பங்கு சந்தை பற்றிய ஒரு அடிப்படை விளக்கம
--------------------------------------------------------------------------------
கடந்த 7 ஆண்டுகளாக பங்கு சந்தையில் வியாபாரம் செய்து வருகிறேன் . நண்பர் ஒருவரின் மகனுக்கு இதை பற்றி விளக்கம் கொடுக்கும் போது, ஏன் நாமும் இதை பற்றி ஒரு பதிவு போடாக கூடாது என்று தோன்றியதால் இன்று இந்த பதிவை எழுதுகிறேன்.
.திடீரென்று மக்கள் மத்தியில் சமீப காலமாக பங்கு சந்தையில் முதலீடு செய்ய விருப்பம் வர காரணம் என்ன??
மக்கள் பொதுவாக, குறிப்பிட்ட காலத்திற்கு வங்கியில் முதலீட்டு கணக்கு வைப்பது, தங்கம் வாங்கி வைப்பது , நிலத்தில் முதலிலீடு செய்வது அல்லது
பரஸ்பர நிதிகளில் பணம் முதலீடு செய்வது என்றுதான் இருந்தனர் ஆனால் தற்போது அவர்களின் பார்வை பங்கு சந்தையின் பக்கம் திரும்பக் காரணம் !!!!
1) வங்கிகள் தாங்கள் தரும் வட்டி விகிதத்தை சிறிது சிறிதாக குறைத்து கொண்டு வந்து தற்போது ஆண்டுக்கு 7.5% மட்டுமே தருகின்றன . விளைவு
ரூ. 1,00,000 முதலீட்டு செய்தவருக்கு மாத வட்டி ரூ 625 மட்டுமே.
2) தங்கத்தின் விலையோ கிராம் ரூ.3000 தொட்டு விட்டது . இதற்க்கு மேல்
இனி 6000 த்தை தொட எத்தனை ஆண்டுகளாகும் என்று தெரிய வில்லை..
ஆக தங்கத்தின் விலையும் அதன் அதிக பட்ச விலையை தொட்டு விட்டது.
3) நிலத்தை வாங்க வேண்டுமானால் குறைந்த பட்சம் சில லட்சங்கள் முதலீடு செய்ய வேண்டும் . அதை விற்க வேண்டும் என்றால் நல்ல விலைக்கு விற்க மிகவும் சிரமமாய் உள்ளது .
4) பரஸ்பர நிதியில் முதலீடு செய்யலாம் என்றால் நினைத்த நேரத்தில் பணத்தை எடுக்க முடியாது . குறைந்த பட்ச முதலீட்டு காலம் 91 நாட்கள். அது மட்டுமின்றி பரஸ்பர நிதிகளும் தங்கள் பணத்தை பங்கு சந்தையிலே
முதலீடு செய்கின்றனர்.
ஆக நாமே ஏன் நேரடியாக முதலீடு செய்ய கூடாது என்ற எண்ணத்தின்
விளைவே இன்று பங்கு சந்தையின் பக்கம் மக்கள் திரும்பக் காரணம்
பங்கு சந்தை பற்றிய மக்களின் தவறான எண்ணம்
--------------------------------------------------------------------------------------
மிகப் பெரும்பாலான மக்கள் பங்கு சந்தையை சூதாட்டம் என்றே
கருதுகின்றனர். மேலும் சிலர் இதில் பணக்காரர்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியும் என்று கருதுகின்றனர். இன்னும் சிலர் இதில் குறைந்த காலத்தில் அதிகம் சம்பாதித்து விட முடியும் என்று நினைக்கின்றனர்.
மேலும் சிலர் பங்கு சந்தையில் வியாபாரம் செய்ய தொழில் நுட்பம் மற்றும் கணக்கியல் பற்றிய அறிவு இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.
1)இது சூதாட்டம் அல்ல: சூதாட்டத்தில் ஒருவருக்கு லாபமும் எதிர்த்து
விளையாடுபவருக்கு நஷடமும் ஏற்படும். ஆனால் பங்கு சந்தையில் நீங்கள்
செய்யும் முதலீட்டின் விளைவாக நீங்கள் அந்த கம்பெனியின் பங்குதார் ஆகிறீர்கள். அதாவது நீங்கள் செய்யும் முதலீட்டின் அளவிற்கு
அந்த கம்பெனியின் உரிமையாளர் ஆகிறிர்கள். சூதாட்டம் என்பது 100% அதிர்ஷ்டத்தை நம்பி விளையாடுவது.. ஆனால் பங்கு சந்தை என்பது முதல் போட்டு உரிமையாளர் ஆவது
2)பணக்காரர்கள் மட்டுமே முதலீடு செய்யலாம்: பங்கு சந்தையில் வியாபாரம் செய்ய குறைந்த பட்சம் ரூ . 5,000 இருந்தால் கூட போதும்.
3)குறைந்த காலத்தில் அதிகம் சம்பாதிக்கலாம் : ஒரு தவறான எண்ணம். போட்ட முதலுக்கு ஏற்ற வருமானம் மட்டுமே கிடைக்கும். வருமானத்தின் அளவு நீங்கள் எவ்வளவு திறமையாக செயல் படுக்கிறியர்கள் என்பதை பொறுத்து அமையும்.
4)அதிகம் படித்து இருக்க வேண்டும் : பங்கு சந்தை பற்றிய ஓரளவு அறிவு இருந்தால் போதுமானது. முதலீடு செய்யவிருக்கும் கம்பெனியை பற்றி அறிந்து பின் முதலீடு செய்ய வேண்டும் அவ்வளவே.
பங்கு சந்தை என்றால் என்ன, பங்கு என்றால் என்ன என்பதைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

No comments:
Post a Comment