Friday, September 21, 2018

முத்தலாக் சட்டம் சாதகமா ? பாதகமா??

            மூன்று முறை முத்தலாக் சொல்லி   விவாகரத்து செய்வது  குற்றவியல் சட்டப் படி குற்றம். மத்திய  அமைச்சரவை  சட்டம் இயற்றியது. வரவேற்கப் பட வேண்டிய சட்டம் தான். வாழ்த்துக்கள் பாஜகவுக்கும்  மோடிக்கும்.
ஆனால் அப்படி  செய்யும்  முஸ்லீம் ஆணுக்கு  நீங்கள் கொடுத்துள்ள  சட்ட விதி முறைகள்தான்  மிகவும்  கடுமையாக உள்ளது.

1} பாதிக்கப் பட்ட பெண்ணோ அல்லது அவரது ரத்த சம்பந்த பட்ட உறவுகளோ  புகார் கொடுத்தால்  கிரிமினல் சட்டப் படி  கைது செய்யலாம். அவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கப் படும்.

கேள்வி : இதே  சட்ட  உரிமையை இந்து பெண்ணுக்கும் கொடுக்கலாமே.??

ஜாமீன் வழங்கப்படும்,.. ஆனால்  சம்பந்தப் பட்ட பெண்ணிடம் நீதிபதி விசாரணை செய்த பின்  திருப்தி அடைந்தால் ,!! மேலும்  அந்த பெண்ணுக்கு  நிவாரணம் அளிக்க  ஒப்புக் கொண்டால் மட்டுமே ஜாமீன் தரப்பு படும்.

கேள்வி: குற்றம் நிருபிக்க படும் முன் நிவாரணம்  அளிக்க   எப்படி ஒத்து கொள்ள முடியும்.. ஆண்கள் மட்டும் தான் தவறு செய்வார்களா?உ.ம். ஏன்  அபிராமி, நிலானி போன்ற பெண்கள்  தவறு செய்தால்  ????

2) விவாகரத்து செய்த ஆண்  தன் முன்னால் மனைவிக்கு   சிறையில் இருக்கும் போது  ஜீவனாம்சம்  கொடுக்க வேண்டும்.

கேள்வி: சிறையில் இருக்கும் ஒருவனால் எவ்வாறு  ஜீவனாம்சம் கொடுக்க முடியும்.??

3)உ.ம். விவாகரத்து செய்தவன் பண  வசதி இல்லாதவனாய் இருந்தால்  அல்லது கடனாளியாய் இருந்தால் எப்படி கொடுக்க முடியும்.

குழந்தைகள்  வளர்க்கும்  பொறுப்பு  தாயிடம்  கொடுத்துள்ளீர்கள்.

4)கேள்வி :முஸ்லீம் ஷாரியத் தனி  நபர் சட்டம்   1937 இன் படி முஸ்லீம் பெண்கள் விவாகரத்து பெற்ற  பின் 3 மாத விடாய் கழித்தும், கணவன் இறந்து விட்டால் 4   மாதங்கள்  கழித்து, மறு மணம் செய்யவும்  வழி வகுத்துள்ளது.
அப்படி என்றால் மறு மணம் செய்யும்  புது கணவன்  இவளின் முதல் கணவன் மூலம் பிறந்த குழந்தையை ஒத்துக் கொள்வானா?

மத்திய சட்ட துறை அமைச்சர் ரவி சங்கர்  பிரசாத்  கொடுத்துள்ள அறிக்கையில்  இந்த ஆண்டு மட்டும்  431 முஸ்லீம் பெண்கள்  மும்முறை தலாக்  முறையில் விவாகரத்து  செய்யப் பட்டுள்ளனர்.\\

மத்திய அரசுக்கு  ஒரு புள்ளி விவரம்  பத்திரிகையில் வந்தது.


இந்த புள்ளி விவரத்தில் தரப்படாத  ஒன்று  கணவனால்  தள்ளி வைக்கப் பட்டு தாய் வீட்டில் இருக்கும்  இந்து பெண்களை பற்றியும்  புகுந்த வீட்டில்  மாமியார் நாத்தனாரால் கொடுமை  படுத்த பட்டு கொல்லப் பட்ட மற்றும்  தற்  கொலை செய்து கொண்ட   இந்து பெண்கள் விவரம்.

52மாத  ஆட்சிக்கு பிறகு திடீர் என்று  முஸ்லிலிம் பெண்கள் மீது  பரிவு ஏற்பட்டு  அமைச்சரவை மூலம்  சட்டம் இயற்ற  என்ன  அப்படி ஒரு அவசரம்??
.
எதிர் காட்சிகள் இந்த சட்டத்தை ஆதரிக்கின்றன  .ஆனால்  இந்த குற்றம் புரியும் ஆணின்   மீது  கிரிமினல்  குற்றப் பிரிவின்  கீழ்   நடவடிக்கை எடுப்பதைத்தான்   எதிர்க்கின்றன எதிர் கட்சிகள்.

நீங்கள்  எடுக்கும் இந்த அவசர  சட்டத்தில் முஸ்லீம் பெண்களுக்கு  நீதியை
தருவதில்  அக்கறை  இருப்பதை வீட  முஸ்லீம்  பெண்கள் ஓட்டை  அடைவதற்கு முயற்சிப்பதுதான் தெரிகிறது.

எதிலும் ஒரு அவசரம்  . அது பணமதிப்பை  குறைப்பதில் ஆகட்டும்  ,  ஜி.ஸ்.டி
ஆகட்டும்   என் இந்த அவசரம். பாஜக விற்க்கே வெளிச்சம்.















Tuesday, September 11, 2018

பாஜாகாவிற்க்கு மீண்டும் ஒரு முறை வாய்ப்பு தர வேண்டுமா??

ராமருக்கு கோயில்  கட்ட  வேண்டும், ராம ராஜ்யத்தை  கொண்டு வர வேண்டும் ,.  1990 இல்  அத்வானி.


ஊழலை  ஒழிக்க  போகிறோம்.  மக்கள் அனைவருக்கும்  15 லட்சம் . கறுப்புப்  பணத்தை  ஒழித்துக்  காட்டுவோம். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு  வேலை வாய்ப்பு .   60 ஆண்டுகள்  காங்கிரசிற்கு  கொடுத்தீர்கள்  60 மாதம் எனக்கு கொடுங்கள் .2014 இல்  மோடி 

ஊழல்  காங்கிரசிற்கு  ஒட்டு போடாதீர்கள்.  எதிர் கட்சிகளின் கூட்டணி
சந்தர்ப்ப வாத   கூட்டணி . எதிர் கட்சிகளுக்கு தலைமை தாங்க  தலைவர்கள் இல்லை ,ராகுல்  காந்தி தலைமை பதவிக்கு ஏற்றவரல்ல   2018 இல்  மீண்டும்
மோடி. .கூறுகிறார்.

கொடுத்த  60 மாதங்களில் 54 மாதங்கள் முடிந்து விட்டன . இன்னும் சாதனை என்று சொல்லுவதற்கு ஒன்றும் கிடைக்கவில்லையே !!!! மீண்டும்  பழைய  பல்லவியையே  பாடுகிறார் மோடி.

வேலை வாய்ப்பு இல்லை. விவசாயிக்கு  விலை பொருளுக்கு ஏற்ற விலை இல்லை . பண மதிப்பு குறைப்பு சட்டத்தின் மூலம் சாமான்ய மக்கள்   நடுத் தெருவில்    வரிசையில் நின்றனர். 100 க்கும் மேற் பட்ட வயதானவர்கள் உயிரிழந்தனர். ரூ 3.50 இருந்த காலால் வரியை ரூ  19.00 க்கு  உயர்த்தினிர்கள்
பெட்ரோல்  விலை  உயர்ந்துள்ளது.  டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு   சரிந்து விட்டது. 

கொடுத்த 60  மாதத்தில்  6 மாதங்கள்  வெளி நாடு சுற்றுப் பயணம் செய்தீர்கள் .

மீண்டும்  ஒரு முறை வாய்ப்பு தர வேண்டுமா?????????????
முடிவு மக்கள் கையில்.!!!!!!!