Thursday, October 27, 2016

                                     பங்கு  சந்தை  பற்றிய விளக்கம்-பாகம் -6
                                   -------------------------------------------------------------------

 தொழில் முறை  ஆய்வு.: சென்ற பதிவில்  அடிப் படை ஆய்வு( Fundamental analysia)  பற்றி  பார்த்தோம் . இந்த பதிவில் சற்றே  விரிவாக   தொழில் முறை ஆய்வு Technical Analysis )பற்றி  பார்ப்போம்.

Technical analysis::
-------------------------
1) Pivot Point. calculation, 2)Volume of business 3)Support Price 4)Resistance Level 5) Supply
and Demand 6) 52 week high and 52 week low. 7)Adavances and Declines.
கீழே  நான் சொல்ல இருக்கும் அனைத்தையும்   உங்களின் பங்கு தரகர்
தன்னுடைய  software இல் தந்திருப்பார். ஆனாலும்  அதை  உபயோகப் படுத்தி எப்படி  வியாபாரம் செய்ய வேண்டும் என்பதற்காகவே இங்கு இதை பற்றி கூறுகிறேன் . நீங்கள்  கணக்கு ஏதும்   போட வேண்டியாது இல்லை.

Pivot Point:  இதை தமிழில் மத்திய  புள்ளி என்று கூறலாம். தின வியாபாரம்
செய்ப்பவர்கள் இதை பற்றி கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
Pivot point = Previous day (H+L+C)/3  Pivot point  கண்டு பிடிக்க முந்திய நாளின்  குறிப்பிட்ட பங்கின் அதிக விலை, குறைந்த விலை மற்றும் மார்க்கெட் முடிந்த  பின்  உள்ள விலை  இவை  மூன்றையும்  கூட்டி ,  3 ஆள் வகுத்தால் கிடைப்பது  pivit point  விலை ஆகும். . ஒரு குறிப்பிட்ட பங்கின் விலை  pivot point க்கு மேலே  ஆரம்பித்தாலோ அல்லது பங்கின் விலை  pivot point  விலையை
தாண்ட ஆரம்பித்தாலோ  அந்த பங்கில் முதலீட்டு செய்யலாம். ஆனால் அந்த பங்கின் விலை  pivot point  விலைக்கு கீழே  ஆரம்பித்து  இறங்குமுகத்தை காட்டினால்  நிச்சயம் அந்த பங்கில் முதலீடு  செய்ய கூடாது.

Volume of business: ஒவ்வொரு பங்கிற்கும் எந்த அளவு சந்தையில் தேவை உள்ளது  என்பதை  (Market Depth) முதலில்  அறிந்து கொள்ள வேண்டும்.  ஒரு பங்கை எத்தனை பேர் குறிப்பிட்ட விலையில் வாங்குகிறார்கள். எத்தனை பேர் விற்கிறார்கள். குறிப்பிட்ட நேரத்தில்  மொத்தம்  வாங்கியவர்கள் எத்தனை பேர், விற்பவர்கள் எத்தனை பேர்  என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.  ஒரு பங்கை வாங்குபவர்களின் அளவு அதிகம் இருந்தால் அந்த பங்கை வாங்க  முடிவு செய்யலாம்.  ஒரு பங்கை  விற்பவர்கள் அதிகம் இருந்தால் நம்மிடம் அந்த பங்கு  இருந்தால் விற்று விட்டு வெளியே வரலாம்.

Support Price:: support price:   2 X Pivot Point - H. Support Price 2= Pivot -(R1- S1)
மீண்டும் ஒரு முறை கூறி விடுகிறேன்  இந்த கணக்கு எதுவும் நீங்கள் போட்டு பார்க்க வேண்டியதில்லை. கம்பெனி தரும் வரை படத்தில்  (Chart ) இவற்றை தெளிவாக கொடுத்து விடுவார்கள்.கீழே   உள்ள   வரை படத்தில் ICICI வங்கியின்  இன்றைய வரைபடத்தை கொடுத்துள்ளேன். இதில்  ரூ. 275.45  ஐ
support price  ஆக எனது பங்கு தரகர் கொடுத்துள்ளார். அதே போல் இரண்டு முறை ரூ. 275.45 வந்த  பங்கின் விலை  கீழே இறங்கினாலும்  குறிப்பிட்ட விலைக்கு  கீழே  செல்லாமல் மேலே  சென்றுள்ளதை பார்க்கிறீர்கள்.. அதே போல்  pivot point  279.95.கொடுத்துள்ளார்கள் . பங்கின் ஆரம்ப விலை 278.40 க்கிற்கு  கொடுத்துள்ளனர். ஆரம்பத்தில் சற்றே  உயர்ந்தாலும் பின் அந்த பங்கு  இறங்கு முகமாகவே இருந்து  279.55  வரை மட்டுமே சென்றுள்ளது.



Resistance Level:  Support Level  போன்றே  ஒரு பங்கின் விலை  ஒரு குறிப்பிட்ட விலை வரைதான்   ஏறும்  அதற்க்கு மேல்   செல்ல முயலும்  பொது  அதற்க்கு  தடை   அளவு (Resistance level) ஒன்று உள்ளது என்பதை இந்த   இந்த கணக்கின்  மூலம் அறிந்து கொள்ளலாம்.
Resistance level 1: 2X Pivot -L
Resistance Level 2: Pivot + (R1-S1)
ஒவ்வொரு பங்கிற்கும் அதன்  Support மற்றும்   Resistance Level  என்று  இரண்டு அளவீடுகள் கொடுத்துள்ளனர். முதல் நிலை  எதிர்பாராத காரணங்களால் தாண்டினால் இரண்டாவது நிலை வரை   பங்கின் விலை செல்லும்.

Supply and Demand:  பங்கை வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தால் பங்கின் விலை உயரும். பங்கை விற்பவர்கள் அதிகம் இருந்தால்  பங்கின் விலை குறையும்.

52 week High and 52 week Low:: பொது வாக பங்குகளின் விலை ஒரு  குறிப்பிட்ட விலை வரை தான் உயரும் அல்லது குறையும். காரணம் பங்கின் விலை ஓராண்டில்  அதிக பட்ச விலையை தொடும் பொது அந்த ஆண்டில்  குறைந்த விலைக்கு வாங்கியவர்கள் இனி இந்த பங்கின் விலை ஏறாது என்று விற்க தொடங்குவார்கள் . அதே போல் எந்த ஒரு பங்கும் 0 விலைக்கு இறங்காது. அதன் அடிப்படை விலை (Base price) அடைந்ததும் மீண்டும் மேலே உயரும். ஆகையால் உங்களிடம் குறிப்பிட்ட பங்குகள் இருந்தால்  அதன் விலை 52 வார அதிக பட்ச விலையை தொட்டிருந்தால் அதை விற்றுவிடுவது  நலம். அதே போல் அதிக பட்ச விலையை தொட்ட பங்கை வாங்குவது சரியான வியாபாரம் அல்ல.
அதே போல் அடிமட்ட விலையை ஒரு பங்கு தொட்டு விட்டால் அதன் அடிமட்ட (Base price) விலையில் வாங்குவது நலம். ஆனால் அதற்க்கு முன் வேறு ஏதேனும் காரணத்தால் விலை சரிந்துள்ளதா  என்பதையும் கவனிக்க வேண்டும்.
Advances and Decline: தின வியாபாரம் செய்பவர்கள்  ஒரு குறிப்பிட்ட நாளில் எத்தனை கம்பெனியின் விலைகள் ஏறுகிறது எத்தனை  கம்பெனியின் விலைகள் சரிந்துள்ளது  என்பதையும் கவனிக்க வேண்டும்.. அதிக கம்பெனியின் விலை ஏறு  முகமாய்  இருப்பின்  அன்று  பங்கு சந்தை  குறி
யீ ட்டு  எண்கள் உயரும், அதே போல் அதிக கம்பெனிகளின் பங்கு விலை சரிந்தால்  பங்கு சந்தையின் குறியீட்டு  எண்களும் சரியும். எனவே பங்கு சந்தையின் குறியீ ட்டு  எண்களின் ஏற்ற இற க்கத்தை பொறுத்தே  பங்குகளின் விலை யும் ஏறும்  மற்றும் இறங்கும்  என்பதை மனதில் கொள்ளவும்.

அடுத்த பகுதியில் இருந்து வரை படம்( Chart) துணை கொண்டு ஒரு பங்கை வாங்குவது, விற்பது போன்றவற்றை பார்க்கலாம்,























Friday, October 21, 2016

                               பங்கு  சந்தை பற்றிய விளக்கம்- பாகம் -5
                               ------------------------------------------------------------------

                  பங்கு சந்தையின் அடிப்படையை இது வரை  பார்த்திர்கள். இனி  பங்கு வர்த்தகம் செய்யும் முன்  கவனிக்க வேண்டியன பற்றி பார்ப்போம்.
முதலில்  பங்கு சந்தை   ஏறுமுகமாக உள்ளதா அல்லது இறங்கு  முகமாக உள்ளதா ( Market Trend)  கவனிக்க வேண்டும். ஏறு  முகமாக இருப்பின் முதலீடு  செய்வதை பற்றி  முடிவு செய்யலாம்.  இறங்கு முகமாக இருப்பின்
அன்றைய தினம் முதலீடு  செய்யாமல் இருப்பது நலம். ஏனென்றால் பங்கு சந்தையின்   ஏற்ற , இறக்கத்திற்கு ஏற்றவாறே  75% சதவீத பங்குகள்  ஏறவோ அல்லது இறங்கவோ  செய்யும்.
       
                 அடுத்து ஏறுமுகமாக பங்கு  சந்தை இருந்தால் எந்த துறை (Sector) மிக
சிறப்பாக  ஏறுமுகமாக  இருக்கின்றது  என்று பார்க்கவும்.. அதன் பின்  அந்த
துறையில் எந்த கம்பெனியின்  பங்குகளை வாங்கலாம் என்பதை பார்க்கவும்.  உ.ம்.  கணினி துறை  (  I T Sector)   ஏறுமுகமாக இருக்கின்றது என்றால் அந்த துறை யின் முக்கிய நிறுவனங்களான  Infosys, TCS, HCL, ,Mind Tree  போன்ற நிறுவனங்களில்  எந்த நிறுவனத்தின்   நிதி நிலை மிகவும் நன்றாய் உள்ளது, என்று பார்க்கவும். மேலே உதாரணத்திற்கு கொடுத்துள்ள நிறுவனங்கள் அனைத்தின் நிதி நிலையும் நன்றாக இருந்தாலும் இதில் எது
மிகவும் சிறப்பாக உள்ளது என்று கவனிக்க வேண்டும்.  இதை (Fundamental Analysis ) அடிப் படை ஆய்வு  என்று கூறுகிறோம்
அடிப்படை ஆய்வு:
-----------------------------
1)கடந்த 4 காலாண்டு லாப நஷ்ட கணக்கு அறிக்கையில்  எந்த கம்பெனியின் லாபம் அதற்க்கு முந்தைய காலாண்டு  லாபத்தை வீட   அதிகம் உள்ளது.
2)புதிய ஆர்டர்கள்  எந்த கம்பெனிக்கு அதிகம் கிடைத்துள்ளது.?
3) கம்பெனியின்  EPS (Earning per share)  சிறப்பாக  உள்ளது.?
4) எந்த கம்பெனியின்  P/E Raio ( Price earning raio).சிறப்பாக உள்ளது.?
5) எந்த கம்பெனியின் (EBITDA)  ((Earning before Intrest ,Income Tax,Depereciation and amortization fund) சிறப்பாக உள்ளது.?
6) கம்பெனியின் பங்கு மீது எவ்வளவு கடன்  உள்ளது  . இதை  Debt  to Equity  Ratio   என்கிறோம்
7) Debt to Equity Ratio  எவ்வாறு  உள்ளது
8)கம்பெனி தொடர்ச்சியாக டிவிடெண்ட் கொடுத்து வருகிறதா ?
இவற்றை  சரி பார்த்து விட்டால் எந்த கம்பெனியில் முதலீடு   செய்தால் உங்கள் முதலீட்டுக்கு   உத்திரவாதம் என்பது தெரிந்து விடும்.

நான் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து   கேள்விகளுக்கும் உங்கள் பங்கு தரகர்  தன்னுடைய   Softwqare  இல் கொடுத்து இருப்பார். ஆகையால் இது பற்றி நீங்கள்  கவலை கொள்ள வேண்டாம். இருந்தாலும்  1) EPS  2) P/E Ratio  3)EBITDA
இந்த மூன்றைப்   பற்றியும் ஒரு சிறு விளக்கம்  தந்து விடுகிறேன்.
                               Profit of the compeny
 EPS=                    ----------------------------            
                             Total No. of outstanding share
இந்த கணக்கின் படி பார்க்கும் போது ஒரு பங்குக்கு கிடைக்கும் ஆண்டு வருமானம் தெரிய வரும். பங்கிற்கு கிடைக்கும் ஆண்டு வருமானம் அதிகம் இருந்தால்  கம்பெனியின் நிதி நிலை நன்கு உள்ளது
                    Current  market  price of the  share
P/E Ratio     -------------------------------------------
                      Earning  per share
  உ.ம்.      தற்போதைய  பங்கின் விலை  200  ஆக  இருந்தால்  பங்கிற்கு லாபம் 10 ஆக இருந்தால்    200/10 =P/E Ratio 20

அடுத்து  EBITDA  : ( Earning before Intrest, Tax, Depreciation  and provison  for Amortization Fund) வட்டி தொகை , வருமான வரி , தேய்மானம், மற்றும் கம்பெனியின் பிற்கால   தேவைக்காக எடுத்து வைக்கும் நிதி இவற்றை  லாபத்தில் இருந்து கழிக்குமுன்  காட்டும் லாபத்தையே  EBITDA  .லாபத்தின்  அளவு அதிகம் இருப்பின்   கம்பெனியின் நிதி நிலை நன்கு உள்ளது என்று அர்த்தம்.

Debt to Equity  =           Total Debt
                                      ---------------------------   இதன் முலம்  ஒரு கம்பெனியின்
                                       Total number of share
பங்கின்  மீது   உள்ள கடன் எவ்வளவு என்று தெரியும்.  கடன்  சதவீதம் அதிகம் இருந்தால் அந்த  கம்பெனியின் பங்குகளை வாங்குவதை தவிர்ப்பது நன்று.

        இப்போழுது ஒரளவு  கம்பெனி யின் நிதி நிலை பற்றி நீங்கள் அறிந்திரு
பீர்கள்   அடுத்த பதிவில்  தொழில்  சம்பந்தப் பட்ட  விஷயங்களை வைத்து  ஆய்வு   ( Technical Analysis ) செய்வது  எப்படி  என்பதை பற்றி பார்ப்போம்..
-

Thursday, October 20, 2016

                                     பங்கு சந்தை  பற்றிய விளக்கம் -பாகம்-4
                                   ----------------------------------------------------------------------

                      பங்கு சந்தை என்றால் என்ன என்பதை பற்றி பார்த்தோம் , இனி பங்கு சந்தையில்   வியாபாரம் செய்யும்  முன் செய்ய  வேண்டியன பற்றியும் எப்படி  பங்கு சந்தை தரகர்களை தேர்வு செய்வது   மற்றும்  பங்கு  சந்தை வியாபாரம்  ஆரம்பிக்கும் முன் அறிந்து கொள்ள வேண்டியவை பற்றியும்
இந்த  பதிவில் பார்ப்போம்.
               
                       எப்படி ஒரு வங்கியில்  பணம் போடவும் எடுக்கவும் ஒரு கணக்கை ஆரம்பிக்கிறோமோ அதே போல் பங்கு சந்தையில்   வியாபாரம் செய்யவும் ஒரு கணக்கை தொடங்க வேண்டும். இந்த கணக்கை டிமேட்  (Demat Account)
என்று அழைக்கிறோம்.  பங்கு சந்தையில் நாம் நேரடியாக வாங்குபவர்களையோ அல்லது விற்பவர்களையோ   சந்தித்து வியாபாரம் செய்ய முடியாது.  இதற்கென்று உள்ள பங்கு தரகர்கள் மூலமாகவே  நாம்
வியாபாரம் செய்ய முடியும். ஆகையால்  மேலே சொன்ன demat Account  ஐ
நல்லதொரு  பங்கு தரகர்கள் மூலம்  தொடங்க வேண்டும்.

                    பங்கு தரகர்களை தேர்வு செய்யும் முன் அந்த பங்கு தரகர்களை பற்றி  ஏற்கனவே வியாபாரம்  செய்தவர்கள் முலம் நன்கு விசாரித்து அறிந்து கொள்ள வேண்டும். பங்கு வியாபாரத்தில்  தரகர்களாக  HDFC  Bank,ICICI Bank  போன்ற வங்கிகளின்  துணை  நிறுவனங்கள்  பங்கு தரகர்களாக செயல் பட்டாலும்   அவர்கள்  வசூலிக்கும்  தரகு கமிஷன் (Brokerage Charges) மிகவும்
அதிக மாக உள்ளது.  ஆகையால்   தனியார்  பங்கு தரகு நிறுவனங்கள்
முலம் வியாபாரம் செய்வது மிக  நல்ல லாபத்தை நமக்கு தரும் .

                     தரகு கமிஷன் ( Brokerage Charge)  எவ்வளவு, எப்படி வசூலிக்கிறார்கள் என்பதை பற்றிய ஒரு சிறு விளக்கம்.  (தின வியாபாரத்திற்கு)

                    HDFC  Bank :  இதன்  பங்கு  வர்த்தக நிறுவனமான  HDFC Securities  நம்மிடம்  வசூலிக்கும்  தரகை (Brokerage)வைத்து முதலில் ஓர்  உதாரணம் பார்ப்போம்.  HDFC Securities  ரூ .100 பெறுமானமுள்ள ஒரு பங்கை  வாங்கும் போது  .50 பைசா  Brokerage  ஆக வசூலிக்கிறார்கள். அதே போல் அந்த பங்கை விற்கும் பொது  விற்கும் விலையில்  ரூ. 100 க்கு .50 பைசா  என்று கணக்கிட்டு
 வசூலிக்கிறார்கள்
.
அதாவது ரூ  100  பெறுமானமுள்ள ஒரு பங்கை வாங்கி விற்றால்  வாங்க .50 பைசா மற்றும் விற்க .50 பைசா  வசூலிக்கிறார்கள். விளைவு ஒரு பங்கை நீங்கள் வாங்கி விற்க ரூ. 1 / Brokerage  தர  வேண்டியுள்ளது.  நீங்கள் ரூ. 100 பெறுமானமுள்ள  ஒரு பங்கை வாங்கி விற்க வேண்டுமானால்  ரூ. 101 உங்களின்  அடக்க விலையாகிறது. ஆகவே நீங்கள் ரூ.101க்கும் மேல் விற்றால் தான் உங்களுக்கு லாபம் கிடைக்க ஆரம்பிக்கும்

                தனியார் பங்கு தரகர்களிடம் வியாபாரம் செய்ய ஆரம்பிக்கும் முன் நீங்கள்  உங்களால்  இவ்வளவுதான் தரகு (Brokerage) தர முடியும் என்று பேரம் பேசலாம். உங்களின் முதலீட்டு   தொகை அதிகமாய் இருந்தால்  உ.ம்.  ரூ.50,000  க்கு மேல் இருந்தால்  ரூ.100 க்கு .10  பைசா வரை நீங்கள் பேரம் பேசலாம். ஆக  ரூ. 100 பெறுமானமுள்ள  ஒரு பங்கை வாங்கி விற்றால்  வாங்கும் பொது 10 பைசாவும்  விற்கும் பொது 10 பைசாவும்  தர முடியும் என்று  நீங்கள் தரகாக   பேரம் பேசலாம்  ஆக நீங்கள் வாங்கி  விற்க
தர வேண்டியா  தொகை 20 பைசாவாகும். உங்களின்  அடக்க விலை ரூ.100.20
(நூறு  ரூபாய், இருபது பைசாவாகும்)  ஆக உங்களுக்கு மிச்சம் 80 பைசாவாகும். 100 பங்குகளை  ரூ,. 100 க்கு வாங்கி  ரூ. 101 க்கு  விற்பதன் முலம் உங்களுக்கு லாபம்  ரூ. 80 கிடைக்கிறது.

                    பங்கு தரகரை தேர்ந்து  எடுத்து விட்ட பின் நீங்கள் அவரிடம் கீழ் கண்டா ஆவணங்களை தர வேண்டும். !
 !),  Ration Card,  or Voter I.D, 2) Pan Card. 3) Cheque Leaf 2 Nos.4) Passport size photos 2 Nos.)
5) 3 Month Bank statement
ஆவணங்களை  கொடுத்து ஒரு வாரத்தில் இருந்து 15 தினங்களுக்குள் உங்கள்  பெயர் பதிவு செய்ய பட்டுவிடும் இதன் பிறகு நீங்கள் முதலீடு  செய்ய  விரும்பும் தொகையை தராகரின் கணக்கிற்கு   மாற்றிய பின் வியாபாரம் செய்ய தொடங்கலாம்.

                      இனி நாம் பங்கு சந்தை வியாபாரம்  பற்றிய நுணுக்கங்களை
பற்றி பார்ப்போம்.
                      பங்கு வியாபாரம்  செய்வதில்  இரண்டு வகை உள்ளது .1) தின் வியாபாரம்,( INTRA DAY)  மற்றும் முதலீடு( INVESTMENT)   செய்து வியாபாரம் செய்வது.
                      தின வியாபாரம்   செய்ய  நல்ல அனுபவம்  இருக்க வேண்டும். ஏனென்றால்  பங்கு சந்தையில் பங்குகளின் விலை  ஒரே  நாளில் ஏறவும் இறங்கவும் செய்யும். பங்கு சந்தையை  பற்றி  நன்கு  அறிந்தவர்கள் மட்டுமே இதில் ஈடு  பட முடியும்.  என்னிடம் கேட்டால்  புதிய முதலீட்டாளர்கள்  தின வியாபாரம் செய்யாமல் இருப்பது  நல்லது.
     
                       முதலீடு  செய்து வியாபாரம் செய்வதில் குறுகிய கால முதலீடு
(Short Term Investment.)ஒரு வாரம், ஒரு மாதம் அல்லது மூன்று   மாதங்கள்  வரை வாங்கிய பங்கை  வைத்திருந்து  எதிர்பார்த்த  லாபம் வந்ததும்  விற்பது.

நாடு நிலை கால முதலீடு  ( Medium Term)    :  3 மாதங்களுக்கு மேல்  ஆனால் 1 ஆண்டுக்கு  முன்பாக   பங்குகளை வாங்கி விற்பாதை  நாடு நிலை  முதலீடு
என்கிறோம்.

ஓராண்டுக்கும் மேல்,   குறிப்பிட்ட   செலவினத்திற்காக முதலீடு   செயது
 பின்   விற்பதை    நீண்ட கால முதலீடு  (Long Term Investment) என்று கூறுகிறோம்

தின  வியாபாரத்தை புதிய முதலீட்டாளர்கள்  செய்யாமல் தவிர்ப்பது நலம் என்று நான் கூறினாலும்   அனைத்து  புதிய முதலீட்டாளர்களும்   முதலில்
செய்ய விரும்புவது தின்  முதலீடு தான். ஆகையால் தின முதலீடு  பற்றி விளக்கி  கூறி  விடுகிறேன்.

                தின  வியாபாரத்தில் ஈடு  பட  அனைவரும் ஆர்வம்  காட்ட காரணம்
ஒரே  நாளில் முடிந்த வரை லாபத்தை   அடைந்து விட  வேண்டும் என்ற எண்ணமும், கம்பெனி தரும்  Margin money  ஐ உபயோகப் படுத்திக்க கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் ஆகும். பங்கு  சந்தை வியாபார நேரம்  காலை
9.15 இல் இருந்து மதியம் 3.30 வரை   மட்டுமே.

  Margin money  என்றால் என்ன என்பதை முதலில் சொல்கிறேன்.  ஒரு முதலீட்டாளர் செய்யும்  முதலீட்டை போன்று  10 மடங்கு பணத்தை கம்பெனி  கடனாக தரும். ஆனால் இந்த பணத்தை நீங்கள்  வியாபார நேரம் முடிவதற்கு 15 நிமிடங்களுக்கு  முன்பாக, அதாவது 3.15  க்கு  நீங்கள்
திருப்பி செலுத்தி விட வேண்டும். அதாவது கடனுக்கு வாங்கிய பங்குகளை  3.15 க்கு   விற்று விட  வேண்டும். அப்படி நீங்கள் விற்க தவறினால் கம்பெனியே அந்த பங்குகளை விற்று விடும்.

            உ.ம். நீங்கள் ரூ.10,000  முதலீடு  செய்துள்ளீர்கள்  என்று வைத்துக் கொள்வோம். கம்பெனி உங்களை  ரூ. 1,00,000 வரை வியாபாரம் செய்ய அனுமதிக்கும்.ரூ. 100  விலையுள்ள பங்குகள்  1,000  வரை இந்த பணத்தை கொண்டு நீங்கள் வாங்கலாம்.. பங்கின் விலை ரூ. 2 உயர்ந்தால்  உங்களுக்கு ரூ.2,000 லாபமாக கிடைக்கும். ஆனால் அதே சமயம் ரூ. 2 பங்கின் விலை குறைந்தால் 1000  பங்கிற்கு ரூ. 2000  நஷ்டம் ஏற்படும். அது தவிர்த்து உங்களின் தரகர் தனியாராய்  இருந்தால் தரகு தொகை   ரூ. 200 உம  வங்கி சார்பு  நிறுவனமான இருந்தால்  ரூ. 1,000 வரை செலுத்த வேண்டி வரும். ஆக ஒரே  நாளில் ரூ. 2,000 + தரகுத் தொகை போய் விடும்.  இதனால்தான் நான் சிறிது  அனுபவம் வந்த பின்  தின வியாபாரத்தில் ஈடு  படலாம் என்று கூறு  கிறேன்
       
           இனி பங்குகளை எப்படி வாங்குவது மற்றும் எப்படி விற்பது    என்பதை பற்றி பார்ப்போம்.  கணினி  வைத்துள்ளவர்கள் நேரடியாக விற்கவோ அல்லது வாங்கவோ  செய்யலாம். இல்லாதவர்கள்  பங்கு தரகர்களை
போன் முலம்   தொடர்பு கொண்டு வாங்க வேண்டிய கம்பெனியின் பெயர் .,வாங்க வேண்டிய விலை  இவற்றை தெரிவித்தால்  கம்பெனியின்  பிரதிநிதி நம் சார்பாக வாங்கிவிடுவார்.. நாம் கணினி முலம் நேரடியாக வாங்குவதை  Online Trading  என்றும்,பிரதிநிதி  மூலாம் வாங்குவதை   Off line  Trading என்றும் கூறுகிறோம்
   
          இனி ஆர்டர்கள்  என்றால் என்ன என்று பார்ப்போம்.:
         -------------------------------------------------------------------------------------
1) Market Order  2) Limit Order. 3) Stop Loss order  4 )  Short Selling Order

Market Order: மார்க்கெட்  ஆர்டர்  என்பது  கணினியில் எந்த விலையில் விற்கும்  அல்லது  வாங்கும் விலை  காட்டப் படுகிறதோ அதே விலைக்கு உடனே  வாங்கி விடுவது.

2) Limit Order:  இந்த வகை ஆர்டர்களில்  நீங்கள் எந்த விலைக்கு வாங்கவோ அல்லது விற்கவோ  விரும்புகிறீர்களோ  அந்த விலையை குறிப்பிட்டு  பதிவு செய்தால் அந்த விலை  வந்த பின்தான்  வாங்கவோ அல்லது விற்கவோ செய்யும்.

3) Stop Loss order : இந்த  வகை ஆர்டர்கள் முலம்  உங்களுக்கு ஏற்பட இருக்கும்
நஷ்டத்தின் அளவை குறைத்துக் கொள்ளலாம். இதை பற்றி விரிவாக பின் கூறுகிறேன்.

4) Short Selling Order:பொதுவாக  ஒரு பொருளை  வாங்கியபின்  தான்  விற்க முடியும்  இந்த வகை  வியாபாரத்தில்  நம்மிடம்  இல்லாத  கம்பெனியின்
பங்குகளை முதலில் விற்று விட்டு பின் பங்கு சந்தை முடிவதற்கு முன் அதாவது 3.15 க்குள் அந்த பங்கை வாங்கி விட வேண்டும்.  கிட்ட தட்ட இது
ஒரு தலைகீழ் வியாபாரம் ஆகும். புதிய முதலியிட்டாளர்கள் கண்டிப்பாக இந்த வியாபாரம் செய்ய கூடாது..
   
      Stop Loss order  மற்றும்  Short Selling  Order  இவை இரண்டை பற்றியும் அடுத்த பாகத்தில் விரிவாக கூறுகிறேன் . . 

Tuesday, October 18, 2016

பங்கு சந்தை பற்றிய விளக்கம்.- பாகம்-3

                              பங்குச்சந்தை  பற்றிய  அடிப்படை விளக்கம்.- பாகம்-3
                              --------------------------------------------------------------------------------------

         பங்கு சந்தையில் ஆயிரக் கணக்கான கம்பெனிகள் தங்களை பதிவு செய்துகொண்டுள்ளன. இதில் எந்த கம்பெனியின்  பங்குகளை வாங்குவது என்ற தயக்கம் ஏற்படுகிறது. இதை எளிதாக்கவே   BSE மற்றும்  NSE  இல் பங்குகளை துறை வாரியாகவும்  (Sectorwise)  கம்பெனிகள் செய்துள்ள முலத்தனத்தை கொண்டும்   பிரித்துள்ளனர்.
     
         முதலில் துறைவாரியாக எவ்வாறு  பிரிக்கப் பட்டுள்ளன  என்பதை பற்றியும்  அப்படி பிரிக்கப் பட்டுள்ள துறைகளில் உள்ள முக்கிய  கம்பெனிகள் ஒரு சில வற்றையும் இங்கு தருகிறேன். BSE  மற்றும் NSE
இல் பல துறைகள் கொடுக்கப் பட்டிருந்தாலும்  முக்கியமான சில துறைகளை பற்றி இங்கு கூறுகிறேன். மற்றவற்றை  வியாபாரம் பற்றி விளக்கி கூறும் பொது  சொல்கிறேன்.

1)  Public Sector Banks  : SBI, Canara Bank, IOB, Indian Bank
2)  Private BankS           :  ICICI Bank, HDFC Bank, Axis Bank
3) Automobile                :  Tata Motor, TVS, Bajaj, Ashok Leyland

4) Consumer durable      : Whirlpool,Titan, Videocon,.TTK Prestige
5) Healthcare                  :  Apollo hospital,Glenmark,Chipla,sun Pharma,
6) Energy                        :  HPCL,IOC,BPCL,Reliance, ONGC
7) Metal                          : Hindalco, Tata Steel, National Aluminium,Hind .Zinc
8) Reality                        :  DLF, Godrej Property, Shoba  Developer ,Unitech  
9) I.T                               : Infosys,,HCL, TCS, Mind tree.
10)FMCG                        : Gillett,Dabur,,Emami.,Eveready
11) Power                         : Adani Power, BHEL,Tata Power,,NTPC.
12) Finance                      :Bajaj Finance,,LIC Housing Finance, Sri Ram Tr.Finance, M&M Finance.

கம்பெனிகள்  முதலீடுகள் வாரியாக எவ்வாறு பிரிக்கப் பட்டுள்ளன  என்பதை பார்ப்போம்:
--------------------------------------------------------------------------------------------------------------------------
1) Large Cap. 2)Mid Cap  3)Small cap
 Large Cap: (பெரிய  முதலீட்டு நிறுவனம்)ஒரு நிறுவனத்தின் முதலீடு  $ 10 பில்லியனுக்கும்  மேல்  சென்றால் அந்த கம்பெனியை  அதிக முதலீட்டு  நிறுவனம் என்று அழைக்கிறோம்.
( 1 பில்லியன் = 100  கோடி ரூபாய் )  இன்றைய டாலர் மதிப்பு 66.70
Large Cap.  கம்பெனிகளில்  முக்கியமானவை   Infosys, BHEL, Adaniport.

2) Mid cap  (நடுத்தர முதலீட்டு நிறுவனம்) :கம்பெனியின் முதலீட்டு  தொகை  2 பில்லியனில் இருந்து 10 பில்லியனுக்குள் இருந்தால் அதை மத்திய தர  முதலியிட்டு நிறுவனம் என்று  கூறுகிறோம். உ.ம். Apollo  Hospital, Castrol India,
LIC Housing Finance.

3)Small  Cap: (சிறு  முதலீட்டு  நிறுவனங்கள் )  கம்பெனியின் முதலீட்டு தொகை 2 பில்லியனுக்கும் குறைவாக இருந்தால் அந்த  நிறுவனத்தை
Small  cap   என்று கூறுகிறோம் .உ.ம்.. Bata India, Ceat,Crompton Creaves,Raymond.

இப்படி பிரித்து வைத்திருப்பதால் நமக்கு என்ன நன்மை:
------------------------------------------------------------------------------------------
ஒரு நாடு வளர்ச்சி பாதையில்  செல்லும் பொது  குறிப்பிட்ட  சில துறைகள்    நல்ல  வளர்ச்சி அடையும். அதே போல்  அரசின் சில பொருளாதாரக் கொள்கைகளால்  சில துறைகளின்  வளர்ச்சியில் தேக்கம்
காணப் படும். உதாரணத்திற்கு எடுத்து கொண்டால்   வாகனத் துறை  (Automobile)  நல்ல முன்னேற்றம் தற்போது காணப் படுகிறது . அதே சமயம்
வாங்கி துறையை  எடுத்துக் கொண்டால் தற்சமயம் தேக்க நிலையில் உள்ளது.. காரணம்  வங்கிகள் டெபாசிட்டுக்குண்டான தங்கள் வட்டி விகிதத்தை   மிகவும் குறைத்துக் கொண்டுள்ளான  அதன் விளைவு
வங்கி களில் முதலீடு    செய்ய மக்கள் அதிகம் முன் வருவதில்லை. அது மட்டும் இன்றி பொது துறை வங்கிகள்  கொடுத்த கடன்களில்  மிக அதிகமாக வராக்  கடனாக மாறி விட்டது.

விளைவு  வாகனத் துறையில்  நாம் துணிந்து  முதலீடு   செய்யலாம் .அதே சமயம்  வங்கிகளில் குறிப்பாக   தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளில் யோசித்துதான்  முதலீடு   செய்ய வேண்டும்.

           அடுத்து  முதலீட்டுகளின் அளவை எடுத்துக் கொண்டால்  பெரும்  முலதனம்  (Large cap) கொண்டு ஆரம்பிக்க பட்டுள்ள நிறுவனங்கள் தரும்
டிவிடெண்ட்   தொகை குறைவாக இருந்தாலும்,  அந்த நிறுவனங்களின்   பங்குகள் விலை ஏற்றம் மெதுவாக  இருந்தாலும் கூட   நம் முதலிட்டுக்கு  பாதுகாப்பு உள்ளது.
தற்போது வெளியான புள்ளி விவர கனக்குப் படி  பெரிய நிறுவனங்களில்
செய்யும் முதலீட்டு க்கு   18% வரை லாபம் கிடைக்கின்றது.

         நடுத்தர   நிறுவனங்களில் (Mid caps) செய்யும் முதலீட்டுக்கு   தற்போதைய புள்ளி விவர படி 36 % வரை  லாபம் கிடைக்கின்றது.  ஆனால் இவற்றில் முதலீடு  செய்யும் முன்  மிகவும் கவனமாக  நிதி  நிலைமை ,விற்பனை மற்றும் லாப சதவீதத்தில் முன்னேற்றம்  போன்றவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு  முதலீடு  செய்ய வேண்டும்.

சிறிய நிறுவனங்களை (Small capS)பொறுத்த வரை  மிகவும் கவனமாக முதலீடு   செய்ய  வேண்டும். குறிப்பாக பங்கு வியாபாரத்தில் புதிதாக நுழைபவர்கள் இதில் முதலீடு  செய்யாமல் தவிர்ப்பது நலம் .

பங்கு சந்தை  என்றால் என்ன என்பதை பற்றி ஓரளவு  அறிந்திருப்பினர்கள் இனி   அடுத்த  பகுதியில் இருந்து பங்கு சந்தையில் எப்படி வியாபாரம் செய்ய வேண்டும் அதற்க்கு முன்  நாம் கவனிக்க வேண்டியவற்றை பற்றி
யும்  பார்க்கலாம்



Sunday, October 16, 2016

                                                பங்கு சந்தை  அடிப்படை - பாகம் -2
                                                --------------------------------------------------------

                  முதலீட்டாளர்கள்  ஏன்   பங்குகளில்   முதலீடு  செய்ய விரும்புகிறார்கள் என்று சென்ற பகுதியில்  பார்த்தோம்.  இனி இந்த  பங்கு சந்தை எவ்வாறு நடை பெறுகிறது  ? இதன் ஏற்ற இறக்கத்திற்கு என்ன காரணம் போன்றவற்றை பற்றி   இந்த பகுதியில் பார்க்கலாம். அதற்க்கு முன்  முதலில் பங்கு என்றால் என்பதை பற்றிய ஒரு சிறு விளக்கம்..
                 
                 கம்பெனிகள் தங்கள்  நிறுவனத்திற்கு  வேண்டிய மூலதனத்தை   மக்களிடம்  பங்குகளை விற்பதன்  மூலம்   பெறுகின்றன. பங்குகளை வாங்கும்  ஒவ்வொரு  முதலீட்டாளரும்  அந்த கம்பெனியின் பங்குதாரர் ஆகிறார்.  இதன் மூலம்  அந்த கம்பெனியின்  லாபத்தில் அவருக்கு  பங்கு கிடைக்கிறது.  கம்பெனியில்  இவருக்கு கிடைக்கும் லாபத்தை  டிவிடெண்ட்
என்று கூறுகிறோம் . கம்பெனியின்  நடவடிக்கைகளில் கலந்து கொண்டு ஒட்டு போடும் உரிமையும் இவருக்கு கிடைக்கிறது..இவர் வைத்திருக்கும் ஒவ்வொரு பங்கிற்கும் ஒரு ஒட்டு உண்டு.  இப்படி பங்குகளை வாங்கியவரை பங்குதாரர்  (Share holder) என்று அழைக்கிறோம் .

 பங்கு சந்தை பற்றிய ஒரு சிறு விளக்கம்:

                1) தேசிய  பங்கு சந்தை  (National Stock Exchange)  NSE
                2)  பாம்பே  பங்கு சந்தை (Bombay Stock Exchange) BSE
       
                 இந்தியாவில்  நடைபெறும்   பங்கு சந்தை  வியாபாரங்கள் இந்த இரண்டு    நிறுவனங்கள்  மூலமாகவே  நடை   பெறுகிறது.. இதில்  பாம்பே
பங்கு சந்தை  மிகவும்  பாழமை  வாய்ந்தது. இது 1875 நிறுவப் பட்டது . இதில்   4600 க்கும் மேற்பட்ட  கம்பெனிகள் பதிவு செய்துள்ளன. தேசிய  பங்கு  சந்தை 1992 ஆம் ஆண்டு  நிறுவப் பட்டது . இதில் சுமார் 1400 க்கும்   மேற்பட்ட   கம்பெனிகள்  பதிவு செய்துள்ளன. இதில் குறிப்பிட  தக்க விஷயம்  மொத்த  வியாபாரத்தில்  சுமார் 90 % வியாபாரம்   50 முக்கிய  கம்பெனிகளின்  வியாபாரமாகவே உள்ளது.
               
                தேசிய  பங்கு சந்தையின்  குறியீ ட்டு    எண்களைஐ  ( INDEX)    நிப்டி
(Niffty)என்றும் , பாம்பே  பங்கு சந்தையின்  குறியீ ட்டேன்களை   சென்செக்ஸ்  ( Sensex) என்றும்   கூறுகிறேம்.. இந்த  பங்கு சந்தையின் குறிட்டு  எண்கள்  உயர்ந்தால் பங்கு சந்தை  ஏறு  முகமாய்  உள்ளது என்றும்.  குறியீ ட்டு   எண்   தாழ்ந்தால்   பங்கு சந்தை இறங்கு முகமாய்  உள்ளது என்றும்   கூறுகிறோம் ..இதற்க்கு காரணம்   பதிவு செய்யப் பட்டுள்ள  கம்பெனிகளை   துறைவாரியாக (Sectorwise)  பிரித்து   அவற்றின்  முதலீ ட்டு
 தொகை , நிறுவனத்தின்  வியாபாரம் போன்றவற்றை   வைத்து ஒவ்வொரு நிறுவனத்திற்கும்   ஒரு   அளவு  கோல் வைத்து  அதன் மூலமாய்   குறியீ ட்டு
எண் களை   நிர்ணயிக்கின்றார்கள்..  உ.ம்.  இன்போசிஸ்  போன்ற  பெரிய  நிறுவனத்திற்கு 6%  வரை  குறியீ ட்டு எண்கள்  தருகிறார்கள்.
             
                பங்கு சந்தையின்   குறியீட்டு   எண்களின் ஏற்றம் இற க்கம் பற்றி பார்த்தோம், இனி  பங்கு  களின் விலையில் ஏற்றம் இறக்கம் ஏன்  ஏற்படுகிறது என்று பார்ப்போம்..
                         
                 பொருளாதாரம் படித்த    அனைவருக்கும்   தெரியும்  , ஒரு பொருளின் விலையில்   ஏற்றமோ  அல்லது இறக்கமோ , அந்த பொருளுக்கு சந்தையில்  உள்ள தேவை(Demand) மற்றும் அந்த பொருளின்  சந்தை வருகை யை  (Supply)
பொறுத்தே அமையும்.  அதே போல் தான்   ஒரு கம்பெனியின்  பங்கின் விலையும்   பங்கு சந்தையில் அந்த குறிப்பிட்ட கம்பெனியின் பங்குகள்  எந்த அளவுக்கு விற்பனைக்கு வந்துள்ளது  மற்றும் அந்த பங்கிற்கு  முதலீட்டாளர்களிடம் எந்த அளவுக்கு  தேவை உள்ளது என்பதை பொறுத்தே  பங்கின் விலை ஏறவோ அல்லது இறங்கவோ செய்யும்..
             
             பங்குகளின்  ஏற்ற இற்க்த்தை பற்றி  விரிவாக கூறும்   முன் இந்த
பங்குகள் எப்படி   வியாபாரத்திற்கு வருகின்றன   என்பதை பற்றி ஒரு சிறு விளக்கம்.
                   
               1)முதல் நிலை சந்தை   (Primary  Market)
   
               2) இரண்டாம் நிலை சந்தை (Secondary Market)

             முதல்  நிலை சந்தை என்பது   கம்பெனிகள் தங்கள் நிறுவனத்தை பெரிது  படுத்த விரும்பி  பங்குகளை  முதலீட்டாளர்களுக்கு  நேரடியாக விற்கும் முறையாகும்.  இதை  IPO (Initial Public  Offering)  என்று சொல்வோம்.
 இதற்கென்று செபி   (Stock Exchange Board of India) சில  விதி முறைகளை விதித்துள்ளது
அவற்றை பற்றி ஒரு சிறு விளக்கம்::

        இப்படி நேரடியாக மக்களிடம் பங்குகளை விற்க ஒரு கம்பெனி   வரும்
 முன் அந்த நிறுவனம்   விற்பனைக்கு முந்தைய 3 ஆண்டுகளில் தங்கள் சொத்தின் மதிப்பை 3 கோடிக்கு  குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். அந்த 3 கோடி ரூபாயிலும்  50% அதாவது 1.50 கோடி  ரூபாயை  பணமாக வங்கியில் வைத்திருக்க வேண்டும். கம்பெனி  குறைந்த பட்சம்  10 கோடிக்கு  பங்குகளை விற்க வேண்டும். அந்த முதலீ ட்டில்  குறைந்த பட்சம்  20%  பங்கு   அந்த நிறுவனத்தின் சொந்த  மூலத னமாக இருக்க வேண்டும். அதே போல்  பங்கு வெளியிடுவதற்கு முந்தைய  5 ஆண்டுகளில் 3  ஆண்டுகள் நல்ல லாபத்தை காட்டி இருக்க வேண்டும்.
                      ஆகையால் இந்த   முதல் நிலை சந்தையில் வாங்கும் முதலிட்டாளர்களுக்கு  அவர்கள் செய்யும் மூல  த னத்திற்கு  பாது  காப்பு கிடைக்கிறது.
               
                     அடுத்து இரண்டாம் நிலை சந்தை (Secondary Market) :

                    இங்கு நடத்தப படும்  வியாபாரம்  முதலீட்டாளர்களுக்கு  இடையே மட்டுமே நடை பெறுகிறது.. இவர்களுக்கு இடையே  நடை பெரும்  வியாபாரம்   பங்கு சந்தை தரகர்கள் (Brokers)  மூலம்      நடை பெறுகிறது..
பங்கு சந்தையில்   தற்போது   தரகர்கள்   வேலையை   வங்கிகள்,பரஸ்பர  நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் செய்கின்றன. வங்கிகளில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால்  HDFC  Bank, ICICI Bank,
SBI  போன்ற வங்கிகள் இதற்கென்று தனி  அமைப்பை ஏற்படுத்தி பங்கு வியாபாரம் செய்கின்றன. தனியார் நிறுவனங்கள்  என்று எடுத்துக்
கொண்டால்   ஷேர்கான் ,மோதிலால் ஓஸ்வால் ,போன்றவை  செய்கின்றன.
நேரடியாக நாம் கம்பெனியில் இருந்து வாங்குவது  இரண்டாம் நிலை  சந்தையில் முடியாது.
     
                  பங்கு சந்தையில்   ஒரு குறிப்பிட்ட  பங்கின் விலை என் ஏறுகிறது  அல்லது  இறங்குகிறது என்று இனி பார்ப்போம்..

பங்கு சந்தையில் பங்கின் விலை உயர  காரணம்:
                 
                     1)குறிப்பிட்ட கம்பெனியின் காலாண்டு லாப நஷ்ட   கணக்கில்  எதிர்பாராத உயர்வு.
                     2)கம்பெனிக்கு  புதியதாக ஆர்டர்கள் கிடைத்தால்,
                     3) கம்பெனி  நிர்வாகம் தங்கள் நிறுவனத்தை விரிவு படுத்துவதை பற்றி அறிவிப்பு செய்தால்.,
                     4) நிதி நிறுவனங்கள் முதலீட்டு செய்தால்,
                     5)புதியதாக  கம்பெனி  பொருட்களை  கண்டு பிடித்தால் அல்லது
புதிய பொருட்களை தங்களின் விற்பனை பிரிவில் சேர்த்தல்   போன்றவற்றால்   ஒரு கம்பெனியின் பங்கு விலை உயரும்.
                     6) பங்கு சந்தையின் குறியீட்டு  எண்களின் ஏற்ற  இறக்கத்தை பொருத்தும் பங்குகளின் விலை ஏறவோ அல்லது இறங்கவோ செய்யும்.

காலாண்டு லாப உயர்வு:
---------------------------------------. ஒவ்வொரு நிறுவனமும் தங்களின்  லாப நஷ்ட  கணக்கை  3 மாதங்களுக்கு ஒரு முறை வெளியிட வேண்டும்.  மார்ச்,ஜீன் .
செப்டம்பர் , மற்றும் டிசம்பர்  என்று 4 முறை இந்த காலாண்டு லாப நஷ்ட
கணக்கை   வெளியிட வேண்டும். இப்படி வெளியிடும் பொது நிறுவனத்தின் லாப சதவிகிதம்  ஏறுமுகமாய் இருந்தால்  அந்த கம்பெனியின் பங்கின் விலை ஏறும் .
புதிய ஆர்டர்கள்  கிடைத்தால்:
-----------------------------------------------
உற்பத்தி செய்யும்  பொருட்களுக்கு எப்போதும் கிடைக்கும் ஆர்டர்  தவிர்த்து புதிய இடங்களில் இருந்து ஆர்டர் கிடைத்தால் ( உம. அசோக்  லேலேண்ட்
கம்பெனிக்கு  பஸ்களுக்குண்டான  ஆர்டர்  மும்பை  மற்றும்    கோல்கட்டா   போக்குவரத்து நிர்வாகங்களிடம் இருந்து  சமீபத்தில் கிடைத்தது) பங்கின் விலை உயரும்.

கம்பெனி  விரிவு படுத்தும் திட்டம்:
-------------------------------------------------------
குறிப்பிட்ட எல்லைக்குள் வியாபாரம் செய்து கொண்டிருந்த கம்பெனி தங்களின்  வியாபார   எல்லை, மற்றும்
கம்பெனியின் உற்பத்தி திறனை   அதிகரிக்க திட்ட மிட்டால்  பங்கின் விலை உயரும்.

நிதி நிறுவனங்கள் முதலீட்டு:
-----------------------------------------------

குறிப்பிட்ட நிறுவனத்தின் வளர்ச்சி நன்கு இருந்தால் நிதி நிறுவனங்கள் தங்களிடம் உள்ள அதிகப் படியான தொகையை  அந்த  நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு  செய்யும் .

புதிய பொருட்களை கண்டு பிடித்தல் மற்றும் உருவாக்குவதால்.:
-----------------------------------------------------------------------------------------------------------

ஏற்கனவே  உற்பத்தி செய்து கொண்டிருந்த  பொருட்களுடன்  மேலும் புதியதாக  ஒன்றை வெளிக் கொண்டுவந்தால் (உ.ம்..டாட்டா  மோட்டார்
நிறுவனம்  அடுத்த ஆண்டு  புதிய மாடல் கார் ஒன்றை  அறிமுக படுத்த இருக்கின்றது, அதே போல் டெங்கு  ஜிரத்திற்கு சான் பார்மா  என்ற நிறுவனம் மருந்தை கண்டு பிடித்துள்ளது. விரைவில் அது வேளிவரப் போகிறது)

பங்கு சந்தை குறியீ ட்டு  எண்கள்  உயர்வு:
-----------------------------------------------------------------
பங்கு சந்தையின்  குறியீட்டு  எண்களின்  ஏற்ற இறக்கத்தை பொறுத்து
பொதுவாக  பங்கு சந்தையின்  75% வீத  கம்பெனியின் பங்குகள்   ஏற்றமோ அல்லது இறக்கமோ  அடையும். . இதை  சந்தையின் போக்கு  (Market Trend) என்று கூ றுகிறோம்

இனி  பங்கு சந்தையில்  பங்கின் விலை என்  இறங்குகிறது அல்லது முதலியிட்டாளர்கள் ஏன்   பங்குகளை விற்கிறார்கள் என்பதை சுருக்கமாக பார்ப்போம்.:
1)கம்பெனியின்   காலாண்டு லாப நாஷ்ட   கணக்கில்  லாபம் முந்தைய காலாண்டு அறிக்கையை விட மிக குறைவாகவோ  அல்லது நஷ்டத்தை காட்டினால்  பங்கின் விலை சரியும்.
2)கம்பெனி வங்கிகளிடமிருந்தோ அல்லது வேறு  நிறுவனங்களிடம் இருந்தோ   அதிகப் படியாக கடன் வாங்கியிருந்தால்   விலை குறையும்.
3)நிதி நிறுவனங்கள் திடீர் என்று தாங்கள் வைத்திருக்கும் கம்பெனியின் பங்குகளை சந்தையில் மொத்தமாக விற்றால்  பங்கின் விலை குறையும்.
4) கம்பெனியின் நிர்வாகத்தின் செயல்பாடுகளின் மீது முதலிட்டாளர்களுக்கு நம்பிக்கையின்மை ஏற்பட்டாலும் பங்கின் விலை குறையும்.
5)பங்கு சந்தையின்  குறியீட்டு  எண்கள் சரிவடைந்தாலோ பங்கின் விலை
சரிவடையும்.

இனி அடுத்த வாரம்  பங்கு சந்தையில் பங்குகள் எப்படி துறைவாரியாக   மற்றும்  முதலீட்டு  அளவின் வாரியாக  பிரிக்கப்   பட்டுள்ளதை பற்றி பார்ப்போம். மேலும் தின வணிகம் (Intraday) மற்றும் (Investment) நீண்டகால முதலீடு கள் பற்றியும் பார்க்கலாம்.



Wednesday, October 12, 2016

                                 பங்கு சந்தை   பற்றிய  ஒரு  அடிப்படை  விளக்கம
                               --------------------------------------------------------------------------------

             கடந்த 7 ஆண்டுகளாக  பங்கு சந்தையில்   வியாபாரம்  செய்து   வருகிறேன் . நண்பர்  ஒருவரின்  மகனுக்கு  இதை  பற்றி விளக்கம் கொடுக்கும் போது, ஏன்  நாமும் இதை பற்றி  ஒரு  பதிவு   போடாக கூடாது என்று தோன்றியதால்  இன்று  இந்த  பதிவை  எழுதுகிறேன்.

            .திடீரென்று  மக்கள் மத்தியில்  சமீப   காலமாக  பங்கு சந்தையில்  முதலீடு  செய்ய   விருப்பம்     வர   காரணம்   என்ன??

          மக்கள் பொதுவாக,  குறிப்பிட்ட  காலத்திற்கு வங்கியில்  முதலீட்டு    கணக்கு வைப்பது, தங்கம்  வாங்கி வைப்பது , நிலத்தில் முதலிலீடு செய்வது   அல்லது
பரஸ்பர     நிதிகளில்  பணம்  முதலீடு   செய்வது  என்றுதான்  இருந்தனர்  ஆனால்  தற்போது  அவர்களின் பார்வை பங்கு  சந்தையின்  பக்கம் திரும்பக் காரணம் !!!!
1)  வங்கிகள்   தாங்கள் தரும் வட்டி விகிதத்தை  சிறிது  சிறிதாக குறைத்து கொண்டு வந்து  தற்போது  ஆண்டுக்கு 7.5%   மட்டுமே  தருகின்றன . விளைவு
 ரூ. 1,00,000   முதலீட்டு செய்தவருக்கு  மாத  வட்டி ரூ 625  மட்டுமே.

2)  தங்கத்தின்   விலையோ   கிராம்  ரூ.3000 தொட்டு விட்டது . இதற்க்கு மேல்
இனி  6000 த்தை தொட  எத்தனை ஆண்டுகளாகும் என்று தெரிய  வில்லை..
ஆக தங்கத்தின் விலையும்  அதன் அதிக பட்ச   விலையை   தொட்டு விட்டது.

3)  நிலத்தை வாங்க வேண்டுமானால்  குறைந்த பட்சம்  சில லட்சங்கள்  முதலீடு   செய்ய வேண்டும் . அதை   விற்க வேண்டும் என்றால்  நல்ல விலைக்கு விற்க  மிகவும் சிரமமாய்  உள்ளது .

4)  பரஸ்பர நிதியில்  முதலீடு  செய்யலாம் என்றால்   நினைத்த நேரத்தில்  பணத்தை எடுக்க   முடியாது . குறைந்த  பட்ச   முதலீட்டு   காலம்  91 நாட்கள். அது  மட்டுமின்றி  பரஸ்பர  நிதிகளும் தங்கள்  பணத்தை  பங்கு சந்தையிலே
முதலீடு  செய்கின்றனர்.

ஆக  நாமே ஏன்  நேரடியாக   முதலீடு  செய்ய  கூடாது  என்ற எண்ணத்தின்
விளைவே   இன்று   பங்கு சந்தையின்  பக்கம் மக்கள் திரும்பக்  காரணம்


                         பங்கு சந்தை பற்றிய   மக்களின்   தவறான   எண்ணம்
                        --------------------------------------------------------------------------------------

                மிகப் பெரும்பாலான  மக்கள்  பங்கு சந்தையை  சூதாட்டம்  என்றே
கருதுகின்றனர். மேலும் சிலர்  இதில்  பணக்காரர்கள் மட்டுமே   முதலீடு  செய்ய  முடியும் என்று  கருதுகின்றனர். இன்னும் சிலர் இதில்  குறைந்த காலத்தில் அதிகம் சம்பாதித்து விட   முடியும்  என்று  நினைக்கின்றனர்.
மேலும் சிலர்  பங்கு சந்தையில் வியாபாரம் செய்ய  தொழில் நுட்பம்  மற்றும் கணக்கியல்  பற்றிய  அறிவு  இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.
 
            1)இது  சூதாட்டம் அல்ல:  சூதாட்டத்தில் ஒருவருக்கு லாபமும் எதிர்த்து
விளையாடுபவருக்கு நஷடமும்   ஏற்படும். ஆனால் பங்கு சந்தையில்  நீங்கள்
செய்யும்  முதலீட்டின்  விளைவாக  நீங்கள்  அந்த கம்பெனியின்  பங்குதார் ஆகிறீர்கள்.  அதாவது  நீங்கள் செய்யும் முதலீட்டின் அளவிற்கு
அந்த கம்பெனியின் உரிமையாளர் ஆகிறிர்கள். சூதாட்டம் என்பது 100% அதிர்ஷ்டத்தை நம்பி  விளையாடுவது.. ஆனால் பங்கு சந்தை என்பது முதல்  போட்டு  உரிமையாளர் ஆவது
         
              2)பணக்காரர்கள் மட்டுமே  முதலீடு  செய்யலாம்:     பங்கு சந்தையில் வியாபாரம் செய்ய  குறைந்த  பட்சம் ரூ . 5,000 இருந்தால் கூட   போதும்.

              3)குறைந்த காலத்தில் அதிகம்  சம்பாதிக்கலாம் :  ஒரு தவறான எண்ணம். போட்ட முதலுக்கு   ஏற்ற  வருமானம் மட்டுமே கிடைக்கும். வருமானத்தின் அளவு  நீங்கள்  எவ்வளவு திறமையாக  செயல் படுக்கிறியர்கள் என்பதை பொறுத்து அமையும்.
           
             4)அதிகம் படித்து இருக்க வேண்டும் :  பங்கு சந்தை பற்றிய ஓரளவு  அறிவு   இருந்தால் போதுமானது. முதலீடு   செய்யவிருக்கும் கம்பெனியை  பற்றி அறிந்து பின் முதலீடு  செய்ய வேண்டும் அவ்வளவே.

              பங்கு சந்தை என்றால் என்ன, பங்கு என்றால் என்ன    என்பதைப்  பற்றி அடுத்த  வாரம் பார்ப்போம்.