். முதலில் வந்தது
சட்டிஸ்கர் மாநில முடிவு. 3 சட்டசபை தொகுதியிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று பாஜகவிற்கு எச்சரிக்கை மணி அடித்தது. இன்று 4 மாநில
முடிவுகள் பீகாரில் 4 இல் மட்டுமே ,கர்நாடகாவில் 1,ம.பி.2 பஞ்சாப்பில் அகாலி 1 ஆக 18 சட்டமன்ற தொகுதிகளில் 8 இல் மட்டுமே வெற்றி.
பிரமாண்டமான வெற்றிக்கு பின் என் இந்த சறுக்கல் ??
1)காங்கிரஸ் அப்படி ஒன்றும் இந்த இடை பட்ட காலத்தில் எதிர்
எதிர்கட்சியாய் இருந்து சாதித்தது விடவில்லை. பின் என் இந்த தோல்வி.??
2)மோடி என்னும் மாயை நீங்கி விட்டதா?
3)அல்லது மக்கள் காங்கிரசிற்கும் பாஜாகாவிற்க்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை என்று கண்டு கொண்டு விட்டார்களா??
4)அல்லது பாஜாகாவின் இமாலய வெற்றிக்கு காங்கிரஸ் மீது இருந்த அதிருப்தி தானே தவிர வேறு ஒன்றும் இல்லையா?
5)அல்லது கசப்பு மருந்து தருகிறேன் என்று காங்கிரசின் கொள்கைகளை அப்படியே பின் பற்றி டீசல் பெட் ரோல் விலை ,ரயில் கட்டண விலை
என்று உயர்த்தியதில் மக்கள் கடுப்படைந்து விட்டனரா??
6)அல்லது கருப்பு பண முதலைகளை கண்டு பிடித்து சிறை வைப்போம் ,
ஸ்விஸ் வங்கி பணத்தை உடன் இந்தியாவிற்கு கொண்டு வருவோம் என்று சொல்லி விட்டு ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் பணமே இல்லை என்று
சொன்னதால் கோபப் பட்டு விட்டனரா??
7)அல்லது இந்திய வீரர்களை கொன்றால் பதிலுக்கு பாக். ராணுவத்திற்கு இரு
மடங்காக பதிலடி கொடுப்போம் என்று சவால் விட்டு விட்டு இன்று வெறும் கண்டன அறிக்கை மட்டும் விட்டு கொண்டு இருப்பதாலா??
8) அல்லது ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்களில் பாக். 70 முறை எல்லை
தாண்டி தாக்குதல் நடத்தியும் பிரதமர் அமைதி காப்பதை கண்ட வெறுப்பினாலா??
9)ஊழல் செய்த காங்கிரஸ்காரர்களை சிறையில் வைப்போம் என்று பாராளுமன்றத்தை நடக்கவிடாமல் ஊழல் புகார்களை அடுக்கியவர்கள், ஆட்சிக்கு வந்து 4 மாதங்கள் ஆகியும் ஒரு காங்கிரஸ்காரனையும் சிறையில் வைக்காமல் ஆட்சி நடத்துவது ஏன் என்பது புரியாததாலா??
புரியாத புதிர். பாஜக விளக்குமா?

No comments:
Post a Comment