Thursday, October 11, 2018

ME TOO .பழி தீர்க்கவா அல்லது விளம்பரத்திற்க்காகவா??

ME TOO  தற்போது  பரபரப்பாக பேசப் படும்  விஷயம்.  ஆரம்பித்து வைத்தது  ஹிந்தி  நடிகை தனுஸ்ரீ . 2008 இல் நடந்த  சம்பவம்.    நடிகர் நானா பிடேகர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.   பிரச்சினை நடந்ததற்கு ஆதாரமாக தான்  காவல் துறையிடம்  புகார் கூறியதையும், அதற்க்கு காவல் துறை நடவடிக்கை எடுக்காததையும்  சொல்லியுள்ளார். அதே போல்  மத்திய வெளியுறவுத் துறை  துணை அமைச்சர்  அக்பர் மீது  பத்திரிகை துறையை சார்ந்த 8 க்கும் மேற்பட்ட  பெண்கள்  பாதிக்கப் பட்டதாக  புகார் கொடுத்துள்ளனர். இவர்கள் கொடுத்துள்ள புகார்கள் நம்பும் படியாக உள்ளது 


ஆனால்  நம் ஊர்  சின்மயி  கொடுத்துள்ள புகார்  நம்பும் படியாக இல்லை.  
வைரமுத்து செய்த  தவறு  என்ன??


சுவிட்சர்லாந்திற்கு  2005 ஆம் ஆண்டு  அல்லது 2006 ஆம் ஆண்டில்  என்று நினைக்கிறேன் . வாழ்க்கையில் மிக மோசமான  நிகழ்வு  எந்த நாள் என்று கூறக்  கூட  சொல்ல வேண்டாம்  எந்த ஆண்டு என்று  கூட   நினைவில் இல்லை !!!  சின்மயிக்கு . அப்படி  பாதிக்கப் பட்டிருந்தால் தானே  நினைவில் நிற்கும்.

அடுத்து வைர முத்து,  ஒருங்கிணைப்பாளர்  மூலம்  என்னையும்  என் அம்மாவையும் மட்டும்  இருக்குமாறு  தெரிவித்தார். !!! நிகழ்ச்சி நடத்திய ஒருங்கிணைப்பாளர்  என்ன  சுவிட்சர்லாந்தில்  மாமா  வேலையா பார்த்துக் கொண்டிருக்கிறார். இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்த தமிழர் அவர்.

 உண்மையில்  அந்த நிகழ்ச்சி  இலங்கை  தமிழர்களுக்கு  நிதி உதவி செய்ய ஏற்பாடு செய்ய  நடத்தப பட்ட ஒன்று. அதில் வைர முத்து  பணம் ஏதும்  வாங்காமல்  கலந்து கொண்டார்.

தவறு செய்யும் எவனும்  மூன்றாம்   மனிதருக்கு தெரியாமல்  தான் செய்வார். அதுவும் அம்மாவையும்  சேர்ந்து இருக்குமாறு சொல்ல மாட்டான்.
சரி  இதற்குத்தான் கூப்பிட்டார்  என்றால் நீங்கள்  செல்லாமல்  2 தினங்கள் முன்பே வந்து விட்டதாக  கூறியுள்ளிர்கள் . ஆக நடக்காத ஒன்றில் பாதிக்கப் பட்டதாக கூறி   விளம்பரம்  தேடியிருக்கிறார்  சின்மயி.

சுவிட்சர்லாந்தில் இருந்து நிகழ்ச்சி  ஒருங்கிணைப்பாளர்  சுரேஷ்   தெளிவாக  ஒன்றை கூறியுள்ளார். நிகழ்ச்சி நடந்தது  2 தினங்கள். ஆனால் சின்மயியும் அவர்  அம்மாவும் 7 தினங்கள் எங்கள் வீட்டில் இருந்தனர் , திரு வைர முத்து நிகழ்ச்சி முடிந்தவுடன்  சென்னை சென்று விட்டார்.  ஒரு  பாலியல் குற்றத்தை புரிய  வைர முத்துவிற்க்கு துணை போன   சுரேஷ் வீட்டில் இவர்கள் என்  7 நாட்கள்  தங்கியிருந்தனர்.???

சரி  இத்தனையும்  நடந்த பின் இவர் கடந்த 10 ஆண்டுகளில்  வைர முத்துவின்  பாடல்கள் பலவற்றில்   பாடியுள்ளார்.  இப்படி  மோசமான மனிதரை எப்படி  உங்களுடைய   திருமணத்திற்கு அழைத்தீர்கள். அடுத்து அவர்   காலில்  விழுந்து  ஆசிர்வாதம் வேறு  வாங்க வேண்டிய கட்டாயம் என்ன??நீங்கள்  சந்தோஷமாய்   இருப்பது போல் நடிப்பது அடுத்து சான்ஸ்  வேண்டுமென்பதற்காக   என்று எடுத்துக் கொண்டாலும் !!! உங்கள் கருத்துக் படி அப்படி மோசமான ஒரு மனிதரை பார்த்து உங்கள் தாயார்  சந்தோஷப் படக் காரணம் என்ன??  கோபத்தில் குறைந்த பட்சம் முகத்தை சுழித்திருக்க வேண்டாமா. ???


அடுத்து சமீபத்தில் மார்ச்  மாதம் 7ஆம் தேதி 2017 ஆம் ஆண்டு உங்கள் ட்விட்டர்  பக்கத்தில்  பாலியல் பலாத்காரம் பற்றி  ஒரு வீராவேசமான பதிவை  பதிந்துள்ளீயிர்கள். உங்களை பின்பற்றி  58,000 பேர் வேறு. அபொழுதாவது  இந்த செய்தியை சொல்லியிருக்கலாம்.

நான் புகழ் பெற்றவள்  ,எனக்கு நேரம் இருக்கிறது,  மக்கள் ஆதரவு இருக்கிறது  மேலும்  இந்த போராட்டத்தை நடத்ததினால் ஏற்படும் விளைவுகளை   சந்திக்க பணம் இருக்கிறது என்று  எழுதியுள்ளிர்கள் . அப்பொழுதே இதை சொல்லியிருக்க வேண்டியதுதானே.

இது தவிர  3 பேர் என் மீது ஆசிட்   ஊற்றுவேன் என்று ட்விட்டரில்  மிரட்டினார்கள் என்று காவல் துறையிடம்  புகார் கொடுத்து  அவர்களுக்கு
10 நாள் சிறை தண்டனை வாங்கி தந்த புரட்சி பெண் தானே நீங்கள். இப்போது மட்டும் என் 13 ஆண்டு கால தாமதம். புரட்சி பெண் இத்தனை காலம் தூங்கி கொண்டிருந்தாளா??

உண்மையில் இந்த மீ டூ  என்பது பெண்கள் தங்களுக்கு பிடிக்காதவர்களை  பற்றியும், தங்களுக்கு  வாய்ப்பு தராதவர்களைப் பற்றியும்  தவறாக  செய்தி பரப்பி  பழி   தீர்க்கவும், தங்களுக்கு  விளம்பரம் தேடிக் கொள்ளவும் ஆரம்பிக்கப் பட்ட ஒன்று. என்று  தான் தோன்றுகிறது. பெண்கள் அதிகம் வேலை பார்க்கும் ஐ டி  ,மற்றும் வாங்கி சம்பந்தப் பட்ட துறையை  சேர்ந்தவர்களிடம்  இருந்து யாரும் இதில்  கருத்து சொல்லவில்லை.

சினிமாத துறை மற்றும், பத்திரிகை துறை இந்த இரண்டிலும் இருந்தும் நான் மேலே  முதலில் சொன்ன நானா படேகர் மற்றும் எம்,ஜெ,. அக்பர்  விவகாரம்.இவை இரண்டும்  அம்பக் கூடிய வகையில் உள்ளது

மற்றவை அனைத்தும், விளம்பரம் மற்றும் பழி  தீர்க்கும்  செயல்கள் தான்

No comments:

Post a Comment