பங்கு சந்தை அடிப்படை - பாகம் -2
--------------------------------------------------------
முதலீட்டாளர்கள் ஏன் பங்குகளில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள் என்று சென்ற பகுதியில் பார்த்தோம். இனி இந்த பங்கு சந்தை எவ்வாறு நடை பெறுகிறது ? இதன் ஏற்ற இறக்கத்திற்கு என்ன காரணம் போன்றவற்றை பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம். அதற்க்கு முன் முதலில் பங்கு என்றால் என்பதை பற்றிய ஒரு சிறு விளக்கம்..
கம்பெனிகள் தங்கள் நிறுவனத்திற்கு வேண்டிய மூலதனத்தை மக்களிடம் பங்குகளை விற்பதன் மூலம் பெறுகின்றன. பங்குகளை வாங்கும் ஒவ்வொரு முதலீட்டாளரும் அந்த கம்பெனியின் பங்குதாரர் ஆகிறார். இதன் மூலம் அந்த கம்பெனியின் லாபத்தில் அவருக்கு பங்கு கிடைக்கிறது. கம்பெனியில் இவருக்கு கிடைக்கும் லாபத்தை டிவிடெண்ட்
என்று கூறுகிறோம் . கம்பெனியின் நடவடிக்கைகளில் கலந்து கொண்டு ஒட்டு போடும் உரிமையும் இவருக்கு கிடைக்கிறது..இவர் வைத்திருக்கும் ஒவ்வொரு பங்கிற்கும் ஒரு ஒட்டு உண்டு. இப்படி பங்குகளை வாங்கியவரை பங்குதாரர் (Share holder) என்று அழைக்கிறோம் .
பங்கு சந்தை பற்றிய ஒரு சிறு விளக்கம்:
1) தேசிய பங்கு சந்தை (National Stock Exchange) NSE
2) பாம்பே பங்கு சந்தை (Bombay Stock Exchange) BSE
இந்தியாவில் நடைபெறும் பங்கு சந்தை வியாபாரங்கள் இந்த இரண்டு நிறுவனங்கள் மூலமாகவே நடை பெறுகிறது.. இதில் பாம்பே
பங்கு சந்தை மிகவும் பாழமை வாய்ந்தது. இது 1875 நிறுவப் பட்டது . இதில் 4600 க்கும் மேற்பட்ட கம்பெனிகள் பதிவு செய்துள்ளன. தேசிய பங்கு சந்தை 1992 ஆம் ஆண்டு நிறுவப் பட்டது . இதில் சுமார் 1400 க்கும் மேற்பட்ட கம்பெனிகள் பதிவு செய்துள்ளன. இதில் குறிப்பிட தக்க விஷயம் மொத்த வியாபாரத்தில் சுமார் 90 % வியாபாரம் 50 முக்கிய கம்பெனிகளின் வியாபாரமாகவே உள்ளது.
தேசிய பங்கு சந்தையின் குறியீ ட்டு எண்களைஐ ( INDEX) நிப்டி
(Niffty)என்றும் , பாம்பே பங்கு சந்தையின் குறியீ ட்டேன்களை சென்செக்ஸ் ( Sensex) என்றும் கூறுகிறேம்.. இந்த பங்கு சந்தையின் குறிட்டு எண்கள் உயர்ந்தால் பங்கு சந்தை ஏறு முகமாய் உள்ளது என்றும். குறியீ ட்டு எண் தாழ்ந்தால் பங்கு சந்தை இறங்கு முகமாய் உள்ளது என்றும் கூறுகிறோம் ..இதற்க்கு காரணம் பதிவு செய்யப் பட்டுள்ள கம்பெனிகளை துறைவாரியாக (Sectorwise) பிரித்து அவற்றின் முதலீ ட்டு
தொகை , நிறுவனத்தின் வியாபாரம் போன்றவற்றை வைத்து ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு அளவு கோல் வைத்து அதன் மூலமாய் குறியீ ட்டு
எண் களை நிர்ணயிக்கின்றார்கள்.. உ.ம். இன்போசிஸ் போன்ற பெரிய நிறுவனத்திற்கு 6% வரை குறியீ ட்டு எண்கள் தருகிறார்கள்.
பங்கு சந்தையின் குறியீட்டு எண்களின் ஏற்றம் இற க்கம் பற்றி பார்த்தோம், இனி பங்கு களின் விலையில் ஏற்றம் இறக்கம் ஏன் ஏற்படுகிறது என்று பார்ப்போம்..
பொருளாதாரம் படித்த அனைவருக்கும் தெரியும் , ஒரு பொருளின் விலையில் ஏற்றமோ அல்லது இறக்கமோ , அந்த பொருளுக்கு சந்தையில் உள்ள தேவை(Demand) மற்றும் அந்த பொருளின் சந்தை வருகை யை (Supply)
பொறுத்தே அமையும். அதே போல் தான் ஒரு கம்பெனியின் பங்கின் விலையும் பங்கு சந்தையில் அந்த குறிப்பிட்ட கம்பெனியின் பங்குகள் எந்த அளவுக்கு விற்பனைக்கு வந்துள்ளது மற்றும் அந்த பங்கிற்கு முதலீட்டாளர்களிடம் எந்த அளவுக்கு தேவை உள்ளது என்பதை பொறுத்தே பங்கின் விலை ஏறவோ அல்லது இறங்கவோ செய்யும்..
பங்குகளின் ஏற்ற இற்க்த்தை பற்றி விரிவாக கூறும் முன் இந்த
பங்குகள் எப்படி வியாபாரத்திற்கு வருகின்றன என்பதை பற்றி ஒரு சிறு விளக்கம்.
1)முதல் நிலை சந்தை (Primary Market)
2) இரண்டாம் நிலை சந்தை (Secondary Market)
முதல் நிலை சந்தை என்பது கம்பெனிகள் தங்கள் நிறுவனத்தை பெரிது படுத்த விரும்பி பங்குகளை முதலீட்டாளர்களுக்கு நேரடியாக விற்கும் முறையாகும். இதை IPO (Initial Public Offering) என்று சொல்வோம்.
இதற்கென்று செபி (Stock Exchange Board of India) சில விதி முறைகளை விதித்துள்ளது
அவற்றை பற்றி ஒரு சிறு விளக்கம்::
இப்படி நேரடியாக மக்களிடம் பங்குகளை விற்க ஒரு கம்பெனி வரும்
முன் அந்த நிறுவனம் விற்பனைக்கு முந்தைய 3 ஆண்டுகளில் தங்கள் சொத்தின் மதிப்பை 3 கோடிக்கு குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். அந்த 3 கோடி ரூபாயிலும் 50% அதாவது 1.50 கோடி ரூபாயை பணமாக வங்கியில் வைத்திருக்க வேண்டும். கம்பெனி குறைந்த பட்சம் 10 கோடிக்கு பங்குகளை விற்க வேண்டும். அந்த முதலீ ட்டில் குறைந்த பட்சம் 20% பங்கு அந்த நிறுவனத்தின் சொந்த மூலத னமாக இருக்க வேண்டும். அதே போல் பங்கு வெளியிடுவதற்கு முந்தைய 5 ஆண்டுகளில் 3 ஆண்டுகள் நல்ல லாபத்தை காட்டி இருக்க வேண்டும்.
ஆகையால் இந்த முதல் நிலை சந்தையில் வாங்கும் முதலிட்டாளர்களுக்கு அவர்கள் செய்யும் மூல த னத்திற்கு பாது காப்பு கிடைக்கிறது.
அடுத்து இரண்டாம் நிலை சந்தை (Secondary Market) :
இங்கு நடத்தப படும் வியாபாரம் முதலீட்டாளர்களுக்கு இடையே மட்டுமே நடை பெறுகிறது.. இவர்களுக்கு இடையே நடை பெரும் வியாபாரம் பங்கு சந்தை தரகர்கள் (Brokers) மூலம் நடை பெறுகிறது..
பங்கு சந்தையில் தற்போது தரகர்கள் வேலையை வங்கிகள்,பரஸ்பர நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் செய்கின்றன. வங்கிகளில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் HDFC Bank, ICICI Bank,
SBI போன்ற வங்கிகள் இதற்கென்று தனி அமைப்பை ஏற்படுத்தி பங்கு வியாபாரம் செய்கின்றன. தனியார் நிறுவனங்கள் என்று எடுத்துக்
கொண்டால் ஷேர்கான் ,மோதிலால் ஓஸ்வால் ,போன்றவை செய்கின்றன.
நேரடியாக நாம் கம்பெனியில் இருந்து வாங்குவது இரண்டாம் நிலை சந்தையில் முடியாது.
பங்கு சந்தையில் ஒரு குறிப்பிட்ட பங்கின் விலை என் ஏறுகிறது அல்லது இறங்குகிறது என்று இனி பார்ப்போம்..
பங்கு சந்தையில் பங்கின் விலை உயர காரணம்:
1)குறிப்பிட்ட கம்பெனியின் காலாண்டு லாப நஷ்ட கணக்கில் எதிர்பாராத உயர்வு.
2)கம்பெனிக்கு புதியதாக ஆர்டர்கள் கிடைத்தால்,
3) கம்பெனி நிர்வாகம் தங்கள் நிறுவனத்தை விரிவு படுத்துவதை பற்றி அறிவிப்பு செய்தால்.,
4) நிதி நிறுவனங்கள் முதலீட்டு செய்தால்,
5)புதியதாக கம்பெனி பொருட்களை கண்டு பிடித்தால் அல்லது
புதிய பொருட்களை தங்களின் விற்பனை பிரிவில் சேர்த்தல் போன்றவற்றால் ஒரு கம்பெனியின் பங்கு விலை உயரும்.
6) பங்கு சந்தையின் குறியீட்டு எண்களின் ஏற்ற இறக்கத்தை பொருத்தும் பங்குகளின் விலை ஏறவோ அல்லது இறங்கவோ செய்யும்.
காலாண்டு லாப உயர்வு:
---------------------------------------. ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் லாப நஷ்ட கணக்கை 3 மாதங்களுக்கு ஒரு முறை வெளியிட வேண்டும். மார்ச்,ஜீன் .
செப்டம்பர் , மற்றும் டிசம்பர் என்று 4 முறை இந்த காலாண்டு லாப நஷ்ட
கணக்கை வெளியிட வேண்டும். இப்படி வெளியிடும் பொது நிறுவனத்தின் லாப சதவிகிதம் ஏறுமுகமாய் இருந்தால் அந்த கம்பெனியின் பங்கின் விலை ஏறும் .
புதிய ஆர்டர்கள் கிடைத்தால்:
-----------------------------------------------
உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு எப்போதும் கிடைக்கும் ஆர்டர் தவிர்த்து புதிய இடங்களில் இருந்து ஆர்டர் கிடைத்தால் ( உம. அசோக் லேலேண்ட்
கம்பெனிக்கு பஸ்களுக்குண்டான ஆர்டர் மும்பை மற்றும் கோல்கட்டா போக்குவரத்து நிர்வாகங்களிடம் இருந்து சமீபத்தில் கிடைத்தது) பங்கின் விலை உயரும்.
கம்பெனி விரிவு படுத்தும் திட்டம்:
-------------------------------------------------------
குறிப்பிட்ட எல்லைக்குள் வியாபாரம் செய்து கொண்டிருந்த கம்பெனி தங்களின் வியாபார எல்லை, மற்றும்
கம்பெனியின் உற்பத்தி திறனை அதிகரிக்க திட்ட மிட்டால் பங்கின் விலை உயரும்.
நிதி நிறுவனங்கள் முதலீட்டு:

குறிப்பிட்ட நிறுவனத்தின் வளர்ச்சி நன்கு இருந்தால் நிதி நிறுவனங்கள் தங்களிடம் உள்ள அதிகப் படியான தொகையை அந்த நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்யும் .
புதிய பொருட்களை கண்டு பிடித்தல் மற்றும் உருவாக்குவதால்.:
-----------------------------------------------------------------------------------------------------------
ஏற்கனவே உற்பத்தி செய்து கொண்டிருந்த பொருட்களுடன் மேலும் புதியதாக ஒன்றை வெளிக் கொண்டுவந்தால் (உ.ம்..டாட்டா மோட்டார்
நிறுவனம் அடுத்த ஆண்டு புதிய மாடல் கார் ஒன்றை அறிமுக படுத்த இருக்கின்றது, அதே போல் டெங்கு ஜிரத்திற்கு சான் பார்மா என்ற நிறுவனம் மருந்தை கண்டு பிடித்துள்ளது. விரைவில் அது வேளிவரப் போகிறது)
பங்கு சந்தை குறியீ ட்டு எண்கள் உயர்வு:
-----------------------------------------------------------------
பங்கு சந்தையின் குறியீட்டு எண்களின் ஏற்ற இறக்கத்தை பொறுத்து
பொதுவாக பங்கு சந்தையின் 75% வீத கம்பெனியின் பங்குகள் ஏற்றமோ அல்லது இறக்கமோ அடையும். . இதை சந்தையின் போக்கு (Market Trend) என்று கூ றுகிறோம்
இனி பங்கு சந்தையில் பங்கின் விலை என் இறங்குகிறது அல்லது முதலியிட்டாளர்கள் ஏன் பங்குகளை விற்கிறார்கள் என்பதை சுருக்கமாக பார்ப்போம்.:
1)கம்பெனியின் காலாண்டு லாப நாஷ்ட கணக்கில் லாபம் முந்தைய காலாண்டு அறிக்கையை விட மிக குறைவாகவோ அல்லது நஷ்டத்தை காட்டினால் பங்கின் விலை சரியும்.
2)கம்பெனி வங்கிகளிடமிருந்தோ அல்லது வேறு நிறுவனங்களிடம் இருந்தோ அதிகப் படியாக கடன் வாங்கியிருந்தால் விலை குறையும்.
3)நிதி நிறுவனங்கள் திடீர் என்று தாங்கள் வைத்திருக்கும் கம்பெனியின் பங்குகளை சந்தையில் மொத்தமாக விற்றால் பங்கின் விலை குறையும்.
4) கம்பெனியின் நிர்வாகத்தின் செயல்பாடுகளின் மீது முதலிட்டாளர்களுக்கு நம்பிக்கையின்மை ஏற்பட்டாலும் பங்கின் விலை குறையும்.
5)பங்கு சந்தையின் குறியீட்டு எண்கள் சரிவடைந்தாலோ பங்கின் விலை
சரிவடையும்.
இனி அடுத்த வாரம் பங்கு சந்தையில் பங்குகள் எப்படி துறைவாரியாக மற்றும் முதலீட்டு அளவின் வாரியாக பிரிக்கப் பட்டுள்ளதை பற்றி பார்ப்போம். மேலும் தின வணிகம் (Intraday) மற்றும் (Investment) நீண்டகால முதலீடு கள் பற்றியும் பார்க்கலாம்.

No comments:
Post a Comment