முந்தைய பதிவு ஒன்றில் முயல்வளர்ப்பு பற்றி நான் அறிந்தவரை கூறினேன். இந்த பதிவில் அலங்கார மீன்கள் வளர்ப்பது பற்றி எனக்கு தெரிந்தவரை கூறுகிறேன்.
பொதுவாக ஒவ்வொரு விடுமுறை கால .கட்டத்திலும் அலங்கார மீன்களை அனைவரும் வாங்கி வளர்ப்பதும் ,விடுமுறை காலம் முடியும் முன் அவை இறப்பதும் வாடிக்கையான ஒன்று..இது எனது கல்லூரி காலத்தில் இருந்து பழக்கமான ஒன்று . இந்த மீன்களை எப்படி நல்ல முறையில் வளர்ப்பது என்பதை பற்றிய ஒரு சிறு தகவல் தான் இந்த பதிவு. காரணம் வண்ண மீன் வளர்க்கும் பண்ணை ஒன்றை ஆரம்பிக்க முடிவெடுத்து அதற்க்குண்டான தகவல்களை சேகரித்து பரிட்சார்த்தமாக வீட்டில் நான் வளர்த்து வரும் பொது நான் சந்தித்த பிரச்சனைகளை வைத்து இந்த பதிவை எழுதியுள்ளேன்.
வண்ண மீன்கள் இனப் பெருக்கம் செய்வதில் குட்டி போடும் மீன்களும் உண்டு,முட்டை இட்டு இனப் பெருக்கம் செய்யும் மீன்களும் உண்டு. பொதுவாக நாம் வாங்கும் மீன்கள் மோலி ,கப்பீஸ் ,எஞ்சல் ,டைகர், தங்க மீன் ,பைட்டர் போன்றவைதான்.. இவற்றில் மோலி,கப்பீஸ் மட்டுமே குட்டி போடும் வகை மற்றவை முட்டை இட்டு இனப் பெருக்கம் செய்பவை.
வண்ண மின் வளர்ப்பவர்கள் முக்கியமாய் கவனிக்க வேண்டியவை :
--------------------------------------------------------------------------------------------------------
1)மீனை வாங்கி வந்த உடன் வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் அதற்க்கு தீனி போட முயல்வது தான் முதல் பிரச்சினை. மீனிற்கு ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் உணவு போடக் கூடாது. காலை ஒரு முறை மாலை ஒரு முறை உணவிட்டால் போதுமானது.மீன்கள் உணவில்லாமல் 2 ,3 தினங்கள் கூட உயிர்வாழும்.
2)மீனை வளர்ப்பது குடுவையாக இருந்தாலும் சரி தொட்டியாக இருந்தாலும் சரி ,மீனின் உருவ வளர்ச்சிக்கு ஏற்றவாறு தொட்டியில் மீன்களை இட வேண்டும். அளவுக்கு அதிகமாக தொட்டியில் மீன்களை வளர்த்தாலும் சுவாசிக்க தேவையான காற்று இல்லாமல் இறந்து விடும்.
3)மீன் வளர்க்கும் தொட்டியில் குறைந்த பட்சம் 20% நீரை தினம் எடுத்து விட்டு புதிய நீரை ஊற்றி வர வேண்டும். அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் நீரை முழுவதுமாக மாற்றவும் செய்யலாம்.
4)மீன் நன்கு சுவாசிக்க ஏரேட்டர் உபயோகிப்பதுவும் சிறந்தது.
5)வளர்க்கும் மீன்களில் எதேனும் ஒன்று இறந்து விட்டால் உடன் அதை அகற்றி விட வேண்டும். இல்லையேல் அதனால் ஏற்படும் கிருமிகள் மற்ற மீன்களை பாதிக்கும்.
6)உணவாக இடுவதில் தினம் தயார் செய்ய பட்ட கடைகளில் விற்க்கும் உணவுகள் மட்டும் இன்றி , மண்புழு போன்றாவற்றையும் அடிக்கடி கொடுக்கலாம். மீனின் வளர்ச்சிக்கு இது உதவும்.
7)வண்ண மீன்ககள் நன்கு வளர,, வளரும் சூழ் நிலையும் உதவும். மீன் விற்கும் கடைகளில் இதற்குண்டான செடிகள் விற்கப் படுகின்றன. செடிகளை உடன் வளர்ப்பதால் மீனுக்கு தேவையான ஆக்சிஜனும் கிடைக்கும்.
8)மீன் வளர்ப்பதில் மிக முக்கியமாக பார்க்க வேண்டிய ஒன்று வெப்ப நிலை. பொதுவாக இந்தியாவில் நாம் வளர்க்கும் அனைத்து வண்ண மீன்களும் குளிர்ச்சியை தாங்கும் திறன் அற்றவை. தங்க மீன்கள் மட்டும் ஓரளவு குளிர்ச்சியை தாங்கும் தன்மையுடையது. அறையின் வெப்ப நிலை சீராக இருக்கும் படி கவனித்துக் கொள்ள் வேண்டும்.. மீன் விற்க்கும் கடைகளில் இருந்து இதற்குண்டான ஹீட்டரை வாங்கி உபயோகப் படுத்தலாம். இதன் விலைரூ 200 வரை ஆகும். நான் வளர்க்கும் மீன்களை தற்சமயம் எனது
கணினி வைத்திருக்கும் அறையில் வைத்துள்ளேன். தொட்டியின் அருகில் ஒரு டேபிள் லேம்ப் ஒன்றையும் வைத்துள்ளேன்.
9)நீங்கள் வண்ண மீன் வளர்க்கும் தொட்டி பெரியதாய் இருந்தால் பில்டர் ஒன்றையும் உபயோகிக்கலாம். இது தொட்டில் இருக்கும் கழிவுகளை வெளியே எடுக்க நல்ல உபகரணம்.. இதன் விலை கடைகளில் 200 வரை இருக்கும்.
இந்த பதிவு ஒரு பொதுவான பதிவு தான். அடுத்து வரும் பதிவுகளில் மீனிற்கு எப்படி நான் குறைந்த செலவில் உணவு தயார் செய்கிறேன். .வண்ண மீன்களை இன பெருக்கம் செய்வது எப்படி போன்றவற்றை விளக்குகிறேன்.