Tuesday, November 13, 2018

2019 பாராளுமன்ற தேர்தலை வெல்ல போவது யார்???

            2019 பாராளுமன்ற  தேர்தலில்  யார் வெற்றி பெறுவார்? காங்கிரஸா அல்லது பாஜகவா   ?  2014 இல்  இவை இரண்டும் பெற்ற  வோட்டு சதவீதத்தை பார்த்தால்  காங்கிரஸ்  இந்த ஜென்மத்தில்  மீண்டும் வெற்றி பெற முடியாது
             பாஜக பெற்ற  மொத்த ஓட்டுக்கள்  17 கோடியே  16 லட்சத்தை தாண்டுகிறது.வோட்டு  சதவீதம் என்று   பார்த்தால் 31%
காங்கிரஸ்  பெற்ற மொத்த மொட்டுக்கள்  10  கோடியே  6 லட்சம் ஓட்டுக்கள். ஒட்டு சதவீதம் 19.5%


         இரண்டிற்கும் இடையே  உள்ள ஒட்டு  வித்தியாச எண்ணிக்கை  6 கோடியே 47 லட்சத்திற்கு மேல் இருக்கிறது.

        இந்த இடை  வெளிக்கு முக்கிய  காரணம்  காங்கிரஸ்  கூட்டணி  ஆட்சியின் போது  நடந்த  ஊழல்கள் தான். முக்கியமாக திமுக வின் ஆ.ராசா  மீது 2 ஜி  ஊழல் மற்றும் லாலு பிரசாத்தின் கால் நடை தீவன ஊழல். இவை இரண்டும்   காங்கிரசின் மீது வெறுப்பை  உண்டாக்க முக்கிய காரணம்.
அடுத்து  பிரதமர் மன்மோகன்  சிங்கின் மீது குற்றச் சாட்டுக்கள் ஏதும்  இல்லை என்றாலும் கூட்டணி  கட்சிகளை  அடக்கி ஆள  தெரியவில்லை என்ற குற்ற சாட்டும்,,முடிவுகளை  இவர் எடுக்கவில்லை சோனியா காந்திதான் எடுத்தார் என்ற எதிர்க்கட்சிகளின் குற்ற  சாட்டும் மக்களிடம்  பிரதமர்  பற்றிய  மதிப்பை குறைக்க  காரணமாயிற்று..

அதே  நேரத்தில்  குஜராத்  முதல்வராய் மோடி  சிறப்பாக ஆட்சி   செய்கிறார்
அவரை பிரதமர்  ஆக்கினால்  ஊழால்  அற்ற  சிறந்த ஆட்சி தருவார்  என்ற பாஜகவின் பிரச்சாரம் மக்களிடம்  எடு பட்டது.
மிகவும் முக்கியமானது மோடியின் பேச்சு  திறமையும்  அவரை ஊடகங்கள்  அளவுக்கு  அதிகமாய் ஆதரித்த  விதமும்  பாஜகவிற்கு பெரிதும் கை  கொடுத்தது..
       இந்த  நேரத்தில்  உலக அளவில்  ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியில்  இந்தியாவின்  பொருளாதார நிலையை கட்டுக்குள்  வைத்திருந்த பிரதமரின் திறமை யார் கண்ணுக்கும் தெரியாமல் போயிற்று..
விளைவு  காங்கிரஸ்  வெறும் 44  பாராளுமன்ற  இடங்களை மட்டுமே பெற்றது. பாஜக  282  இடங்களை பெற்று  ஆட்சியை கை  பற்றியது.  இதில்  முக்கியமாக  கவனிக்கப் பட வேண்டிய ஒன்று  பெரும்பான்மைக்கு தேவையான  272 விட  10  உறுப்பினர்களைத்தான்  பாஜக பெற்றது. அந்த 10 இடங்களையும் இடை  தேர்தல்களில் இழந்து  தற்போது   272  இடங்களைத்தான் வைத்துள்ளது.
பாஜகவை காங்கிரஸ்  வீழ்த்த முடியுமா?
----------------------------------------------------------------
    பாஜகவை  வீழ்த்த  காங்கிரசிற்கு தேவை  மாநில  அளவிலான  கூட்டணி.
தற்போது  காங்கிரஸ்  கட்சி மீது பெரிதாக எதிர்ப்பு அலை  என்று ஒன்றும் இல்லை.  அடுத்து சிறந்த ஆட்சியாளர்  மோடி என்ற பெயருக்கு களங்கம் கற்பிக்கும்  விதமாக  இவர் எடுத்த  பண  மதிப்பிழப்பு  நடவடிக்கையும் , ஜிஸ்டி வரி விதிப்பை இவர் நடை முறை  படுத்திய விதமும்  பிரதமருக்கு நல்ல பெயரை தரவில்லை.

             சென்ற  தேர்தலில்  வறுமை கோட்டுக்கு  கீழ்  உள்ள மக்கள் நம்பும் விதமாக  இவர் அளித்த  உறுதி மொழி  அயல் நாட்டில்  பதுக்கி வைக்கப்  பட்டுள்ள  கறுப்புப் பணம் அனைத்தையும் கொண்டு வருவேன் . உங்களின்  வாங்கி கணக்கில்  ரூ 15 லட்சம் போடுவேன்  என்று உறுதி  அளித்தார். ஒரு ரூபாய்  கூட   போடவில்லை.
          அடுத்து ஆண்டுக்கு  2 கோடி  பேருக்கு வேலை வாய்ப்பு தருவேன்  என்றார். உண்மையில் 4 1/2 ஆண்டில் மொத்தம் 1 கோடி  பேருக்கு  கூட வேலை வாய்ப்பு தரவில்லை. சொல்லப் போனால்  .பணமிப்பிழப்பு  நடவடிக்கையால் சிறு மற்றும் நடுத்தர தொழில்களும்,  வியாபாரங்களும் முடங்க ஆரம்பித்து விட்டன.
     கொடுத்த  பல வாக்குறுதிகளை  மறந்து விட்டார். இவர் ஆட்சியில் மத்திய அமைச்சர்கள் என்று எடுத்து கொண்டால்  திரு.ஜெட்லீ,நிர்மலா சிதாராமன்,
ரவி சங்கர் பிரசாத்  இந்த 3 அமைச்சர்கள் பெயர்தான் நினைவுக்கு வருகிறது. இவர்களும்  தஙகள்  துறை  சம்பந்த பிரச்சனைகளை விட  பிரதமர் பற்றி எழும்  சந்தேகங்களுக்கு  விளக்கங்களை  விவாதங்களில்  சொல்ல மீடியாவிற்கு வருவதால் தான் தெரிகிறார்கள். மற்ற படி தங்கள் துறையில் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. காரணம் அனைத்து துறை சம்பந்த பட்ட அறிவிப்புகளையும்  பிரதமர்  மோடி தான் அறிவிக்கிறார்.

           ஒரு  சிறு  புள்ளி விவரம்  சமீபத்தில் மீடியாவில் விவாதிக்கப் பட்டது அதில் இது வரை மொத்தம் மத்திய அரசால்  161 திட்டங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன ஆனால் அவை அனைத்தையும் பிரதமர் தான் அறிவித்துள்ளார். தமிழகத்தில்  முன்பு  ஜெயலலிதா ஆட்சியின் போது  அனைத்து திட்டங்களையும்  அவர் தான் அறிவிப்பார்.  அமைச்சர்கள்  வெறும் மேஜையை தான்  தட்டுவார்கள். அமைச்சர்கள் ஒருவரின்   .பெயரும்    மக்களுக்கு  தெரியாது . இன்று  பாஜகவின் நிலையும் இது தான்.

        சமீபத்தில் ராணுவ விமானங்கள் வாங்குவது பற்றி  பிரச்சினை எழுந்துள்ளது. இது நீதி மன்றத்திற்கு செல்வதால்  நான் இதை விவாதிக்கவில்லை. ஆனால் ஊழல்  அற்ற  ஆட்சி தருவேன்  என்ற  உறுதி மொழியில்  ஒரு கரை பட்டு விட்டது என்பது உண்மை.

      இவை அனைத்தையும்  காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எந்த  அளவுக்கு  மக்களிடம்  எடுத்து  செல்கிறது என்பதை பொறுத்து தான்  காங்கிரஸ் கூ ட்டணியின் வெற்றி  அமையும்.

     அடுத்த பதிவில்  கூட்டணி  காட்சிகள்  மற்றும்   புள்ளி  விவரங்கள் காங்கிரசிற்கு  சாதகமாய் உள்ளதா  என்று பார்க்கலாம். 

No comments:

Post a Comment