முதல் பதிவில் பங்கு வர்த்தகத்தில் சேரும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி சுருக்கமாக கூறி இருந்தேன். இந்த பதிவில் அவற்றை பற்றி விளக்கமாக கூறியுள்ளேன்.
புரேக்கரேஜ் : :பொதுவாக இன்ட்ர டே(Intra day) வியாபரத்திற்கு ஒரு
விதமாகவும் (Delivery)டெலிவரிக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதமாகவும் புரோக்கர் கம்பெனிகள் நம்மிடம் சாஜ் செய்கின்றன.
HDFC,, ICICI போன்ற வங்கிகள் இன்டிரா டே க்கு 50 ரூபாய் வசூலிப்பார்கள்.
டெலிவரிக்கு0.50 % சார்ஜ் செய்வார்கள்.
ஆனால் தனியார் புரோக்கர்கள் குறிப்பிட்ட புரோக்கரேஜ் சொல்வார்கள். ஆனால் நாம் பேரம் பேசினால் குறைத்து வசூலிப்பார்கள்.
உ.ம். தனியார் கம்பெனிகளிடம் பேரம் பேசி இன்டிரா டே க்கு .03% வரை வாங்கலாம்.. டெலிவரிக்கு 0.25% வரை பேரம் பேசலாம். தனியார் கம்பெனி மூலம் செய்வதால் நாம் செய்யும் வியாபாரத்திற்கு குறைந்த லாபம் இருந்தாலும் வெளியே வர வழி வழிஉண்டு..நீங்கள் உங்களுக்கு சேவை செய்ய சிறந்த புரோக்கரையே தேர்ந்தெடுங்கள். இந்தியாவின் முதல் 10 ஷேர் புரோக்கர்களில் ஒருவரை தேர்ந்தெடுங்கள். புதிய கம்பெனிகள் பல குறைந்த புரோக்கர் கமிஷன் வாங்குவார்கள். ஆனால் சேவை சரியாய் இருக்காது சாப்ட்வேர் நன்றாய் இருக்காது. கீழே எனக்கு தெரிந்த பிரபலமான 3 புரோக்கர் கம்பெனிகள் பெயர் கொடுத்துள்ளேன்.
Sharkhan,Angel Broking,Motilal Oswal
.
அடுத்து முக்கியமாக கவனிக்க வேண்டியது சார்ட் நமக்கு பங்குக்கள் வாங்குவதில் எப்படி உதவும் என்பது.
பங்குகளின் விலை உயரும் போது (Chart) சார்ட் ஏறுமுகமாகவும்,இறங்கும் போது (Chart)சார்ட் இறங்கு முகமாகவும் காட்டும்.. இதை கண்டு பிடிப்பதில் சிரமம் இல்லை. மார்கெட்டில் அனைத்து பங்குகளும் ஏறும் மற்றும் இறங்கும் போது (Niffty) நிப்டி மற்றும் (BSE)பி எஸ் இ சார்ட் களும் ஏறவோ அல்லது இறங்குவதகவே காட்டும். ஆகையால் தனிப் பட்ட பங்குகள் ஏறுமுகமாக இருப்பதை பார்ப்பதை தவிர்த்து விட்டு ,முதலில் பங்கு சந்தை அன்றைய தினம் ஏறுமுகமாக உள்ளதா என்று பாருங்கள். (Chart) சார்ட் ஏறுமுகமாக காண்பித்தால் நீங்கள் தேர்வு செய்து வைத்திருக்கும் பங்குகள் ஏறு முகமாக உள்ளதா? அந்த செக்டார்(Sector) அன்று ஏறுமுகமாக உள்ளதா போன்ற அனைத்தையும் கவனியுங்கள். அதன் பின் அந்த பங்கு தன்னுடைய நகரும் சராசரிக்கு (Moving Average)மேல் உயர்ந்துள்ளதா என்பதை கவனியுங்கள். பங்குகள் (Moving average)நகரும் சராசரியை தாண்டி நின்றால் நிச்சயம் சந்தை உயரும் போது அந்த பங்கின் விலையும் . உயரும்.
மேலே கொடுத்துள்ளது பாரத மிகு மின் நிறுவன பங்கின் இன்றைய சார்ட்.
காலையில் சரிந்த பங்கின் விலை பங்கின் சப்போர்ட் விலையான 219.20 வந்ததும் அதற்க்கு கீழ் இறங்கவில்லை என்பதை கவனியுங்கள். அதே போல் மார்கெட் உயர்ந்த போது பங்கின் விலையும் உயர்ந்தது. ஆனால் ரெசிஸ்டன்ஸ் லெவல் 1 வந்த உடன் 224.45 இல் அது இறங்க ஆரம்பித்து விட்டது என்பதையும் கவனியுங்கள்.
பங்கை வாங்கும் போது அன்றை பங்கின் நிலை பற்றி மட்டும் பார்க்காமல் கடந்த 5 நாள் ஏற்றம் இறக்கம் எப்படி உள்ளது,மற்றும் ஓராண்டில் அந்த பாங்கு எவ்வளவு உயர்ந்துள்ளது. என்பதையும் பார்க்க வேண்டும். பங்கு தன்னுடைய
அதிக பட்ச விளையியாடைந்து விட்டு இறங்குமுகமாக இருந்தாலும் நீண்ட கால முதலிட்டுக்கு ஏற்ற பங்கு அல்ல என்பதை அறிக.
.
பங்கையும் தேர்வு செய்து விட்டீர்கள். இப்போழுது அந்த பங்கின் (Resistance Level)ரெசிஸ்டன்ஸ் லெவல் எங்கு உள்ளது, சப்போர்ட் லெவல் (Support level) எங்கு உள்ளது என்பதை கவனியுங்கள். நீங்கள் வாங்கும் விலையில் இருந்து அதிக விலையில் (Resistance level)ரெசிஸ்டன்ஸ் லெவல் இருந்தால் பங்கு நன்கு உயர வாய்ப்பு உள்ளது. ரெசிஸ்டன்ஸ் லெவல் அருகில் இருந்தால் அந்த விலை வந்ததும் பங்கு மேலே ஏற சிரம படலாம் அல்லது அந்த விலையில் இருந்து சரியவும் வாய்ப்பு உண்டு. அதே போல் ( Support level) சப்போர்ட் லெவல் உங்களுக்கு தெரிவிப்பது அந்த விலைக்கு கீழ் பங்கு செல்ல சற்று வாய்ப்பு குறைவு. ஆனால் அதற்க்கு கீழ் சென்று விட்டால் மேலும் சரிய
வாய்ப்புண்டு. இப்பொழுது சார்ட்டை பார்த்த உடன் உங்கள் விலை,அது ஏறக் கூடிய விலை, மற்றும் பாது காப்பான சப்போர்ட் லெவல் உங்களுக்கு தெரியும்.
பங்கை வாங்கிய உடன் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை பங்கின் சப்போர்ட் லெவல் அல்லது உங்கள் முதலீட்டுக்கு ஏற்றவாறு உங்களால் தாங்க கூடிய நஷ்டத்தை கணக்கிட்டு ஸ்டாப் லாஸ்(Stop loss) போட வேண்டும். இப்படி செய்வதால் பங்கு சந்தை திடீர் என்று சரிந்தாலும் உங்களுடைய நஷ்டத்தின் அளவு குறிப்பிட்ட அளவை தாண்டாது. உ.ம். 100 ரூபாய் விலையுள்ள ஒரு பங்கை வாங்குகிறீர்கள். பங்கின் விலை குறைந்தால் உங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை கணக்கிட்டு 98 அலது 97 இல்
ஸ்டாப் லாஸ் போட்டு விட்டால் பங்கின் விலை திடீர் என்று சரிந்தாலும் உங்கள் நஷ்டம் 200 இல் 300 ரூபாய்க்குள்தான். ஸ்டாப் லாஸ் என்ன விலையில் போடலாம் என்பதை கண்டு பிடிக்க தற்போது கம்பெனிகள் அதற்குண்டான் கணக்கையும் போட்டே இப்போழுது கொடுத்து விடுகின்றன. ஆகையால் பங்கு வாங்கிய உடன் ஸ்டாப் லாஸ் போட மறக்காதீர்கள்.

No comments:
Post a Comment