ஆராய்ந்து எப்படி முதலீடு செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
4 இல் 3 வகை பங்குகள் சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்றவாறுதான் ஏறவோ அல்லது இறங்கவோ செய்யும் என்று பார்த்திருக்கிறோம். கீழே கொடுத்துள்ள வரை படத்தில் பங்கு சந்தை வரை படத்தில் கீழ் நோக்கி செல்வதை பார்க்கலாம்.
இந்த வரை படத்தில் சென்செக்ஸ் 28540 இல் இருந்து சரிந்து 28294 க்கு வந்து சேர்வதை காண்கிறீர்கள்..இந்த வரை படத்தை பார்த்தவுடன் பங்கு சந்தை இறங்கு முகமாக உள்ளது தெளிவாக தெரிகிறது.
சரி இதற்க்கு ஏற்றார் போல் பங்குகளின் விலை எப்படி இறங்குகிறது என்று அடுத்த படத்தில் பார்க்கலாம். உதாரணத்திற்க்கு நான் எடுத்து கொண்ட பங்கு ICICI Bank .
ரூ., 269 இல் காலையில் ஆரம்பித்த பங்கின் விலை வியாபாரம் முடியும் 3.30 மணிக்கு ருக்கு. 262 இல் வந்து நிற்கிறது. ஆக சந்தையின் போக்கிற்கு (Market Trend) ஏற்றவாறுதான் பங்கின் விலை யும் ஏறவோ அல்லது இறங்கவோ செய்கிறது என்பதற்கு இது நல்ல உதாரணம்.
அடுத்து குறிப்பிட்ட துறை யின் பங்குகள் எவ்வாறு உள்ளது என்பதையும் பார்த்து விடலாம். ஐ சி ஐ சி ஐ வாங்கி என்பதால் வாங்கி துறை யின் சார்ட் எவ்வாறு உள்ளது என்பதை பார்க்கலாம்.
இங்கே வாங்கி துறை யின் வரை படமும் கீழ் நோக்கி செல்வதை பார்க்கிறிர்கள். ஆக ஒரு பங்கில் முதலீடு செய்யுமுன் மார்க்கெட் ட்ரெண்ட் எவ்வாறு உள்ளது, கம்பெனி சார்ந்த துறை யின் சார்ட் எவ்வாறு உள்ளது என்பதை முதலில் பார்த்து விட்டு பின் குறிப்பிட்ட கம்பெனியின் வரை படத்தையும் பார்த்து பின் முதலீடு செய்யலாம்.
நாளை Pivot Point பார்த்து எப்படி முதலீடு செய்யலாம் என்று பார்க்கலாம்.



No comments:
Post a Comment