Saturday, November 26, 2016

வரை படம் பார்த்து பங்குகள் வாங்குவது எப்படி ??

ஒரு பங்கின்  5 நாள், 30 நாள் மற்றும் அந்த பங்கு  அதன் அடி  மட்ட விலை அடைந்து விட்டால் வாங்கலாமா என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.கீழே உள்ள படத்தில்  ஐ சி ஐ சி  வங்கியின் பங்குகள் தொடர்ச்சியாக 5 தினங்களும்  சரிந்து கொண்டிருப்பதை காண்கிறீர்கள். வங்கியின் நிதி நிலை நன்றாக உள்ளது, நல்ல மேனேஜ்மென்ட், இந்த காலாண்டு லாபமும் ஈட்டி உள்ளது. இருந்தும் பங்கின் விலை சரிந்துள்ளது.  காரணம்  சந்தையின் ஏற்ற  இறக்கத்திற்க்கு  ஏற்றவாறு    விலை ஏறி இறங்கும்  வங்கிகளில் ஐசி ஐ சி ஐ வங்கியும் ஒன்று.  ஆகையால் இதில் முதலீடு செய்தவர்கள் கவலைப் பட வேண்டாம் அதே சமயம்  சந்தையில்  சென்செக்ஸ்  ஏறும் போது துணிந்து இந்த பங்கை வாங்கலாம்.

5 தினங்களில்  18 ரூபாய் சரிந்திருந்தாலும் நிச்சயம் விலை ஏறக் கூடிய பங்குகளில் இதுவும் ஒன்று. இது போன்ற வங்கிகளின் பங்கை வாங்கு முன் நீங்கள்   கவனிக்க வேண்டிய ஒன்று  சென்செக்ஸ் ஏறுமுகமாய் உள்ளதா அல்லது அதன் அதிகப் படியான நிலையில் உள்ளதா என்பது மட்டுமே.  உதாரணத்திற்க்கு   சென்செக்ஸ்  இன்று கிட்ட தட்ட 26,000 புள்ளிகளிலும்,நிஃப்டி 8000 புள்ளிகளிலும் உள்ளது.  சமீபத்தில் அரசின் அறிவிப்பால்  சற்றே சரிவை வங்கியின் பங்குகள்  சந்தித்தாலும் விரைவில் சென்செக்ஸ் 29,000 புள்ளிகளையும் நிஃப்டி 9000 த்தையும் தொடும். ஆகையால் விலை சரிந்துள்ல நிலையில் இந்த மாதிரி பங்குகளை வாங்குவது நல்லது. iஇன்றைய   விலை 260 இல் இருந்தாலும் நிச்சயம் இந்த பங்கு 300  விரைவில் தொடும். அதற்க்கு முன் முதலில் இன்னும்  ஓரிரு நாட்கள் பொறுத்திருந்து   அரசின் முடிவால் மேலும்  சரிவு ஏற்படுமா என்பதை பார்த்து விட்டு பிறகு இந்த பங்கை வாங்கலாம்.

அடுத்து சமீபத்தில்   IDFC  இன்   பங்குகள் எவ்வாறு 30 தினங்களில் ஏறின என்பதையும் அடுத்த வரை படத்தில் காண்போம்.


சமீபத்தில்  IDFC   பங்குகள்  எவ்வாறு 30 தினங்கள் ஏறின என்பதை இந்த   வரை படம் காட்டுகிறது. நல்ல லாபம் , மேலும் விரிவடைவதற்கு  உண்டான வாய்ப்பு   இதன் காரணமாக இந்த பங்கு தொடர்ச்சியாக ஏறுமுகமாக சமீபத்தில் காணப் பட்டது. ஆக 5 நாள் மற்றும் 30 நாள் வரை படங்களை காணும் பொது உங்களுக்கு இந்த பங்கில்  முதலீடு  செய்வது பற்றி ஒரு முடிவு கிடைக்கும்..  அடுத்த வாரம் மேலும் சில வரை படங்கள் மூலம் எவ்வாறு   எப்போழுது பங்குகள் வாங்கலாம்  என்று பார்க்கலாம்.















































Sunday, November 20, 2016

           சென்ற பதிவில் பங்கு சந்தையின்  ஏற்ற  இற்க்த்திற்கு  ஏற்ற வாறு
எப்படி பங்குகள்   ஏறும் அல்லது இறங்கும் என்பதை பற்றி  பார்த்தோம். இந்த பதிவில்    மத்திய புள்ளி  Pivot Point  ஐ ஆராய்ந்து எப்படி முதலீடு  செய்வது என்று பார்ப்போம். கிழே  கொடுத்துள்ள வரை படத்தில்  ICICI  வங்கியின்  பங்குகள் எவ்வாறு ஏறுகிறது  மற்றும் இறங்குகிறது என்று
பார்ப்போம்.


வர்த்தகம் ஆரம்பிக்கும் போது  பங்கின் விலை ரூ. 264 இல் உள்ளது  அன்றைய  பங்கின் விலை  எடுத்தவுடன்  Pivot Point  இற்க்கு   கீழே தான்  ஆரம்பிக்கிறது. பின் சரிய தொடங்குகிறது.  எப்போழுது  Pivot point  இற் க்கு கீழே பங்கின் ஆரம்ப விலை  தொடங்குகிறதோ அன்று  90%   பங்கின் விலை  அதற்க்கு மேல் ஏற  வாய்ப்பில்லை.. இறங்கும் பங்கின் விலை  அதன்
Support Price ஆன ரூ 260 க்கு   கீழ் இறங்க வில்லை என்பதை கவனிக்கவும். 4 முறை  ரூ.260 க்கு வந்து பின் மேலே தான் ஏறி உள்ளது. பங்கு சந்தையில்   நன்கு  அனுபவம் பெற்றவர்கள்  இந்த  சப்போர்ட் விலை வந்தவுடன் பங்கை மொத்தமாக வாங்குவார்கள். உதாரணத்திற்கு    ரூ . 260  க்கு 400 பங்குகள் வாங்கி  அதன்  உச்ச கட்ட விலை 263 க்கு விற்று  விடுவார்கள். கிடைக்கும் லாபம் கிட்டத்தட்ட  1 லட்ச ரூபாய்   முதலிட்டுக்கு  1,200 ரூபாய் கிடைக்கும். அதாவது 3 x  400 = 1.200. ஒரு  நாளில்  உங்கள் முதலீ ட்டுக்கு கிடைக்கும் வருமானம்  போதுமானது என்று நினைக்கின்றேன். இதில் கவனிக்க வேண்டிய மற்றுமொரு விஷயம்  அனுபவம் வாய்ந்த வியாபாரிகள்  margin Money    யை  உபயோகித்து  அதிக லாபம் பெற  முயல்வர்.

இந்த   வரைபடம் நான் எடுத்தது 26.09.2016 இல்  ஆனால் இன்றைய விலை  275.
Medium Term Investment  ஆக  இருந்தால் இந்த 2 மாத காலத்தில் ஒரு பங்கின் விலை ரூ. 15  உயர்ந்துள்ளது.   அப்படியானால் 400 பங்கிற்க்கு உங்களுக்கு கிடைக்கும் லாபம் 6,000 ஆகும்.  வங்கியில் ஒரு லட்சத்திற்க்கு மாத வட்டி 625, இரண்டு மாதத்திற்க்கு என்று கணக்கு வைத்தால் 1250 மட்டுமே.  ஆக பங்கு சந்தை முதலீடு லாபகரமானதுதான் என்பதற்க்கு இது ஒரு உதாரணம்.  இன்னும் சொல்ல போனால்  கடந்த இரண்டு மாதங்களில் இந்திய பங்கு சந்தை பெருமளவில் சரிவடைந்துள்ளது என்பதுதான் உண்மை. இதில் நீங்கள் குறிப்பாக கவனிக்க வேண்டியது எந்த  வகை பங்கில் முதலீடு செய்கிறீர்கள் என்பதுதான். முக்கியமானது.







PUTHIYA MANITHAN: வரைபடம் ( Chart) பார்த்த பின் முதலீடு செய்வது எப்...

PUTHIYA MANITHAN: வரைபடம் ( Chart) பார்த்த பின் முதலீடு செய்வது எப்...: முந்தைய பதிவுகளில்    Technical Analysis and Fundamental Analysis  மூலம்   எப்படி  முதலீடு  செய்யலாம் என்று பார்த்தோம். இந்த பதிவில் ...

வரைபடம் ( Chart) பார்த்த பின் முதலீடு செய்வது எப்படி???

முந்தைய பதிவுகளில்    Technical Analysis and Fundamental Analysis  மூலம்   எப்படி  முதலீடு  செய்யலாம் என்று பார்த்தோம். இந்த பதிவில்   வரை படங்களை
ஆராய்ந்து   எப்படி முதலீடு  செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
4 இல்  3 வகை பங்குகள்  சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்றவாறுதான் ஏறவோ  அல்லது  இறங்கவோ செய்யும் என்று  பார்த்திருக்கிறோம்.  கீழே கொடுத்துள்ள வரை படத்தில் பங்கு சந்தை வரை படத்தில்  கீழ் நோக்கி செல்வதை பார்க்கலாம்.
 இந்த  வரை படத்தில்  சென்செக்ஸ் 28540 இல் இருந்து சரிந்து 28294 க்கு  வந்து சேர்வதை காண்கிறீர்கள்..இந்த வரை படத்தை பார்த்தவுடன்  பங்கு சந்தை இறங்கு முகமாக உள்ளது தெளிவாக தெரிகிறது.
சரி இதற்க்கு ஏற்றார் போல் பங்குகளின் விலை எப்படி இறங்குகிறது என்று அடுத்த படத்தில் பார்க்கலாம். உதாரணத்திற்க்கு நான் எடுத்து கொண்ட பங்கு  ICICI Bank .


ரூ., 269 இல் காலையில் ஆரம்பித்த பங்கின் விலை வியாபாரம் முடியும்   3.30 மணிக்கு ருக்கு. 262 இல் வந்து நிற்கிறது. ஆக சந்தையின் போக்கிற்கு (Market Trend)  ஏற்றவாறுதான் பங்கின் விலை யும் ஏறவோ அல்லது இறங்கவோ செய்கிறது என்பதற்கு இது  நல்ல உதாரணம்.

அடுத்து   குறிப்பிட்ட துறை யின் பங்குகள் எவ்வாறு உள்ளது என்பதையும் பார்த்து விடலாம். ஐ சி  ஐ சி ஐ  வாங்கி என்பதால் வாங்கி துறை யின்  சார்ட் எவ்வாறு உள்ளது என்பதை பார்க்கலாம்.

இங்கே வாங்கி துறை யின் வரை  படமும்  கீழ்  நோக்கி  செல்வதை பார்க்கிறிர்கள்.  ஆக ஒரு  பங்கில் முதலீடு  செய்யுமுன்  மார்க்கெட் ட்ரெண்ட்  எவ்வாறு உள்ளது,  கம்பெனி சார்ந்த துறை யின் சார்ட்   எவ்வாறு உள்ளது என்பதை முதலில் பார்த்து விட்டு பின்  குறிப்பிட்ட கம்பெனியின் வரை படத்தையும் பார்த்து  பின்  முதலீடு  செய்யலாம்.

நாளை  Pivot Point  பார்த்து எப்படி முதலீடு  செய்யலாம் என்று பார்க்கலாம்.