Saturday, August 31, 2013

அன்றைய தலைவர்களும் இன்றைய தலைவர்களும் ஒரு பார்வை.

அன்றைய தலைவர்கள் மக்களுக்காக நாம் என்று இருந்தார்கள். ஆனால் இன்றைய  தலைவர்கள்  நமக்காகத்தான் மக்கள் என்று நினைக்கின்றார்கள்.

அன்று மக்களைத் தாக்கினால் தலைவன் பொங்கினான். இன்று தன்னைத் தாக்கிப் பேசினாலே தொண்டன் பொங்கி எழ வேண்டும் என்று   தலைவன் எதிர் பார்க்கிறான்

 அன்று கட்சி வேறு தான் வேறு என்று தலைவர்கள் இருந்தனர். இன்றைய தலைவர்களோ  தான் தான் கட்சி . என்று நினைக்கிறார்கள்

. கட்சிக்கு நாம் தலைவன்,கட்சியால் கிடைத்தது இந்த தலைவன்  பதவி என்ற எண்ணம் போய் ,விட்டது. இன்றைய தலைவர்கள்  தான்தான் கட்சி,, கட்சி தன  சொல்படிதான்  கேட்க வேண்டும் என்று  நினைக்கின்றார்கள்.

அன்றைய தலைவர்கள் கட்சியின் புகழை பரப்பினர். இன்றைய தலைவர்களோ கட்சியின் புகழ் பரப்பப் படுவதை விட  தன புகழை தொண்டன் பரப்ப வேண்டும் என்று நினைக்கிறார்கள் .

அன்று  கட்சிக்கு என்று கொள்கைகள் இருந்தன.இன்று  கொள்கைகளை ஒரு சில சீட்டுகளுக்காக  தலைவர்கள்  அடமானம்  வைக்க தயங்குவதில்லை.




இளம் பாலியல் குற்றவாளிகளை ஊக்கு விக்கும் ஒரு தீர்ப்பு.?

செய்யும் தவறு என்ன என்று தெரியாமல் ஒருவன் குற்றத்தை செய்தால்  கருணை  காட்டுவதில்  தவறில்லை. இளம் வயதில் ஒருவன் பசிக்கு திருடுகிறான் என்றால் வறுமை கண்ணை மறைத்து விட்டது தெரியாமல் செய்து விட்டான் என்று கூட சொல்லலாம் திருடியது திட்டமிட்டு செய்யப் படவில்லையேன்றால்?

பெண்களை இளம் வயதில் ஈவ் டீசிங் செய்து விட்டான் என்றால் பருவக் கோளாறு என்று கூட மன்னித்து விடலாம். ஆனால் இந்த  வழக்கில்  போலீஸ் தரப்பிலிருந்து அந்த பெண்ணிடம் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டவன் என்ற  முறையில்   குற்றம் சுமத்தப் பட்ட பின்னும்  அவன் மைனர்  ,18 வயதை அடைவதற்கு முன் செய்த தவறு என்று சொல்லி மைனருக்கான அதிக பட்ச தண்டனையான 3 ஆண்டுகள் மட்டும்  நீதி வழங்கியிருப்பது மக்களுக்கு நீதித் துறை மீதிருந்த மரியாதையை இழக்கச் செய்துள்ளது..

மைனர் ஒருவன் மது அருந்தி ,தவறான நேக்கத்துடன்  கூட்டாளிகளுடன் சேர்ந்து ஒரு பெண்ணை  கூட்டிச் சென்று, அவள் கூட்டாளியை தாக்கி, பின் அந்த பெண்ணையும்  தாக்கி  கொடூரமான முறையில்  பாலியல்  குற்றம் செய்து அவள் சாவுக்கு காரணமாய் இருந்தூள்ளான். ஒவ்வொரு குற்றத்திற்கும் 3  ஆண்டுகள் வீதம் போட்டல் கூட  15 ஆண்டுகள் தண்டனை .கொடுத்திருக்கலாம்.
சட்டப் புத்தகத்தை அப்படியே வரிக்கு  வரி பின் பற்றி நீதி வழங்க வேண்டும் என்று சட்டம் சொல்லவில்லை. சந்தர்ப்ப சூழ் நிலைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு  நீதி  வழங்கியிருக்கலாம்.எத்தனையோ தீர்ப்புகளை பார்த்துள்ளோம், திட்டமிட்டு செய்யப் பட்ட  கொலையல்ல ஆகவே தூக்கு தண்டனை விதிக்கப் படாமலும், திட்டமிட்டு கொடூரமாய் செய்த கொலைகளுக்கு நீதி அரசர்கள் மரண தண்டனை அளித்துள்ளதையும்  பார்த்துள்ளோம் . இங்கே பாதிக்க்கப் பட்டது ஒரு பெண்.,நீதியை வழங்கியதும் ஒரு பெண்  நீதிபதி.. ஆனால் தவறான நீதி வழங்கப் பட்டு விட்டது.

Friday, August 30, 2013

தங்கமும் பெட்ரோலும் வேண்டியது 80 கோடி வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள ஏழைக்கா? ஒரு ஆய்வு.

  தங்கம்  வாங்குவதில்  மக்கள் கட்டுப் பாடுடன் இருக்க வேண்டும். பெட்ரோல்  செலவில் சிக்கனம் வேண்டும் . இது நிதியமைச்சர் தொடங்கி  பிரதமர் வரை மக்களுக்கு கூறும் அறிவுரை .இது உண்மையில் பின் பற்ற வேண்டிய    திட்டம்தான்.ஒத்துக் கொள்கிறோம். அதை நடை முறை படுத்துவது அரசின்  உள்ளது. மக்களிடம் இல்லை என்பதை  என் இன்னும்  புரிந்து கொள்ளவில்லை.
1) இந்தியாவின் குடி மக்களில்  80 கோடி பேர் வறுமை  கோட்டுக்கு கீழ் உள்ளார்கள். நிச்சயம்  இவர்களால்  அன்றாடம் பெட்ரோலோ அல்லது  தங்கமோ வாங்க முடியாது. ஏனேன்றால் இவர்களின்  ஒரு நாள் வருமானமே ரூ. 33.33 என்று நீங்களே நிர்ணயித்து விட்டீர்கள்.
2)  அடுத்து உங்கள் கணக்குப் படி இந்தியாவில் வருமான வரி கட்டுபவர்கள்  மொத்தாம் 2 கோடி பேர்தான். அதிலும் 60 % பேர் ,அதாவது கிட்டத்தட்ட 1 கோடியே  30 லட்சம் லட்சம் பேர்  சம்பளக்காரர்கள்..ஆக  மிச்சம் உள்ள  70 லட்சம் பேர்தான் வியாபாரிகள் .உங்களிடம் வரிகட்டும்  இவர்களை மட்டும்தான் நீங்கள் கவனிக்க வேண்டும். இவர்களால் மட்டும்தான்  கார் உபயோகிக்க முடியும் தங்கம் வாங்க முடியும். மாத சம்பளக் காரர்களில் ஒரு சிலரால் கார் வைக்கும்  அளவுக்கு வருமானம் இருக்கலாம் ஆனால்  மற்றவர்களால்  இரு சக்கர வாகனம் மட்டுமே வைத்திருக்க முடியும்.
3) தங்கம் வாங்கும் இவர்களை உங்களால் கட்டுப் படுத்த முடியாதா? அல்லது திருட்டுத் தனமாக கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பு செய்யும்  வியாபாரிகளை தங்கம் வாங்கும் போது உங்களால்  கட்டுப் படுத்த முடியாதா? சென்னை, மும்பை  போன்ற  மாநகரங்களில் வேண்டுமானால்  நிறைய தங்க நகை கடைகள் இருக்கும். வியாபாரமும் அதிகம் இருக்கும். எளிதில் இவர்களை கட்டுப் படுத்தலாமே.?
4) அடுத்து பெட்ரோல் ,  இதைப் பற்றி ஆராய்ந்தால்   தவறு முழுக்க முழுக்க அரசின் பக்கம்தான் என்பது புலனாகும். இந்தியாவை ஏழை நாடு என்று நீங்களே ஒத்துக் கொண்டு  இலவச அரிசியும் தானியங்களும் தருகிற திட்டங்களை கொண்டு வருகிறீர்கள். இப்படி ஏழையான ஒரு  நாட்டிற்க்கு  நிஷ்சானும்,போர்டும்,  சுசுகியும், டயோட்டாவும் தேவையா? யார் இந்த கம்பெனிகளை இந்தியாவிற்குள் கொண்டு வந்தது.? இவற்றை வாங்க குறைந்த வட்டியில்  வங்கிகள் ஏன்  கடன் கொடுக்கின்றன.? பெட்ரோல்  சிக்கனமாக உபயோகிக்க  சொல்லும்  அரசு அதை உபயோகிப்பாளர்களை வாங்க தூண்டுவது ஏன் ? வெளி நாட்டு கம்பெனிகளை இந்தியாவில்  நுழைய விட்டது ஏன் .சென்னையில் உற்பத்தியாகும்  வண்டிகளில் 65 % ஏற்றுமதியாகிறது என்று சொல்வீர்கள். சரி ஒத்துக் கொள்கிறோம். மீதி வண்டிகள் உள் நாட்டில்தானே  உலா  வருகிறது.
5) மக்கள் உபயோகப் படுத்தும்  கார்களை  உற்பத்தி செய்வதில் இந்தியா 6 வது இடம் என்று புள்ளி விவரம் சொல்கிறது. சென்ற  ஆண்டு மட்டும் 3.7 மில்லியன் கார்கள் இந்தியாவில் உற்பத்தி ஆகியுள்ளன. பெருமையாகத்தான் இருக்கின்றது. ஆனால் இந்தியாவின் விவசாய உற்பத்தியாளர்கள்  60 லட்சம் பேர்  கடந்த 10 ஆண்டுகளில் விவசாயம் செய்யும் தொழிலில் இருந்து விலகி விட்டனர் என்ற புள்ளி விவரத்தை பார்க்கும் போது வேதனையாய் இருக்கின்றது.உற்பத்தி  கூட வேண்டிய விவசாயத் தொழிலில் வீழ்ச்சி ஆனால் பணக்காரர்கள் உபயோகப் படுத்தும் கார் உற்பத்தியில் முன்னேற்றம்.அரசு தன  முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டிய துறைக்கு கொடுக்காமல் தேவையற்ற துறையை வளர்க்கின்றது.
இனியாவது விவசாயத்தையும்,   தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை முன்னேறுவதில் அரசு  நடவடிக்கை எடுக்குமா?

Wednesday, August 28, 2013

காவல் துறை உங்கள் நண்பன்.!!!!!!!!!!!

காவல் துறையி பல நல்ல திறமையான,நாணயமான  அதிகாரிகள் உள்ளனர்  சில புல்லுருவிகளால்  அந்தத் துறைக்கே கெட்ட  பெயர் ஏற்படுகிறது .இந்த பதிவில் அந்த ஒரு சிலரைப்   பற்றி மட்டுமே எழுதியுள்ளேன்.

காவல்துறையின் கடமைகள் சட்டம் ஒழுங்கை காப்பது,கிரிமினல் குற்றவாளிகளை கண்டு பிடிப்பது,கிரிமினல் குற்றங்கள் நடக்காமல் தடுப்பது ,போக்குவரத்தை சரி செய்வது நீதி மன்றங்கள் இடும் கட்டளைகளை  நிறை வேற்றுவது என்று  சொல்லிக் கொண்டே போகலாம்..ஆனால் நடப்பது  பல இடங்களில் வேறு விதமாய் இருக்கின்றது.
.
போக்கு வரத்தை சரி செய்யும் காவலரை   கண்டவுடன்  நம்மையும் அறியாமல் நம்  கை சட்டையில் பணம் இருக்கின்றதா  காவலருக்கு கொடுக்க என்றுதான்  போகிறது. அனைத்து தஸ்தாவேஜிகள் இருந்தாலும் நம்மால்  தடுக்க முடியாத அநிச்சை செயலாகி   விட்டது..காவலர்கள்  குடியிருப்பிலேயே ஒரு பெண் காவலரிடமே திருட்டு நடந்த சம்பவமும் நடை பெற்றுள்ளது 
.
பாஸ்போர்ட்  பெற  காவல் நிலைய  விசாரணை அறிக்கை  தேவை  என்று ஒரு  சட்டம்... நடப்பது என்னை 300 ரூபாய் கொடுத்தால் வீட்டுக்கு வந்து விசாரிக்காமலே  அறிக்கை கொடுத்து விடுகிறார்கள் காவல் துறையினர்.பின் எதற்க்கு இப்படி ஒருவிதி குற்றம் செய்பவர்கள் பணத்தால் சட்டத்தையும் அதன் பாது காவலர்களையும் . வாங்கி விட  முடியும் என்று நினைக்கின்றார்கள்.
சரி ஏன்  இந்த  முன்னுரை என்று கேட்கலாம். சமீபத்தில் சட்டிஸ்கரில் ஒரு போலிஸ் இன்ஸ்பெக்டரும்  அவர் கீழ் வேலை பார்த்த 3 துணை  இன்ஸ்பெக்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையை படித்ததால் தோன்றிய பதிவு இது. கள்ளச் சாராயம் காச்சியவர்கள் மற்றும் மற்ற குற்றங்கள் செய்தவர்களிடம் இருந்து பெற்ற மாமூலை பிரிப்பதில் அதிகாரிகளுக்கு இடையே சண்டை.காரணம் இன்ஸ்பெக்டருக்கு மாறுதல் கிடைத்து விட்டதால் தர மாட்டோம் பங்கை என்று உதவியாளர்கள் தகராறு.செய்ய ,இன்ஸ்பெக்டர் ஊர் பஞ்சாயத்து தலைவர்களை தனக்கு ஆதரவாய்   பேச அழைத்து வந்துள்ளார்.!!!உதவியாளர்கள் அவர்களை அடிக்க,பதிலுக்கு  கிராமமே திரண்டு வந்து காவல் நிலையத்தை தாக்கியுள்ளது.!!!!

வருமானம் குறைவாக  இருப்பதால் இவர்கள் குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைக்கிறார்களா?   அல்லது  சட்டம்  வழங்கியுள்ள அதிக  படியான  அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்களா?  வருமானத்தை அரசு கூட்டிக் கொடுக்க முடியும்...ஏற்கனவே இவர்களுக்கு    அரசு .குறைந்த  வாடகையில் காவலர் குடியிருப்பு   கட்டிக் கொடுத்துள்ளது.சலுகை விலையில்  உணவுப் பொருட்கள் கொடுத்துள்ளது. இன்னும் என்ன  பார்க்கிறார்கள் இவர்கள்.??காவல்துறை எங்கள் நண்பனாக இருக்கவே ஆசைப் படுகிறோம்.

சரிந்து விழும் இந்திய பொருளாதாரம்.தடுத்து நிறுத்தப் போவது யார்??

இந்திய பொருளாதாரம் உண்மையிலேயே  மிகவும் மோசமான நிலையில் உள்ளதா ??அல்லது வேண்டுமேன்றே   மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க தயங்குகிறதா.??நடப்புக் கணக்கில்  பற்றாக் குறை என்று சொல்லும் அரசு  90,000 கோடி ரூபாயை  உணவு பாது காப்பு திட்டத்திற்க்கு ஒதுக்குகிறது.
சலுகை விலை திட்டத்திற்க்கு ஏன் இந்த அவசரம்? அடுத்த தேர்தலில் வெல்வது ஒன்றுதான் குறி நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி கவலை இல்லை என்று சொல்கிறதா மத்திய அரசு.?

1991 இல் உண்மையிலேயே நடப்புக் கணக்கில் பற்றாக் குறை எழுந்த ப்போது 2.2 பில்லியோன்  டாலருக்காக இந்தியாவின் தங்க சேமிப்பு 67 டன்னை சந்திரசேகர் அரசு இன்டெர்னேசனல் மானிடரி ஃபண்டிடம் அடமானம் வைத்தது. இந்தியாவின் மானத்தை விமானத்தில்  பறக்க விட்டது  நினைவுக்கு வருகிறது.. இன்று ரிசர்வ் வங்கியில்  558 டன் தங்கம் பாதுகாப்பில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

குற்றம் புரிந்தவர்கள் தேர்தலில் நிற்கக் கூடாது என்று உச்ச நீதி மன்றம்  தீர்ப்பு சொன்னதும்  அதற்க்கு எதிராக மசோதாவை அனைத்து கட்சிகளும்  சேந்து பார்லிமென்டில் நிறை வேற்றுகின்றீர்கள். ஆனால் சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி கமிட்டி நியமித்து அது ஒப்புதல் தந்த பின்தான் கரி மற்று இரும்பு  சுரங்கங்கள்  வேலை ஆரம்பிக்கலாம் என்று உச்ச நீதி மன்ற ஆனையை மறு பரிசீலனை செய்ய அரசு உச்ச நீதிமன்றத்தை அனுகவில்லை.அல்லது  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கிறது என்பதால் இந்த தீர்ப்புக்கு எதிராக எந்த ஒரு மசோதாவும் நிறைவேற்றப் படவில்லை. சுற்றுச் சூழல் பற்றிய  ஒப்புதல் கிடைக்காமல் 100க்கும் அதிகமான இடங்களில்  வேலை நடக்காமல் இருந்தும்  அதைப் பற்றி கவலை படாமல்  வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதன் மூலம் பல பில்லியன் டாலர்கள் வெளியேறுவது அரசுக்கு தெரியவில்லையா?

ஏற்றுமதி செய்பவர்களுக்கு என்று தனி சலுகைகள் ஏதும் சமீபத்தில் வழங்கப் படவில்லை. ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் இறக்குமதியை குறைக்கவும்  சரியான நடவடிக்கை எடுக்கப் படவில்லை. தங்கம் இறக்குமதிக்கும் ,கலர் டிவி இறக்குமதிக்கும் மட்டும் வரிவிதித்து விட்டால் நிலமை சரியாகி விடுமா?திறமையற்ற நிதி அமைச்சரின் கீழ் இந்தியாவின் பொருளாதாரம் தள்ளாடுகிறது.. அமைதியான பிரதம மந்திரி இன்னும் அமைதியையே காக்கின்றார்.  சரிவிலிருந்து இந்திய பொருளாதாரத்தையும் மக்களையும் காக்க யார் முயற்ச்சி எடுப்பார்??

Tuesday, August 27, 2013

மகான் கள் என்ற பெயரில் ஏமாற்றும் ஒநய்கள்.

மனிதன்  தவறு செய்யலாம். ஆனால் மகான் என்ற போர்வையில்  தவறு செய்யும் போதுதான் இழிவு உனக்கு மட்டுமல்ல நீ சார்ந்த மதத்தையும்  பாதிக்கின்றது. மைனர் பெண்ணிடம்  சந்நியாசி  பாலியல் குற்றம் புரிந்தார். உன்னால் எங்களுக்கும் கேவலம். ஒருவரல்ல இருவரல்ல பலர். நித்தியானந்தா,, பிரேமானந்தா  வரிசையில் இன்று  நீயும் சேர்ந்து விட்டாய்.உன்னை பின் பற்றி எத்தனை பக்தர்கள்.? உனக்கு ஆதரவு தர ஒரு அரசியல் கட்சி  பிஜேபி என்ற பெயரில்.

ஏற்கனவே  டெல்லி  பெண்  பாலியல் பலாத் காரத்தின் போதே நீ  சகோதரா என்னை  விட்டு விடு என்று சொல்லியிருந்தால் விட்டிருப்பான் என்று ஒரு புது வியாக்ஞானம்  சொல்லியிருந்தாய். அன்றே மக்கள் உன்னை அடையாளம் காண தவறி விட்டனர்.
லஞ்சம்  வாங்கிய  குற்றத்தை  செய்தவனை நீதி தண்டிக்கின்றது அதன் பின்  வேலையும் இழக்கின்றான் . ஆனல் உன்னைப் போல் தவறு செய்தவன் தண்டனையில் இருந்து  வெளியே  வந்தபின் அதே தவறை செய்கிறீர்கள். மக்களும் பைத்தியக்காரர்கள்போல் உங்களை பின் பற்றுகின்றனர். சமீபத்திய உ.ம். நித்தியானந்தா. !!
அரசு   நடவடிக்கை எடுக்குமா? இவர்களை போல்  தீயவர்களால்   நல்ல ஞானிகளின் பெயருமல்லவா கெடுகிறது..

Thursday, August 15, 2013

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள். ந்ட்புடன் உங்கள்  நண்பன் பெ.ரெங்கசாமி