Saturday, May 30, 2015

Chennai terrace garden

Go terrace garden-Home
 மாடி தோட்டம். இது என்னுடைய புதிய முயற்ச்சி. ஹோம் லிங்கை கிளிக் செய்தால்  என்னுடைய வெப் சைட். செல்லலாம்.

Friday, May 1, 2015

மாடி தோட்டம்.- Terrace Garden

           தமிழக அரசால்  சென்னை மற்றும் கோவையில் ஆரம்பிக்கப் பட்ட   மாடி தோட்டம்   திட்டம்  அரசு அதிகாரிகளின்  அலட்சிய போக்கால் சரிவர ந டத்தப் படாமல் முடங்கி விட்டது. நானும்  காட்டுப்பாக்கம், மாதவாரம்,  திருவான்மியூர்  என்று அவர்கள் அலைக்கழித்த இடங்களுக்கு  எல்லாம்   சென்று விட்டு கடைசியில் அடுத்த மாதம் வாருங்கள் என்று திருவான்மியூர் வேளாண்மை அதிகாரி  சொன்னதை கேட்டு அதிருப்தியுடன் வெளியே வந்தேன்.
       தனியார்களால் நடத்தப் படும்  நிறுவனங்களுக்கு சென்று விவரம் கேட்டால் ரூ.10,000 த்தில் இருந்து ரூ.15,000 வரை  கட்டணம்  வசூலிக்கிறார்கள்.. சரி நாமே தேவையான பொருட்களை வாங்கி   மாடி தோட்டம் அமைக்கலாம் என்று  முடிவெடுத்து  நடவடிக்கையில் இறங்கினேன்..இன்று என் வீட்டிலும் மாடி தோட்டம் அமைத்து விட்டேன்.


                                                                                                               ----------
உங்களுக்க்கு மூலிகை செடிகள் அல்லது விலை உயர்ந்த செடிகள் வளர்க்க ஆசை  என்றால் செடியின் விலை சற்று அதிகரிக்கும்,. அவ்வளவே.

சென்னையில் உள்ளவர்கள் ஆரம்பிக்க விரும்பினால்  உதவ தயார். பக்கத்தில் கொடுத்துள்ளது  வேளாண் துறையால்  பரிந்துரைக்க பட்ட பொருட்கள்.
                                                                                                                   

Tuesday, February 3, 2015

How to manufacture Vermicomposting ?இயற்கை உரம் தயாரிப்பது எப்படி?

இயற்கை  உரம்  ,மண்புழு உரம் என்ற  வார்த்தைகள்  சமீபகாலமாக  பிரபலமாக   பேசப் பட்டு வருகிறது... பலர்  பலவிதமாக இதை  தயாரிப்பதை பற்றி  பதிவிட்டிருந்தாலும்  அதை படித்து விட்டு  தயாரித்ததால் நான்  சந்தித்த  தோல்வியை தொடர்ந்தே  இந்த பதிவை  எழுதியுள்ளேன்.

முதலில்நிழல் நிறைந்த ஒரு இடத்தை தேர்ந்தெடுக்கவும்.அதன் பின் தொட்டியின் அளவு   எவ்வளவு  என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் 3அடி நீளம்  ,2 அடி அகலம்,  2 அடி  உயரம்,( 3x 2x 2 ) அல்லது
6x 2x 2x (6 அடி நீளம் ,2 அடி  அகலம் ,2 அடி உயரம் ) உள்ள சிமெண்ட் தொட்டி ஒன்றை அமைத்து கொள்ளவும்.  தொட்டியில்   அதிக படியாகும் நீர் வெளியேற   சிறு துளைகள்  இருக்குமாறு  பார்த்துக் கொள்ளவும் .

அடுத்து   தொட்டியில்  தேங்காய் நார், (அ )கரும்பு சக்கை (அ )உமி  இவற்றில்
ஒன்றை  3 சே.மி. உயரத்திற்கு  நிரப்பவும். அதன் மேல் 2 செ .மி. உயரத்திற்கு வயல் மண்ணை நிரப்பவும்..இவற்றின் மீது  மக்கிய கழிவுகள் ,காய்கறி கழிவுகள் அல்லது  வைக்கோலை  50%  போடவும்,.மீதி 50% மக்கிய சாணியை போடவும். கிட்ட தட்ட 2 அடி உயரத்திற்கு இவ்வாறு நிரப்பவும்

 பின்  இதன் மேல் மண் புழுவை  இடவும். சிறிய தொட்டியாக  இருந்தால் 1 கிலோ மண்புழுவையும் , பெரிய தொட்டியாக  இருந்தால் 2 கிலோ மண்புழுவையும் போடவும். தொட்டியின் ஈரப் பதம் 60%  இருக்குமாறு   பார்த்துக் கொள்ளவும்.
 60 தினங்களில் உங்கள் தோட்டத்திற்கு  தேவையான  இயற்கை உரம்  தயார்.
இனி உரத்தை எவ்வாறு மண் புழுவிடம் இருந்து பிரிப்பது?  மிகவும் எளிதான  முறை,தொட்டியின் ஏதாவது ஒரு ஓரத்தில்  சாண உருண்டை ஒன்றை வைத்து விடுங்கள் .சாணத்தின்  வாசனைக்கு அதை  நோக்கி புழுக்கள் வந்து விடும். இப்போழுது நீங்கள்  உரத்தை எடுத்து விடலாம்.
  இயற்கை உரத்தை
எந்த அளவு உபயோகிக்க வேண்டும் என்பதை தமிழக  வேளாண் துறை பட்டியலாக கொடுத்துள்ளனர்.

நான்  தோல்வியை சந்திக்க  காரணம் :
1) நல்ல நிழல் நிறைந்த பகுதியில் மட்டுமே தொட்டியை அமைக்க வேண்டும். வெயிலான இடத்தில் வைத்தால்  சூடு தாங்காமல்   புழுக்கள் இறந்து விடுகின்றன.
2)மக்கிய  சாணத்தை மட்டுமே  போட வேண்டும், ஈரமான் சாணத்தை போடுவதால் அதில் உள்ள வெப்பத்தின் காரணமாகவும் வெளியாகும்  வாயுவின் காரணமாக புழுக்கள் இறந்து விடுகின்றன.
3)ஈர  பதம்  60% இருக்குமாறு பார்த்து கொள்ளவும்  அதிகப் படியான தண்ணீர் விடுவதும், சாணத்தை   அதிகம் காய விட்டாலும் உற்பத்தி இருக்காது.
4)தொட்டியில் இருந்து  சில சமயங்களில் புழுக்கள்  வெளியே வரும், அதற்க்கு காரணம் அவை அங்கு தங்குவதற்கு  இயலாத சூழ் நிலை இருப்பதை அறிந்து அதை கண்டு பிடித்து  சரி செய்யவும் ( அதிக ஈரப் பதம்  அல்லது  சாணம் காய்ந்து விடுவதாலும் இருக்கலாம்)

புழுக்களை   அரசு வேளாண் துறை, காட்டு பாக்கத்தில் இருந்து பெற்று கொள்ளலாம்.  கிலோ ரூ.500 வரை விற்கின்றனர். தனியார்  இடம் சென்றால்  ூகிலோ ரூ  .1000 வரை விற்கிறார்கள்.
இந்த பதிவிற்க்கு விளக்கம் தேவை என்றால் என்  கை பேசி எண் 98400 90068
தொடர்பு கொள்ளவும்.