Friday, November 16, 2018

INDIA TODAY TV`s biased Political Stock Exchange

The India Today  TV `s  Political Stock Exchange  is a biased opinion poll  I have ever seen. According to their opinion poll  Prime minister Modi`s popularity rating  in Tamil Nadu is 29%. But in the last year  R.K. Nagar  assembly election  his party is competing with NOTA.

If the Prime Minister popularity is 29%  then the BJP`s votes should be something around 30,000 votes, but  his party polled just 3,000 votes  only. This shows that Modi`s popularity  have not converted in to votes. Instead of conducting  their opinion poll  on presidential form of election, If  India Today TV  conducts  their  opinion poll  on party basis it may give them  at least some  realistic result in future.

2014 இல் மோடியின் 12 உறுதி மொழிகள். 2018 இல்???

           2014 இந்தியாவை  முன்னேற்றுவோம்.1)ஊழலை ஒழிப்போம். 2)அனைவருடைய வங்கி கணக்கிலும்  ரூ .15 லட்சம் போடுவோம். 3)ஆண்டுக்கு  2 கோடி வேலை வாய்ப்பு தருவோம்.  4)கறுப்பு பணத்தை வெளியே  கொண்டு வருவோம்.5)தீவிரவாதத்தை ஒழிப்போம். 6)வங்கிகளுக்கு  வர வேண்டிய வாரா  கடன்களை  கடன் பெற்றவர்களிடம் இருந்து  வசூலிப்போம்.7) டிஜிட்டல் இந்தியாவாக இந்தியாவை மாற்றி  பண பரிவர்த்தனையை குறைப்போம். 8)விவசாயிகளின் உற்பத்திக்கு குறைந்த பட்சம் 50% அதிகம்  விலை கிடைக்க  வழி செய்வோம்..9) ரூ 57 இல் இருக்கும்  பெட்ரோல்  விலையை குறைப்போம்.10) 20,000 கோடி செலவில்  கங்கையை சுத்தம் செய்வோம்.11) 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவோம் 12). 60 மாதங்கள் எனக்கு வாய்ப்பு கொடுங்கள் இந்தியாவை மாற்றி காட்டுகிறேன்

          2018:  நேரு  குடும்பத்தை தவிர வேறு ஒருவரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக கொண்டு வர முடியுமா??

      ஏற்கனவே  நேரு குடும்பத்தை சேராதவர்கள் 9 பேர்  33 ஆண்டுகள்  காங்கிரஸ் கட்சியின்  தலைவர்களாக  இருந்துள்ளனர். முக்கியமாக தமிழகத்தில் இருந்து கர்ம வீரர் காமராஜர் காங்கிரஸ் தலைவராக  இருந்துள்ளார்.

Thursday, November 15, 2018

பாஜக வா அல்லது காங்கிரசா?? யார் சாதனை. அதிகம்.

           பிரதமர் மோடி  பல சாதனைகளை செய்துள்ளார். Demonetisation,G.ST ,  Surgical  Strike  என்று பல. ஆனால் காங்கிரஸ் அனுதாபி என்ற முறையில் சில புள்ளி  விவரங்களை  சொல்ல விரும்புகிறேன். இவை அனைத்தும் நான் படித்து அறிந்ததுதான்.

       இந்தியாவில்  முதல் ஐஐடி  ஆரம்பிக்கப் பட்டது 1950. அதாவது  மோடி பிறந்த வருடம்,..
       கிராம புரங்களுக்கு மின்சாரம்  கொண்டு வரும் திட்டம் . இது ஆரம்பிக்கப் பட்டது  1947 இல். அதாவது  மோடி பிறப்பதற்கு 3 ஆண்டுகள் முன்பு. இதில் 97%  கிராமங்களுக்கு மோடி  பிரதமராவதற்கு முன்  மின்இணைப்பு  வழங்கப் பட்டது.  3% அதிகம் கொடுத்து விட்டு தற்போது 100% வீதம் பாஜக மின் இணைப்பு வழங்கியதாக பாஜக சொல்கிறது.

        இந்தியாவில் முதல் டிராக்டர் தொழிற்சாலை ஆரம்பிக்கப் பட்டது 1947 இல்.    இதுவும் மோடி பிறக்கும்  முன் ஆரம்பிக்கப் பட்டது. ஆனால் விவசாயத்தில்  டிராக்டர்  கொண்டு  வந்து  விவசாயத்தை  முன்னேற்றியதாக  ஒரு கணக்கை பாஜக சொல்கிறது.

      இந்தியாவில் பசுமை புரட்சியை (Green Revaluation)  1958  இல் இந்தியாவில் அறிமுக படுத்திய போது மோடிக்கு வயது 8.

     அதானி  தவிர்த்து தாற்போது மோடியுடன்  இருக்கும் ரிலையன்ஸ் ,பிர்லா,காட்ரேஜ் ,மஹேந்திரா ,டாட்டா  போன்ற நிறுவனங்கள் மோடி பிரதமர் ஆவதற்கு முன்னே  இந்தியாவின் தொழில்  துறையில் நல்ல முன்னேற்றம் கண்ட  நிறுவனங்கள்

     பாகிஸ்தானுடன்  4 முறை போர் செய்திருக்கிறது  இந்தியா. அதில் 1971 ஆம் ஆண்டு போரில் 93,000 பாக். வீரர்களை இந்தியா  போர் கைதிகளாக பிடித்தது. . 8 மாதங்கள் கழித்து சமரச முயற்சிக்கு பின் விடுதலை செய்தது
 இந்தியா. 

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கில்  இந்தியா  38 தீவிரவாதிகளையும், 2 பாக். 
 போர் வீரர்களையும் கொன்றது.

சொல்ல வேண்டும் என்று தோன்றியது. ஹிமம்



Tuesday, November 13, 2018

சமையல் கான்ரக்ட்டிற்க்கும் ரஃபேல் கன்ராக்டிற்க்கும் சம்பந்தம் இல்லை.

எங்கள்  வீட்டில்  நடக்க இருக்கும்  திருமணத்திற்கு  சமையல் செய்ய  ஒரு சிறந்த  சமையல் கான்டராக்டரை தேர்வு செய்ய  குடும்பத்தில் முடிவு செய்தோம் . தேர்வு செய்ய சில வரை முறைகளை  வரையறுத்தோம் .

1)  முதலில்  குறைந்த பட்சம் 10  ஆண்டுகள்  சமையல்  அனுபவம்  இருக்க வேண்டும்.
2)  அவரிடம் வேலை பார்ப்பவர்கள் எத்தனை பேர் . 
3)  சமையல் செய்ய எத்தனை பேர்  வருகிறார்கள் ? பரிமாற  எத்தனை பேர் வருகிறார்கள்.
4) இதற்க்கு முன் எத்தனை கல்யாணங்களில் சமைத்திருக்கிறார். 
5)  அவர் சமையல் ருசி  எப்படி என்பதை அவருக்கு  ஆர்டர் கொடுக்குமுன்  யாராவது 2 பேர்  அவர் செய்யும்  கல்யாண வீட்டில் சென்று ருசி பார்த்து விட   வேண்டும்..
6) சமையல்  காரருக்கு   இலை கணக்கில்  விலை நிர்ணயிப்பதா அல்லது லேபர்  காண்ட்ராக்ட்  கொடுப்பதா??

இத்தனையும் அலசி ஆராய்ந்த   பின் மதுரையில் இருந்து  நாயுடு  கேட்டரிங் 
சர்விஸஸ்  என்ற  நிறுவனத்திற்கு கான்டராக்ட்  கொடுத்தோம்.

2019 பாராளுமன்ற தேர்தலை வெல்ல போவது யார்???

            2019 பாராளுமன்ற  தேர்தலில்  யார் வெற்றி பெறுவார்? காங்கிரஸா அல்லது பாஜகவா   ?  2014 இல்  இவை இரண்டும் பெற்ற  வோட்டு சதவீதத்தை பார்த்தால்  காங்கிரஸ்  இந்த ஜென்மத்தில்  மீண்டும் வெற்றி பெற முடியாது
             பாஜக பெற்ற  மொத்த ஓட்டுக்கள்  17 கோடியே  16 லட்சத்தை தாண்டுகிறது.வோட்டு  சதவீதம் என்று   பார்த்தால் 31%
காங்கிரஸ்  பெற்ற மொத்த மொட்டுக்கள்  10  கோடியே  6 லட்சம் ஓட்டுக்கள். ஒட்டு சதவீதம் 19.5%


         இரண்டிற்கும் இடையே  உள்ள ஒட்டு  வித்தியாச எண்ணிக்கை  6 கோடியே 47 லட்சத்திற்கு மேல் இருக்கிறது.

        இந்த இடை  வெளிக்கு முக்கிய  காரணம்  காங்கிரஸ்  கூட்டணி  ஆட்சியின் போது  நடந்த  ஊழல்கள் தான். முக்கியமாக திமுக வின் ஆ.ராசா  மீது 2 ஜி  ஊழல் மற்றும் லாலு பிரசாத்தின் கால் நடை தீவன ஊழல். இவை இரண்டும்   காங்கிரசின் மீது வெறுப்பை  உண்டாக்க முக்கிய காரணம்.
அடுத்து  பிரதமர் மன்மோகன்  சிங்கின் மீது குற்றச் சாட்டுக்கள் ஏதும்  இல்லை என்றாலும் கூட்டணி  கட்சிகளை  அடக்கி ஆள  தெரியவில்லை என்ற குற்ற சாட்டும்,,முடிவுகளை  இவர் எடுக்கவில்லை சோனியா காந்திதான் எடுத்தார் என்ற எதிர்க்கட்சிகளின் குற்ற  சாட்டும் மக்களிடம்  பிரதமர்  பற்றிய  மதிப்பை குறைக்க  காரணமாயிற்று..

அதே  நேரத்தில்  குஜராத்  முதல்வராய் மோடி  சிறப்பாக ஆட்சி   செய்கிறார்
அவரை பிரதமர்  ஆக்கினால்  ஊழால்  அற்ற  சிறந்த ஆட்சி தருவார்  என்ற பாஜகவின் பிரச்சாரம் மக்களிடம்  எடு பட்டது.
மிகவும் முக்கியமானது மோடியின் பேச்சு  திறமையும்  அவரை ஊடகங்கள்  அளவுக்கு  அதிகமாய் ஆதரித்த  விதமும்  பாஜகவிற்கு பெரிதும் கை  கொடுத்தது..
       இந்த  நேரத்தில்  உலக அளவில்  ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியில்  இந்தியாவின்  பொருளாதார நிலையை கட்டுக்குள்  வைத்திருந்த பிரதமரின் திறமை யார் கண்ணுக்கும் தெரியாமல் போயிற்று..
விளைவு  காங்கிரஸ்  வெறும் 44  பாராளுமன்ற  இடங்களை மட்டுமே பெற்றது. பாஜக  282  இடங்களை பெற்று  ஆட்சியை கை  பற்றியது.  இதில்  முக்கியமாக  கவனிக்கப் பட வேண்டிய ஒன்று  பெரும்பான்மைக்கு தேவையான  272 விட  10  உறுப்பினர்களைத்தான்  பாஜக பெற்றது. அந்த 10 இடங்களையும் இடை  தேர்தல்களில் இழந்து  தற்போது   272  இடங்களைத்தான் வைத்துள்ளது.
பாஜகவை காங்கிரஸ்  வீழ்த்த முடியுமா?
----------------------------------------------------------------
    பாஜகவை  வீழ்த்த  காங்கிரசிற்கு தேவை  மாநில  அளவிலான  கூட்டணி.
தற்போது  காங்கிரஸ்  கட்சி மீது பெரிதாக எதிர்ப்பு அலை  என்று ஒன்றும் இல்லை.  அடுத்து சிறந்த ஆட்சியாளர்  மோடி என்ற பெயருக்கு களங்கம் கற்பிக்கும்  விதமாக  இவர் எடுத்த  பண  மதிப்பிழப்பு  நடவடிக்கையும் , ஜிஸ்டி வரி விதிப்பை இவர் நடை முறை  படுத்திய விதமும்  பிரதமருக்கு நல்ல பெயரை தரவில்லை.

             சென்ற  தேர்தலில்  வறுமை கோட்டுக்கு  கீழ்  உள்ள மக்கள் நம்பும் விதமாக  இவர் அளித்த  உறுதி மொழி  அயல் நாட்டில்  பதுக்கி வைக்கப்  பட்டுள்ள  கறுப்புப் பணம் அனைத்தையும் கொண்டு வருவேன் . உங்களின்  வாங்கி கணக்கில்  ரூ 15 லட்சம் போடுவேன்  என்று உறுதி  அளித்தார். ஒரு ரூபாய்  கூட   போடவில்லை.
          அடுத்து ஆண்டுக்கு  2 கோடி  பேருக்கு வேலை வாய்ப்பு தருவேன்  என்றார். உண்மையில் 4 1/2 ஆண்டில் மொத்தம் 1 கோடி  பேருக்கு  கூட வேலை வாய்ப்பு தரவில்லை. சொல்லப் போனால்  .பணமிப்பிழப்பு  நடவடிக்கையால் சிறு மற்றும் நடுத்தர தொழில்களும்,  வியாபாரங்களும் முடங்க ஆரம்பித்து விட்டன.
     கொடுத்த  பல வாக்குறுதிகளை  மறந்து விட்டார். இவர் ஆட்சியில் மத்திய அமைச்சர்கள் என்று எடுத்து கொண்டால்  திரு.ஜெட்லீ,நிர்மலா சிதாராமன்,
ரவி சங்கர் பிரசாத்  இந்த 3 அமைச்சர்கள் பெயர்தான் நினைவுக்கு வருகிறது. இவர்களும்  தஙகள்  துறை  சம்பந்த பிரச்சனைகளை விட  பிரதமர் பற்றி எழும்  சந்தேகங்களுக்கு  விளக்கங்களை  விவாதங்களில்  சொல்ல மீடியாவிற்கு வருவதால் தான் தெரிகிறார்கள். மற்ற படி தங்கள் துறையில் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. காரணம் அனைத்து துறை சம்பந்த பட்ட அறிவிப்புகளையும்  பிரதமர்  மோடி தான் அறிவிக்கிறார்.

           ஒரு  சிறு  புள்ளி விவரம்  சமீபத்தில் மீடியாவில் விவாதிக்கப் பட்டது அதில் இது வரை மொத்தம் மத்திய அரசால்  161 திட்டங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன ஆனால் அவை அனைத்தையும் பிரதமர் தான் அறிவித்துள்ளார். தமிழகத்தில்  முன்பு  ஜெயலலிதா ஆட்சியின் போது  அனைத்து திட்டங்களையும்  அவர் தான் அறிவிப்பார்.  அமைச்சர்கள்  வெறும் மேஜையை தான்  தட்டுவார்கள். அமைச்சர்கள் ஒருவரின்   .பெயரும்    மக்களுக்கு  தெரியாது . இன்று  பாஜகவின் நிலையும் இது தான்.

        சமீபத்தில் ராணுவ விமானங்கள் வாங்குவது பற்றி  பிரச்சினை எழுந்துள்ளது. இது நீதி மன்றத்திற்கு செல்வதால்  நான் இதை விவாதிக்கவில்லை. ஆனால் ஊழல்  அற்ற  ஆட்சி தருவேன்  என்ற  உறுதி மொழியில்  ஒரு கரை பட்டு விட்டது என்பது உண்மை.

      இவை அனைத்தையும்  காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எந்த  அளவுக்கு  மக்களிடம்  எடுத்து  செல்கிறது என்பதை பொறுத்து தான்  காங்கிரஸ் கூ ட்டணியின் வெற்றி  அமையும்.

     அடுத்த பதிவில்  கூட்டணி  காட்சிகள்  மற்றும்   புள்ளி  விவரங்கள் காங்கிரசிற்கு  சாதகமாய் உள்ளதா  என்று பார்க்கலாம். 

Sunday, November 11, 2018

இலவசமாய் பெற்ற கல்வியை திருப்பி தருவீர்களா?? மக்களே யோசியுங்கள்..

           இலவசங்கள்  தருகிறோம் என்று அரசியல் கட்சிகள் சொல்லும் போது மக்கள் எதிர்த்திருந்தால், இன்று  எடபாடி பழனிசாமி திமிராக கல்வியை இலவசமாய் தருகிறோம்  திருப்பிக் கொடுத்து விடுவீர்கள என்று கேட்டிருப்பாரா??

        கல்வியை மக்களுக்கு தர வேண்டியது அரசின் கடமை . பல அயல் நாடுகளில் கல்வி இலவசமாக வழங்கப் படுகிறது. முன்னேறிய  அமெரிக்காவில் கூட  குறிப்பிட்ட வருமானத்திற்க்கு கீழ் உள்ளவர்களுக்கு பள்ளி கல்வி இலவசமாய் வழங்கப் படுவது எ.ப.சாமிக்கு தெரியாது.

          எ.பா.சாமிக்கு  தெரியாத ஒன்று இவருடைய தலைவி " அம்மா" தன் சொந்த காசில் இருந்து இலவசமாய்  மிக்சி கிரைண்டர் தரவில்லை.. இலவசங்கள்  கொடுத்தது மக்களிடம் இருந்து வசூலித்த வரியில் இருந்து.
இனியும்  அம்மா கொடுத்தார்கள்,அம்மா கொடுத்தார்கள்  என்று எந்த அரசியல் வாதியும் கூறாதிர்கள். அரசு கொடுத்த இலவசம் என்று வேண்டுமானால் சொல்லி கொள்ளுங்கள். இலசவசங்கள் கொடுத்தோம் என்று சொல்வது பெருமை இல்லை. அசிங்கம்.

இவர்கள் வழங்கும் ஒரு ஆண்டு இலவசங்களுக்கு  தேவையான தொகை ரூ.5210 கோடி.இப்போழுது வேலை செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டிக்கு 25,000. வேறு.இந்த தொகை  எங்கிருந்து அரசுக்கு கிடைக்கிறது.என்று எ.ப.சாமிக்கு தெரியுமா. மக்களின் வரிப் பணத்தில் இருந்து!!! மக்களை டாஸ்மாக்கில் குடிக்க வைத்து அதில் கிடைக்கும் லாபத்தில் இருந்து.

             சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கடந்தும்  ரூ. 2000  கொடுத்து கூட மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியாமல் இருப்பது,நாட்டிற்க்கு கேவலம்.

            மக்களின் வாழ்க்கை  தரத்தை உயர்த்த என்றாவது இந்த அரசியல்வாதிகள் நினைத்திருப்பார்களா?? அப்படி நினைத்திருந்தால் என்றோ இந்த நாடு முன்னேறி இருக்குமே. இவர்கள் நினைக்க மாட்டார்கள். காரணம் ஏழையாய், படிப்பறிவு இல்லாதவனாய் தமிழக மக்கள்  இருக்கும் வரைதான் இவர்கள் கதை ஒடும்,

           மக்கள் என்று ஒட்டுக்கு  இலவசங்கள் பெறுவதை எதிர்க்கிறார்களோ அன்று தான் நாடு முன்னேறும். அரசியல்வாதிகளும் திருந்துவார்கள்.